Tuesday 31 July 2018

மரியா நம்பிக்கை கொண்டோரின் தாய்


   'விடிவெள்ளி' என்பது அதிகாலையில் வானில் தோன்றும் 'வெள்ளி' கோளைக் குறிக்கின்றது. கிழக்குத் திசையில் காட்சியளிக் கும் இந்தக் கோள், சூரிய உதயத்தை முன்னறிவிப்பதாக உள்ளது. பழங்காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டவர் கள் விடிவெள்ளியைக் கொண்டே திசையை அறிந்ததால், இது 'கடலின் விண்மீன்' என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே, மரியா என்றப் பெயரின் பொருளாகும். எனவே இயேசுவின் தாய் மரியாவை 'விடிவெள்ளி' என்று அழைப்பது, நேரடியாக அவரது பெயரையே குறித்து நிற்கிறது. இயேசு என்ற ஆதவனின் வருகையை முன்னறிவிக்கும் விடிவெள்ளியாகவே உலக வரலாற்றில் மரியா தோன்றினார்.
   
   சூரியனின் கதிர்களால் பிரகாசிக்கும் விடிவெள்ளியைப் போன்று, மரியாவும் இயேசுவின் ஒளியால் பிரகாசிக்கி றார். கதிரவனின் பண்புநலன்களை விடிவெள்ளி பிரதி பலிப்பது போல, இயேசுவின் மாட்சியைப் பிரதிபலிப்பவராக மரியா திகழ்கிறார். "இதனால் தான் திருச்சபையின் உயரிய, சிறப்புப்பெற்ற, முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த உறுப்பாக வும், நம்பிக்கை மற்றும் அன்பின் முன்குறியாகவும் மரியா போற்றப்பெறுகின்றார். கத்தோ லிக்கத் திருச்சபையும் தூய ஆவியினால் கற்பிக்கப்பெற்று, பிள்ளைக்குரிய வாஞ்சையோடும் பற்றோடும் அன்புநிறைத் தாயாக அவரை ஏற்கின்றது." (திருச்சபை எண். 53) "இவர் கிறிஸ்துவின் தாய், மக்களின் தாய், சிறப்பாக நம்பிக்கை கொண்டோரின் தாய்." (திருச்சபை எண். 54) 
  மரியா மனிதகுலத்தின் நெடும்பயணத்தில் நம்பிக்கை தரும் விடிவெள்ளியாக ஒளி வீசுகிறார். முதிர்ந்த வயதில் கருவுற்ற எலிசபெத்துக்கும், கானா ஊர் திருமண வீட்டினருக்கும் தேவையறிந்து உதவி செய்ததன் மூலம் மரியா நம்பிக்கையின் நட்சத்திரமாகத் திகழ்ந்தார். நமது வாழ்வில் இருள் சூழும் நேரங்களிலும், நம்பிக்கை தரும் விடிவெள்ளியாக வழிகாட்டவும் உதவி செய்வும் மரியா தயாராக இருக்கிறார். "இவ்வுலகில் ஆண்டவரது நாள் வரும்வரை, பயணம் செய்யும் இறைமக்கள் முன்பு உறுதியான நம்பிக்கை யின் அடையாளமாக மரியா ஒளிர்கின்றார்." (திருச்சபை எண். 68)

தூய இலயோலா இஞ்ஞாசியார்

       கிறிஸ்துவே உலகின் ஒளி; கிறிஸ்துவே இறைவனின் ஞானம்; கிறிஸ்துவே வாழ்வும், வழியும், உண்மையும் உயிரும், உயிர்ப்புமானவர். எனவே கிறிஸ்துவை அறிவது இறைவனையே அறிவதாகும். கிறிஸ்துவை அன்பு செய்வது இறைவனை அன்பு செய்வதாகும். என்று வாழ்க்கையால் சான்று பகிர்ந்தவர். இதயத்தில் இயேசு என்ற திருநாம் பொன்னெழுத்துக்களால் பொறித்தவர். எல்லாம் இறைவனின் அதிமகிமைக்கே செய்தவரே புனித லொயோலா இஞ்ஞாசியார். இவர் ஸ்பெயின்நாட்டிலுள்ள பாஸ்க் மாவட்டத்தில் லொயோலா கோட்டையில் 1491ஆம் ஆண்டு  டிசம்பர் 27ஆம் நாள் பிறந்தார்.


     தனது 15ஆம் வயதில் பர்டினான்ட் இஸபெல்லாவினது அரசவையில் போர்வீரராகப் பணியாற்றினார். அந்தியோக்கு நகர் இஞ்ஞாசியார் 107ஆம் ஆண்டு மறைசாட்சியாய் உயிர்விட்ட நேரத்தில் அவரது இதயத்தில் “இயேசு கிறிஸ்துவின் மகிமை நிறைந்த திருப்பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்ததாம் என்பதை அவருடைய சுயசரிதையில் படித்த நேரம்முதல் அப்புனிதரின் பெயரே தனக்கும் வேண்டும் என்று விரும்பி இனிகோ என்ற பெயரை ‘இஞ்ஞாசியார்’ எனóறு மாற்றிக்கொண்டார். இஞ்ஞாசியார் தமது 26வது வயதில் போரில் எதிரியின் பீரங்கிக்குண்டு இஞ்ஞாசியாரின் வலது காலில் பாய்ந்து எலும்பு ஒடிந்தது. ஓய்வு எடுத்த இஞ்ஞாசியார் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு, மற்றும்  புனித பிரான்சிஸ் அசிசியார், புனித சாமிநாதர் ஆகியோருடைய வாழ்க்கை வரலாற்று நூல்கள் படித்து, நான் ஒரு புனிதராக மாறக்கூடாது என்று எண்ணி தன் வாழ்வை இயேசுவுக்கு அர்ப்பணித்து இறைபணிக்கு செய்தார்.


   வாழ்க்கையில் எதையும் சவாலாக ஏற்றுக்கொண்ட இஞ்ஞாசியார் 1534இல் இறையியலுடன் இலக்கியமும் படித்தார். 1534ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள்  “இறை இயேசுவின் சேவகர்கள் சபை”  தொடங்கினார். கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் வார்த்தைப்பாடுகளை கொடுத்தார். இவரது கல்விப்பணி, அப்போஸ்தலப்பணி ஆர்வத்தைப் பார்த்த திருத்தந்தை 3ஆம் பவுல் இஞ்ஞாசியாரால் தொடங்கப்பட்ட சபைக்கு அனுமதியும், குருப்பட்டம் வழங்க ஆயர்களுக்கு அனுமதியும் கொடுத்தார். இஞ்ஞாசியாரும் குருவானவராக அருள்பொழிவு பெற்றார். 1540இல் இயேசு சபையின் உயர்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1556ஆம் ஆண்டு ஜøலை திங்கள் 31ஆம் நாள் இயற்கை எய்தினார்.

Monday 30 July 2018

புனித பேதுரு கிறிசாலொகு

       கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர். மறையுரைகள் வழியாக மக்களுக்கு நற்செய்தி அறிவித்தார். தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். அன்னை மரியாவின் மீது பக்தி கொண்டு வாழ்ந்தவரே புனித பேதுரு கிறிசாலொகு. இவர் இத்தாலி நாட்டில் 380ஆம் ஆண்டு பிறந்தார். ஆயர் கொர்னேலியுஸ் கரங்களால் திருமுழுக்குப் பெற்று இறைபக்தியல் வளர்ந்து வந்தார். கிறிஸ்துவின் இறையாட்சி பணிகள் மீது ஆர்வம் கொண்டு குருத்துவ வாழ்வை தேர்ந்தெடுத்தார். குருவாக அருள்பொழிவு பெற்று இறைமக்களுக்கு பணியாற்றினார். திருச்சபையின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இறைவார்த்தையை மக்களுக்கு எடுத்துரைத்தார். அன்னை மரியாவிடம் தனது வாழ்வை அர்ப்பணம் செய்து தூய வாழ்க்கை வாழ்ந்தார். தனது தன்னலமற்ற பணிகள் வழியாக 433ஆம் ஆண்டு ரவென்னா மறைமாவட்ட ஆயராக அருள்பொழிவு பெற்றார். திருச்சபைக்கு எதிராக எழுந்த ஒரியல்பு தப்பறைக்கு எதிராக குரல் கொடுத்தார். திருத்தூதர்களின் நம்பிக்கை, அன்னை மரியா, கிறிஸ்துவின் மறைபொருளைப் பற்றி மக்களுக்கு எளிய நடையில் எடுத்துரைத்தார். இறைவனுக்காக வாழ்ந்த பேதுரு கிறிசாலொகு450ஆம் ஆண்டு இறந்தார்.

Sunday 29 July 2018

புனித மார்த்தா

    புனித மார்த்தா  இயேசுவின் அன்பிற்கும், பாசத்திற்கும் துகுதியானவர். மரியா லாசர் என்பவர்கள் இவருடைய சகோதரர்கள். இயேசுவின் மீது அதிக அன்பும் பற்றும் கொண்ட மார்த்தா அவரை வீட்டிற்கு அழைத்து விருந்தளித்தார். தனது சகோதரன் லாசர் இறந்த வேளையில் இயேசு இல்லாதததை நினைத்து கண் கலங்கினார். மார்த்தா உலக காரியங்களில் அக்கறைக் கொண்டவராக யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். இயேசுவின் முன்பாக தனது துக்கங்களை பகிர்ந்து கொண்டவர். ஆண்டவராகிய இயேசு மெசியாவாக நம்பி வாழ்ந்து அனைவருக்கும் நம்பிக்கையின் சாட்சியாக மாறினார். இலாசர் இறந்த வேளையில், ஆண்டவர் இயேசு அங்கு இல்லாமல் போனதை எண்ணி கலங்கினார். இதையறிந்த இயேசு விரைந்து மார்த்தாவின் இல்லத்தை அடைந்தார். அப்போது மார்த்தா ஆண்டவரிடம் "நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார்", என்று முறையிட்டார். மார்த்தாவின் சகோதரி மரியா இவர் ஆண்டவரின் பாதம் அமர்ந்து அவர் சொல்வதை கேட்டு நல்லவற்தை தேர்ந்தெடுத்து வாழ்ந்தார்.

Thursday 26 July 2018

புனித சுவக்கின், அன்னம்மாள்

   புனித சுவாக்கின் மற்றும் அன்னா இவர்கள் அன்னை மரியாவின் பெற்றோர். இறைவனின் பார்வையில் நீதிமான்களாக வாழ்ந்தவர். இறைநக்பிக்கையில் சிறந்து பக்தி நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தவர். நாசரேத்தில் செல்வ செழிப்பான வாழ்க்கை வாழ்ந்தனர். செல்வமும் செல்வாக்கு இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லாமல் துன்புற்றனர். அன்னை மரியின் பெற்றோர்கள் திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்துள்ளனர். சுவாக்கின் ஆலயத்தில் பலி செலுத்தினார். ஆண்டவரின் இரக்கம் அவருக்கு கிடைக்க அவருக்கு கிடைக்கும்வரை காத்திருந்தார். செப, தவ, ஒறுத்தல்கள் பல புரிந்து, நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்கு "மரியா" என்று பெயர் சூட்டினர். 

  தன் ஒரே மகளை ஞானத்திலும், அறிவிலும், பக்தியிலும் சிறந்த பெண்ணாக வளர்த்தெடுத்தனர். இவர்கள் இறுதியாக எருசலேமில் வாழ்ந்துள்ளனர். அன்னாவும், சுவக்கின் என்பவர்களும் அன்னை மரியின் பெற்றோர்கள் . 6ஆம் நூற்றாண்டிலிருந்தே அன்னாவுக்கு வணக்கம் செலுத்தப்பட்டு வந்தது.  புனித அன்னா ஜூலை மாதம் 25 ஆம் நாள்தான் இறந்தார் என்ற வரலாற்று செய்தியைக் கொண்டு, 550 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிளில் ஆட்சி செய்த அரசன் புனித அன்னா பெயரில் பேராலயம் கட்டினான்.  அன்னை மரியின் பெற்றோர்களின் மீதிருந்த பக்தி உலகம் முழுவதும் பரவியது. ஜூலை 26ஆம் நாள் இப்புனிதர்களின் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. 


Wednesday 25 July 2018

புனித பெரிய யாக்கோபு

    புனித பெரிய யாக்கோபு இயேசுவின் சீடர்களில் ஒருவர். இயேசுவின் உருமாற்றத்தை கண்ட சீர்களில் இவரும் இருந்தார். தொடக்ககால திருச்சபையில் பேதுருவுக்குப் பின் திருச்சபையின் தலைவராக இருந்தவர். அல்பேயுவின் மகனான யாக்கோபு நான்காவது நபர். இவர் நீதிமான் என்று அழைக்கப்படுகிறார். பெத்சாய்தா ஊரைச் சார்ந்த செபதேயு, சலோமின் இவர்களுடைய மகன். இயேசுவின் அழைப்புக்கு செவிமடுத்து இயேசுவுடன் தங்கி அவரது போதனைகளை பின்பற்றினார். இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் ஸ்பெயின் நாட்டில் உள்ள இபெயரின் பகுதியில் நற்செய்தி அறிவித்தார். ஸ்பெயின் நாட்டில் வடபகுதியில் உள்ள உள்ள சரகோசா என்ற இடத்தில் ஒரு தூணில் அன்னை மரியா காட்சி கொடுத்தார். உங்களை நான் எப்போதும் பாதுகாப்பேன், கைவிடமாட்úட், உடனிருப்பேன் என்பதன் அடையாளமாக இங்கே ஒர் ஆலயம் கட்டுமாறு அன்னை மரியா கூறினார். 42ஆம் ஆண்டு ஏரோது அக்கிரிப்பா யாக்கோபை வாளால் வெட்டி கொலை செய்தார்.

Tuesday 24 July 2018

புனித பிரான்சிஸ் சொலேனா


   செபம், தவம் செய்வதில் அனைவருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்தவர். நற்பண்பில் சிறந்து நன்மைகள் வழியாக இறையாட்சி பணி செய்தவர். தூயவராக வாழ்ந்து தூயவரான இறைவனை இதயத்தில் சுமந்து இறைபிரசன்னத்தின் சாட்சியாக திகழ்ந்தவர். அனைவரையும் அளவில்லாமல் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அன்பு செய்தவரே புனித பிரான்சிஸ் சொலேனா. இவர் 1549ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 10ஆம் நாள் ஸ்பெயின் நாட்டில் பிறந்தார். 


   பிரான்சிஸ் சொலேனா பெற்றோரின் வழிகாட்டுதலால் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். இயேசு சபை துறவிகளின் பாதுகாப்பில் வாழ்ந்தார்.  துறவிகளின் நற்பண்பினால் ஈர்க்கப்பட்டு செபம், தவம், அன்பு, அமைதி ஆகிய நற்பண்பில் சிறந்து விளங்கினார். இறைவார்த்தையை வாழ்வாக்க ஒவ்வொரு நாளும் முயற்சி செய்தார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தியும் பற்றும் கொண்டு புனித பாதையில் பயணம் செய்தார். வாழ்வில் சந்தித்த துன்பங்களை அன்னை துணையால் வெற்றி பெற்றார். தனது 20ஆம் வயதில் பிரான்சிஸ் துறவற சபையில் சேர்ந்தார்.


    பிரான்சிஸ் சொலேனா இரவு நேரங்களில் இறைவனோடு செபம் செய்வதில் ஆர்வம் காட்டினார். இறைவனின் உடனிரும்பை விரும்பினார். தவ முயற்சிகள் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தினார். குருவாக அருள்பொழிவு பெற்று இறையன்பின் பணியாளராக பணி செய்தார். தொற்றுநோயல் அவதியுற்ற மக்களை தேடிச் சென்று உதவினார். மக்களால் வாழ்கின்ற புனிதர் என்று அழைக்கப்பட்டார். அர்ஜென்டினா பகுதியில் கிறிஸ்துவின் வார்த்தையை அறிவித்தார். கிறிஸ்துவை தனதாக்கி ஒளியாக வாழ்ந்தார். கடின உழைப்பின் பலனாக 9000 மேற்பட்ட மக்களுக்கு திருமுழுக்கு கொடுத்தார். பிறரன்பு பணிகள் வழியாக கிறிஸ்துவின் வாழ்வுதரும் வார்த்தையை அறிவித்த பிரான்சிஸ் சொலேனா 1610ஆம் ஆண்டு ஜøலை 14ஆம் நாள் இறந்தார். 

Monday 23 July 2018

ஸ்வீடன் புனித பிரிஜித்

      இறைவனுக்காக தன்னை அர்ப்பணம் செய்து இறையாட்சி பணி செய்தவர். தன்னலமற்ற பிறரன்பு பணிகள் வழியாக இறைவனை மாட்சிமைப்படுத்தியவர். திருச்சபையின் வளர்ச்சிக்காக நாளும் ஆர்வமுடன் உழைத்தவர். குழந்தைப்பருவம் முதல் திருச்சிலுவைவியின் முன்பாக செபம் செய்தவர். திருச்சிலுவை ஆண்டவரை பலமுறை காட்சியில் கண்டு அவரோடு உரையாடி மகிழ்ந்தார். இடைவிடாமல் இறைபிரசன்னத்தில் வாழ்ந்து வாழ்வில் சந்தித்த தோல்விகளை பொறுமையோடு ஏற்றுக்கொண்டவர். வாழ்நாளில் அன்பும் அமைதியும் பொறுமையும் மிகுந்தவராய் வாழ்ந்தவரே புனித பிரிஜித்.


    பிரிஜித் ஸ்வீடன் நாட்டில் 1303ஆம் ஆண்டு பிறந்தார். சிறந்த முறையில் கல்வி கற்று இறைஞானத்தில் சிறந்து விளங்கினார். தனது ஏழாம் வயதில் இறைவன் தன்னை அழைப்பதாக உணர்ந்து இறைவனுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்தார். இயேசுவின் துன்பாடுகளைக் காட்சியாக கண்டு இயேசுவின் துன்பப்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்டார். இவர் தனது 14 ஆம் வயதிலேயே ஸ்வீடன் நாட்டு அரசர் மாக்னஸ் என்பவரை திருமணம் செய்தார். பின்னர் 8 பிள்ளைகளைப்பெற்று தாயானார். தன் பிள்ளைகளை ஆன்மீக காரியங்களில் ஈடுபடுத்தி வளர்த்தார். இறைவன் மீது தணியாத தாகம் கொண்டு வாழ்ந்தார். இவர் தியானம் செய்யும்போது பலமுறை இயேசுவின் திருப்பாடுகளை காட்சியாக கண்டார் திருமணத்திற்கு பின்னும் ஆலயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திகொண்டு, பல துறவற சபைகளுக்கு உதவி செய்தார். அப்போது தன் கணவர் இறந்துவிடவே, தன்னை புனித பிரான்ஸ்கன் 3 ஆம் சபையில் இணைத்துக்கொண்டு ஆன்ம வாழ்வில் வளர்ந்து, பிறருக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். 


      இவர் அரசர் மனைவி என்பதால், கணவருக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் இவருக்கே கொடுக்கப்பட்டது. இவர் அவை அனைத்தையும் வைத்து இவர் பெயரில் ஒரு துறவற மடத்தை நிறுவினார். அதன்பிறகு உரோமைக்கு சென்று, அந்நாட்டில் உள்ள மக்களுக்கு ஆன்ம வாழ்வில் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தார். தான் மேற்கொண்ட கடுந்தவத்தின் காரணமாய், பல நாட்டிற்கு திருப்பயணம் சென்றார். அப்பயணங்களில் பல நூல்களையும் எழுதினார். இளம் வயதிலிருந்தே இறைவனிடமிருந்து தான் பெற்ற காட்சிகள் அனைத்தையும், புத்தகங்களில் வடிவமைத்தார். புனித நாட்டிற்கு பயணம் செய்யும்போது தன்னுடைய மகன்களில் ஒருவர் இறந்துவிட்ட செய்தியை கேட்டார். இதனால் மிகவும் மனத்துயர் அடைந்து, புனித நாட்டிற்கு செல்லாமல் மீண்டும் உரோம் நகர் திரும்பினார். தனது மற்ற பிள்ளைகளை சந்திக்க திட்டமிட்டார். ஆனால் அத்திட்டம் நிறைவேறாமல் போகவே, மனத்துயர் அடைந்து நோய்வாய்ப்பட்டு இறைவனடி சேர்ந்தார். இறக்கும்வரை இறைவனை மட்டுமே இறுகப் பற்றிக்கொண்டிருந்தார். 

    இவர் தியானம் செய்யும்போது பலமுறை இயேசுவின் திருப்பாடுகளை காட்சியாக கண்டார் ஒருமுறை சிலுவையில் துன்புறும் இயேசுவை காட்சியில் கண்ட கண்ணீர் விட்டு அழுதார். இயேசுவிடம், “உமக்கு யார் இந்த துன்பத்தைத் தந்தார்கள்” என்று கேட்டார். அதற்கு இயேசு, “என் அன்பை யாரெல்லாம் புறக்கணிக்கிறார்களோ அவர்களே” என்று கூறினார். பிரிஜித் தனது 10ஆம் வயதில் தாயை இழந்தார். தனது தாயின் சகோதரியின் அரவணைப்பில் வாழ்ந்தார்.தனது பிள்ளை இறைபக்தியிலும் நற்பண்பில் வளர்த்தினார்.  இறைவனோடு உறவு கொண்டு கடுந்தவம் செய்து வாழ்ந்தார். தனது 41ஆம் வயதில் துறவு வாழ்வை தொடங்கினார். இறைவனை அன்பு செய்து 1373ஆம் ஆண்டு இறந்தார்.   

Sunday 22 July 2018

புனித மகதலா மரியா

   இயேசுவின்மீது மிகுந்த அன்பும் பாசமும் பற்றும் கொண்டவர். என் ஆண்டவரை யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர் என்று கூறி கல்லறைக்கு வெளியே நின்று அழுது கொண்டிருந்தவர். உயிர்த்த இயேசுவை முதன் முதலில் கண்டவர். இயேசுவின் உடலுக்கு நறுமணத் தைலம் பூசியவர். ஆண்டவரை வாஞ்சையோடு தேடி அவரை கண்டடைந்தவரே புனித மகதலா மரியா. இவர்  கலிலேயாவில் கெனசரேத்துச் சமவெளியின் தெற்கு பகுதியில் மகதலா என்ற நகரில் பிறந்தவர். இயேசு இவரிடமிருந்து ஏழு பேய்களை ஓட்டினார். இயேசுவின் இறையாட்சி பணியில் மகதலா மரியா உடன் இருக்கிறார். கலிலேயா நாட்டைச் சேர்ந்தவர். இயேசுவின் சீடர்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இயேசு பாடுகள்பட்டு, மரித்து, உயிர்தெழும்வரை மரியா அவரோடு உடனிருந்தார். உயிர்த்த இயேசுவை முதன்முதலில் கண்டவர். தான் செய்த பாவங்களின் பரிகாரமாய் ஆண்டவரின் பாதங்களை கழுவிய மரியா இவர்தான். இறந்து அடக்கம் செய்யப்பட்ட ஆண்டவரின் கல்லறை, வெறுமனே இருப்பதை முதன்முதலில் பார்த்து, இயேசுவின் சீடர்களிடம் அறிவித்தவரும் இவரேதான். இயேசுவை காணவில்லையே என்று ஆதங்கப்பட்டு, கண்ணீர் விட்டு அழுது, இயேசுவை பற்றிக்கொண்டவர் இவர். 

மரியா ஓர் பெரும்பாவி என்று மக்களால் ஒதுக்கிவைக்கப்பட்டபோது, தன் நிலையை உணர்ந்து அழுது, ஓடிச்சென்று இயேசுவிடம் சென்றார். தன் பாவங்களின் பரிகாரமாய் செய்த செயலினால் இயேசுவின் ஆழ்மனதில் இடம்பிடித்தார். அன்னை மரியாளுக்குபிறகு, இயேசுவின் அருகில் எப்போதும் அவருக்காக வாழ்ந்தவர். " என்னை இப்படி பற்றிக்கொள்ளாதே" என்று ஆண்டவரே கூறும் அளவுக்கு, அவர் மேல் அன்புகொண்டவர். இயேசு சிலுவையில் அறையப்பட்ட போதும் உடனிருந்தார். இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்த பிறகு ஓய்வு நாள் முடிந்ததும் அவருடைய உடலில் நறுமணத் தைலம் பூச யாக்கோபின் தாய் மரியா மற்றும் சலோமி ஆகியோருடன் சென்றார்.   





   
                    
                                        

Saturday 21 July 2018

புனித பிரின்டிசி லாரன்ஸ்

     விவிலியத்தை நன்கு கற்று வாழ்வில் பின்பற்றியவர். பக்தியுள்ள கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்தவர். ஒவ்வொரு நிடமிடமும் கிறிஸ்துவின் துன்பங்களில் பங்குசேர்ந்து ஆன்மாக்களின் மீட்புக்காக தனது வாழ்வை அர்ப்பணம் செய்தவரே புனித பிரின்டிசி லாரன்ஸ். இவர் நேப்பிள்ஸில் 1559ஆம் ஆண்டு ஜøலை திங்கள் 22ஆம் நாள் பிறந்தார். இறைபக்தியில் வளர்ந்து வந்தார். தனது 16ஆம் வயதில் வெரோனாவில் உள்ள கப்புச்சியன் சபையில் சேர்ந்தார். இறைஞானம் மிகுந்தவராக காணப்பட்டார். 1596ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்று இறையாட்சி பணி செய்தார். விவிலியத்தை நன்கு கற்று யூதமக்களிடையே கிறிஸ்துவை அறிவித்தார். எண்ணற்ற மக்கள் மனம்மாறி திருச்சபையில் இணைந்தனர். 1602ஆம் ஆண்டு சபையின் தலைமை பொறுப்பேற்று சிறப்புடன் வழிநடத்தினார். திருத்தந்தையின் தூதுவராக பவாரியர் அரசவையில் சிறப்புடன் பணியாற்றினார். இறைவனுக்காகவே வாழ்ந்த பிரின்டிசி லாரன்ஸ் 1619ஆம் ஆண்டு இறந்தார்.

Friday 20 July 2018

புனித அப்போலினாரிஸ்

    வீசுவாத்தின் வீரராக இறையாட்சி பணி செய்தவர். கிறிஸ்துவை அறிவிக்க தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் கையளித்தவர். துருக்கி நாட்டில், 2 ஆம் நூற்றாண்டில் இருந்த ஆயர்களில் "சிறந்தவர்" என்ற பெயர் பெற்றவர். கிறிஸ்துவுக்காக துன்பங்களை துனிவுடன் ஏற்றுக்கொண்டவரே புனித அப்போலினாரிஸ். இவர் 2வது நூற்றாண்டில் தலைச்சிறந்த ஆயராக இறையாட்சி பணி செய்தவர். துருக்கி பிரிஜியா மாநிலத்தில் ஆயராக பணியாற்றினார். இவர் துருக்கி நாட்டில் பிரிஜியா மாநிலத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிறிஸ்துவை அந்நாட்டில் பரப்ப பெரும்பாடுபட்டார். இதனால் அந்நாட்டு அரசன் அவுரேலியஸ் என்பவரால் பல துன்பங்களை அனுபவித்தார். ஆனால் ஆயர் தன்னுடைய செபத்தால் அரசனை வென்றார். ஆயரின் சொல்படி நடந்த அரசன், திருச்சபைக்காக பல உதவிகளை செய்தான். அந்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுத்தான். அப்போலினாரிஸிடமிருந்து, பல விசுவாச போதனைகளை கற்றுக் கொண்டான். ஆயர் மன்னனின் மனதை கவர்ந்து விசுவாசத்தை அம்மண்ணில் நிலைநாட்டியதால் "வீரம் கொண்ட விசுவாச தந்தை" என்ற பெயரை பெற்றார். கிறிஸ்துவர்களின் முன்னேற்றத்திற்காக ஆயருக்கு, அரசர் உதவியதால் , அரசனின் எதிரிகளால் ஆயர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

Wednesday 18 July 2018

ஆரோக்கிய அன்னை

     கி.பி. 16ஆம் நூற்றாண்டு தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி என்ற சிற்றூரில் அன்னை மரியா காட்சி அளித்தார். பால் கொண்டு சென்ற இடைய சிறுவன் ஒருவனுக்கு தோன்றிய அன்னை, பால் பொங்கி வழியும் அற்புதத்தை நிகழ்த்தினார். மோர் விற்ற கால் ஊனமுற்ற சிறுவனுக்கு தோன்றிய மரியன்னை, அவனது கால்களுக்கு குணம் அளித்து ஆரோக்கிய அன்னையாகத் தன்னை வெளிப்படுத்தினார். அவ்வூரில் வாழ்ந்த கிறிஸ்தவ பெரியவர் ஒருவருக்கு தோன்றிய அன்னை மரியா, தனக்கு ஓர் ஆலயம் எழுப்புமாறு கேட்டுக் கொண்டார். அன்னைக்கு ஒரு சிறிய ஆலயம் முதலில் கட்டப்பட்டது. சிறிது காலத்துக்கு பின் மரியன்னையின் உதவியால் கடல் புயலில் இருந்து தப்பி வேளாங்கண்ணியை அடைந்த போர்ச்சுகீசியர்கள் அந்த ஆலயத்தை பெரிய அளவில் கட்டி எழுப்பினர்.

