Tuesday 24 July 2018

புனித பிரான்சிஸ் சொலேனா


   செபம், தவம் செய்வதில் அனைவருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்தவர். நற்பண்பில் சிறந்து நன்மைகள் வழியாக இறையாட்சி பணி செய்தவர். தூயவராக வாழ்ந்து தூயவரான இறைவனை இதயத்தில் சுமந்து இறைபிரசன்னத்தின் சாட்சியாக திகழ்ந்தவர். அனைவரையும் அளவில்லாமல் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அன்பு செய்தவரே புனித பிரான்சிஸ் சொலேனா. இவர் 1549ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 10ஆம் நாள் ஸ்பெயின் நாட்டில் பிறந்தார். 


   பிரான்சிஸ் சொலேனா பெற்றோரின் வழிகாட்டுதலால் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். இயேசு சபை துறவிகளின் பாதுகாப்பில் வாழ்ந்தார்.  துறவிகளின் நற்பண்பினால் ஈர்க்கப்பட்டு செபம், தவம், அன்பு, அமைதி ஆகிய நற்பண்பில் சிறந்து விளங்கினார். இறைவார்த்தையை வாழ்வாக்க ஒவ்வொரு நாளும் முயற்சி செய்தார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தியும் பற்றும் கொண்டு புனித பாதையில் பயணம் செய்தார். வாழ்வில் சந்தித்த துன்பங்களை அன்னை துணையால் வெற்றி பெற்றார். தனது 20ஆம் வயதில் பிரான்சிஸ் துறவற சபையில் சேர்ந்தார்.


    பிரான்சிஸ் சொலேனா இரவு நேரங்களில் இறைவனோடு செபம் செய்வதில் ஆர்வம் காட்டினார். இறைவனின் உடனிரும்பை விரும்பினார். தவ முயற்சிகள் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தினார். குருவாக அருள்பொழிவு பெற்று இறையன்பின் பணியாளராக பணி செய்தார். தொற்றுநோயல் அவதியுற்ற மக்களை தேடிச் சென்று உதவினார். மக்களால் வாழ்கின்ற புனிதர் என்று அழைக்கப்பட்டார். அர்ஜென்டினா பகுதியில் கிறிஸ்துவின் வார்த்தையை அறிவித்தார். கிறிஸ்துவை தனதாக்கி ஒளியாக வாழ்ந்தார். கடின உழைப்பின் பலனாக 9000 மேற்பட்ட மக்களுக்கு திருமுழுக்கு கொடுத்தார். பிறரன்பு பணிகள் வழியாக கிறிஸ்துவின் வாழ்வுதரும் வார்த்தையை அறிவித்த பிரான்சிஸ் சொலேனா 1610ஆம் ஆண்டு ஜøலை 14ஆம் நாள் இறந்தார். 

No comments:

Post a Comment