Tuesday 10 July 2018

புனித ஃபெலிசித்தா, அவரது ஏழு மகன்கள்

    கனிவின் வார்த்தைகளால் அனைவரையும் அன்பு செய்தார். கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்தவர். தனது ஏழு பிள்ளைகளை இறைநம்பிக்கையில் வளர்த்தினார். இறைபக்தியில் சிறந்து கிறிஸ்துவின் அன்பு, இரக்கச் செயல்கள் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தி வாழ்ந்தவரே புனித ஃபெலித்தா மற்றும் அவரது ஏழு மகன்கள். ஃபெலித்தா உரோமையில் வாழ்ந்தவர். இவர் இறையன்பின் பாதையில் பயணம் செய்து அனைவரின் மதிப்பை பெற்றவர். தனது பிள்ளைகளை கிறிஸ்துவின் வார்த்தைகளை எடுத்துரைத்து அவற்றின்படி வாழவும் கற்றுக்கொடுத்தார்.

    ஃபெலித்தா தான் கிறிஸ்தவர் என்பதில் பெருமை கொண்டார். தனது பிள்ளைகள் கத்தோலிக்க விசுவாசத்தில் வளர பயிற்றுவித்தார். கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுக்கொண்ட காரணத்திற்காக ஃபெலித்தாவும் அவரது ஏழு மகன்களும் வேதவிரோதிகளால் கைது செய்யப்பட்டனர். கிறிஸ்துவை மறுதலிக்க சிறையில் அனைத்து துன்புறுத்தினர். கிறிஸ்துவுக்காக துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டார்கள். “இயேசு கிறிஸ்துவே உண்மை கடவுள் என்று யாரெல்லாம் அறிக்கையிடவில்லையோ அவர்கள் அனைவரும் அணையா நெருப்பில் போடப்படுவர்” என்று கூறினர். தாய் தனது ஏழு மகன்களிடம், “பிள்ளைகளே! வானத்தை அண்ணார்ந்து பாருங்கள்.  இயேசு உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவரின் அன்பில் நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் ஆன்மாவைக் காத்துக்கொள்ள உறுதியுடன் போராடுங்கள்” என்று கூறினார். அவ்வாறு 165ஆம் ஃபெலித்தாவும் அவரது ஏழு மகன்களும் தலைவெட்டி கொலை செய்யப்பட்டார்கள்.

No comments:

Post a Comment