புனித ஃபிரட்ரிக்

   
    உண்மை வழியில் அன்பிற்கு சாட்சியாக வாழ்ந்தவர். இறைவார்த்தையை ஆர்வமுடன் கற்றவர். அறநெறி பண்புகளில் சாலச்சிறந்தவர். நற்கருணை ஆண்டவரை ஆராதனை செய்து இறையருளைப் பெற்றுக்கொண்டவர். தன்மீது பொய் குற்றம் சுமத்தியவர்களை மன்னித்து அன்பு செய்தவரே புனித ஃபிரட்ரிக் என்பவர். இவர் 780ஆம் ஆண்டு ஃபிரிஸ்லாந்தில் பிறந்தார். பெற்றோரின் வழிகாட்டுதலால் இறையன்பில் வளர்ந்து வந்தார். இறையாட்சி பணி செய்ய ஆர்வம் கொண்ட ஃபிரட்ரிக் குருத்துவக் கல்வி கற்றார். உட்ரெக்ட் மறைமாவட்டத்திற்காக குருவாக அருள்பொழிவு பெற்றார். 

   
   ஃபிரட்ரிக் வால்செரன் பகுதியில் கிறிஸ்துவை அறியாக மக்களுக்கு கிறஸ்துவை அறிவித்தார். கிறிஸ்துவின் விழுமியங்களில் மக்கள் வளர்ந்துவர பயிற்சி அளித்தார். இவரது பணிகளை விரும்பாத மக்கள் இவருக்கு எதிராக பொய்குற்றம் சுமத்தினர். இறைவல்லமையால் துன்பங்களை துணிவுடன் தாங்கிக்கொண்டார். 816ஆம் ஆண்டு உட்ரெக்ட் மறைமாவட்ட ஆயராக அருள்பொழிவு பெற்றார். பக்தியுடன் திருப்பலி நிறைவேற்றினார். மைன்ஸில் நடந்த ஆயர் கூட்டத்தில் பற்கேற்று, இறைஞானத்தின் சொற்களைப் பேசினார். 838ஆம் ஆண்டு ஜøலை 18ஆம் நாள் திருப்பலி நிறைவேற்றி நற்கருணை ஆராதனை நடந்தவேளையில் எதிரிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். 

Tuesday 17 July 2018

புனித அலெக்சியார்

   அருள் வாழ்வின் தாகத்தால் இறைமகன் இயேசுவின் திருக்கரங்களில் தன்கரம் பற்றி, உலக இன்பத்திலிருந்து விடுபட்டுத் தவமுனிவராய், கற்பு நெறிக்குக் களங்கம் ஏற்படுத்தாமல் மாமனிதனாய் மாறிட சித்திரவதைகளைச் சிரிப்புடன் ஏற்று, எளிமைக்கு எழுச்சி தந்து புனிதராக வாழ்ந்தவரே புனித அலெக்சியார். உலகில் தனிப்பெரும் சிறப்புடன் திகழும் உரோமை நகரில், செல்வச் செழிப்புமிக்க யுஃபேமியானுஸ் என்பவரின் மகனாக நான்காம் நூற்றாண்டில் பிறந்தார். அலெக்ஸியாரின் பெற்றோர் “மகனே! அலெக்ஸ் உனக்குத் திருமணம் முடிப்பதற்கு நிச்சயம் செய்துள்ளோம்” என்றனர். இதுகேட்ட அலெக்ஸ், “ பெற்றோரே! இவ்வுலகில் திருமணம் செய்து வாழ்க்கை நடத்த எனக்கு விருப்பமில்லை. மண்ணுலக ஆசைகளையெல்லாம் விட்டொழித்து, விண்ணுலகம் அடைவதற்கே விரும்புகிறேன். இவ்வுலக வாழ்வு ஒரு மாயை, நிலையில்லாதது, உடலும் அழிவுக்குரியது. மழைக்கால மின்னலைப் போல் நாம் காண்பதெல்லாம் ஒருநாள் அழிந்து போகும். இவ்வுலகில் நாம் சீரும் சிறப்புமாக வாழ்ந்தாலும் நினையாத நேரத்தில் இறப்பு வந்தே தீரும். நாம் இறப்பது திண்ணம். வெயிலில் காய்ந்து வாடும் மலர்களைப் போல் இவ்வுலக வாழ்வும் நிலைகுலைந்துவிடும்” என்றார்.
  பெற்றோர் அழகும், நறóகுணமும் நிறைந்த பெண்ணை அவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். அவரும் பெற்றோரின் மன மகிழ்ச்சிக்காகத் திருமணம் செய்து கொண்டார்.மணவறைக்குச் சென்று மனைவியிடம் “தங்கையே! மறுத்து பேசாமல் நான் சொல்வதைக் கவனமுடன் கேள். மாணிக்கமே! தேனமுதே! இவ்வுலகம் நீர்க்குமிழ் போன்றது. கண்ணே! நினையாத வேளையில் இறப்பு வந்து நம்மை அழைத்துச் செல்லும். அன்பு சகோதரியே! இல்லற வாழ்வில் எனக்கு சற்றும் விருப்பமில்லை. பலகோடி கன்னியரை இறக்கும்வரை கற்பு நெறிதவறாமல் காத்த மாபரன் உன்னையும் காத்திடுவார். எனவே நமது மாளிகையில் தங்கி தவம் செய்” என்று கூறினார். நடுச்சாம வேளையில் அயல்நாடு சென்று, இறைபணிசெய்ய கடும் தவம் மேற்கொள்ள வீட்டை விட்டு வெளியேறினார்.

   தனித்திருந்து தவம் மேற்கொண்ட அலெக்சியார் உரோமை நகர் வழியாக நடந்து, வீடு வீடாய் அலைந்து பிச்சை கேட்டு உணவருந்தி வந்தார். ஒருநாள் தனது தந்தை வரும் வழியில் அவரிடம் “ஐயா! வயிறு மிகவும் பசிக்கிறது. என்மீது இரங்கி உணவு தாருங்கள்” என்று கை நீட்டினார். அவர் தனது தந்தையே என்று அலெக்சியார் தெரிந்து கொண்டார். அவரும்  காணாமல் போன தனது மகனைப்  பற்றி தவமுனிவரிடம் கூறினார். மனதில் ஏற்பட்ட வேதனையைத் தாங்கிக்கொண்டு அலெக்சியாரும் தன்னை வெளிப்படுத்தவில்லை. “அறிவும், பணபலமும் படைத்த பெரியவரே! உங்கள் மகன் தவம் சிறப்பாய் அமைய இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாம் இறைவன் விருப்பப்படியே நடக்கும்” என்றார். மேலும்“தந்தையே! அலைந்தலைந்து பிச்சை எடுத்துண்ண உடம்பில் பலமும் இல்லை. அதனால் காணாமல் போன உங்கள் மகனாக என்னை ஏற்றுக் கொண்டு தவம் புரிவதற்கான இடமும் உணவும் தருவீர்களா?” என்று கேட்டார். அலெக்சியாரின் தந்தை தனது மகன் என்று தெரியாமல் உண்ண உணவும், தவம் மேற்கொள்ள இடமும் கொடுக்க சேவகர்களுக்குக் கட்டளையிட்டார். அன்னை மரியாவை நோக்கி, “சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மரியாளே! என் மரண நேரத்திலும் உதவி செய்தருளும்” என்று செபித்தவாறே வெள்ளிக்கிழமை அலெக்சியார் இறந்தார்.

Monday 16 July 2018

கார்மெல் மலை புனித கன்னிமரி

     "தூய கார்மேல் அன்னை" அல்லது "தூய கார்மேல் மலை அன்னை" அல்லது "புனித உத்தரிய மாதா" என்பது கார்மேல் சபையின் பாதுகாவலராகிய, இயேசு கிறிஸ்துவின் தாயான தூய கன்னி மரியாளுக்கு அளிக்கப்படும் பெயர்களாகும். கார்மேல் சபையின் முதல் உறுப்பினர்கள் 12 முதல் 13ம் நூற்றாண்டு வரை திருநாட்டில் உள்ள கார்மேல் மலையில் வனவாசிகளாக வாழ்ந்தனர். கார்மெல் சபையின் தலைமைத் தந்தை புனித சைமன் ஸ்டோக் என்பவருக்கு அன்னை கன்னி மரியா 1251ஆம் ஆண்டு ஜøலை 16ஆம் நாள் காட்சி கொடுத்தார். அக்காட்சியில் சைமனிடம் உத்தரியம் ஒன்றைக் கொடுத்த கன்னி மரியா, “இது கார்மெல் துறவிகளுக்கு வழங்கப்படும் தனிச்சலுகை. இதை பக்தியோடு அணிபவர்கள் இம்மையிலும், மறுமையிலும், எவ்வித துன்பத்திலும் நரக நெருப்பிலும் அல்லலுற மாட்டார்கள்” என்றார். அன்னை காட்சி கொடுத்த அந்த நாளே கார்மெல் மலை புனித கன்னி மரியின் விழாவாக கொண்டாப்படுகிறது.

Sunday 15 July 2018

புனித பொனவெந்தூர்

      பெரிய காரியங்களைச் செய்வதில் அல்ல, மாறாக சாதாரண காரியங்களை சிறந்த முறையில் செய்வதில்  உத்தமம் என்று கூறியவர். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டு வாழ்ந்தவர். இறைவல்லமையால் புதுமைகள் பல செய்தவர். நற்கருணை ஆண்டவரிடம் மிகுந்த பக்தி கொண்டு இறைவனை ஆராதனை செலுத்தி அன்பு செய்தவரே புனித பொனவெந்தூர். இவர் இத்தாலி நாட்டில் 1218ஆம் ஆண்டு பிறந்தார். 


     பொனவெந்தூர் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு பயின்று முனைவர் பட்டம் பெற்றார். 1248ஆம் ஆண்டு முதல் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியாராக பணியாற்றினர். தாழ்ச்சியின் வழியில் பயணம் செய்தார். புனித தாமஸ் அக்குவினாஸ் இவரது நெருங்கிய நண்பர். தனது 22ஆம் வயதில் புனித பிரான்சிஸ் துறவற சபையில் சேர்ந்தார். இவரது காலத்தில் சபையில் பெரிய சிக்கல் நிலவியது. சபையில் அமைதி நிலவ இரவு நேரங்களில் நற்கருணை ஆண்டவர் முன்பாக கண்விழித்து செபித்தார். தனது 36ஆம் வயதில் 1257ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் நாள் சபையின் தலைவராக பொறுப்பேற்றார். புனித அசிசியார் உருவாக்கியபோது இருந்த அடிப்படை நோக்கம் சிதையாமல் 1260ஆம் சபையில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தினார்.


   ஏழ்மையும், தாழ்ச்சியும் பின்பற்றி வாழ்ந்த பொனவெந்தூர் ஏழை மக்களை அன்பு செய்தார். நோயினால் பாதிக்கப்பட்ட மக்களை தேடிச் சென்று நலமாக்கினார். தியானம், செபம், தவம், காட்சி தியானம், நற்கருணை ஆராதனை போன்றவற்றிற்காக தனது நேரங்களை செலவிட்டார். மரியாவிடம் தன்னை அர்ப்பணம் செய்தார். அன்னை மரியாவுக்கு இயேசு பிறப்பை வானதூதர் முன்னறிவித்ததை நினைவு கூறும் வகையில் மூவேளை செபம் செபிக்கப்படுகிறது. 1263ஆம் ஆண்டு மூவேளை செபம் மாலை மணி அடிக்கும் வேளையில் சபை உறுப்பினர்கள் செல்ல வேண்டும் என்பதை நடைமுறைக்கு கொண்டு வந்தார். ஒவ்வொரு சனிக்கிழமையும் அன்னை மரியாவுக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். 1274 ஆம் ஆண்டு இறந்தார்.

Saturday 14 July 2018

புனித கமில்லஸ் தெ லெல்லிஸ்

    இறைபக்தி வளர்ந்து முனமதியோடு செயல்பட்டவர். புனித பலிப்பு நேரியின் வழிகாட்டுதல் பெற்று புனிதராக மாறியவர். நோயளிகள் மீது மிகுந்த அன்பும் கருசனையும் கொண்டவர். இறைவல்லமையால் புதுமைகள் செய்யும் வரம் பெற்றவர். நற்செயல்கள் செய்தபோது ஏற்பட்ட துன்பங்களில் அன்னை மரியாவிடம் சரண் அடைந்து வெற்றி பெற்றவரே புனித கமில்லஸ் தே லெல்லிஸ். இவர் 1550ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தார். இவரது தந்தை நெப்போலியன் போர்படையில் படைவீரராக பணியாற்றினார். தாயின் அன்பும் அரவணைப்பும் பெற்று வளர்ந்தார். தனது குழந்தைப்பருவத்தில் தாயை இழந்தார். தாயின் அன்பும் அரவணைப்பும் கிடைக்காமல் வந்தபோது வருத்தமுற்றார். 



       கமில்லஸ் தனது இளமைப்பருவத்தில் போர் படையில் சேர்ந்து பணியாற்றினார். படை முகாமில் சூதாட்டத்திற்கு அடிமையானார். போருக்கு சென்ற வேளையில் இரண்டு காயங்களிலும் காயங்கள் ஏற்பட்ட போது துன்புற்றார். இத்தருணத்தில் போர்களத்திலிருந்து வெளியேறி உரோமை நகரில் உள்ள மருத்துவமனை பணியாற்றினார். சில நாட்களில் மருத்துவ மனையின் பொறுப்பேற்று வழிநடத்தினார். ஏழை எளிய மக்களுக்காக இலவச உதவிகள் செய்தார். பல எதிர்ப்புகளை சந்தித்தார். கப்புச்சன் சபை துறவிகளோடு இணைந்து பணியாற்றினார். கப்புச்சன் சபை துறவியின் வழிகாட்டுதலால் பொதுநிலை சகோதரர் பிரிவில் சேர்ந்தார். கமில்லஸ் நற்பண்பில் வளர்ந்து வந்தார். மருத்துவ மனையில் பணியாற்றிபோது பல எதிர்ப்புகளை சந்தித்தார். 


    புனித பிலிப்பு நேரியின் வழிகாட்டுதல் குருத்துவ அருள்பொழிவு பெற்றுக்கொள்ள விரும்பினார். தனது 32ஆம் வயதில் உரோமையில் உள்ள இயேசு சபை கல்லூரியில் படித்து குருவாக அருள்பொழிவு பெற்றார். பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்ற தீர்மானித்தார். அதன்பிறகு ஒரு சபையை நிறுவினார். அச்சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து, நோயாளிகளுக்குக்கென்று தன்னையே தியாகம் செய்தார். நோயாளிகளை தேடிச் சென்று பணிபுரிந்தார். பல தொற்று நோய் கொண்ட மக்களுக்கு பணியாற்றினார். இதனால் அச்சபையில் இருந்த குருக்களும் , தொற்று நோயால் தாக்கப்பட்டு இறந்தனர். மருத்துவமனைகளைக் கட்டி, நோயாளிக்கு தொண்டாற்றுவதே இச்சபையின் பணியாக இருந்தது. இறுதியாக தனது 64ஆம் வயதில் இவரும் நோயால் தாக்கப்பட்டு இறந்தார். 

Friday 13 July 2018

இயேசுவின் புனித தெரசாள் லாஸ் ஆன்டஸ்

    கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொண்டு கள்ளம் கபடம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து அனைவரையும் அன்பு செய்தவர். நற்கருணை பெற்றப்பின் இயேசுவுடன் நீண்டநேரம் அன்புடன் உறவாடியவர். இயேசு கிறிஸ்துவின் உடனிருப்பை பெற்றிட தனது இதயத்தை அவருக்கு கொடுத்தவர். செல்வ செழிப்பில் வாழ்ந்தாலும் ஏழ்மையை விரும்பினார். இறைவனின் அழைப்புக்கு தன்னை அர்ப்பணம் செய்தவர். இறைவனின் மெல்லிய குரலை கேட்க தூயவராக வாழ்ந்தவரே புனித தெரசாள் லாஸ் ஆன்டஸ். இவர் 1900ஆம் ஆண்டு ஜøலை திங்கள் 13ஆம் நாள் பிறந்தார். இறைபக்தியில் சிறந்து நற்பண்பில் வளர்ந்து வந்தார். புனித குழந்தை இயேசுவின் தெரசாவின் சுயசரிதையைப் படித்து அவரைப்போல இயேசுவுக்கு வாழ்வை அர்ப்பணம் செய்து, அவரை அன்பு செய்ய விரும்பினார். முதல் முறையாக நற்கருணை பெற்றுக்கொண்ட நாள் இன்று முதல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு வலையில் நான் சிக்கிக்கொண்டேன் என்று கூறினார். 


    இயேசுவின் தெரசாள் லாஸ் ஆன்டஸ் இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்து அவருக்காக வாழ துறவு வாழ்வை தேர்ந்தெடுத்தார். 1919ஆம் ஆண்டு கார்மெல் துறவு மடத்தில் சேர்ந்தார். இவருக்கு இயேசுவின் தெரசாள் என்ற பெயர் சூட்டப்பட்டது. கார்மெல் சயின் ஒழுங்கு முறைகளை கடைப்பிடித்தார். செப வாழ்வு, அமைதி, குருக்களுக்காக செபிப்பது, இறைவனை அன்பு செய்வது, இறைவார்த்தையை தியானித்து வாழ்வாக்குவது போன்ற ஒழுங்குமுறைகளை பின்பற்றி வாழ்ந்தார். பிறரின் நலனுக்கு அயராது உழைத்தார். அன்னை மரியாவிடம் செபித்து தூயவராக வாழ்ந்தார். வாழ்வில் சந்தித்த துன்பங்களை கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பின் காரணத்தினால் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு வாழ்ந்த இயேசுவின் தெரசாள் லாஸ் ஆன்டஸ் 1920ஆம் ஆண்டு இறந்தார்.

ஜøலை 12. புனித யோவான் கால்பர்ட்

    இறைவனின் அன்பையும், அசிரையும் ஒவ்வொரு நாளும் சுவைத்தவர். பெற்றோரின் அரவணைப்பும் பாசமும் பெற்று இறைபக்தியில் வளர்ந்தவர். தன்னை துன்புறுத்தியவர்களை அன்பு செய்து அவர்களுக்கு நன்மைகள் செய்தவர். இறைவனின் உடனிருப்பை உணர்ந்து வாழ்ந்தவரே புனித யோவான் கால்பர்ட். இவர் 999ஆம் ஆண்டு ஃபுளோரன்ஸ் நகரில் பிறந்தார். பெற்றோரின் வாழிகாட்டுதளால் கிறிஸ்துவ விசுவாசத்தில் வளர்ந்து வந்தார். இறைபக்தியில் வளர்ந்து வந்த யோவான் கால்பர்ட் துறவு வாழ்க்கையை விரும்பினார். இறைவனின் வல்லமையை, அன்பையையும் உணர்ந்தபோது அவருக்காக தமது வாழ்வை அர்ப்பணம் செய்து துறவு வாழ்வை மேற்கொண்டார். ஏழைகள் மீது அக்கறை கொண்டு அவர்களுக்கு நன்மைகள் செய்தார். மக்களின் நலனுக்காக அருள் அடையாளங்கள் செய்தார். நற்கருணை ஆண்டவரே தஞ்சம் என்றும், அன்னை மரியாவை தனது வாழ்வின் துணையாக கொண்டு வாழ்ந்த யோவான் 1073ஆம் ஜøலை திங்கள் 12ஆம் நாள் இறந்தார்.

Wednesday 11 July 2018

புனித ஆசீர்வாதப்பர்

  தூய்மையான வாழ்க்கையால் இறைவனைத் தேடுதல், செபம், உழைப்பு இவற்றை தனது உயிர்மூச்சாக கருதியவர். ஞானபலன்கள் பல பெற்று இறைபணி செய்து, யாருக்கும் சுமையாகாமல் சுமைதாங்கியாக வாழ்ந்தவரே புனித ஆசீர்வாதப்பர். இவர் 480ஆம் ஆண்டு இத்தாயில் உள்ள நுர்சியா பட்டணத்தில் செல்வச் செழிப்புமிக்க, புகழ்பெற்ற அரசக் குடும்பத்தில் பிறந்தார். தியானத்திலும் பிறரன்புப் பணியிலும் சிறந்து விளங்கினார். எப்பொழுதும் சுறுசுறுப்பாக உழைக்கவும், செபிக்கவும், எல்லோருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்து புனித பாதையில் நடந்தார். அன்னை மரியிடம் மிகுந்த பற்றும், பக்தியும் கொண்டவர். இவர் தனது அறையில் அன்னையின் திருச்சொரூபம் வைத்து மலர்களால் அலங்கரித்து, தீபம் ஏற்றி அன்னை மரியிடம் செபித்து வந்தார். 

   தனது 20ஆம் வயதில் உரோமையை விட்டு சுபியாக்கோவில் நீரோவின் பாழடைந்த அரண்மனைக்கு அருகில் இருந்த ஒரு குகைக்கு அமைதியைத் தேடிச் சென்றார். குகையில் இறைவனைத் தியானித்து வாழ்ந்த தருணத்தில் உரோமானுஸ் என்னும் துறவியை சந்தித்தார். அவரின் வழிகாட்டுதன்படி மூன்று ஆண்டுகள் செப, தவ முயற்சிகள் செய்து கடின வாழ்வு மேற்கொண்டாôó. பல சோதனைகளுக்கு உள்ளானார். தனது வாழ்வில் புகடமாக, ஆறுதலாக, இலட்சியமாக, ஓரே செல்வமாக வைத்திருந்த சிலுவையை உற்றுநோக்கிச் செபித்து சோதனைகளை வென்றார். தன்னைத் தேடி வந்த மக்களைச் சந்தித்தார். நோயாளிகளை குணமாக்கினார். வறுமையில் உழன்றவர்களுக்குப் பொருள் உதவியும், ஏழைகளுக்கு உணவும் வழங்கினார். மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்.



   அருகிருந்த மலையில் தவவாழ்வு வாழ்ந்து வந்த துறவிகள் சிலர் தங்களுக்குத் தலைமை தாங்க வருமாறு அணுகினார்கள். இவரும் அதற்கு இசைந்தார். இவர் மிகவும் கடினமான விதிமுறைகளையும், வாழ்க்கை நெறிகளையும் வழங்கியதால் இவரைத் தொடர்ந்து தலைவராக ஏற்றுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. ஆசீர்வாதப்பருக்கு குடிநீரில் விசம் கலந்துக் கொடுத்தார்கள். அவர் சிலுவை அடையாளம் வரைந்ததும் நீர் வைக்கப்பட்டிருந்த டம்ளர் இரண்டாக உடைந்தது. எனவே ஆசீர்வாதப்பர் மீண்டும் குகைக்கே திரும்பினார்.  தனது இறப்பை ஆறு நாட்களுக்கு முன்னரே அறிவித்தார். 547 இல் மார்ச் 21ஆம் நாள் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பருகியபின் ஆலயத்தில் இரண்டு கரங்களையும் விரித்து செபித்த நிலையில் உயிர்துறந்தார். 

Tuesday 10 July 2018

புனித ஃபெலிசித்தா, அவரது ஏழு மகன்கள்

    கனிவின் வார்த்தைகளால் அனைவரையும் அன்பு செய்தார். கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்தவர். தனது ஏழு பிள்ளைகளை இறைநம்பிக்கையில் வளர்த்தினார். இறைபக்தியில் சிறந்து கிறிஸ்துவின் அன்பு, இரக்கச் செயல்கள் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தி வாழ்ந்தவரே புனித ஃபெலித்தா மற்றும் அவரது ஏழு மகன்கள். ஃபெலித்தா உரோமையில் வாழ்ந்தவர். இவர் இறையன்பின் பாதையில் பயணம் செய்து அனைவரின் மதிப்பை பெற்றவர். தனது பிள்ளைகளை கிறிஸ்துவின் வார்த்தைகளை எடுத்துரைத்து அவற்றின்படி வாழவும் கற்றுக்கொடுத்தார்.

    ஃபெலித்தா தான் கிறிஸ்தவர் என்பதில் பெருமை கொண்டார். தனது பிள்ளைகள் கத்தோலிக்க விசுவாசத்தில் வளர பயிற்றுவித்தார். கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுக்கொண்ட காரணத்திற்காக ஃபெலித்தாவும் அவரது ஏழு மகன்களும் வேதவிரோதிகளால் கைது செய்யப்பட்டனர். கிறிஸ்துவை மறுதலிக்க சிறையில் அனைத்து துன்புறுத்தினர். கிறிஸ்துவுக்காக துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டார்கள். “இயேசு கிறிஸ்துவே உண்மை கடவுள் என்று யாரெல்லாம் அறிக்கையிடவில்லையோ அவர்கள் அனைவரும் அணையா நெருப்பில் போடப்படுவர்” என்று கூறினர். தாய் தனது ஏழு மகன்களிடம், “பிள்ளைகளே! வானத்தை அண்ணார்ந்து பாருங்கள்.  இயேசு உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவரின் அன்பில் நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் ஆன்மாவைக் காத்துக்கொள்ள உறுதியுடன் போராடுங்கள்” என்று கூறினார். அவ்வாறு 165ஆம் ஃபெலித்தாவும் அவரது ஏழு மகன்களும் தலைவெட்டி கொலை செய்யப்பட்டார்கள்.

ஜøலை .9 . புனித நிக்கோலாஸ் பெக்

   துறவு வாழ்க்கை வழியாக கிறிஸ்துவின் அடிமையாக வாழ்ந்தார். விண்ணக வாழ்வை இலக்காக கொண்டு வாழ்ந்தவர். தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். தாழ்ச்சியின் பாதையில் பயணம் செய்தவரே புனித நிக்கோலாஸ் பெக். இவர் ஹாலந்து போய்ஸ் லே துக் என்ற இடத்தில் 1534ஆம் ஆண்டு பிறந்தார். இறைபக்தியில் சிறந்து விளங்கினார். துறவு வாழ்க்கை வழியாக கிறிஸ்துவின் அடிமையாக வாழ்ந்தார். 1558ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்று இறையாட்சி பணியை சிறப்பாக செய்தார். தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். திருச்சபையின் வளர்ச்சிக்காக அரும்பாடுப்பட்டார். அன்னை மரியாவின் மீது மிகுந்த பற்றும் பக்தியும் கொண்டு வாழ்ந்தார். நற்கருணையில் கிறிஸ்துவின் பிரசன்னம் இருப்பதை எடுத்துரைத்தார். இறுதியாக  வேதவிரோதிகளால் கொலை செய்யப்பட்டார்.

July. 8. புனித எஸ்பேரியஸ்

    புனிதர்கள் எஸ்பேரியஸ் மற்றும் úஸôவே இருவரும் கிறிஸ்தவ தம்பதிகள். கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர்கள். இவர்களின் இரண்டு குழந்தைகளையும் நற்செய்தியின் வழியில் இறையன்பின் பாதையில் பயணம் செய்யக் கற்பித்தார்கள். இறைபக்தியில் வளர்ந்து கிறிஸ்துக்கு சான்று பகர்ந்தனர். இத்தருணத்தில் பேரரசன் ஏட்ரியன் கோலோச்சி கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட மக்களை துன்புறுத்தி கொலை செய்தான். அவ்வாறு புனிதர்களான எஸ்பேரியஸ் மற்றும் úஸôவேவையும் நெருப்பு சூளைக்குள் தூக்கிப்போட்டு கொலை செய்தார்கள்.  

