Sunday 18 March 2018

புனித பேட்ரிக்


    கடவுள்மீது மிகுந்த அன்பும் பக்தியும் பற்றும் நம்பிக்கையும் வைத்து வாழ்ந்தவர். இடைவிடாமல் இறைவேண்டல் செய்தவர். கிறிஸ்துவின் பாதத்தடங்களில் நடந்து நற்செய்து அறிவித்தவரே புனித பேட்ரிக். இவர் ஸ்காட்லாந்து நகரில் 385ஆம் ஆண்டு பிறந்தார். குழந்தைப்பருவத்தில் 14ஆம் வயதில் பேட்ரிக் அயர்லாந்து நகருக்கு நாடுகடத்தினார்கள். அடிமை சந்தையில் பேட்ரிக் வற்க்கப்பட்டார். அவரை வாங்கியவர் அவரை ஆடுமேய்க்க அனுப்பினார். 



          இறைவன்மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டு இரவுநேரங்களில் கண்விழித்து செபித்தார். தனது இருபதாம் வயதில் பேட்ரிக் கனவு கண்டார். இயேசு அடிமை வாழ்விலிருந்து தப்பி அயர்லாந்துக்கு செல்ல கூறினார். பேட்ரிக் யாருக்கும் தெரியாமல் கப்பலில் பயணம் செய்து தனது பெற்றோருடன் இணைந்து வாழ்ந்தார். பேட்ரிக் குருவாக இறையாட்சி பணி செய்ய ஆவல் கொண்டார். ஜெர்மானுஸ் இவருக்கு குருத்துவ அருள்பொழிவு செய்தார். 433ஆம் ஆண்டு ஆயராக உயர்த்தப்பட்டார்.

            பேட்ரிக் இறைவனின் துணையை பெற்று ஆர்வமுடன் நற்செய்தி அறிவித்தார். இறைமக்களின் தேவையை உணர்ந்து வழிகாட்டினார். எண்ணற்ற மக்களை மனம்மாற்றினார். நற்சான்று வழியாக மக்களை அன்பின் தாழ்ச்சியின் நீதியின் உண்மை வழியில் பயணம் செய்ய கற்றுக்கொடுத்தார். ஒப்புரவு அருள் அடையாளம் வழியாக கிறிஸ்துவின் மன்னிப்பை வழங்கினார். ஏழ்மையின் மறுவடிவமாக அன்பின் சிகரத்தில் உண்மை பாதையில் அன்பின் பணிவிடை செய்த பேட்ரிக் 461ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment