Wednesday 10 January 2018

அன்னை மரியா

             


         
       ஒருவர் புனிதராய் மாறவிரும்பினால் அன்னை மரியாவின் கரங்களில் தன்னை அர்ப்பணம் செய்தல். அன்னை சொல்வதை செய்து புனிதராய் மாறுதல். புனித இலயோலா இஞ்ஞாசியார் தமது 26வது வயதில் 1521ஆம் ஆண்டு பம்பலூனா கோட்டையைப் பிரெஞ்சு நாட்டவரிடமிருந்து காப்பாற்ற நடந்த போரில், எதிரியின் பீரங்கிக்குண்டு ஒன்று இஞ்ஞாசியாரின் வலது காலில் பாய்ந்து எலும்பு ஒடிந்தது. இஞ்ஞாசியார் மருத்துவ சிகிச்சைப் பெற்று ஓய்வு எடுத்தப்போது, ஒருநாள் மாலை வேளையில் குழந்தை இயேசுவைக் கரங்களில் ஏந்தியவாறு அன்னை மரியா அவருக்கு காட்சிக்கொடுத்தார். அத்தருணத்தில் அவரது உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது. தனது கடந்தகால வாழ்வில் தூய்மைக்கு எதிராகச் செய்த பாவங்களை ஆராய்ந்து பொது ஒப்புரவு செய்தார்“இறைவனுக்கும் திருச்சபைக்கும் நம்பிக்கையின் வீரனாக வாழ்வேன்” என்று உறுதிகொண்டார். அதன் அடையாளமாக படைவீரருக்குரிய ஆயுதங்களை அன்னையின் பாதத்தில் அர்ப்பணித்து புனிதராக மாறினார்.


No comments:

Post a Comment