Thursday 15 March 2018

புனித லூயிஸ் தே மரிலாக்



         
          ஏழைகளை அன்பு செய்யுங்கள், அவர்களுக்கு உதவி செய்யுங்கள், அவர்களை அன்பு செய்யுங்கள். ஏழைகளை அன்பு செய்கின்றபோது இறைவனையே நாம் அன்பு செய்கிறோம்
என்று வாழ்க்கையால் சான்று பகர்ந்தவர். இறைபக்தியில் சிறந்து விளங்கியவர். இறைவனுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணம் செய்தவர். தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து வாழ்வதை தனது இலக்காக கொண்டவர். ஏழைகளுக்கும் ஏழை மக்களுக்கும் பற்பல உதவிகள் செய்து வாழ்ந்தவரே புனித லூயிஸ் தே மரிலாக்.


               லூயிஸ் தே மரிலாக் பிரான்ஸ் நாட்டில் 1591ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் நாள் பிறந்தார். இவர் பிறந்த தருணத்தில் தாய் இறந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்டார். சிற்றன்னை மிகவும் கொடுமைபடுத்தினார். தந்தையின் வழிகாட்டுதலால் குழந்தைப்பருவம் முதல் பார்சி இடத்திலுள்ள சாமிநாதர் துறவு இல்லத்தில் தங்கி கல்வி கற்றார். கல்வி அறிவில் சிறந்து விளங்கிய லூயிஸ் தே மரிலாக் இறைபக்தியிலும் சிறந்து விளங்கினார். தனது கன்னிமை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து வாழ துறவு வாழ்க்கை வாழ விரும்பினார். தனது விருப்பம் நிறைவேறாமல் திருமணம் செய்து கொண்டார்.



        லூயிஸ் தே மரிலாக் சில நாட்களுக்குகுப் பின் நோயினால் துன்புற்றார். செபத்திலும் தவத்திலும் தனது வாழ்நாளை செலவிட்டார். ஏழைகளுக்கும் தேவையில் இருப்போருக்கும் உதவி செய்தார். பிரான்ஸ் நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோது ஏழை மக்களின் நிலைக்கு இறங்கி சென்று உதவினார். துன்ப தயரங்களில் சிக்கி தவிக்கின்ற மக்களுக்காக செபித்தார். இறைவனின் திருமுன்னில் அமர்ந்து தியானம் செய்தார். தன்னுடன் நான்கு பெண்களை சேர்த்து சேவை சகோதரிகள் சபையை நிறுவி இறையாட்சி பணி செய்த  லூயிஸ் தே மரிலாக் 1660ஆம் ஆண்டு மார்ச்சி திங்கள் 15ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment