Friday 26 January 2018

மரியாவின் நாமம்

           
            புனிதபொனவெந்தூர், “மரியே உமது இனிய நாமத்தைப் பக்தி வணக்கத்துடன் உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் தப்பாமல் ஒரு நன்மை உபகாரத்தைப் பெற்றுக்கொள்கிறோம்” என்றார். புனித அம்புரோஸ்,“மரியே உமது நாமம் ஒரு வாசனைத் தைலம். அதன் நறுமணம் அருங்கொடையைப் பொழிகின்றது” என்று கூறுகிறார். புனித பெர்னார்து, “மரியன்னையின் பக்கம் திரும்பி உமது இனிய நாமத்தின் பொருட்டு ஓ! பேருபகாரியே, பக்தி மிகுந்தவரே, முற்றிலும் நீர் போற்றுதற்குரியவரே என்றுகூறிப் பூரிப்படைகின்றார். உமது இனிய நாமத்தை உச்சரித்தாலே, இறையன்பும் உம்மீது கொண்ட அன்பும் எங்கள் உள்ளத்தில் ஊற்றாகச் சுரக்கின்றது” என்றார்.



இரண்டாம் வத்திக்கான் சங்கம், “நிறைவாழ்வு வரலாற்றில் ஆழ்ந்து ஊன்றிய மரியா நம்பிக்கைப் பேருண்மைகளைத் தம்மில் ஒருவாறு இணைத்துப் பிரதிபலிக்கின்றார். தாம் பறைசாற்றப்படும் போதும் வணங்கப்படும் போதும் நம்பிக்கை கொண்டோரைத் தம் மகனிடமும் அவரது தந்தையின் அன்புக்கும் இட்டுச் செல்கின்றார். எனவே தன் திருத்தூதுப் பணியிலும் கிறிஸ்துவை ஈன்றவரையே திருச்சபை வழியாக நம்பிக்கை கொண்டோர் இதயங்களிலும் கிறிஸ்து பிறந்து வளர வேண்டும் என்பதற்காகவே தூய ஆவியால் கருவாகி, அவர் கன்னிமரியாவிடமிருந்து பிறந்தார். தூய கன்னி தம் வாழ்வில் தாய்க்குரிய அன்பிற்கு மாதிரியையாய் உள்ளார்” என்று கற்பிக்கிறது. 



        

No comments:

Post a Comment