Friday 6 July 2018

புனித மரிய கொரற்றி

     தனது உடல் இறைவன் வாழும் ஆலயம் என்பதை நினைவில் கொண்டு, அனனை மரியாவின் அரவணைப்பில் வாழ்ந்து புனிதராக மாறியவர். இறைவனுக்காக தனது கன்னிமையை அர்ப்பணம் செய்தவர். கன்னிமைக்கு கலங்கம் ஏற்படுத்தாமல் கற்பு நெறியுடன் வாழ்ந்தவர். இறைமன்னிப்பின் இலக்கணமாக வாழ்ந்து தன்னை கொலை செய்த சகோதரனை மனமாற்றி, தூய்மையின் இலக்கணமாக, லில்லி மலராக மாறியவரே புனித மரிய கொரற்றி. இவர் 1890ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் இத்தாலி நாட்டில் ஏழ்மையான, அன்பும், இறைபக்தியும் மிகுந்த குடும்பத்தில் பிறந்தார்.   


   மரிய கொரற்றி கல்வி கற்கும் அளவுக்கு வசதி இல்லாதக் காரணத்தால் பள்ளி சென்று கல்வி கற்கவில்லை. தாயின் வழிகாட்டுதலால் விவிலியம் வாசித்து, இறைவார்த்தையை தியானித்து இறைஞானத்தின், இறையன்பின் செல்வந்தராக மாறி நாளும் நற்பண்பில் சிறந்து விளங்கினார். காலையும் மாலையும் செபம் செய்வதில் கருத்தாய் இருந்தார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டு தினமும் செபமாலை செபிப்பது வழக்கம். அமல அன்னையின் அன்பும் அரவணைப்பும் பெற்று தூய்மையின் லில்லி மலராக சிறந்து விளங்கினார். தனது 12ஆம் வயதில் புதுநன்மை பெற்றுக்கொண்டார். தனது இதயத்தில் இறைவனை முதன்முறையாக ஏற்றுக்கொண்ட நாள் முழுவதும் இயேசுவுடன் உறவாடி மகிழ்ந்தார். இயேசுவே ஒருவரே தன் அன்பிற்கு சொந்தக்காரர் என்றுகூறி அவ்வாறே வாழ்ந்தார்.


        மரிய கொரற்றியின் தந்தை மாசெலெனி பிரபு வீட்டில் தோட்டவேலை செய்து அங்கேயே தங்கினார். அதே வீட்டில் வேலைக்கு வந்த ஜியோவானி அவரது மகன் அலெக்ஸôண்டரும் மரிய கொரற்றியின் வீட்டில் தங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. மரிய கொரற்றியின் குடும்பம் இறைபக்தி மிகுந்த குடும்பம். மரிய கொரற்றி புதுநன்மை வாங்கிய ஐந்து வாரங்களுக்கு பின், அலெக்ஸôண்டர், வீட்டில் தனியாக இருந்த மரிய கொரற்றியிடம் பாவம் செய்த தூண்டுதல் கொடுத்தான். தூயவராக வாழ்ந்த மரிய கொரற்றி பாவம் செய்யக்கூடாது என்று எச்சரித்து, “தாயிடம் சொல்லிவிடுவேன்” என்றார். “தாயிடம் சொன்னால் கொன்று விடுவேன்” என்றுகூறி இச்சையான பார்வையோடு உற்றுப்பார்த்தான்.


   தூய்மையின் லில்லி மலராக வாழ்ந்த மரிய கொரற்றி 1905ஆம் ஆண்டு ஜøலை 5ஆம் நாள் வீட்டில் தனிமையாக இருந்தார். அலெக்ஸôண்டார் இந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பாவம் செய்ய துணிந்தான். கொரற்றியை நெருங்கி பாவம் செய்ய அழைத்தான். தனது ஆசைகóகு இணங்க வற்புறுத்தினான். அவனது எண்ணத்தை அறிந்த மரிய கொரற்றி அதற்கு உடன்படவில்லை. இது கடவுளின் பார்வையில் பாவம் என எடுத்துரைத்தாள். கொரற்றி தனது தூய்மையைக் காப்பாற்றிக்கொள்ள போராடினார். இறைவனுக்கு அர்ப்பணம் செய்த தனது கற்பைக் காத்துக்கொள்ள தனது உயிரைக் கொடுக்கத் துணிவுகொண்டார். தனது ஆசைக்கு இணங்காத மரிய கொரற்றியை அலெக்ஸôண்டார் மறைத்து வைத்திருந்த கத்தியால், மரிய கொரற்றியின் மாசற்ற தூய உடலை 14 முறை குத்தி கிழித்தான். இது பாவம், “இதற்காக நீ நரகத்திற்கு போவாய்” என்று கூறினார். பின் காயத்துடன் மருத்துவ மனையில் இருந்த கொரற்றி தன்னை கொலை செய்த அலெக்ஸôண்டரை மன்னித்து ஜøலை 6ஆம் நாள் இறந்தார். 

No comments:

Post a Comment