Thursday 10 May 2018

ஏப்ரல் 28. புனித பேதுரு சானல்

     
       கிறிஸ்துவின் வழித்தடங்களில் நடந்து இறையாட்சி பணி செய்தவர். எளிமையான வாழ்வை விரும்பி தேர்ந்து கொண்டவர். நோயாளர்களுக்கு சிறந்த முறையில் பணிவிடைகள் செய்தவர். கல்வி பணியில் சிறந்து விளங்கினார். ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தவரே புனித பேதுரு சானல். இவர் பிரான்ஸ் நாட்டில் பெல்லி மறைமாவட்டத்தில் 1803ஆம் ஆண்டு ஜöலை 12ஆம் நாள் பிறந்தார். இறைபக்தி மிந்து பெற்றோருக்கு உகந்தவராக வாழ்ந்து வந்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக ஆடுகளை மேய்த்து வந்தார்.
     
       பேதுரு சானல் பங்குத்தந்தையின் உதவியுடன் கல்வி கற்று குருமடத்தில் சேர்ந்தார். தெளிந்த சிந்தனையும் தூய உள்ளமும் புனிதமான வாழ்க்கை முறைகளை பின்பற்றி நோயாளர்களுக்கு பணி செய்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். குருவாக 1827ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்றார். மிகுந்த ஆர்வத்துடன் மறைப்பணி செய்தார். 1836ஆம் ஆண்டு மனிதர்களை தின்னும் பழக்கம் கொண்ட ஃபுத்துனா தீவிற்கு சென்று தனது பணிகள் வழியாக அம்மக்களின் தீய பழக்களை மாற்றினார். மனிதர்களை மாண்புடன் வழிநடத்தி அன்பின் பணிவிடைகள் வழியாக கிறிஸ்துவின் வாழ்வுதரும் வார்த்தையை அறிவித்தார். மக்களை அன்பின் வழியில் இறைநம்பிக்கையில் வழிநடத்தி சென்ற பேதுருவின்மீது பொறாமை கொண்டு 1841ஆம் ஆண்டு கைது செய்து தடியால் அடித்து கொலை செய்தார்.