Saturday 7 July 2018

புனித பான்றேஸ்


     நற்செய்தி அறிவிக்க தனது வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணம் செய்தவர். நிறைவான இறைஞானமும்,    அறிவுதிறனும் பெற்ற வேளையில் தாழ்ச்சியுடன் வாழ்ந்தவர். இறையனுபவத்தால் தன் வாழ்வை நெறிப்படுத்தி இறைவனுக்கு உகந்ததோர் வாழ்கை வாழ்ந்தவர். அமைதியின் கடவுளை சொந்தமாக்கி அமைதியாக வாழ்ந்தவர். தன்னிடம் வந்த மக்களை இறையன்பால் நிறைத்தவரே புனித பான்றேனஸ். இவர் இத்தாலி நாட்டில் பிறந்தவர்.  சாக்ரடீஸ் கொள்கையை பின்பற்றி வாழ்ந்தார். கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு இறைஞானம் பெற்று கிறிஸ்துவின் சீடராக வாழ்ந்தார். கிறிஸ்தவ கோட்பாடுகளை நன்கு கற்றுக்கொண்டார். திருத்தூதர்களின் சிந்தனைகள் பெற்று மக்களுக்கு போதித்தார். பான்றேனஸ் நற்செய்தி அறிவிக்க இந்தயா வந்ததாக வரலாறு கூறுகிறது. கிறிஸ்துவின் பாதத்தடங்களில் நடந்து ஓர் இறைவாக்கினராக இறையாட்சி பணி செய்த பான்றேனஸ் 216ஆம் ஆண்டு இறந்தார்.

Friday 6 July 2018

புனித மரிய கொரற்றி

     தனது உடல் இறைவன் வாழும் ஆலயம் என்பதை நினைவில் கொண்டு, அனனை மரியாவின் அரவணைப்பில் வாழ்ந்து புனிதராக மாறியவர். இறைவனுக்காக தனது கன்னிமையை அர்ப்பணம் செய்தவர். கன்னிமைக்கு கலங்கம் ஏற்படுத்தாமல் கற்பு நெறியுடன் வாழ்ந்தவர். இறைமன்னிப்பின் இலக்கணமாக வாழ்ந்து தன்னை கொலை செய்த சகோதரனை மனமாற்றி, தூய்மையின் இலக்கணமாக, லில்லி மலராக மாறியவரே புனித மரிய கொரற்றி. இவர் 1890ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் இத்தாலி நாட்டில் ஏழ்மையான, அன்பும், இறைபக்தியும் மிகுந்த குடும்பத்தில் பிறந்தார்.   


   மரிய கொரற்றி கல்வி கற்கும் அளவுக்கு வசதி இல்லாதக் காரணத்தால் பள்ளி சென்று கல்வி கற்கவில்லை. தாயின் வழிகாட்டுதலால் விவிலியம் வாசித்து, இறைவார்த்தையை தியானித்து இறைஞானத்தின், இறையன்பின் செல்வந்தராக மாறி நாளும் நற்பண்பில் சிறந்து விளங்கினார். காலையும் மாலையும் செபம் செய்வதில் கருத்தாய் இருந்தார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டு தினமும் செபமாலை செபிப்பது வழக்கம். அமல அன்னையின் அன்பும் அரவணைப்பும் பெற்று தூய்மையின் லில்லி மலராக சிறந்து விளங்கினார். தனது 12ஆம் வயதில் புதுநன்மை பெற்றுக்கொண்டார். தனது இதயத்தில் இறைவனை முதன்முறையாக ஏற்றுக்கொண்ட நாள் முழுவதும் இயேசுவுடன் உறவாடி மகிழ்ந்தார். இயேசுவே ஒருவரே தன் அன்பிற்கு சொந்தக்காரர் என்றுகூறி அவ்வாறே வாழ்ந்தார்.


        மரிய கொரற்றியின் தந்தை மாசெலெனி பிரபு வீட்டில் தோட்டவேலை செய்து அங்கேயே தங்கினார். அதே வீட்டில் வேலைக்கு வந்த ஜியோவானி அவரது மகன் அலெக்ஸôண்டரும் மரிய கொரற்றியின் வீட்டில் தங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. மரிய கொரற்றியின் குடும்பம் இறைபக்தி மிகுந்த குடும்பம். மரிய கொரற்றி புதுநன்மை வாங்கிய ஐந்து வாரங்களுக்கு பின், அலெக்ஸôண்டர், வீட்டில் தனியாக இருந்த மரிய கொரற்றியிடம் பாவம் செய்த தூண்டுதல் கொடுத்தான். தூயவராக வாழ்ந்த மரிய கொரற்றி பாவம் செய்யக்கூடாது என்று எச்சரித்து, “தாயிடம் சொல்லிவிடுவேன்” என்றார். “தாயிடம் சொன்னால் கொன்று விடுவேன்” என்றுகூறி இச்சையான பார்வையோடு உற்றுப்பார்த்தான்.


   தூய்மையின் லில்லி மலராக வாழ்ந்த மரிய கொரற்றி 1905ஆம் ஆண்டு ஜøலை 5ஆம் நாள் வீட்டில் தனிமையாக இருந்தார். அலெக்ஸôண்டார் இந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பாவம் செய்ய துணிந்தான். கொரற்றியை நெருங்கி பாவம் செய்ய அழைத்தான். தனது ஆசைகóகு இணங்க வற்புறுத்தினான். அவனது எண்ணத்தை அறிந்த மரிய கொரற்றி அதற்கு உடன்படவில்லை. இது கடவுளின் பார்வையில் பாவம் என எடுத்துரைத்தாள். கொரற்றி தனது தூய்மையைக் காப்பாற்றிக்கொள்ள போராடினார். இறைவனுக்கு அர்ப்பணம் செய்த தனது கற்பைக் காத்துக்கொள்ள தனது உயிரைக் கொடுக்கத் துணிவுகொண்டார். தனது ஆசைக்கு இணங்காத மரிய கொரற்றியை அலெக்ஸôண்டார் மறைத்து வைத்திருந்த கத்தியால், மரிய கொரற்றியின் மாசற்ற தூய உடலை 14 முறை குத்தி கிழித்தான். இது பாவம், “இதற்காக நீ நரகத்திற்கு போவாய்” என்று கூறினார். பின் காயத்துடன் மருத்துவ மனையில் இருந்த கொரற்றி தன்னை கொலை செய்த அலெக்ஸôண்டரை மன்னித்து ஜøலை 6ஆம் நாள் இறந்தார். 

Thursday 5 July 2018

புனித அந்தோனி மரிய சக்கரியா

         கிறிஸ்துவின் குருத்துவ பணியில் இணைந்து இரக்கச் செயல்கள் வழியாக இறைவனை மாட்சிமைப்படுத்தியவர். நோயளிகளுக்கு அன்பும் ஆதரவும் செலுத்தியவர். சிறையில் இருந்த மக்களை சந்தித்து கிறிஸ்துவின் அன்பை பகர்ந்தவர். ஒவ்வொரு நாளும் பெத்தின் வழியாகவும், இறைவார்த்தை வழியாகவும் இறைவனின் அருளும் வல்லமையும் பெற்று தூய வாழ்க்கை வாழ்ந்தவரே புனித அந்தோனி மரிய சக்கரியா. இவர் 1502ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் ரெமோனா என்னும் இடத்தில் பிறந்தார்.


     அந்தோனி மரிய சக்கரியா இறைபக்தியில் வளர்ந்து சிறந்த முறையில் கல்வி கற்றார். ஏழ்மையான வாழ்வை விரும்பினார். ஏழை மக்களிடத்தில் அன்பு ஆதரவும் கொண்டு வாழ்ந்தார். உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்து வாழ்ந்தார். தாயின் வழிகாட்டுதலால் நற்பண்பில் சிறந்து விளங்கினார். பதுவா நகரில் தனது 22ஆம் வயதில் மருத்துவராக பட்டம் பெற்று சிறந்த மருத்துவராக பணியாற்றினார். நம்பிக்கையும், பற்றும் கொண்டு வாழ்ந்த அந்தோனி கிறிஸ்துவின்மீது இறையாட்சி பணிக்காக தன்னை அர்ப்பணம் செய்ய விரும்பினார். 1528ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்று தமது பணியை ஆரம்பித்தார்.


    பதுவா நகரை விட்டு மிலான் சென்றார். திருச்சபையில் பிளவுகள் ஏற்பட்டக் காலம். மக்களின் ஆடம்பர வாழ்வு, ஏற்றத்தாழ்வுகள், அரசியல் கொள்கைகள், லூத்தர் போதனையால் திருச்சபையில் பிளவுகள் ஏற்பட்டது. மக்கள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு துயருற்றனர். அந்தோனி மரிய சக்கரியா தன்னுடன் ஐந்து சகோதரர்களை இணைத்து புதிய துறவு சபையை நிறுவினார். இறைவார்த்தை மக்கள் மத்தியில் போதிக்கவும், திருச்சபையின் விசுவாச உண்மைகளையும் மக்களுக்கு போதித்தனர். நற்கருணை ஆண்டவரை ஆராதிக்க கற்றுக்கொடுத்தனர். மக்கள் வாழ்வில் துன்பங்களை சந்திக்கும் தருணத்தில் திருச்சிலுவையில் அடைக்கலம் புதுந்திடவும் கற்பித்த அந்தோனி மரிய சக்கரியா 1039ஆம் ஆண்டு இறந்தார்.   

Wednesday 4 July 2018

போர்ச்சுக்கல் நாட்டு புனித எலிசபெத்

     கிறிஸ்துவின் அமைதியை நிறைவாக பெற்று அமைதியின் நிறைவில் வாழ்ந்தவர். கல்வி கற்பதில் சிறந்து விளங்கினார். அன்பு, அமைதி, இறைஞானம் ஆகியவற்றில் வளர்ந்து ஒழுக்கம் மிகுந்தவராக வாழ்ந்தவர். ஆன்மீக வாழ்வில் அக்கறை கொண்டு செபிப்பதில் ஆர்வம் செலுத்தியவர். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதில் கருத்துடன் செயல்பட்டவரே போர்ச்சுக்கல் நாட்டு புனித எலிசபெத். இவர் போர்ச்சுக்கல் நாட்டில் 1271ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஹங்கேரி நாட்டு எலிசபெத்தின் பேத்தியாகும்.


    எலிசபெத் அரண்மனையில் பிறந்து வாழ்ந்தாலும் செல்வாக்கு மிகுந்த வாழ்வை கைவிட்டு ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்தார். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதில் ஆனந்தம் அடைந்தார். அறநெறி வாழ்விலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினார். நாளும் இறைபக்தியில் வளர்ந்து இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து இறைவனை மாட்சிப்படுத்தினார். எலிசபெத் தனது 12ஆம் வயதில் போர்ச்சுக்கல் நாட்டு இளவரசர் டென்னிஸ் என்பவரை திருமணம் செய்தார். அரண்மணையில் வாழ்ந்த மக்களிடம் அன்புடன் பழகினார்.


    சில நாட்களில் எலிசபெத் கணவரின் துன்புறுத்தலுக்கு உள்ளானார். தனிமையில் தவித்தபோது இவைனிடம் மன்றாடி அமைதி அடைந்தார். எலிசபெத்தின் செபத்தின் வல்லமையால் தனது கணவரை மனம்மாற்றினார். இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். தனது கணவரின் இறந்தப்பின் இல்லற வாழ்வை துறந்து மூன்றாம் பிரான்சிஸ் அசிசியார் சபையில் சேர்ந்து துறவு வாழ்வை மேற்கொண்டார். அமைதியின் தவித்த மக்களில் மனதில் இறையமைதி ஏற்படுத்திய எலிசபெத் 1336ஆம் ஆண்டு ஜøலை திங்கள் 4ஆம் நாள் இறந்தார். 

Tuesday 3 July 2018

புனித தோமா

   உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள் என்று கூறிய கிறிஸ்துவின் வார்த்தையை வாழ்வாக்க இந்திய திருநாட்டில் நற்செய்தி அறிவித்தவர். ஏழை மக்களுக்கு எண்ணற்ற உதவிகள் செய்தார். கிறிஸ்துவின்மீது பற்றுகொண்டு வாழ்ந்தார்.  "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம் நிலைவாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன என்று இறைவனை இறுகப்பற்றிக்கொண்டவர். கிறிஸ்துவுக்காக துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டார். தான் பெற்ற இறையனுபவத்தின் வெளிப்படாக   "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்"   என்று நம்பிக்கையை அறிக்கையிடும் அன்பரே புனித தோமா. 
 
   தோமா கலிலேயாவில் ஏழை மீனவப் பெற்றோருக்கு பிறந்தார். இயேசுவின் 12 திருத்தூதர்களுர் ஒருவர். நாமும் அவரோடு இறப்போம் என்று கூறினர். கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்க இந்திய நாட்டுக்கு தச்சர் தொழில் செய்பவராக வந்தார். தட்சசீலம் முதலில் வந்து தனது போதனையை ஆரம்பித்தார். அரசர் தோமாவிடம் அழகிய அரண்மனை கட்டித்தருமாறுப் பணத்தை தோமாவிடம் கொடுத்தார். தோமையார் அரசனிடமிருந்து பெற்ற பணத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தார். இக்காரணத்தால் அரசன் அவர்களை சிறையில் அடைக்க உத்தரவு ஆணை பிறப்பித்தார். இத்தருணத்தில் அரசனின் சகோதரன் காத் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார். பின் தனது அண்ணன் கனகவில் தோன்றி, "விண்ணகத்தில் தோமா கட்டியுள்ள அரண்மனையில் நான் நலமோடு இருக்கிறேன். அவரை ஒன்றும் செய்துவிடாதே என்று கூறினார். தோமா முதன் முதலில் கிராங்கனூர் கடற்கரையை வந்தடைந்தார் எனவும், மலபாரில் மட்டும் 7 ஆலயங்கள் எழுப்பினார் எனவும், பின்னர் குமரி கடற்கரை வழியாக சென்னை வந்தடைந்தார் எனவும், அங்கே பலரையும் மனந்திருப்பிய பின் "சிறிய மலை" என்ற பெயர் கொண்ட இடத்தில் குத்திக் கொல்லப்பட்டார் எனவும் வரலாறு கூறுகின்றது. அவர் மைலாப்பூரில் அடக்கம் பண்ணப்பட்டதற்கு கல்லறை ஆதாரங்களும் உள்ளது.

Monday 2 July 2018

புனிதர்கள் ப்ரோசெசு மற்றும் மார்டினியன்

     கிறிஸ்துவின் விழுமியங்களில் வாழ்ந்து இறையன்பிற்கு சான்று பகர்ந்தனர். புனித பவுல் புனித பேதுரு இவர்களின் போதனையால் ஈர்க்கப்பட்டு மனம்மாறி நற்சான்றுடன் வாழ்ந்தவர்கள். செபம் செய்வதில் தங்களை அர்ப்பணம் செய்தவர்கள். கிறிஸ்துவின் அன்பில் நாளும் வளர்ந்து இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் பருகி வாழ்ந்தவர்களே புனிதர்கள் ப்ரோசெசு மற்றும் மார்டினியன். இவர்கள் திருத்தூதர்களின் போதனையால் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இறையாட்சி பணி செய்தவர்கள். உரோமை கடவுளுக்கு தூபம் காட்டமறுத்தபோது சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிறை வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களை கிறிஸ்துவின்மீது கொண்ட அன்பின் காரணத்தால் ஏற்றுக்கொண்டார்கள். நீரோ மன்னன் கிறிஸ்தவ மக்களை துன்புறுத்தி மாமர்தீன் சிறையில் அடைத்தக் காலம். ப்ரோசெசு மற்றும் மார்டினியன் ஏற்றுக்கொணட காரணத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்கள். கிறிஸ்துவை மறுதலிக்குமாறு வற்புறுத்தினர். உரோமை கடவுளான ஜøபிடருக்கு தூபம் காட்டுமாறு வற்புறுத்தினர். அவர்களே இயேசுவின் திருநாமம் போற்றப்படுவதாக என்று கூரத்தக்குரலில் கூறினர். இக்காரணத்தால் அவர்களது தலை வெட்டப்பட்டு கொலை செய்தார்கள்.  

Sunday 1 July 2018

புனித கால்

 
   இறைபக்தியில் சிறந்து வளங்கியவர். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தியும் பற்றும் கொண்டவர். செபம் செய்து அன்னையின் வழியாக இறையருளைப் பெற்றவர். இறைவனின் அழைப்புக்கு குரல் கொடுத்து உலக இன்பங்களை துறந்தார்.
இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்து கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்ந்து வந்தார்.  தன்னை துன்புறுத்திய மக்களிடத்தில் அன்புடன் நடந்து கொண்டார். கனிவின் வார்த்தைகளால் தீயோரை நல்வழிப்படுத்தியவரே புனித கால். இவர் 489ஆம் ஆண்டு அவெர்ஜீன் என்னும் நாட்டில் க்ளேர்மோன்ட் என்னும் இடத்தில் பிறந்தவர்.


   கால் செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தாலும் ஏழ்மையான வாழ்க்கை வாழவே விரும்பினார். பெற்றோர் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் பெற்று வாழ்ந்தனர். கால் இளமைப்பருவத்தில் திருமண ஏற்பாடுகள் செய்தனர். திருணம் இன்பங்களை துறந்து இறைவனுக்காக தன்னை அர்ப்பணம் செய்ய யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். பெற்றோர்கள் மிகுந்த வருத்த்துடன் எங்கும் தேடினர். கால் கோர்னோனில் இருந்த துறவு இல்லத்திற்கு சென்றார். இல்லத் தலைவர் பெற்றோரின் அனுமதி பெற்று வருமாறு கூறினார். கால் வீட்டிற்கு சென்று தனது விருப்பத்தை கூறினார். இறைவிரும்ப்பம் என்று உணர்ந்த தந்தை கால் துறவு வாழ்க்கை மேற்கொள்ள அனுமதியும் ஆசிரும் கொடுத்து அனுப்பினார்.

   கால் நற்பண்பில் சிறந்து இறையாட்சி பணிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்தார். க்ளேர்மோன் என்ற ஆயரின் அருட்கரங்களால் குருவாக அருள்பொழிவு பெற்றார்.  இறைஞானத்தில் சிறந்து வாழ்வுதருகின்ற இறைவார்த்தை வாழ்வாக்கி போதித்தார். ஆஸ்ட்ரேசியா பகுதியில் நற்செய்தி அறிவித்த தருணத்தில் கால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறை துன்பங்களை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். பின் சில ஆண்டுகளில் விடுதலையானார். 527ஆம் க்ளேர்மோன்ட் மறைமாவட்டத்தின் ஆயராக அருள்பொழிவு பெற்று சிறந்த முறையில் மக்களை இறைப்பாதையில் வழிநடத்தி 553ஆம் ஆண்டு இறந்தார்.