Saturday 30 June 2018

அன்னை மரியா


 
    "நான் ஆண்டவரின் அடிமை" என்று கூறும் முன்பே, மரியா உலக மீட்பரின் தாயாகுமாறு முன்குறிக்கப்பட்டவராக இருந்தார். "ஒரு பெண்ணால் சாவு வந்ததுபோல் மற் றொரு பெண்ணால் வாழ்வும் வரவேண்டும் என்பதற்காக, கிறிஸ்து மனிதர் ஆவதற்கு முன்பே, அவருடைய தாயாக முன்நியமிக்கப்பட்டவரின் இசைவு பெறவேண்டும் என்று இரக்கம் நிறை தந்தையாம் கடவுள் ஆவல் கொண்டார். அனைத்திற்கும் புத்துயிர் அளிக்கும் வாழ்வானவரையே உலகிற்கு ஈந்தவரும், இத்தகைய மாபெரும் நிலைக்குரிய கொடைகளால் கடவுளால் அணி செய்யப் பெற்றவருமான இயேசுவின் அன்னையிடத்தில் இந்த ஆவல் சிறந்தமுறை யில் நிறைவேறுகின்றது." (திருச்சபை எண். 56)


    "அளவில்லாக் கருணையும் ஞானமுமுள்ள கடவுள் உலகை மீட்க கொண்ட ஆவலால், 'காலம் நிறைவேறிய போது... நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு தம் மகனை பெண்ணிடம் பிறந்தவராக... அனுப்பினார்,' (கலாத் தியர் 4:4-5) இந்த மகன் மானிடரான நமக்காகவும் நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இறங்கி, தூய ஆவியினால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதரானார்." (திருச்சபை எண். 52) இவ்வாறு, "ஏவாளின் வழிமரபினர் நடுவினின்று, கன்னி மரியாவைத் தம் மகனின் தாயாகு மாறு கடவுள் தேர்ந்து கொண்டார். அருள் நிறைந்தவரான மரியா, மீட்பின் தலைசிறந்த கனியாக விளங்குகிறார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 508)



Friday 29 June 2018

புனித பவுல்

   
   கிறிஸ்து தன்னில் உருவாக பேறுகால வேதனை அடைந்தவர். கிறிஸ்து ஒருவரை மட்டுமே ஆதயாமாக இலக்காக ஏற்றுக்கொண்டார். கிறிஸ்துவை அறிந்தப்பின் அவரது அன்பிலிருந்து விலகாமல் வாழ்ந்தவர். கிறிஸ்து என்னுள் வாழ்கிறார் என்று வீரமுழக்கம் செய்தவர். எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைக்கொண்டு எதையும் செய்ய இயலும் என்றுகூறி கிறிஸ்துவின் வல்லமையால் அருளால் நற்செய்தியை அகிலமெங்கும் அறிவித்து வாழ்ந்தவரே புனித பவுல். இவர் சிசிலியா என்ற உரோமை மாநிலத்தின் தலைநகரான தர்சு நகரில் பிறந்தவர்.


        பவுல் தனது ஆறு வயது முதல் கல்வி கற்று ஞானம் மிகுந்தவராக காணப்பட்டார். திருச்சட்டத்தை நுணுக்கமாக பின்பற்றி வாழ்ந்தவர். யூத ரபி புகழ் பெற்ற கமாலியேல் என்பவரிடத்தில் திருச்சட்டத்தை கற்றுக் கொண்டார். இளம் வயதில் கிறிஸ்துவை பின்பற்றிய மக்களை கைது செய்ய குதிரையில் பயணம் செய்கையில் ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட்டு கிறிஸ்துவுக்கு சொந்தமானார். கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்ட நேரம் முதல் கிறிஸ்துவே அவருக்கு வாழ்வின் இலக்காக கொண்டு வாழ்ந்தார். கிறிஸ்து அனுபவம் பெற்றுக்கொள்ள பாலைவனம் சென்று செபித்தார். கிறிஸ்துவைப் பற்றி கேள்விப்படாத இடங்களுக்கு சென்று கிறிஸ்துவை அறிவித்தார். கிறிஸ்துவுக்காக துன்பங்களை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். மக்களை நேரில் சந்தித்தும், கடிதங்கள் வழியாகவும் தான்பெற்ற கிறிஸ்து அனுபவத்தை பகர்ந்து சொடுத்தார். கிறிஸ்துவை அறிவித்தக் காரணத்திற்காக பவுல் நீரோ மன்னன் காலத்தில் கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தினர். கிறிஸ்துவுக்காக துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டார். 67ஆம் ஆண்டு கிறிஸ்துவின்மீது கொண்ட அன்பின் காரணத்தார். தலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

புனித பேதுரு

   
   
   இயேசு கிறிஸ்துவுக்காக தனது வாழ்வை அர்ப்பணம் செய்தவர். கிறிஸ்துவின் அன்பிற்கு அடிமையானவர். திருச்சபையின் நெடுந்தூணாக செயல்பட்டவர். மெசிய அனுபம் பெற்று இறைமக்களுக்கு போதித்தவர். கிறிஸ்துவினால் ஆட்கொள்ளப்பட்டபோது தனது உடமைகள் துறந்து கிறிஸ்துவை பின்சென்றவரே புனித பேதுரு
. இவர் பெத்சாய்தா நகரில் பிறந்து கப்பர்நகூமில் குடியேறிய யோனா என்பவரின் மகன். இயேசுவை முதல் முறையாக கண்டபோது இயேசு அவரிடம்  “உன் பெயர் சீமோன்” என்று இயேசு கூறியதைக் கேட்டு மகிழ்ந்தார்.

      இயேசுவின் அழைப்புக்கு தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்தார். கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு பின்  தூய ஆவியைப் பெற்றப் பின் முதல் போதனையில் மூவாயிரக்கணக்கான மக்களுக்கு திருமுழுக்கு கொடுத்தார். ஜெருசலேமில் பணியாற்றினார். இயேசு கிறிஸ்துவை அறிவித்த காரணத்திற்காக ஏரோது அக்கிரிப்பாவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிறிஸ்துவின் பொருட்டு துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டார். 253ஆம் ஆண்டு சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டார்.  

Wednesday 27 June 2018

அலெக்ஸந்திரியா நகர் புனித சிரில்

         
    இறைவனோடு இணைந்து திருச்சபையை அன்பு செய்தவர். கிறிஸ்தவ மக்களை துன்பங்களிலிருந்து விடுவித்தவர். தன்மீது குற்றம் சுமத்தியவர்களை பொறுமையுடன் அன்பு செய்தவர். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தியும் பற்றும் கொண்டு அன்பும் அரவணைப்பும்
பெற்று வாழ்ந்தவரே அலெக்ஸôந்திரியா நகர் புனித சிரில். இவர் 376ஆம் ஆண்டு எகிப்து நாட்டில் அலெக்ஸôந்திரியா நகரில் பிறந்தார். இறைபக்தியில் சிறந்து கல்வி கற்று இறைஞானம் மிகுந்தவராக மாறினார். இறையியலை நன்கு கற்று குருவாக அருள்பொழிவு பெற்றார். சிரில், “வெவ்வேறான மெழுகுத் துண்டுகள் இரண்டை எடுத்து ஒட்ட வைக்கும்போது ஒன்றாகி விடுகிறதன்றோ? அவ்வாறே தேவநற்கருணை விருந்தில் பங்கேற்கும் ஒருவர் கிறிஸ்துவுடன் ஒன்றாகிறார். கிறிஸ்து அவருடனும், அவர் கிறிஸ்துவடனும் இணைந்து விடுகின்றார்” என்று கூறினார். திருச்சபையில் நிலவிய தப்பறைகளுக்கு எதிராக குரல்கொடுத்தார். 444ஆம் ஆண்டு ஜøன் 27ஆம் நாள் இறந்தார்.

Monday 25 June 2018

புனித பெரிய யாக்கோபு

    புனித பெரிய யாக்கோபு இயேசுவின் சீடர்களில் ஒருவர். இயேசுவின் உருமாற்றத்தை கண்ட சீர்களில் இவரும் இருந்தார். தொடக்ககால திருச்சபையில் பேதுருவுக்குப் பின் திருச்சபையின் தலைவராக இருந்தவர். அல்பேயுவின் மகனான யாக்கோபு நான்காவது நபர். இவர் நீதிமான் என்று அழைக்கப்படுகிறார். பெத்சாய்தா ஊரைச் சார்ந்த செபதேயு, சலோமின் இவர்களுடைய மகன். இயேசுவின் அழைப்புக்கு செவிமடுத்து இயேசுவுடன் தங்கி அவரது போதனைகளை பின்பற்றினார். இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் ஸ்பெயின் நாட்டில் உள்ள இபெயரின் பகுதியில் நற்செய்தி அறிவித்தார். ஸ்பெயின் நாட்டில் வடபகுதியில் உள்ள உள்ள சரகோசா என்ற இடத்தில் ஒரு தூணில் அன்னை மரியா காட்சி கொடுத்தார். உங்களை நான் எப்போதும் பாதுகாப்பேன், கைவிடமாட்úட், உடனிருப்பேன் என்பதன் அடையாளமாக இங்கே ஒர் ஆலயம் கட்டுமாறு அன்னை மரியா கூறினார். 42ஆம் ஆண்டு ஏரோது அக்கிரிப்பா யாக்கோபை வாளால் வெட்டி கொலை செய்தார்.

Sunday 24 June 2018

புனித பிரான்சிஸ் சொலேனா


   செபம், தவம் செய்வதில் அனைவருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்தவர். நற்பண்பில் சிறந்து நன்மைகள் வழியாக இறையாட்சி பணி செய்தவர். தூயவராக வாழ்ந்து தூயவரான இறைவனை இதயத்தில் சுமந்து இறைபிரசன்னத்தின் சாட்சியாக திகழ்ந்தவர். அனைவரையும் அளவில்லாமல் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அன்பு செய்தவரே புனித பிரான்சிஸ் சொலேனா. இவர் 1549ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 10ஆம் நாள் ஸ்பெயின் நாட்டில் பிறந்தார்.

     பிரான்சிஸ் சொலேனா பெற்றோரின் வழிகாட்டுதலால் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். இயேசு சபை துறவிகளின் பாதுகாப்பில் வாழ்ந்தார்.  துறவிகளின் நற்பண்பினால் ஈர்க்கப்பட்டு செபம், தவம், அன்பு, அமைதி ஆகிய நற்பண்பில் சிறந்து விளங்கினார். இறைவார்த்தையை வாழ்வாக்க ஒவ்வொரு நாளும் முயற்சி செய்தார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தியும் பற்றும் கொண்டு புனித பாதையில் பயணம் செய்தார். வாழ்வில் சந்தித்த துன்பங்களை அன்னை துணையால் வெற்றி பெற்றார். தனது 20ஆம் வயதில் பிரான்சிஸ் துறவற சபையில் சேர்ந்தார்.

     பிரான்சிஸ் சொலேனா இரவு நேரங்களில் இறைவனோடு செபம் செய்வதில் ஆர்வம் காட்டினார். இறைவனின் உடனிரும்பை விரும்பினார். தவ முயற்சிகள் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தினார். குருவாக அருள்பொழிவு பெற்று இறையன்பின் பணியாளராக பணி செய்தார். தொற்றுநோயல் அவதியுற்ற மக்களை தேடிச் சென்று உதவினார். மக்களால் வாழ்கின்ற புனிதர் என்று அழைக்கப்பட்டார். அர்ஜென்டினா பகுதியில் கிறிஸ்துவின் வார்த்தையை அறிவித்தார். கிறிஸ்துவை தனதாக்கி ஒளியாக வாழ்ந்தார். கடின உழைப்பின் பலனாக 9000 மேற்பட்ட மக்களுக்கு திருமுழுக்கு கொடுத்தார். பிறரன்பு பணிகள் வழியாக கிறிஸ்துவின் வாழ்வுதரும் வார்த்தையை அறிவித்த பிரான்சிஸ் சொலேனா 1610ஆம் ஆண்டு ஜøலை 14ஆம் நாள் இறந்தார். 

Saturday 23 June 2018

ஸ்வீடன் நாட்டு புனித பிரிஜித்

     
     இறைவனுக்காக தன்னை அர்ப்பணம் செய்து இறையாட்சி பணி செய்தவர். தன்னலமற்ற பிறரன்பு பணிகள் வழியாக இறைவனை மாட்சிமைப்படுத்தியவர். திருச்சபையின் வளர்ச்சிக்காக நாளும் ஆர்வமுடன் உழைத்தவர். குழந்தைப்பருவம் முதல் திருச்சிலுûவியின் முன்பாக செபம் செய்தவர். திருச்சிலுவை ஆண்டவரை பலமுறை காட்சியில் கண்டு அவரோடு உரையாடி மகிழ்ந்தார். இடைவிடாமல் இறைபிரசன்னத்தில் வாழ்ந்து வாழ்வில் சந்தித்த தோல்விகளை பொறுமையோடு ஏற்றுக்கொண்டவர். வாழ்நாளில் அன்பும் அமைதியும் பொறுமையும் மிகுந்தவராய் வாழ்ந்தவரே புனித பிரிஜித்.

      பிரிஜித் ஸ்வீடன் நாட்டில் 1303ஆம் ஆண்டு பிறந்தார். சிறந்த முறையில் கல்வி கற்று இறைஞானத்தில் சிறந்து விளங்கினார். தனது ஏழாம் வயதில் இறைவன் தன்னை அழைப்பதாக உணர்ந்து இறைவனுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்தார். இயேசுவின் துன்பாடுகளைக் காட்சியாக கண்டு இயேசுவின் துன்பப்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்டார். ஒருமுறை சிலுவையில் துன்புறும் இயேசுவை காட்சியில் கண்ட கண்ணீர் விட்டு அழுதார். இயேசுவிடம், “உமக்கு யார் இந்த துன்பத்தைத் தந்தார்கள்” என்று கேட்டார். அதற்கு இயேசு, “என் அன்பை யாரெல்லாம் புறக்கணிக்கிறார்களோ அவர்களே” என்று கூறினார்.

   பிரிஜித் தனது 10ஆம் வயதில் தாயை இழந்தார். தனது தாயின் சகோதரியின் அரவணைப்பில் வாழ்ந்தார். 18ஆம் வயதில் உல்ஃப் குட்மார்சன் என்பவரை திருமணம் செய்தார். எட்டு பிள்ளைகளுக்கு தாயானார். தனது பிள்ளை இறைபக்தியிலும் நற்பண்பில் வளர்த்தினார். உல்ஃப் குட்மார்சன் என்பவர் நோயுற்று இறந்தார். இறைவனோடு உறவு கொண்டு கடுந்தவம் செய்து வாழ்ந்தார். தனது 41ஆம் வயதில் துறவு வாழ்வை தொடங்கினார். இறைவனை அன்பு செய்து 1373ஆம் ஆண்டு இறந்தார்.   

  

Friday 22 June 2018

புனித மகதலா மரியா

      இயேசுவின்மீது மிகுந்த அன்பும் பாசமும் பற்றும் கொண்டவர். என் ஆண்டவரை யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர் என்று கூறி கல்லறைக்கு வெளியே நின்று அழுது கொண்டிருந்தவர். உயிர்த்த இயேசுவை முதன் முதலில் கண்டவர். இயேசுவின் உடலுக்கு நறுமணத் தைலம் பூசியவர். ஆண்டவரை வாஞ்சையோடு தேடி அவரை கண்டடைந்தவரே புனித மகதலா மரியா. இவர்  கலிலேயாவில் கெனசரேத்துச் சமவெளியின் தெற்கு பகுதியில் மகதலா என்ற நகரில் பிறந்தவர். இயேசு இவரிடமிருந்து ஏழு பேய்களை ஓட்டினார். இயேசுவின் இறையாட்சி பணியில் மகதலா மரியா உடன் இருக்கிறார்.  இயேசு சிலுவையில் அறையப்பட்ட போதும் உடனிருந்தார். இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்த பிறகு ஓய்வு நாள் முடிந்ததும் அவருடைய உடலில் நறுமணத் தைலம் பூச யாக்கோபின் தாய் மரியா மற்றும் சலோமி ஆகியோருடன் சென்றார்.                        

                        

Thursday 21 June 2018

புனித பிரின்டிசி லாரன்ஸ்

  கிறிஸ்துவின் மதிப்பீடுகளில் வளர்ந்தவர். இறைபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். சிறிவயதிலேயே தந்தையை இழந்து தவித்தவேளையில் இறைவனிடமிருந்து தந்தைக்குரிய பாசத்தையும் அன்பையும் பெற்றுக்கொண்டு இறைஞானத்தில் வளர்ந்தார். நாளும் இறைவார்த்தையை வாசித்து வாழ்வாக்கியவர். நற்செயல்கள் செய்து இறைவனை மாட்சிமைப்படுத்தி வாழ்ந்தவரே புனித பிரின்டிசி லாரன்ஸ். இவர் நேப்பிள்ஸில்  பிரின்டிசி என்னும் நகரில் பிறந்தார்.

    பிரின்டிசி லாரன்ஸ் இவரது இயற்பெயர் ஜøலியஸ் சீசிர் என்பதாகும். ஜøலியஸ்  நாளும் இறைபக்தியில் வளர்ந்து வந்தார். கல்வி கற்பதில் சிறந்து விளங்கினார். இறைவனுக்கு தனது வாழ்வை அர்ப்பணம் செய்ய தனது 16ஆம் வயதில் 1575ஆம் ஆண்டு வெரோனாவில் உள்ள கப்புச்சின் சபையில் சேர்ந்தார். தனது பெயரை லாரன்ஸ் என்று மாற்றிக்கொண்டார். இறைவனின் மார்பில் சாய்ந்து அன்புடன் பேசினார். தன் வாழ்வில் சந்தித்த துன்பங்கள் அனைத்தையும் இறைவனிடம் அர்ப்பணம் செய்து வாழ்ந்தார்.
    லாரன்ஸ் தனது உயர்கல்வியை பதுவா சென்று மெய்யியல் மற்றும் இறையியல் பயின்றார். ஐரோப்பிய மொழிகளை கற்று விவிலியத்தை மொழிப்பெயர்த்தார். தனது மறையுரை வாயிலாக விவிலியத்தை மக்களுக்கு விளக்கிக் கொடுத்தார். கிறிஸ்துவின் நிலைவாழ்வுதரும் வார்த்தைகள் மக்கள் இதயங்களில் செழித்து வளர அயரது உழைத்தார். 1596ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்றார். சபைத் தலைமைத் தந்தையின் ஆலோசகராக நியமனம் பெற்று சிறந்த முûறியில் பணியாற்றினார். எதிரிகளால் நேரிட்ட துன்பங்களை திருச்சிலுவையின் சக்தியால் வென்றார். திருத்தந்தையின் தூதுவராக பவாரியா அரசவையில் பணியாற்றினார். இறைவனுக்காக தனது வாழ்வை அர்ப்பணம் செய்து வாழ்ந்த லாரன்ஸ் 1619ஆம் ஆண்டு தனது பிறந்த நாளான ஜøலை 22ஆம் நாள் இறந்தார். 

