Friday 26 July 2019

புனித சுவக்கின், அன்னம்மாள்

புனித சுவாக்கின் மற்றும் அன்னா இவர்கள் அன்னை மரியாவின் பெற்றோர். இறைவனின் பார்வையில் நீதிமான்களாக வாழ்ந்தவர். இறைநக்பிக்கையில் சிறந்து பக்தி நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தவர். நாசரேத்தில் செல்வ செழிப்பான வாழ்க்கை வாழ்ந்தனர். செல்வமும் செல்வாக்கு இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லாமல் துன்புற்றனர். அன்னை மரியின் பெற்றோர்கள் திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்துள்ளனர். சுவாக்கின் ஆலயத்தில் பலி செலுத்தினார். ஆண்டவரின் இரக்கம் அவருக்கு கிடைக்க அவருக்கு கிடைக்கும்வரை காத்திருந்தார். செப, தவ, ஒறுத்தல்கள் பல புரிந்து, நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்கு "மரியா" என்று பெயர் சூட்டினர். 

  தன் ஒரே மகளை ஞானத்திலும், அறிவிலும், பக்தியிலும் சிறந்த பெண்ணாக வளர்த்தெடுத்தனர். இவர்கள் இறுதியாக எருசலேமில் வாழ்ந்துள்ளனர். அன்னாவும், சுவக்கின் என்பவர்களும் அன்னை மரியின் பெற்றோர்கள் . 6ஆம் நூற்றாண்டிலிருந்தே அன்னாவுக்கு வணக்கம் செலுத்தப்பட்டு வந்தது.  புனித அன்னா ஜூலை மாதம் 25 ஆம் நாள்தான் இறந்தார் என்ற வரலாற்று செய்தியைக் கொண்டு, 550 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிளில் ஆட்சி செய்த அரசன் புனித அன்னா பெயரில் பேராலயம் கட்டினான்.  அன்னை மரியின் பெற்றோர்களின் மீதிருந்த பக்தி உலகம் முழுவதும் பரவியது. ஜூலை 26ஆம் நாள் இப்புனிதர்களின் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. 

Thursday 25 July 2019

புனித பெரிய யாக்கோபு

புனித பெரிய யாக்கோபு இயேசுவின் சீடர்களில் ஒருவர். இயேசுவின் உருமாற்றத்தை கண்ட சீர்களில் இவரும் இருந்தார். தொடக்ககால திருச்சபையில் பேதுருவுக்குப் பின் திருச்சபையின் தலைவராக இருந்தவர். அல்பேயுவின் மகனான யாக்கோபு நான்காவது நபர். இவர் நீதிமான் என்று அழைக்கப்படுகிறார். பெத்சாய்தா ஊரைச் சார்ந்த செபதேயு, சலோமின் இவர்களுடைய மகன். இயேசுவின் அழைப்புக்கு செவிமடுத்து இயேசுவுடன் தங்கி அவரது போதனைகளை பின்பற்றினார். இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் ஸ்பெயின் நாட்டில் உள்ள இபெயரின் பகுதியில் நற்செய்தி அறிவித்தார். ஸ்பெயின் நாட்டில் வடபகுதியில் உள்ள உள்ள சரகோசா என்ற இடத்தில் ஒரு தூணில் அன்னை மரியா காட்சி கொடுத்தார். உங்களை நான் எப்போதும் பாதுகாப்பேன், கைவிடமாட்úட், உடனிருப்பேன் என்பதன் அடையாளமாக இங்கே ஒர் ஆலயம் கட்டுமாறு அன்னை மரியா கூறினார். 42ஆம் ஆண்டு ஏரோது அக்கிரிப்பா யாக்கோபை வாளால் வெட்டி கொலை செய்தார்.

Monday 15 July 2019

புனித தோமினிக்

    கடவுளின் திருமுன்னால் தூய்மையாக வாழ வேண்டும். கிறிஸ்துவின் இறையாட்சி பணி மற்றும் ஒழுக்கம் ஆகியவை இரு கண்களாகப் போற்றப்பட வேண்டும். சொந்தமாக செல்வம் சேர்த்து வைத்திருக்கக் கூடாது. கூடிய மட்டும் பிச்சை எடுத்தே உண்ணவேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்தவரே புனித தோமினிக். இவர் ஸ்பெயின் நாட்டில் 1170ஆம் ஆண்டு பிறந்தார். தோமினிக் என்றால், ‘நான் கடவுளுக்குச் சொந்தமானவன்’ என்பது பொருள். தனது 16ஆம் வயதில் புனித அகஸ்டின் துறவற சபையில் சேர்ந்தார். இறையியல் பட்டம் பெற்று இறையாட்சி பணியை ஆரம்பிதத்தார். ஊர் ஊராக சென்று இறையாட்சி அறிவித்தார். இறைமக்கள் இறைவனோடு இணைந்து வாழ செப வாழ்வை அமுதாய் ஊட்டினார். இறைவார்த்தைக்கேற்ப வாழ்ந்து, கிறிஸ்துவை தங்கள் வாழ்வில் பிரதிபலிக்க இரவும் பகலும் அயராது உழைத்தார்.


     1204ஆம் ஆண்டு டென்மார்க் அரசியைக் காப்பாற்ற அரசர் எட்டாம் அல்ஃபோன்சோ என்பவர் ஓஸ்மா மறைமாவட்ட ஆயர் தியாகோ மற்றும் தோமினிக் இருவரையும் டென்மார்க்கிற்கு அனுப்பினார். அவர்கள் தென் பிரான்ஸ் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஆல்பிஜென்சிய தப்பறையைப் பின்பற்றிய மக்களைச் சந்தித்தார்.  தப்பறைக்கு எதிராகக் குரல் கொடுக்க திருத்தந்தை மூன்றாம் இன்னோசென்ட், தோமினிக்கை நியமித்தார். தோமினிக், அன்னை மரியாவிடம் பக்தி கொண்டிருந்தார். அன்னையின் துணையால் ஆல்பிஜென்சிய தப்பறையின் மீது வெற்றி பெறமுடியும் என்று நம்பினார். தோமினிக் தூலூஸ் நகருக்கு அருகிலுள்ள காட்டிற்கு சென்று அன்னையின் உதவிக்காகவும், இறைவன் மக்களின் பாவங்களை மன்னிக்கவும் மன்றாடினார்.  மக்களைப் புனிதப்படுத்தத் தன்னைப் புனிதப்படுத்தினார். அன்னை மரியா மூன்று வானதூதருடன் தோன்றி, “நீர் போதனை செய்யும் போது, மக்கள் செபமாலை செபிக்கச் சொல்லும். அதன் வழியாக உம் வார்த்தைகள் ஆன்மாக்களில் விழுந்து மிகுந்த பலனைக் கொடுக்கும்” என்றார். செபமாலையின் வழியாக ஆல்பிஜென்சிய தப்பறையும் முறியடிக்கப்பட்டது. செபமாலை என்பது ‘ஏழைகளின் திருப்பாடல்’ மற்றும் ‘நற்செய்தியின் சுருக்கம்’ என்று அழைக்கப்படுகிறது.  அன்னை மரியாவின் துணையோடு இறையாட்சி பணி செய்த தோமினிக் 1221ஆம் ஆண்டு இறந்தார்.