Monday 15 January 2018

புனித வனத்துப் பவுல்

                                                                        

     கடவுள்மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார். நாளும் இறைநக்பிக்கையில் வாழ்ந்தவர். இறைவனே தஞ்சம் என்று வாழ்ந்தவர். பாலைவனத்திற்கு சென்று தவம் செய்தார். விலங்குகள் அவருக்கு துணையாக இருந்தன. இறைவன் அன்றாடம் தேவையான உணவைத் தருவார் என்று இறைவனை முழுமையாக நம்பி வாழ்ந்தவரே புனித வனத்து பவுல். இவர் எகிப்து நாட்டில் 229ஆம் ஆண்டு செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் பிறந்தார். அடிப்படை வசதிகளை பெற்றிருந்த பவுல் நன்கு கல்வி கற்று அறிவில் சிறந்து விளங்கினார். 

பவுல் தனது 15ஆம் வயதில் பெற்றோரை இழந்து தனிமையானார். இறைவனை முழுமையாக நம்பினார். இறையுறவில் நாளும் வளர்ந்து வந்தார். இத்தருணத்தில் செசார் தீசியுஸ் கிறிஸ்தவ மக்களை வாளுக்கு இறையாக்கினான். செசாரிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள வனத்துக்கு சென்று தவ வாழ்க்கையை ஆரம்பித்தார். இறைவனோடு இணைந்திருப்பதில் ஆனந்தம் அடைந்தார்.


     வனத்தில் வாழ்ந்த பவுல் குகையில் தனிமையில் இருந்தாலும் விலங்குகள் அவருக்கு துணையாக இருந்தன. இறைவன் பவுல் மீது அன்பு செலுத்தினார். அவரது குகையின் அருகில் பேரிச்சை மரம் ஒன்று வளர செய்தார். பேரிச்சை பழத்தை உணவாக அருந்தி உயிர் வாழ்ந்தார். காகம் தினமும் இவருக்கு ரொட்டி கொண்டு வந்து கொடுக்கும். இவரே முதலில் பாலைவத்தில் சென்று தவ வாழ்க்கையை ஆரம்பித்தார். இறைவனை பாடிப்புகழ்ந்து இறைபிரசன்னத்தில் வாழ்ந்தார். 
    வனத்தில் வாழ்ந்த பவுல் இவரைப்பற்றி புனித அந்தோணியாருக்கு வெளிப்படுத்தப்பட்டது. அந்தோணியார் பவுலை சந்தித்தார். அன்று காகம் இரண்டு ரெட்டி கொண்டு வந்து கொடுத்தது. பவுல், பாருங்கள் கடவுள் எவவளவு நல்லவரென்று. இத்தனை ஆண்டுகளாக இந்த பறவைகள் எனக்கு பாதி ரொட்டித் துண்டு தினமும் கொண்டு வந்து தருகிறது. இப்போது உங்களது வருகையை முன்னிட்டு இரண்டு ரொட்டித் துண்டுகள் கொண்டுவந்துள்ளது என்று கூறினார். இருவரும் இறைவனை புகழ்ந்து போற்றினர். இறைவனை மட்டும் தியானித்து வாழ்ந்த பவுல் தனது 113ஆம் வயதில் இறந்தார்.

No comments:

Post a Comment