Friday 15 June 2018

புனித ஜெர்மேன் குசேன் பிப்ராக்


   
   இறைவனின் அன்பில் நிலைத்திருப்பவர்களை, எல்லா  நிந்தை அவமானங்களிலிருந்தும் அவரே நம்மை பாதுகாப்பார். என்று கூறியவர். இந்த பூமியில் துன்பப்படவே பிறந்தவரோ என்று நினைக்கக் கூடிய வகையில் துன்பங்கள், வேதனைகள், நெருக்கடிகள் மற்றும் அவமானங்களை மட்டுமே வாழ்நாள் முழுவதும் அனுபவித்தவரே புனித ஜெர்மேன் குசேன் பிப்ராக். இவர் பிரான்ஸ் நாட்டில் பிப்பராக் என்னும் சிற்றூரில் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த திரு.லாரண்ட் குசேன், திருமதி.மேரி லாரோசி என்ற தம்பதிக்கு 1579ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிறவியிலேயே சூம்பியக் கரங்களுடன் பிறந்தவர். ஸ்கராபியுலா என்னும் கழுத்து மற்றும் தாடை காசநோய்க் கட்டியால் துன்பப்பட்டார். குழந்தைப் பருவத்தில் தாயை இழந்தார். அவரது தந்தை அர்மேண்ட் என்ற பெண்ணை மறுமணம் செய்தார். ஜெர்மேனின் பிஞ்சு உள்ளத்தில் துயரம் விளைவிக்கும் வகையில் சிற்றன்னையின் செயல்கள் அமைந்தன

   சிற்றன்னை, ஜெர்மேனிடம் அளவு கடந்த வெறுப்பைக் காட்டினாள். ஜெர்மேனின் நோய் தன்னையும் தன் குழந்தைகளையும் பாதிக்கக் கூடும் என்று பயந்த சிற்றன்னை, அவரை வீட்டைவிட்டு வெளியே துரத்தினார். சொந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜெர்மேன் வீட்டின் அருகிலுள்ள மாட்டுத்தொழுவத்தில் அடைக்கலம் புகுந்தார். உண்ண உணவின்றி வாடினார். இலைகளாலான சருகுகளை மெத்தையாக்கி உறங்கினார். காய்ந்த ரொட்டித் துண்டுகளே அன்றாட உணவு. பகல் முழுவதும் ஆடு மேய்க்கும் செயலில் ஈடுபடுவார். சிற்றன்னை இவரை ஓநாய்கள் நிறைந்த காட்டுப் பகுதிக்குச் சென்று ஆடுகளை மேய்க்கும்படி கூறுவார்

   பல்வேறு துன்பங்களின் மத்தியிலும் தாழ்ச்சி, பொறுமை உடையவராகக் காணப்பட்டார். தினமும் திருப்பலியில் தவறாது கலந்து கொள்வார். மறைக்கல்வி, கத்தோலிக்க விசுவாச உண்மைகளை ஆர்வத்தோடு தெரிந்து கொண்டார். ஜெர்மேன், ஆடு மேய்த்த இடம் வனப்பகுதிக்கு அருகில் இருந்தது. அங்கு கொடிய விலங்குகள் வசித்தன. ஆடுகளை மேய்க்கின்றபோது செபம் செய்வதிலும், செபமாலை சொல்வதிலும் நேரத்தைச் செலவிட்டார். ஜெர்மேன் ஆடுமேய்த்த தருணம் திருப்பலிக்கு ஆலயமணி அடித்தது. நற்கருணை ஆண்டவர் தன்னை அழைக்கின்றார். எனவே திருப்பலிக்குச் செல்ல தீர்மானித்தார். ஆடுகளைத் தனியாக விட்டுச் சென்றால் காட்டு விலங்குகள் அடித்துச் சாப்பிடும் என்று தெரிந்தும், இறைவனில் நம்பிக்கை வைத்தார். தனது தழைபறிக்கும் கொக்கிக்கோலைத் தரையில் நட்டுவைத்தார். “கீழ்ப்படிதலுள்ள ஆடுகளே! இந்தக் கோலுக்குச் சுற்றிலும் மட்டுமே நீங்கள் மேய்ந்து இளைப்பாறுங்கள்என்று கூறி நல்லாயன் இயேசுவின் கரங்களில் ஆடுகளை ஒப்படைத்துத் திருப்பலிக்கு விரைந்து சென்றார்.



  ஜெர்மேன் அன்னை மரியாளின்மீது அளவுகடந்த பாசமும், மிகுந்த பற்றுறுதியும் கொண்டார். ஆலயத்தில் மாதாவின் பீடத்தின் முன்பாக, இவர் மண்டியிட்டு பக்தி உருக்கத்துடன் செபிக்கின்ற காட்சியே கண்கொள்ளாக் காட்சியாகும். அன்னை மரியிடம் பெற்ற அன்பை தனது உடன் பிறவா சகோதர சகோதரிகளிடமும், சிறுவர் சிறுமிகளிடமும் காட்டினார். ஆதலால் சிறுபிள்ளைகள் அனைவரும் அக்கா அக்கா என்று அவளையே சுற்றி வருவார்கள். காட்டிற்குச் சென்று ஆடுகளை மேய்க்கும் போது ஆட்டுக்கோ, அவருக்கோ எந்த ஆபத்தும் நேராதபடி மரியன்னை நிழல்போல் அமர்ந்து பாதுகாத்தார். இவர் ஆடுகளை மேய்த்துவிட்டு வீட்டிற்குச் சென்று நீண்ட நேரம் செபம் செய்வார். இரவில் அவருக்குத் துணையாக அன்னை மரியாவும் காவல் தூதரும் வருவார்கள். 1061ஆம் ஆண்டு øன் 15 நாள் இறந்தார்.


Thursday 14 June 2018

புனித பதுவை அந்தோணியார்


                                           
 
         நற்செய்தியின் இறைமனிதர்; உலகின் மாபெரும் புனிதர்; திருச்சபையின் மறைவல்லுநர்; காலத்தின் அறிகுறிகளைத் தெரிந்து திருமறையைப் பாதுகாத்த இறைவாக்கினர். நற்செய்தியைச் சொல்லாலும்; செயலாலும்; வாழ்வாலும் அறிவித்த இறைதூதர். ஏராளமான அற்புதங்கள் செய்தவர். திருச்சபையின் மாணிக்கமாய்த் திகழ்ந்தவரே புனித அந்தோணியார். இவர் ஐரோப்பாவிலுள்ள போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகரில் 1195ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள் பிறந்தார். இவருடைய இயற்பெயர் பெர்தினாந்து ஆகும்.


     அந்தோணியார் லிஸ்பன் மறைமாவட்ட பாடசாலையில் கல்வி கற்றார். குழந்தைப் பருவத்தில் படிப்பிலும், ஒழுக்கத்திலும், கூரிய நுண்ணறிவிலும் சிறந்து விளங்கினார். இறைபற்றும், ஞானமும் மிகுந்தவராகக் காணப்பட்டார்.  தினந்தோறும் தவறாமல் ஆலயம் சென்று திருப்பலியில் பங்கு கொண்டார். நீண்ட நேரம் இறைவனைப் போற்றுவதிலும், திருப்பாடல்களைப் பாடுவதிலும், செபிப்பதிலும் ஆர்வமாகச் செயல்பட்டார். திருப்பலியில் பீடசிறுவனாக பணிபுரிவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தர்.


      ஒருமுறை நற்கருணைமுன் முழந்தாள்படியிட்டு செபித்துக் கொண்டிருந்தார். அவர் முன்பாக  அலகை தோன்றி அவரைச் சோதிக்க முயன்றது. கலக்கம் ஏற்பட்டாலும் முழந்தாள்படியிட்டிருந்த சலவைக் கல்லில் பக்தியுடன் சிலுவை அடையாளம் வரைந்தார். அந்தச் சிலுவை அடையாளம் சலவைக் கல்லில் அப்படியே பதிந்துவிட்டது. இதைப் பார்த்ததும் அலகை அலறி அடித்துக்கொண்டு ஓடியது. அந்த சலவைக் கல் சிலுவை அடையாளத்துடன் இன்றும் காணப்படுகிறது. இவ்வாறு சிலுவையின் மகத்துவத்தைத் தமது  பன்னிரெண்டாம் வயதில் உணர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சி வழியாகக் குருவானவராகப் பணியாற்ற விரும்பினார்.


   அந்தோணியார் உலகை வெறுத்து ஒரு துறவியாக மாறத் தீர்மானித்தார். தூய அகுஸ்தினார் குருமடத்தில் சேர்ந்தார். தினந்தோறும் இறைவார்த்தையை வாசித்து, தியானித்து, வாழ்வாக்கி சான்று நல்கினார். இறைபாதத்தில் அமர்ந்து இறையன்பை நிறைவாகப்பெற்று சான்று பகிர்ந்தவர். கி.பி.1219ஆம் ஆண்டு குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார். பிரான்சிஸ் அசிசியாரின் துறவிகள் மீது அன்பும் மதிப்பும் கொண்டு பிரான்சிஸ்கன் துறவற சபையில் 1220ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22ஆம் நாள் சேர்ந்தார். பெர்தினாந்து என்னும் இயற்பெயருக்குப் பதிலாக அந்தோணியார் என்ற பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது. அசிசியாரின் தாழ்ச்சி, ஏழ்மை, ஆன்மதாகம், கீழ்ப்படிதல் போன்ற நற்பண்புகள் அந்தோணியாரை மிகவும் கவர்ந்தன.


     ஒருநாள் இரவு அந்தோணியார் தமது அறையில் வெகுநேரம் கண்விழித்து செபித்துக் கொண்டிருந்தார்.  விவிலியத்தைத் திறந்து வைத்திருந்தார். திடீரென பேரொளி அந்த அறையை நிரப்பியது. குழந்தை இயேசு விவிலியத்தின் மேல் நின்று அந்தோணியாரின் கழுத்தைக் கட்டித் தழுவினார். அந்தோணியார் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார். விண்ணகம் இந்த மண்ணுலகில் உண்டானது போல் உணர்ந்தார். புனிதர் குழந்தை இயேசுவைத் தனது மார்போடு சேர்த்து அரவணைத்து  முத்தமிட்டார்.  அந்தோணியார் பேரானந்த நிலையில் மெய்மறந்து நின்றார். குழந்தை இயேசுவைக் கரங்களில் ஏந்தும் பாக்கியம் பெற்றவர். இதை திர்சோ என்பவர் நேரில் கண்டு சான்று கூறினார்.


