Monday 16 July 2018

கார்மெல் மலை புனித கன்னிமரி

     "தூய கார்மேல் அன்னை" அல்லது "தூய கார்மேல் மலை அன்னை" அல்லது "புனித உத்தரிய மாதா" என்பது கார்மேல் சபையின் பாதுகாவலராகிய, இயேசு கிறிஸ்துவின் தாயான தூய கன்னி மரியாளுக்கு அளிக்கப்படும் பெயர்களாகும். கார்மேல் சபையின் முதல் உறுப்பினர்கள் 12 முதல் 13ம் நூற்றாண்டு வரை திருநாட்டில் உள்ள கார்மேல் மலையில் வனவாசிகளாக வாழ்ந்தனர். கார்மெல் சபையின் தலைமைத் தந்தை புனித சைமன் ஸ்டோக் என்பவருக்கு அன்னை கன்னி மரியா 1251ஆம் ஆண்டு ஜøலை 16ஆம் நாள் காட்சி கொடுத்தார். அக்காட்சியில் சைமனிடம் உத்தரியம் ஒன்றைக் கொடுத்த கன்னி மரியா, “இது கார்மெல் துறவிகளுக்கு வழங்கப்படும் தனிச்சலுகை. இதை பக்தியோடு அணிபவர்கள் இம்மையிலும், மறுமையிலும், எவ்வித துன்பத்திலும் நரக நெருப்பிலும் அல்லலுற மாட்டார்கள்” என்றார். அன்னை காட்சி கொடுத்த அந்த நாளே கார்மெல் மலை புனித கன்னி மரியின் விழாவாக கொண்டாப்படுகிறது.

No comments:

Post a Comment