Thursday 18 January 2018

புனித வனத்து அந்தோணியார்



           நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய் உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் என்ற இயேசுவின் வார்த்தையார் ஈர்க்கப்பட்டு, இயேசுவுக்காக வாழ்வை அர்ப்பணம் செய்தவர். தாயின் வழிகாட்டுதலால் செபம் செய்ய கற்றுக்கொண்டவர். கிறிஸ்துவுக்காக வாழ்வை அர்ப்பணம் செய்து உத்தம துறவியாக வாழ்ந்தார். தன்னொடுக்க முயற்சிகளால் இறைவனை மாட்சிமைப்படுத்தி வாழ்ந்தவரே புனித வனத்து அந்தோணியார்.
      வனத்து அந்தோணியார் 251ஆம் ஆண்டு எகிப்தில் கோமா என்னும் இடத்தில் பிறந்தார். சிறுவயது முதல் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். தினமும் ஆலயம் சென்று திருப்பலியில் பங்குகொண்டார். துறவு வாழ்கை வாழ ஆவல் கொண்டார். இறைவார்த்தையை வாசித்து வாழ்வாக்கினார். கிறிஸ்துவின்மீது தணியாத தாகம்கொண்டு தியான வாழ்வை ஆரம்பித்தார்.

       துறவு வாழ்கை வாழ வனத்தில் துறவு வாழ்கை வாழ்ந்த துறவியிடம் சென்றார். தன்னொடுக்க முயற்சிகள் செய்தார். தியான வாழ்வை ஆர்முடன் தொடர்ந்தார். இளமைப்பருவத்தில் சந்தித்த சோதனைகளை செபம் செய்து வெற்றி அடைந்தார். தனது உள்ளம் உலக இன்பங்கள்மீது ஆவல் கொண்டபோது திருச்சிலுவையை நெஞ்சோடு அணைத்து வேண்டுதல் செய்தார். தனது 35ஆம் வயதில் நைல் நதியின் கிழக்கு கரையில் உள்ள மலைக்கு சென்று தியானம் செய்தார். காகம் அவருக்கு தினமும் உணவாக  அப்பம் கொண்டு வந்து தருவது வழக்கம்.

        அந்தோணியாரின் தூய வாழ்வை கேள்விப்பட்டு அவரைத் தேடி மக்கள் வந்தனர். சீடராக பலர் சேர்ந்தனர். அவரும் அவர்களை கிறிஸ்துவின் உண்மை சீடராக வாழ வழிகாட்டினார். தன்னை சந்தித்த மக்களுக்கு இறைவனின் அன்பை எடுத்துரைத்தார். நோயுற்றேரை நலமாக்கினார். துன்பத்தில் வாழ்ந்த மக்களின் கவலையை போக்கினார். அனைத்தையும்விட கிறிஸ்துவை அன்பு செய் கற்பித்தார். அனைத்து மக்களையும் இறையன்பிலும் சகோதர அன்பிலும் வளர வழிகாட்டி வனத்து அந்தோணியார் தனது 105ஆம் வயதில் இறந்தார். 

No comments:

Post a Comment