    அந்தோணியார் தமது வாழ்நாள் முழுவதும் அன்பையும், ஏழ்மையையும், தாழ்ச்சியையும்,  ஞானத்தையும் அணிகலன்களாக அணிந்திருந்தார். இதயத்தில் தாழ்ச்சிக்கு இடமளித்து இறைவனின் அருளையும் ஆசீரையும் நிறைவாகப் பெற்றுக்கொண்டார். இவரது வெற்றியின் இரகசியம் தாழ்ச்சியே. தம் சகோதரர்கள் முன்பாக தாழ்ச்சியோடு எளிமையாகவே வாழ விரும்பினார். ஏழ்மையில் எப்பொழுதும் மகிழ்ந்திருந்தார். நான் ஆண்டவரைப் பார்க்கிறேன்; ஆண்டவர் என்னை வாஞ்சையோடு உற்றுபார்கிறார்; அவரின் இரக்கம் நிறைவாக என்னில் பொழிகின்றது; நான் அவரிடம் செல்ல ஆவலோடு இருக்கிறேன்.  இறைவனிடம் செபித்தவாறே 1231ஆம் ஆண்டு ஜøன் 13 அன்று தமது 36ஆம் வயதில் இயற்கை எய்தினார்.  

Tuesday 12 June 2018

ஸகாகுன் நகர் புனித யோவான்

    ஒவ்வொரு நாளும் இறைவனின் பிரசன்னத்தில் வாழ்ந்தவர். இறைவார்த்தையின் வழியாக ஆன்மாக்களை மீட்கும் பணியை ஆர்வமுடன் செய்தவர். ஒவ்வொரு திருப்பலியையும் மிகுந்த பக்தியுடன் நிறைவேற்றி, இயேசுவின் திருவுடல் மகிமையுறுவதைக் கண்டவர். மறையுரை வழியாக இறையன்பை பகிர்ந்தவரே ஸகாகுன் நகர் புனித யோவான். இவர் ஸ்பெயின் நாட்டில் ஸகாகுன் என்னும் இடத்தில் 1419ஆம் ஆண்டு பிறந்தார். புனித ஆசிர்வாதப்பர் துறவு மடத்தில் தொடக்கக் கல்வியை கற்றார். எல்லாவற்றையும் சரியான முறையில் உண்மையின் வழியில் செய்ய ஆர்வம் கொண்டு வாழ்ந்தார்.

     யோவான் இளமைப்பருவத்தில் இறையன்பில் வளர்ந்து வந்தார். பர்கோஸ் நகர் ஆயரின் கண்ணாணிப்பில் உயர்கல்வி கற்று அறிவில் சிறந்து விளங்கினார். இறையாட்சி பணி செய்ய ஆர்வம் கொண்டு குருத்துவ வாழ்வை தேர்ந்தெடுத்தார். 1445ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்று தனது பணியை ஆரம்பித்தார். இறைவனின் தூண்டுதலால் உலக இன்பங்களை துறந்தார். கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். ஒறுத்தல், தன்னொடுக்கம், ஏழ்மையை கடைப்பிடித்து தூய வாழ்வுக்கு தன்னை கையளித்தார்.

    ஆயரின் அனுமதியுடன் சலமான்கா பல்கலைக்கழகம் சென்று நான்கு ஆண்டுகள் இறையியல் பயின்றார். சிறந்த முறையில் தனது ஆன்மீக பணிகளை செய்தார். ஏழை மக்களின் நலனுக்காக ஆவலுடன் பணியாற்றினார். நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறி ஆசீர்வதித்தார். 1464ஆம் புனித அகுஸ்தினாரின் துறவு மடத்தில் சேர்ந்து கடும் தவமுயற்சிகளுடன் துறவு வாழ்வை ஆரம்பித்தார். இறைமக்களின் உள்ளங்களில் மனமாற்றம் ஏற்படுத்தும் வகையில் நற்செய்தி அறிவித்தார். இவரது மறையுரையை கேட்ட பாவிகள் மனந்திரும்பி நல் வாழ்வை ஆரம்பித்தனர். சமூகத்தில் நிலவிய தவறுகளுக்கு காரணமானவர்களைத் தயக்கமின்றி கண்டித்தார். இவர்மீது பொறாமை கொண்ட சமூக விரோதிகள் இவருக்கு விஷம் கலந்து உணவு கொடுத்தார்கள் அவ்வாறு 1479ஆம் ஆண்டு இறந்தார்.


Monday 11 June 2018

புனித பர்னபா

   கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு கிறிஸ்துவை பின்பற்றியவர். தனது உடமைகளை விற்று ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்தளிக்க திருத்தூதர்களிடம் ஒப்படைத்தவர். துன்பத்தில் வாழ்ந்த எண்ணற்ற மக்களுக்கு கிறிஸ்துவின் நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகள் வழியாக ஆறுதல் கூறியவரே புனித பர்னபா. இவர் பவுலின் தூதுரை பயணங்களில் துணையாக பணியாற்றினார்.

