Tuesday 27 March 2018

பேறுபெற்றவர் கன்னி மரியா

         இறைமகனை அற்புதமான முறையில் கருத்தாங்கிப் பெற்றெடுத்ததால் இறைவனின் தாயாகும் பேறுபெற்றவர் கன்னி மரியா. உலகமே கொள்ளாத இறைவனை, தம் வயிற்றில் சுமந்த மரியாவை மக்கள் அனைவராலும் வாழ்த்தப்பட வேண்டுமென்பது கடவுளின் திருவுளம். தூய  ஆவியாரின் வல்லமையால் 'உன்னத கடவுளின் மகனை' (லூக்கா 1:32) கருத்தாங்கிய மரியா, செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தியதும் அவர் வயிற்றில் இருந்த குழந்தை யோவான் மகிழ்ச்சியால் துள்ளினார். அப்போது எலிசபெத்தை ஆட்கொண்ட தூய ஆவியார், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்" (லூக்கா 1:42) என்று வாழ்த்தியதோடு, மரியாவை "ஆண்டவரின் தாய்" (1:43) என்றும் அழைத்தார். 

எகிப்து நாட்டின் புனித யோவான்


          இறைவனுக்கு தன் வாழ்வை அர்ப்பணம் செய்து தூயவராக வாழ்ந்தவர். இறைபக்தியில் வளர அயரது உழைத்தார். நற்செயல்கள் செய்வதில் ஆர்வம் காட்டினார். பிற்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கூறும் இறையாற்றல் பெற்றவர். இறைவனின் பிரசன்னத்தில் இடைவிடாமல் வாழ்ந்து நன்மைகள் பல செய்தவரே எகிப்து நாட்டின் புனித யோவான்.

         யோவான் 300ஆம் ஆண்டு எகிப்து நாட்டில் பிறந்தார். தனது பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் பெற்று இறைபக்தியில் வளர்ந்து வந்தார். தனது 25ஆம் வயதுவரை தந்தையுடன் இணைந்து தச்சு வேலை செய்தார். இத்தருணத்தில் இறைவன் தன்னை இறையாட்சி பணி செய்ய அழைப்பதாக உணர்ந்தார். இறைவனோடு ஒன்றாக இணைந்து வேண்டுதல் செய்ய பாலைவனம் சென்று ஒரு துறவியின் வழிகாட்டுதலால் தியான வாழ்வை தொடர்ந்தார். இறைவனை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ள தியாகங்கள் பல செய்தார். தமது ஆன்மா இறையருளால் நிறைய தவ முயற்சிகள் மேற்கொள்ள மலை உச்சிக்கு சென்று தியானம் செய்தார்.


         தன்னை வெறுத்து இறைவனை சொந்தமாக்கிய யோவான் 50ஆண்டுகள் இறைவனோடு இன்றிணைந்து வாழ்ந்தார். உலக இன்பங்களை துறந்து இறைவனுக்காக மட்டுமே அவரது நினைவில் வாழ்ந்தார். புதுமைகள் செய்தார். நோயுற்றோரை நலமாக்கினார். தேவையிலிருப்போருக்கு உதவினார். அலகையால் துன்புறுத்தப்பட்டபோது திருச்சிலுவையில் அடைக்கலம் புகுந்தார். பார்வையற்ற பெண்ணுக்கு பார்வை கொடுத்தார். வாரம் இருமுறை மக்களின் முகம் பார்க்காமல் ஜன்னல் வழியாக பேசினார். தனது வாழ்வின் இறுதிநாளில் உணவு, நீர் எதுவுமின்றி இறைவேண்டுதல் செய்து வாழ்ந்த யோவான் 394ஆம் ஆண்டு இறந்தார். 

Friday 23 March 2018

மரியா திருக்குடும்பத்தின் தலைவி



 

          இயேசுவுக்கு பன்னிரண்டு வயது நடந்தபோது, மரியாவும் யோசேப்பும் இயேசுவைக் கூட்டிக்கொண்டு பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். அப்போது இயேசு ஆலயத்தி லேயே தங்கிவிட்டார். மரியாவும் யோசேப்பும் மூன்று நாட்கள் அங்கும் இங்கும் அலைந்து தேடினர். இறுதியாக, இறைத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் இறைமகனாக இயேசுவை ஆலயத்தில் கண்டனர். பின்னர் அவர்களோடு நாசரேத் திரும்பிய இயேசு பெற்றோருக்கு பணிந்து நடந்தார். அவர் யோசேப்புக்கும், மரியாவுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். திருக்குடும்பத்தின் தலைவியான மரியா யோசேப்புக்கு நல்ல மனைவியாகவும், இயேசுவுக்கு நல்ல தாயாகவும் சிறந்து விளங்கினார். 

Tuesday 20 March 2018

மரியா தூய ஆவியின் திருக்கோயில்



         "அளவில்லாக் கருணையும் ஞானமுமுள்ள கடவுள் உலகை மீட்க கொண்ட ஆவலால், 'காலம் நிறைவேறிய போது... நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு தம் மகனை பெண்ணிடம் பிறந்தவராக... அனுப்பினார்,' (கலா 4:4-5) இந்த மகன் மானிடரான நமக்காகவும் நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இறங்கி, தூய ஆவியினால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதரானார்." (திருச்சபை எண். 52) இவ்வாறு, "ஏவாளின் வழிமரபினர் நடுவினின்று, கன்னி மரியாவைத் தம் மகனின் தாயாகு மாறு கடவுள் தேர்ந்து கொண்டார். அருள் நிறைந்தவரான மரியா, மீட்பின் தலைசிறந்த கனி யாக விளங்குகிறார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 508)


          "எனவே, மரியா உண்மையாகவே 'கடவுளும் மீட்பருமானவரின் தாய்' என ஏற்றுக்கொள்ளப் பெற்று போற்றப்பெறுகிறார். இறைமகனின் தாய் என்ற இந்த உன்னத நிலையானலும் பெருமை யாலும் அணி செய்யப் பெறுகின்றார். இதன் காரணமாக, இறைத்தந்தைக்கு மிகவும் உகந்த மகளாகவும் தூய ஆவியின் திருக்கோயிலாகவும் திகழ்கின்றார். இந்த மேன்மையான அருள் கொடையினால் விண்ணகத்திலும் மண்ணகத்திலும் உள்ள மற்ற எல்லாப் படைப்பு களையும் விட மிகவும் சிறப்புற்று விளங்குகின்றார்." (திருச்சபை எண். 53) 

Monday 19 March 2018

புனித சூசையப்பர்


       திருக்குடும்பத்தின் பாதுகாவலர். குடும்பங்களின் பாதுகாவலர்.நன்மரணத்திற்குப் பாதுகாவலர்.  உழைப்பாளர்களின் பாதுகாவலர். பொறியியலாளர்களின் , பொறியியல் வேலை செய்பவர்களின் பாதுகாவலர். புண்ணியத்திலும், பக்தியிலும், மகிமையிலும், அதிகாரத்திலும் சிறந்து விளங்குவதாலும், சகல கிறிஸ்தவர்களுக்கும் அடைக்கலமும ஆதரவுமாக இருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை ஆவார். புனித கன்னி மரியாவின் கணவர். யோசேப்பு நேர்மையாளர்.யோசேப்பு தாவீது அரசரின் வழிமரபில் தோன்றியவர். இவரது தந்தையின் பெயர் ஏலி என்கிற யாக்கோபு ஆகும். நாசரேத்தில் வாழ்ந்து வந்த யோசேப்பு தச்சுத் தொழில் செய்து வந்தார்.

          தாவீது குலத்து கன்னிப் பெண் மரியாவுடன் இவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவ்வேளையில், மரியா தூய ஆவியின் வல்லமையால் இறைமகனைக் கருத்தாங்கும் பேறு பெற்றார். மரியா திடீரென கருவுற்றதால் யோசேப்பு குழப்பம் அடைந்தார். நேர்மையாளரான இவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கிவிட நினைத்தார். மரியா கடவுளின் திருவுளத்தால் இறைமகனை கருத்தாங்கி இருப்பதை வானதூதர் வழியாக அறிந்து மரியாவை ஏற்றுக்கொண்டார்.   இயேசு பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த வேளையிலும், அவரைக் கோவிலில் ஒப்புக்கொடுக்க எருசலேம் சென்ற நேரத்திலும், ஏரோது அரசன் அவரைக் கொல்லத் தேடியபோதும் மரியாவையும், குழந்தை இயேசுவையும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் யோசேப்பு பாதுகாத்தார்.

   
      பன்னிரண்டு வயதில் இயேசு எருசலேம் கோவிலில் தங்கிவிட்ட பொழுது, யோசேப்பு மிகுந்த கவலையுடன் தேடி அலைந்து அவரைக் கண்டுபிடித்தார். தச்சுத் தொழிலில் வந்த வருமானம் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றினார். மரியாவும் நெசவுத் தொழில் மூலம் இவருக்கு உதவினார். யோசேப்பு இயேசுவுக்கும் தச்சுத் தொழிலைக் கற்றுக்கொடுத்தார். மரியாவுக்கு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் யோசேப்பு விளங்கினார். சிறந்த வாய்மையும் பொறுமையும் கொண்ட யோசேப்பு, திருக்குடும்பத்தை சிறப்பாகத் தலைமைதாங்கி வழிநடத்தினார். இயேசு தனது இறையரசுப் பணியைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவும் மரியாவும் அருகில் இருக்க யோசேப்பு பாக்கியமான மரணம் அடைந்தார்.


Sunday 18 March 2018

புனித எருசலேம் நகர் புனித சிரில்


      கடவுள்மீது நம்பிக்கை கொண்டு கற்பு நெறியில் சிறந்து விளங்கியவர். ஒறுத்தல் முயற்சிகளால் இறைவனை மாட்சிப்படுத்தியவர். திருச்சபையில் நிலவிய தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்.  திருச்சபையின் சொத்துகளை பாதுகாத்தவர். நற்செய்தியை ஆர்வமுடன் அறிவித்து கிறிஸ்துவின் இறையாட்சியை மண்ணில் நிறுவி வாழ்ந்தவரே புனித சிரில். இவர் 315ஆம் ஆண்டு எருசலேமில் பிறந்தார்.

       சிரில் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்துவின் உண்மை சீடராக கற்பு நெறியை பின்பற்றி உண்மைக்கு சான்று பகர்ந்தவர். தனது வீட்டில் தங்கி துறவு வாழ்வை மேற்கொண்டார். கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் செய்வதில் கருத்துடன் செய்பட்டார். ஒறுத்தல் முயற்சிகள் கடைப்பிடித்து தியானம் செய்து வாழ்ந்தார். இறைவன் தன்னை குருத்துவ வாழ்வுக்கு அழைப்பதாக உணர்ந்து குருத்துவ வாழ்வுக்கு தன்னை அர்ப்பணித்தார்.

    இறையியல் கல்வி கற்று குருவாக அருட்பொழிவு பெற்றார். ஆயர் மாக்சிமுஸ் இறந்ததும் சரில் ஆயராக அருள்பொழிவு பெற்றார்.சிரில் திருச்சபையில் நிலவிய தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். திருச்சபையிலன் விசுவாச கோட்பாடுகளை இறைமக்கள் பின்பற்ற வழிகாட்டினார். பற்பல துன்பங்களை ஏற்று திருச்சபையை பாதுகாத்தவர். பனித சரில் இவர் 386ஆம் ஆண்டு இறந்தார்.


புனித பேட்ரிக்


    கடவுள்மீது மிகுந்த அன்பும் பக்தியும் பற்றும் நம்பிக்கையும் வைத்து வாழ்ந்தவர். இடைவிடாமல் இறைவேண்டல் செய்தவர். கிறிஸ்துவின் பாதத்தடங்களில் நடந்து நற்செய்து அறிவித்தவரே புனித பேட்ரிக். இவர் ஸ்காட்லாந்து நகரில் 385ஆம் ஆண்டு பிறந்தார். குழந்தைப்பருவத்தில் 14ஆம் வயதில் பேட்ரிக் அயர்லாந்து நகருக்கு நாடுகடத்தினார்கள். அடிமை சந்தையில் பேட்ரிக் வற்க்கப்பட்டார். அவரை வாங்கியவர் அவரை ஆடுமேய்க்க அனுப்பினார். 



          இறைவன்மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டு இரவுநேரங்களில் கண்விழித்து செபித்தார். தனது இருபதாம் வயதில் பேட்ரிக் கனவு கண்டார். இயேசு அடிமை வாழ்விலிருந்து தப்பி அயர்லாந்துக்கு செல்ல கூறினார். பேட்ரிக் யாருக்கும் தெரியாமல் கப்பலில் பயணம் செய்து தனது பெற்றோருடன் இணைந்து வாழ்ந்தார். பேட்ரிக் குருவாக இறையாட்சி பணி செய்ய ஆவல் கொண்டார். ஜெர்மானுஸ் இவருக்கு குருத்துவ அருள்பொழிவு செய்தார். 433ஆம் ஆண்டு ஆயராக உயர்த்தப்பட்டார்.

            பேட்ரிக் இறைவனின் துணையை பெற்று ஆர்வமுடன் நற்செய்தி அறிவித்தார். இறைமக்களின் தேவையை உணர்ந்து வழிகாட்டினார். எண்ணற்ற மக்களை மனம்மாற்றினார். நற்சான்று வழியாக மக்களை அன்பின் தாழ்ச்சியின் நீதியின் உண்மை வழியில் பயணம் செய்ய கற்றுக்கொடுத்தார். ஒப்புரவு அருள் அடையாளம் வழியாக கிறிஸ்துவின் மன்னிப்பை வழங்கினார். ஏழ்மையின் மறுவடிவமாக அன்பின் சிகரத்தில் உண்மை பாதையில் அன்பின் பணிவிடை செய்த பேட்ரிக் 461ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் நாள் இறந்தார்.

புனித ஹெரிபெர்ட்


        ஆலயம் ஆர்வமாய் சென்றவர். கடவுள் திருமுன்னால் மாசற்றவராய் வாழ்ந்தவர்.  நற்செயல்கள் வழியாக நன்மைகள் செய்தவ வாழ்ந்தவரே புனிக ஹெரிபெர்ட். இவர் 970ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். தினந்தோறும் ஆர்வமுடன் ஆலயம் சென்று செபித்தார். ஆசீர்வாதப்பர் இல்லத் துறவிகளிடம் சென்று எழுத படிக்க கற்றுக்கொண்டார். துறவிகளின் வழிகாட்டுதலால் நற்பண்பில் வளர்ந்து வந்தார். 


      வாம்ஸ் நகரில் ஆலயத்தின் முக்கிய பொறுப்புகள் ஏற்று சிறப்புடன் செயல்பட்டார். இறைவனுக்கு தன் வாழ்வை அர்ப்பணம் செய்து 994ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பேரரசர் ஓத்தோ ஹெரிபெட்டை ஆவணக் காப்பாளராக நியமித்தார். உயர் பதவி வைகித்தபோதும் நேர்மையுட் செய்பட்டு பேரரசரின் மனம் கவர்ந்தார். தன்னம் இயன்ற உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்தார்.


      1003ஆம் துறவு இல்லம் எழுப்பினார். உத்தம துறவியாக வாழ்ந்து இறையாட்சி பணி செய்தார். இறைவேண்டுதலால் மக்களின் தேவைகளை உணர்ந்து உதவி செய்தார். நீர்  இல்லாமல் துன்புற்ற மக்களுக்கு தனது வேண்டுதலால் மழையை பெற்ற தந்தார். மக்களின் தேவையை நிறைவேற்றினார். இறைவனோடு உறவு கொண்டு நன்மைகள் செய்த ஹெரிபெர்ட் 1021ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் நாள் இறந்தார்.

Thursday 15 March 2018

புனித லூயிஸ் தே மரிலாக்



         
          ஏழைகளை அன்பு செய்யுங்கள், அவர்களுக்கு உதவி செய்யுங்கள், அவர்களை அன்பு செய்யுங்கள். ஏழைகளை அன்பு செய்கின்றபோது இறைவனையே நாம் அன்பு செய்கிறோம்
என்று வாழ்க்கையால் சான்று பகர்ந்தவர். இறைபக்தியில் சிறந்து விளங்கியவர். இறைவனுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணம் செய்தவர். தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து வாழ்வதை தனது இலக்காக கொண்டவர். ஏழைகளுக்கும் ஏழை மக்களுக்கும் பற்பல உதவிகள் செய்து வாழ்ந்தவரே புனித லூயிஸ் தே மரிலாக்.


               லூயிஸ் தே மரிலாக் பிரான்ஸ் நாட்டில் 1591ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் நாள் பிறந்தார். இவர் பிறந்த தருணத்தில் தாய் இறந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்டார். சிற்றன்னை மிகவும் கொடுமைபடுத்தினார். தந்தையின் வழிகாட்டுதலால் குழந்தைப்பருவம் முதல் பார்சி இடத்திலுள்ள சாமிநாதர் துறவு இல்லத்தில் தங்கி கல்வி கற்றார். கல்வி அறிவில் சிறந்து விளங்கிய லூயிஸ் தே மரிலாக் இறைபக்தியிலும் சிறந்து விளங்கினார். தனது கன்னிமை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து வாழ துறவு வாழ்க்கை வாழ விரும்பினார். தனது விருப்பம் நிறைவேறாமல் திருமணம் செய்து கொண்டார்.



        லூயிஸ் தே மரிலாக் சில நாட்களுக்குகுப் பின் நோயினால் துன்புற்றார். செபத்திலும் தவத்திலும் தனது வாழ்நாளை செலவிட்டார். ஏழைகளுக்கும் தேவையில் இருப்போருக்கும் உதவி செய்தார். பிரான்ஸ் நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோது ஏழை மக்களின் நிலைக்கு இறங்கி சென்று உதவினார். துன்ப தயரங்களில் சிக்கி தவிக்கின்ற மக்களுக்காக செபித்தார். இறைவனின் திருமுன்னில் அமர்ந்து தியானம் செய்தார். தன்னுடன் நான்கு பெண்களை சேர்த்து சேவை சகோதரிகள் சபையை நிறுவி இறையாட்சி பணி செய்த  லூயிஸ் தே மரிலாக் 1660ஆம் ஆண்டு மார்ச்சி திங்கள் 15ஆம் நாள் இறந்தார்.

Wednesday 14 March 2018

புனித மெட்டில்டா


          இறைவார்த்தையால் ஆட்கொள்ளப்பட்டபோது இறைவனுக்கு முதலிடம் கொடுத்து வாழ்ந்தவர். எதிர்கால நிகழ்வுகளை முன்னறிவித்தார். துறவு இல்லங்களை எழுப்பிவர். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தவரே புனித மெட்டில்டா. இவர் வெஸ்ட்பேலியா நகரில் என்ஜர்ன் என்ற இடத்தில் 895ஆம் பிறந்தார். குழந்தைப்பருவம் முதல் துறவு இல்லத்தில் வளர்ந்து வந்தார்.     

     மெட்டில்டா செல்வ செழிப்பில் வாழ்ந்து, ஜெர்மன் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்த ஹென்றி என்பவரை திருமணம் செய்தார். மெட்டில்டா கணவரின் அன்பும் வழிகாட்டுதலும் பெற்று ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்தார். நீதியுடன் செய்பட கணவருக்கு அறிவுரை கூறினார். உதவி கேட்டு வருகின்ற மக்களுக்கு தராள உள்ளத்தோடு வாரி வழங்கினார். துன்பத்தில் வாழ்ந்த மக்களுக்கு உதவி செய்தார். இறைவனுக்காக ஆலயங்கள் கட்ட உதவி செய்தார்.
     
      மெட்டில்டா இருப்பிள்ளைகளுக்கு தயானார். தாயின் நற்செய்களுக்கு குற்றம் சுமத்தினார்கள். ஏழைகளுக்கு உதவி செய்வதை தடை செய்தபோது துணிவுடன் நற்செயல்கள் செய்தார். தனது மகன் இறந்துவிடுவான் என்று முன்னறிவித்தார். தனது கணவர் இறந்தவுடன் அருகில் இருந்த துறவு இல்லத்தில் தனது வாழ்வை ஆரம்பித்தார். தியானயோகம் வழி இவர் பெற்ற தெய்வீக ஒளி எனும் கொடையும் இப்புனிதை எண்ணற்ற ஜெபங்களை இயற்றவும், பலருக்கு ஆலோசகராகவும் ஆறுதலாகவும் இருக்கவும் உதவியுள்ளன.       
      தன் தாழ்ச்சியாலும் அறிவாலும், இறைவனோடும் புனிதர்களோடும் கொண்டிருந்த ஆழமான உறவாலும், மேன்மைப் பெற்றிருந்த மெட்டில்டா, தன் துறவு மடத்தின் நவக்கன்னியர்களுக்கான, பாடற்குழுவுக்கான, பள்ளிக்கான இயக்குனராக விளங்கினார். புனித விவிலியத்தால் வழிகாட்டப்பட்டு, திருநற்கருணையால் ஊட்டம் பெற்ற புனித மெட்டில்டாவின் ஜெப வாழ்வு, திருஇதயத்தின் மீதான அவளின் பக்தியில் வெளிப்படுத்தப்பட்டு கிறிஸ்துவுடன் ஆன மிக நெருங்கிய ஐக்கியத்திற்கு அவரை வழிநடத்திச் சென்றது.செபத்திலும் தவத்லிலும் வாழ்ந்த மெட்டில்டா 968ஆம் ஆண்டு மண்ணக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து விண்ணக வாóழவில் நுழைந்தார்.


Tuesday 13 March 2018

புனித யூஃப்ராசியா


           இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்து தன்னொடுக்கத்திலும், செபத்திலும், நற்பண்பிலும் சிறந்து விளங்கியவர். தாழ்ச்சி, இரக்கம், கனிவு, பரிவு, அன்பு, அமைதி இவைகளுக்கு சொந்தகாரர். வாழ்வில் துன்பங்கள் சோதனைகளை சந்தித்தபோது இறைவனே தஞ்சம் என்று வாழ்ந்தவரே புனித யூஃப்ராசியா. இவர் கொண்ஸ்தாந்தினோபிள் 380ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை அரசன் தியோடோசியனின் உறவினர். தந்தை இறந்தப் பின் எகிப்தில் தங்கினார்கள்.


          யூஃப்ராசியா தனது இல்லத்தின் அருகில் இருந்த துறவு இல்லத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம் துறவிகளின் வாழ்க்கை முறைகளை தனதாக்கிட விழைந்தார். செபவாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்தார். நாளும் நற்பண்பில் வளர்ந்து வந்தார். சிறுவயதிலேயே தாய் இறந்தார். பேரரசன் தியோடோசியன் யூஃப்ராசியவிற்கு திருமண ஏற்பாடு செய்தார். யூஃப்ராசியா திருமணத்தை புறக்கணித்து கிறிஸ்துவுக்கு தனது வாழ்வை அர்ப்பணித்து துறவு வாழ்வை தேர்ந்தெடுத்தார்.


         கிறிஸ்துவை அளவில்லாமல் அன்பு செய்த யூஃப்ராசியா தாழ்ச்சி, பொறுமை, இரக்கம், அன்பு ஆகிய நற்பண்பில் சிறந்து விளங்கினார். அலகையால் துன்புறுத்தப்பட்ட தருணங்களில் இறைவேண்டுதலால் சோதனைகளை வென்றார். நோயுற்ற மக்கள் மீது சிலுவை அடையாளம் வரைந்து குணப்படுத்தினார். பாவத்தின் பிடியில் சிக்குண்டு வாழ்ந்த மக்கள் விடுதல் பெற வழிகாட்டினார். ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்தார். இறைவனே தஞ்சம் என்று வாழ்ந்த யூஃப்ராசியா 410ஆம் ஆண்டு மார்ச்சி திங்கள் 13ஆம் இறந்தார்.
 

Monday 12 March 2018

புனித யூலோஜியஸ்



       இறைவனின் திருவுளம் ஆர்வமுடன் தேடியவர். கல்வி கற்பதில் சிறந்து விளங்கியவர். கிறிஸ்துவுக்காக துன்பங்களை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டவர். இறைவல்லமையால் வழிநடத்தப்பட்டவர். அன்மை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டவர். அன்னை அருளால் செல்வங்களை விற்று ஏழைகளுக்கு பகர்ந்தவரே புனித யூலோஜியஸ். இவர் ஸ்பெயின் நாட்டில் 819ஆம் ஆண்டு பிறந்தார்.


         யூலோஜியஸ் தாயின் வழிகாட்டுதலால் இறைபக்தியில் வளர்ந்து வந்தார். சிறந்த முறையில் இஸ்பரைன்தேயோ என்ற துறவியின் வழிகாட்டுதலால் தூய்மையில் வளர்ந்து குருவாக அருள்பொழிவு பெற்றார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை நேரிய பாதையில் வழிநடத்தினார். கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட மக்களை துன்புறுத்தப்பட்ட காலம். இவர் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட காரணத்தில் பல துன்பங்களைச் சந்தித்தார். கிறிஸ்துவுக்காக துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டார்.

         கிறிஸ்துவை நற்செயல்கள் வழியாக பறைசாற்றினார். கிறிஸ்துவின் வாழ்க்கை நிகழ்வுகளை நூல்கள் வழியாக எடுத்துரைத்தார். கிறிஸ்துவை அரசராக ஏற்று விசுவாசத்தில் வாழ்ந்த மக்கள் துன்புற்ற வேளையில் தைரியம் பகர்ந்து கொடுத்தார். துன்பங்களை துணிவுடன் ஏற்று கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்தார். அன்னை மரியாவிடம் தனது துன்பங்களை பகர்ந்து கொண்டார். யூலோஜியஸ் பேராயராக அருள்பொழிவு பெற்றுக்கொள்ள சென்ற தருணத்தில் அவரை கைது செய்ரு துன்புறுத்தி 859ஆம் மார்ச்சி திங்கள் 11ஆம் கொலை செய்தார்கள்.


Friday 9 March 2018

உரோமை நகர் புனித பிரான்சென்ஸ்


       ஒவ்வொரு நாளும் இறைவனின் திருவுளம் ஆர்வமுடன் தேடி அவரது விருப்படி வாழ்ந்தவர். செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் பிறந்தாலும் ஏழ்மையை ஆர்வமுடன் ஏற்றுக்கொண்டவர். டவுளின் இறையாட்சி பணியை இரக்கச் செயல்கள் அன்பு பணிகள் செய்ய ஆவல் கொண்டு வாழ்ந்தவரே உரோமை நகர் புனித பிரான்சென்ஸ். இவர் செல்வந்தக் கடும்பத்தில் 1384ஆம் ஆண்டு பிறந்தார்.


