Thursday 5 July 2018

புனித அந்தோனி மரிய சக்கரியா

         கிறிஸ்துவின் குருத்துவ பணியில் இணைந்து இரக்கச் செயல்கள் வழியாக இறைவனை மாட்சிமைப்படுத்தியவர். நோயளிகளுக்கு அன்பும் ஆதரவும் செலுத்தியவர். சிறையில் இருந்த மக்களை சந்தித்து கிறிஸ்துவின் அன்பை பகர்ந்தவர். ஒவ்வொரு நாளும் பெத்தின் வழியாகவும், இறைவார்த்தை வழியாகவும் இறைவனின் அருளும் வல்லமையும் பெற்று தூய வாழ்க்கை வாழ்ந்தவரே புனித அந்தோனி மரிய சக்கரியா. இவர் 1502ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் ரெமோனா என்னும் இடத்தில் பிறந்தார்.


     அந்தோனி மரிய சக்கரியா இறைபக்தியில் வளர்ந்து சிறந்த முறையில் கல்வி கற்றார். ஏழ்மையான வாழ்வை விரும்பினார். ஏழை மக்களிடத்தில் அன்பு ஆதரவும் கொண்டு வாழ்ந்தார். உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்து வாழ்ந்தார். தாயின் வழிகாட்டுதலால் நற்பண்பில் சிறந்து விளங்கினார். பதுவா நகரில் தனது 22ஆம் வயதில் மருத்துவராக பட்டம் பெற்று சிறந்த மருத்துவராக பணியாற்றினார். நம்பிக்கையும், பற்றும் கொண்டு வாழ்ந்த அந்தோனி கிறிஸ்துவின்மீது இறையாட்சி பணிக்காக தன்னை அர்ப்பணம் செய்ய விரும்பினார். 1528ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்று தமது பணியை ஆரம்பித்தார்.


    பதுவா நகரை விட்டு மிலான் சென்றார். திருச்சபையில் பிளவுகள் ஏற்பட்டக் காலம். மக்களின் ஆடம்பர வாழ்வு, ஏற்றத்தாழ்வுகள், அரசியல் கொள்கைகள், லூத்தர் போதனையால் திருச்சபையில் பிளவுகள் ஏற்பட்டது. மக்கள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு துயருற்றனர். அந்தோனி மரிய சக்கரியா தன்னுடன் ஐந்து சகோதரர்களை இணைத்து புதிய துறவு சபையை நிறுவினார். இறைவார்த்தை மக்கள் மத்தியில் போதிக்கவும், திருச்சபையின் விசுவாச உண்மைகளையும் மக்களுக்கு போதித்தனர். நற்கருணை ஆண்டவரை ஆராதிக்க கற்றுக்கொடுத்தனர். மக்கள் வாழ்வில் துன்பங்களை சந்திக்கும் தருணத்தில் திருச்சிலுவையில் அடைக்கலம் புதுந்திடவும் கற்பித்த அந்தோனி மரிய சக்கரியா 1039ஆம் ஆண்டு இறந்தார்.   

No comments:

Post a Comment