    பர்னபா புதிதாக சரியா அந்தியோக்கியாவில் நிறுவப்பட்ட திருச்சபைகளுக்கு தலைமையேற்று மக்களை வழிநடத்தினார். இறைவாக்கினராகவும், போதகராகவும் பணியாற்றினார். கிறிஸ்துவின் துன்பப்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்டார். கிறிஸ்துவின் நற்செய்தியை அகிலமெங்கும் அறிவிக்க ஆர்வம் கொண்டார். ஒவ்வொரு நாளும் நற்செய்தி அறிவிக்க உற்சாகத்துடன் செயல்பட்டார். திருச்சபை மக்கள் கிறிஸ்துவை சொந்தமாக்க அனைவரையும் ஊக்குவித்தார். சைப்பிரஸ் நகரில் நற்செய்தி அறிவித்த தருணத்தில் 64ஆம் ஆண்டு பர்னபா கல்லால் எறிந்து கொலை செய்யப்பட்டார்.

Friday 8 June 2018

அருளாளர் மரியம் தெரசியா

     கிறிஸ்துவின் வாழ்வுதரும் வார்த்தைகளை வாழ்வாக்கி அறிவித்தவர். ஏழ்மையில் இறைவனின் கரம்பற்றி நடந்தவர். கடவுளின் இரக்கத்தையும் அன்பையையும் தமது நற்செயல்கள் வழியாக வெளிப்படுத்தியவர். எண்ணற்ற மக்கள் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொள்ள தனது வாழ்வை இறையாட்சி பணிக்காக அர்ப்பணித்தவர். செபம் செய்ய ஆர்வம் காட்டினார். ஏழைகளுக்கு உதவி செய்தார். நோயளாளிகளை பரிவுடன் கவனித்துக்கொண்டவரே அருளாளர் மரியம் தெரசியா. இவர் இந்திய திருநாட்டில் கேரளா மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் புத்தன்சிரா என்னுமிடத்தில் 1876ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் நாள் பிறந்தார்.


   மரியம் தெரசியா ஏழ்மையானக் குடும்பத்தில் பிறந்தவர். குழந்தைப்பருவம் முதல் செபம் செய்வதில் ஆர்வம் செலுத்தினார். நோன்பிருந்து இறைவனிடம் மன்றாடினார். கிறிஸ்துவுக்காக தனது கற்புநெறி வாழ்வை அர்ப்பணிக்க விரும்பினார். தனது 12ஆம் வயதில் தாயை இழந்து தவித்தார். தாயின் அன்பும் அரவணைப்பும் பாசமும் அன்னை மரியாவிடமிருந்து பெற்றுக்கொண்டார். திருப்பலிக்கு சென்று திருப்பலியில் பங்கேற்றார். ஏழைகளுக்கு உதவினார். சமூகத்தில் எண்ணற்ற நன்மைகள் செய்தார். இறையாட்சி பணி செய்ய தன்னுடன் மூன்று பெண்களை சேர்த்துக்கொண்டு செபம் செய்யவும், நற்செய்தியையும் அறிவித்தார். 


    மரியம் தெரசியா ஒவ்வொரு இல்லங்களுக்கு கடந்து சென்று மக்களை சந்தித்து நற்செய்தி அறிவித்தார். யோசேப்பு, மரியா, இயேசுவிடம் மிகுந்த பக்தி கொண்டு அவர்களின் துணையுடன் நன்மைகள் செய்தார். அன்னை மரியா காட்சி கொடுத்து தெரசாவை மரியம் என்று அழைக்க கூறினார். அவ்வாறு 1904ஆம் முதல் மரியம் தெரசியா என்று அழைக்கப்படுகிறார். கிறிஸ்துவின் ஐந்து காயங்களை தனது உடலில் பெற்று கிறிஸ்துவின் துன்பப்பாடுகளில் பங்கு சேர்ந்தார். இறைகாட்சிகள் காணும்வரம் பெற்றிருந்தார். பாவிகள் மனமாற நோன்பிருந்து ஒறுத்தல்கள் செய்தார். 
மரியம் தெரசியா நோயாளிகளை அன்புடன் பராமரித்து நோயாளிகளை குணமாக்கும் வரம் பெற்றுக்கொண்டார்.


    கிறிஸ்துவின் அன்பை பெற்றுக்கொள்ள நற்கருணை முன்பாக கண்விழித்து செபித்தார். துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டார். பேராயர் மார் யோவான் மெனாகரி இவரின் அனுமதியும் ஆசீரும் பெற்று 1903ஆம் ஆண்டு தன்னுடன் மூன்று சகோதரிகளை இணைத்து பிரான்சிஸ்கன் சபைப் பிரிவில் சேர்ந்து துறவற இல்லம் ஆரம்பித்தார். ஒறுத்தல்கள் செய்து துறவற வாழ்வை இறைவனுக்கு உகந்த முறையில் வாழ்ந்தனர்.  திருச்சபையின் சட்டங்களுக்கு உட்பட்டு 1914ஆம் ஆண்டு மே திங்கள் 14ஆம் நாள் திருச்சபை முறைபடி திருக்குடும்ப துறவற சபையை நிறுவினார் மரியம் தெரசியா. இறைவனுக்காக வாழ்ந்த மரியம் தெரசியா 1926ஆம் ஆண்டு ஜøன் 8ஆம் நாள் இறந்தார்.