           பிரான்சென்ஸ் குழந்தைப்பருவம் முதல் இறைவனின் திருவுளம் அறிந்து செயல்பட்டவர். இறைபக்தியில் வளர்ந்து வந்தார். துறவு வாழ்க்கை வாழ தனது பெற்றோரிடம் கூறிபோது அவர்கள் மறுத்து பணக்கார வலிபருக்கு 12ஆம் வயதில் திருமணம் செய்து கொடுத்தார். இறைவனின் திருவுளம் இதுவே என்றாலும் திருமணத்திற்குப் பின் பட்டினி கிடந்து அழுதார். நிம்மதியின்றி இறைவனுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்ய இயலவில்லையே என்று மனம் வருந்தினார். 


       பிரான்சென்ஸ் நோயுற்று படுத்தப்படுக்கையானார். புனித அலெக்ஸ்சியார் காட்சி கொடுத்து குணப்படுத்தினார். பிரான்சென்ஸ் துறவு வாழ்க்கை வாழ விரும்புவதை அவரது கணவர் உணர்ந்து கொண்டு அன்புடன் வழிநடத்தினார். கடவுளின் அன்பு பணிகள் செய்ய விரும்பியபோது மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை அன்புட் கவனித்துக்கொண்டார். சிறைகைதிகளை சந்தித்துஇறைவார்த்தையை எடுத்துரைத்து நல் வழிகாட்டினார். உரோமையில் வெள்ளபொருக்கு ஏற்பட்டு பஞ்சம் ஏற்பட்டபோது பசியால் துன்புற்ற மக்களுக்கு உதவினார். தனது கணவரின் உதவியுடன் பொதுநிலை பெண்களுக்கு துறவு மடம் ஆரம்பித்தார். ஏழைகளுக்கு அன்பு பணி செய்த பிரான்சென்ஸ் 1440ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் நாள் இறந்தார்.

Thursday 8 March 2018

புனித இறை யோவான்


            இறைபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். பிச்சை எடுத்து பசியைப் போக்கிக் கொண்டவர். பகலில் கப்பலில் வேலை செய்வதர். இரவு நேரங்களில் ஆலயத்திற்கு சென்று இறை வேண்டல் செய்தவர். மனமாற்றம் அடைந்தப் பின் தனது செல்வங்களை எளிய மக்களுக்கு கொடு தூயவராக வாழ்ந்தவரே புனித இறை யோவான். இவர் போர்ச்சுக்கல் நாட்டில் 1495ஆம் ஆண்டு இறைபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்தார்.


     இறை யோவான் தனது எட்டாம் வயதில் பெற்றோருக்கு தெரியாமல் ஸ்பெயின் நாட்டு குருவானவருடன் சென்றார். பெற்றோர் அவரை தேடினார்கள். மகன் கிடைக்காத தருணத்தில் மிகுந்த வேதனை அடைந்தனர்.  இறை யோவான் பிச்சை எடுத்து உணவு அருந்தினார். சில நாட்கள் முதலாளியின் ஆடுகளை மேய்த்தார். நற்பண்பில் வளர்ந்த இறை யோவானை முதலாளி மிகவும் அன்பு செய்தார். திருமண ஏற்பாடுகள் செய்தார். யோவான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ஸ்பெயின் இராணுவத்தில் சேர்ந்தார்.


       அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டார். இரவு நேரங்களில் இறைவனோடு வேண்டுதல் செய்தார். அவிலா யோவானின் வாழ்வை கேட்டு மனந்திரும்பி இறைவனுக்கு தன் வாழ்வை அர்ப்பணம் செய்தார். இறைவார்த்தையை வாசித்து வாழ்வாக்கினார். நற்பது நாட்கள் நோன்பிருந்து தனது பாவங்களுக்கு பரிகாரம் செய்தார். தனது உடமைகள் அனைத்தும் விற்று ஏழைகளுக்கு கொடுத்தார். நோயாளிகளை அன்புடன் கவனித்துக் கொண்டார். துன்பத்தில் வாழ்ந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார். இறைவனுக்கும் இறைமக்களுக்காக வாழ்ந்த இறை யோவான் 1550ஆம் ஆண்டு 8ஆம் நாள் இறந்தார்.

Wednesday 7 March 2018

புனித பெர்ப்பெத்துவா

            இறைவனின் இறையருளால் வாழ்ந்தவர். விசுவாசத்தில் ஊன்றி நில்லுங்கள்; ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள் என்று கூறி அயலானை அன்பு செய்தவர். கிறிஸ்துவின் வல்லமையால் நாளும் வாழ்ந்தவர். இவர் வாழ்ந்த காலத்தில் கிறிஸ்தவ மக்களை துன்புறுத்தினர். இவரது தந்தை கிறிஸ்துவை மறுதலிக்க கூறினார். கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட பெர்ப்பெத்துவா திருமுழுக்கு பெற்றார். 


      இளம்பருவத்தில் பெர்ப்பெத்துவ திருமணம் செய்தார். ஒரு குழந்தைக்கு தயானார். கிறஸ்துவை ஏற்றுக்கொண்ட காரணத்தால் பெர்ப்பெத்துவா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் அடைக்கப்பட்டிருந்த சிறை கற்றோட்டம் இல்லாத இடம். சிறையில் இட நெருக்கடி அதிகம். கிறிஸ்தவ மக்கள் சிறையில் துன்புற்றனர். சிறையிலுள்ள கிறிஸ்தவ மக்களை பார்க் வந்த திருத்தொண்டரின் வழிகாட்டுதலால் பெர்ப்பெத்துவா தனது குழந்தையை சிûறியல் வைத்துகொள்ள அனுமதி பெற்றார். 


         பெர்ப்பெத்துவா தனது குழந்தையைப் பார்த்துஎனது சிறை எனக்கு அரண்மனை போலானது என்றார். விசாரணையின் போது தந்தையின் பரிந்துரையால் கிறிஸ்துவை மறுதலிக் கூறினார். கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்த பெர்பெத்துவ விலங்குகளுக்கு உணவாக கையளிக்க நீதிபதி தீர்ப்பளித்தார். சிறையில் துன்பங்களின் மத்தியில் இறைவனோடு செபித்து ஆற்றல் பெற்றார். பெர்ப்பெத்துவ கிறிஸ்தவர் என்பதற்காக விலங்குகளுக்கு உணவாக மாறினார்.


Tuesday 6 March 2018

புனித கொலெற்


       கிறிஸ்துவின் துன்பப்பாடுகணை கண் முன்பாக கொண்டு தியானம் செய்து இடைவிடாமல் இறைவனின் பிரசன்னத்தில் வாழ்ந்தவர். தனது செல்வங்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தவர். இறைவனோடு இணைந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். வாழ்வில் துன்பங்கள் எதிர்ப்புகளை சந்தித்த தருணங்களில் இறைவனிடம் சரணடைந்து இறைவனின் மாட்சிக்காகாக வாழ்ந்தவரே புனித கொலெற். இவர் பிரான்ஸ் நாட்டில் 1381ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 13ஆம் நாள் பிறந்தார்.


         கொலெற் குழந்தைப்பருவம் முதல் இறைபக்தியில் வளர்ந்து பெற்றோருக்கும் அயலானுக்கும் உகர்தநவராய் வாழ்ந்து வந்தார். தாயின் அரவணைப்பும் அன்பும் தூய வாழ்விற்கு அடித்தளமாக அமைந்தது. தந்தையின் வழிகாட்டுதலால் இறைவன்மீது தீராத தாகம் கொண்டார். ஏழை எளிய மக்களை அன்பு செய்தார். பிறருக்கு உதவி செய்வதில் கருத்துடன் செயல்பட்டார். தனது 17ஆம் வயதில் பெற்றோரை இழந்து தனிமையானார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்கி கொண்டு அன்னை மரியாவை தன் தாயாகவே ஏற்றுக்கொண்டார்.

         அன்னை மரியாவின் வழிகாட்டுதலால் பிரான்சிஸ்கன் துறவு சபையில் சேர்ந்தார். செபத்திலும் தவத்திலும் ஆர்வமுடன் கலந்துக்கொண்டார். இயேசுவின் துன்பாடுகளை நாளும் தியானம் செய்தார். பிரான்சிஸ்கன் சபையிலிருந்து கிளாரிஸ்ட் சபையில் இணைந்தார். துறவிகளிடமிருந்த தவறுகளைசுட்டிக்காட்டி சபையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தினார். துறவு மடங்களுக்கான நியமங்களை எழுதி கடைப்பிடிக்க சக துறவிகளை வற்புத்தினார். கடுந்தவம், தொடர் மௌனம், வெறுங்காலுடன் நடத்தல், ஆழ்நிலை தியானம், நோன்பு இருத்தல் போன்றவற்றை துறவிகள் பின்பற்ற கடுமையாக உழைத்த கொலெற் 1447ஆம் ஆண்டு மார்ச்சி 6ஆம் நாள் இறந்தார்.

Monday 5 March 2018

புனித சிலுவை யோவான்



          “மனிதன் தன்னை இழந்தால் புனிதனாக முடியும்”ஆம்! உலகத்துச் செல்வங்களை எல்லாம் ஒருங்கே தனதாக்கியப் பின்னும் வாழ்வில் அன்பும், அமைதியும் இழந்து தவிக்கும் மக்களைப் பார்த்து, நிலையற்றச் செல்வங்களைத் துறந்து, அழியாச் செல்வமாகிய இறைவனின் அன்பையும், அமைதியையும், அரவணைப்பையும் தனதாக்க நம்மை அழைப்பவரே புனித சிலுவை யோவான். இவர் ஸ்பெயின் நாட்டில் 1542ஆம் ஆண்டு ஜøன் திங்கள் 24ஆம் நாள் பிறந்தவர். இவர் ஆழ்ந்த இறைஞானம், தூய்மையான வாழ்க்கை, கனிவான பேச்சு, முதிர்ச்சியடைந்த உறவு போன்றவற்றில் சிறந்து விளங்கினார்.


        யோவான் கல்வி, ஓவியம், தச்சுவேலை போன்றவற்றைத் திறம்பட கற்றுத்தேர்ந்தார். ஒவ்வொரு நாளும் அறிவிலும், ஞானத்திலும், அன்பிலும், தூய்மையிலும் சிறந்து விளங்கினார். தமது 16ஆம் வயதில் மருத்துவமனையில் தனது சேவையைத் தொடங்கினார். கார்மெல் சபையில் சேர்ந்து 1563ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் நாள் கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்ற வார்த்தைப்பாட்டின் வழியாக இறைவனுக்குத் தன்னை அர்ப்பணித்துத் துறவற வாழ்வைத் தொடங்கினார். புனித மத்தியாவின் யோவான் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார்.இறைவனின் அன்பும், அமைதியும் அனைவரும் பெற்றிட, தன்னலம் கருதாமல் மெய்வருத்தம் பாராமல், இரவு பகலென்று உழைத்தார்.

       மக்களுக்கு அருட்சாதனங்கள் வழியாக பரமனின் அன்பையும், இரக்கத்தையும், மன்னிப்பையும் பெற்றுத்தந்தார். தனது அர்ப்பண வாழ்வைக் கைவிட்டால் உயர் பதவிகள், அழகிய ஆடைகள், வசதியான வீடு, சிறந்த நூலகம், தங்கச்சிலுவை இவற்றை கைமாறாகப் பெற்றுக்கொள்வாய் என்றார்கள். அதற்கு யோவான் “கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவம் ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்ட, ஏழ்மையின் அரசனான கிறிஸ்துவை ஆதாயமாகக் கொண்ட எனக்கு இவ்வுலகச் செல்வம் வீணே!” என்று பதிலளித்தார்.

            ஆண்டவருக்காகத் துன்புற்று இறையரசின் மதிப்பீடுகளுக்கு சான்று பகர்ந்தார். ஏழ்மையின் அரசனான இயேசு கிறிஸ்துவை சொந்தமாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்தவர். இதற்காக வசதியான அறைகளைக் கைவிட்டு, வசதியற்ற அறைகளைத் தனக்காகத் தேர்ந்தெடுத்தார். வாழ்வில் ஒப்பற்ற செல்வமாக மரச்சிலுவை, விவிலியம், மரியன்னையின் படம், செபமாலை இவற்றைத் தனிப்பெரும் சொத்தாக உரிமை கொண்டாடினார். யோவான் “அன்பு செய்வதே என் கடன். வாழ்வின் அந்திப்பொழுதில் அன்பே நம்மைத் தீர்ப்பிடும்” என்று கூறினார். திருச்சிலுவையைக் கரங்களில் எடுத்து அதை உற்று நோக்கியவாறே“ஆண்டவரே! உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன். என் வாழ்க்கையை உமக்காகவே அர்ப்பணித்தேன். 1591ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் நாள் தமது 49ஆம் வயதில் இயற்கை எய்தினார்.


Sunday 4 March 2018

மரியா கிறிஸ்தவர்களின் தாய்

     "உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்ற இறைவாக்கினர் சிமியோனின் வார்த்தைகள் நிறைவேறும் வகையில், இயேசுவின் சிலுவைப் பாடுகளிலும் மரியா பங்கேற்றார். சிலுவையின் அடியில் வியாகுலத் தாயாக நின்ற அவரை, "இதோ உன் தாய்" என்ற வார்த்தைகள் மூலம் இயேசு தனது சீடர்கள் (கிறிஸ்தவர்கள்) அனைவருக்கும் தாயாகத் தந்தார். 
   

        இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகியவற்றுக்கு பிறகு இயேசுவின் சீடர் கள் அனைவரும் மரியாவின் வழிகாட்டுதல்படியே வாழ்ந்து வந்தனர். அன்னை மரியாவோடு வேண்டுதல் செய்து கொண்டிருந்த போதுதான், திருத்தூதர்கள் மீது தூய ஆவியார் இறங்கி வந்தார். அவர்கள் பல்வேறு நாடுகளுக்கு நற்செய்தி அறிவிக்க சென்றபின் திருத்தூதர் யோவானின் பாதுகாப்பில் மரியா வாழ்ந்து வந்தார்.

புனித கசிமிர்

       குழந்தைப்பருவம் முதல் இழைபக்தியில் சிறந்து விளங்கினார். அன்னை மரியாவிடம் பக்தியும் பற்றும் கொண்டு தூயவராக வாழ்ந்தார். இரவுநேரங்களில் நற்கருணை முன்பாக செபிப்பதில் ஆர்வம் காட்டுதினார். இரக்க செயல்கள் வழியாக இறையன்பை பகர்ந்தளித்தார். நீதி நெறி பிறழாத ஆட்சி செய்தார். கற்பு நெறியை கடைப்பிடிப்பதில் கவனம் செலுத்தி வாழ்ந்தவரே புனித கசிமிர். இவர் போலந்து நாட்டில் க்ராக்கோ நகரில் அரச குடும்பத்தில் 1458ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 3ஆம் நாள் பிறந்தார்.


        கசிமிர் அரசராக பிறந்தாலும் ஏழ்மையை விரும்பினார். இறைபக்தியில் சிறந்து விளங்கினார். அன்னை மரியாவிடம் பக்தி அவரது பாதுகாப்பில் வாழ்ந்தார்.  தனது ஒன்பதாம் வயதில் துளுகோஸ் என்ற குருவானவரிடம் சென்று கல்வி கற்றார். குருவானவரின் வழிகாட்டுதலால் இறைபக்தியிலும் இறையன்பிலும் பிறரன்பிலும் வளர்ந்து வந்தார். இறைவனின் அன்பையும் பாதுகாப்ûயும் உணர்ந்த கசிமிர் எறைவனுக்கு தன்னை அர்ப்பணித்தார்.

      துருக்கியிடமிருந்து ஹங்கேரியைக் காப்பாற்ற கசிமிர்  தனது 13ஆம் வயதில் அரசராக நியமிக்கப்பட்டார்.  துளுகோஸ் குருவானவர் அவருக்கு துணையாக இருந்தார். நாட்டை நீதியின் வழியில் உண்மையோடு ஆட்சி செய்தார். அவருடைய பெற்றோர் அவருக்கு திருமண ஏற்பாடு செய்தனர். திருமண வாழ்வை மறுத்து தனிமையில் இறைவனுக்காக வாழ தீர்மானித்தார். இரவுநேரங்களில் பூட்டப்பட்ட ஆலயத்தின் முன்பாக கண்விழித்து செபித்தார். இரக்கச் செயல்கள் வழியாக, நீதி நெறியும், கற்பு நெறி தவறாமல் ஆட்சி செய்த கசிமிர் 1484ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 4ஆம் நாள் மரணம் வழியாக விண்ணக வாழ்வில் நுழைந்தார்.

புனித கேதரின் ட்ரெக்ஸல்



    கைவிடப்பட்ட ஏழை எளிய மக்களை அன்பு செய்தார். இரக்கச் செயல்களை ஆர்வமுடன் செய்தார்.   ஒவ்வொரு நாளும் இறைநம்பிக்கையில் வளர்ந்து வந்தார். ஏழ்மையை விரும்பி உலக செல்வத்தின்மீது பற்றற்று வாழ்ந்தார். இறைவனின் அன்புக்கு தன்னை அர்ப்பணம் செய்தவரே புனித கேதரின் ட்ரெக்ஸல். இவர் ஐக்கிய அமெரிக்க நாட்டில் 1858ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26ஆம் நாள் பிறந்தார். ஒரு மனித நேயமிக்க அமெரிக்க பெண். "கேதரின் மேரி ட்ரெக்ஸல்" என்ற இயற்பெயர் கொண்டவர். ஃபிரான்சிஸ் ஆன்டனி ட்ரெக்ஸல் என்பவரது மகளாவார். இவரது தாயாரின் பெயர் ஹன்னா. கேதரின் இவர்களது இரண்டாவது மகளாவார். 


          கேதரின், "ஹெலன் ஹன்ட் ஜாக்சன்" எழுதிய புத்தகமான "அவமதிப்பின் ஒரு நூற்றாண்டு" எனும் புத்தகத்தைப் படித்தார். ஒருமுறை, ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ" அவர்களைச் சந்தித்தார்.  திருத்தந்தையோ, "நீயே ஏன் ஒரு மறைப்பணியாளராகக் கூடாது" என்று கேட்டார். திருத்தந்தையின் அழைப்பை இறையழைப்பாக ஏற்று இந்திய மக்களுக்காக உதவிர்.  "நற்கருணையின் அருட்சகோதரிகளின்" முதல் குழுவினரும் இந்திய மற்றும் கருப்பு இன மக்களுக்கான முதல் உறைவிட பள்ளியை "சான்டா ஃபே"  என்னுமிடத்தில் தொடங்கினர்.

     புனித சூசையப்பரை துணையாக கொண்டு1942ல் பதின்மூன்று அமெரிக்க மாநிலங்களில் கருப்பு இன மக்களின் குழந்தைகளுக்கான கத்தோலிக்க பள்ளிகள் நிறுவினார். நாற்பது பணி மையங்களும் 23 கிராமப்புற பள்ளிகளும் இருந்தன.  பலர் துன்பங்கள் கொடுத்து தொந்தரவு செய்தனர். "பென்ஸில்வானியா" நகரிலிருந்த ஒரு பள்ளியை எரித்தனர். பதினாறு மாநிலங்களில் இந்தியர்களுக்காக 50 பணி மையங்களை தொடங்கினார். அன்னை மரியாவிடம் அன்பும் பக்தியும் கொண்டு என்றும் தூய்மையில் வாழ செபித்து வந்தார். ஐக்கிய அமெரிக்க நாடுகளிலுள்ள கருப்பு இன மக்களுக்கான முதல் கத்தோலிக்க பல்கலைக்கழகம் என்பது அன்னை ட்ரெக்ஸலுக்கு சிகரமாக அமைந்தது.மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.


Friday 2 March 2018

புனிதர் சிலுவையின் ஆஞ்செலா


       
        தனது வாழ்வை கைவிடப்பட்ட ஏழை எளிய மக்களுக்காக அர்ப்பணித்தவர். இரக்கச் செயல்களை ஆர்வமுடன் செய்தார். நோயுற்ற மக்களுக்காக இறைவனிடம் மன்றாடினார்.
  இறைமக்கள் இறைநம்பிக்கையில் வளர வழி காட்டியவரே புனித சிலுவையின் ஆஞ்செலா. இவர் ஸ்பெயின் நாட்டின் செவில் எனும் நகரில், 1846ம் ஆண்டு, ஜனவரி மாதம், 30ம் நாள் பிறந்தார். ஃபெப்ரவரி மாதம் 2ம் நாளன்று, “தூய லூசியா தேவாலயத்தில்” “மரிய டி லாஸ் ஆஞ்செலஸ்” எனும் பெயருடன் திருமுழுக்கு பெற்றார்.

          இவரது பெற்றோர் செவில் நகரிலுள்ள “திரித்துவ சபையைச்” சேர்ந்த துறவியரின் துறவு மடமொன்றில் பணி செய்தனர். இவரது தந்தை சமையல்காரராகவும், தாயார் ஆடைகள் துவைப்பராகவும், தையல்காரராகவும் பணியாற்றினார். ஆஞ்செலா எட்டு வயதாகையில் புது நன்மை பெற்றுக்கொண்டார். தமது பன்னிரண்டு வயதில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெற்றார். தமது 12 வயதில் காலணிகள் பழுதுபார்க்கும் கடைக்கு வேலை செய்ய சென்றார். தமது 29 வயதுவரை அங்கேயே பணியாற்றினார்.


            காலணிகள் பழுதுபார்க்கும் கடையின் மேற்பார்வையாளரான “அன்டோனியா மல்டோனடோ” எனும் பெண்மணி, மிகவும் இறைபக்தி மிகுந்தவர்.  இவரிடமிருந்து செபிக்கவும், செபமாலை செபிக்கவும், புனிதர்களின் வரலாறுகளை படிக்கவும்கற்றுக்கொண்டார். ஆஞ்செலாவுக்கு அருட்தந்தை “ஜோஸ் டொர்ரெஸ்” ஆன்மீக வழிகாட்டியாகவும், ஒப்புரவாளராகவும் ஆனார். 1865ம் ஆண்டு, தமது 19 வயதில், செவில் நகரிலுள்ள “கருணையின் மகள்கள்” அருட்சகோதரியர் துறவு மடத்தில் சேர்ந்தார்.காலரா நோயால் துன்பப்படுபவர்களுக்காக சேவையாற்றினார். உடல்நல குறைவினால் துறவு இல்லம் விட்டு காலணிகள் தொழிற்சாலை வேலைக்குத் திரும்பினார். 1875ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 2ம் நாள், தமது 29 வயதில், ஆஞ்செலா காலணிகள் தொழிற்சாலையை விட்டு வெளியேறினார்.


          பின் அவருடன் ஜோசஃபா, ஜுவானா மரியா, ஜுவானா மகடன்” மூன்று பெண்கள் இணைந்த்து  ஒரு ஆன்மீக சபையை நிறுவினார். அருட்தந்தை “ஜோஸ் டொர்ரெஸ்,” புதிய சமூகத்தின் இயக்குனராக பொறுப்பேற்றார். அவரே ஆஞ்செலாவை அதன் தலைவராக நியமித்தார். ஏழை மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு இரவு பகலாக சேவை செய்தனர். சிலுவையின் ஆஞ்செலா தமது நிரந்தர வார்த்தைப்பாடுகளை எடுத்துக்கொண்டார். விரைவிலேயே இவர்களது சபையின் 23 சமூகங்கள் நிறுவப்பட்டன. அன்னை சிலுவையின் ஆஞ்செலா, 1932ம் ஆண்டு, மார்ச் மாதம் இரண்டாம் தேதி, தமது 86 வயதில் மரணமடைந்தார்.

Thursday 1 March 2018

புனித டேவிட்


         வானதூதரின் துணையை பெற்றவர். திருசிலுவையை புகலிடமாக நாடியவர். கிறிஸ்துவினோடு கொண்ட உறவால் அன்பின் சுடர் வீசியவர். தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். அன்னை மரியாவின் துணையால் நன்மைகள் செய்தவரே புனித டேவிட். இவர் 500ஆம் ஆண்டு கெரேசிகாவின் இளவரசரின் மகனாக பிறந்தவர். வானதூதரின் வழிகாட்டுதல் பெற்றவர்.

       டேவிடட் புனித பவுலினசிடம் 10ஆண்டும் திருமறை கல்வி கற்றுக்கொண்டார். திருசிலுவையை அன்பு செய்தார். வானதூதரின் அறிவுரைபடி பிரிட்டிஷ் பகுதிக்கு மறைபணி செய்ய சென்றார். குருவாக அருள்பொழிவு பெற்று நற்செய்தியை நற்சான்றுகள் வழியாக அறிவித்தார். திருச்சபையின் ஒழுங்குமுறைகளை பின்பற்றினார். துறவு இல்லங்களை ஏற்படுத்தினார். துறவிகளுக்கு எடுத்துகாட்டாக வாழ்ந்தார். 
        டேவிட் தன்னுடன் வாழ்ந்த துறவிகளை அன்பு செய்தார். நன்னைகள் செய்து நல்வழி காட்டினார். அவர் மீது பொறாமை கொண்ட துறவி ஒருவர் உணவில் விஷம் கலந்து கொடுத்தார். உணவின்மீது சிலுவை அடையாளம் வரைந்து சாப்பிட்ட காரணத்தால் யாதொரு ஆபத்தும் இன்றி உயிர் தப்பினார். எருசலேமிற்கு திருபயணம் மேற்கொண்ட டேவிட், திருத்தந்தையால் ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

          பெலாஜிய தப்பறைக்கு எதிராக குரல் கொடுத்தார். இறந்த விதவையின் மகனுக்கு உயிர் கொடுத்தார். மாலை நேரங்களில் இறைவனோடு உறையாடினார். நல்ல நூல்களை வாசிப்பதில் ஆர்வம் செலுத்தினார். எண்ணற்ற நூல்கள் எழுதினார். இறைவார்த்தையை வாழ்வாக்கினார். அன்னை மரியாவை வாழ்வின் துணையாக தேர்ந்தெடுத்தார். தனது திறமையான பேச்சற்றலால் சமூகத்தில் நிலவிய தீமைகளுக்கு எதிராக குரல் கொடுத்த டேவிட் இறந்தார்.