Friday 29 June 2018

புனித பவுல்

   
   கிறிஸ்து தன்னில் உருவாக பேறுகால வேதனை அடைந்தவர். கிறிஸ்து ஒருவரை மட்டுமே ஆதயாமாக இலக்காக ஏற்றுக்கொண்டார். கிறிஸ்துவை அறிந்தப்பின் அவரது அன்பிலிருந்து விலகாமல் வாழ்ந்தவர். கிறிஸ்து என்னுள் வாழ்கிறார் என்று வீரமுழக்கம் செய்தவர். எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைக்கொண்டு எதையும் செய்ய இயலும் என்றுகூறி கிறிஸ்துவின் வல்லமையால் அருளால் நற்செய்தியை அகிலமெங்கும் அறிவித்து வாழ்ந்தவரே புனித பவுல். இவர் சிசிலியா என்ற உரோமை மாநிலத்தின் தலைநகரான தர்சு நகரில் பிறந்தவர்.


        பவுல் தனது ஆறு வயது முதல் கல்வி கற்று ஞானம் மிகுந்தவராக காணப்பட்டார். திருச்சட்டத்தை நுணுக்கமாக பின்பற்றி வாழ்ந்தவர். யூத ரபி புகழ் பெற்ற கமாலியேல் என்பவரிடத்தில் திருச்சட்டத்தை கற்றுக் கொண்டார். இளம் வயதில் கிறிஸ்துவை பின்பற்றிய மக்களை கைது செய்ய குதிரையில் பயணம் செய்கையில் ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட்டு கிறிஸ்துவுக்கு சொந்தமானார். கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்ட நேரம் முதல் கிறிஸ்துவே அவருக்கு வாழ்வின் இலக்காக கொண்டு வாழ்ந்தார். கிறிஸ்து அனுபவம் பெற்றுக்கொள்ள பாலைவனம் சென்று செபித்தார். கிறிஸ்துவைப் பற்றி கேள்விப்படாத இடங்களுக்கு சென்று கிறிஸ்துவை அறிவித்தார். கிறிஸ்துவுக்காக துன்பங்களை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். மக்களை நேரில் சந்தித்தும், கடிதங்கள் வழியாகவும் தான்பெற்ற கிறிஸ்து அனுபவத்தை பகர்ந்து சொடுத்தார். கிறிஸ்துவை அறிவித்தக் காரணத்திற்காக பவுல் நீரோ மன்னன் காலத்தில் கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தினர். கிறிஸ்துவுக்காக துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டார். 67ஆம் ஆண்டு கிறிஸ்துவின்மீது கொண்ட அன்பின் காரணத்தார். தலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment