Thursday 4 October 2018

புனித பிரான்சிஸ் அசிசி



   அன்பின் உறவாய்; அமைதியின் தூதராய்; பகையுள்ள இடத்தில் பாசத்தையும்; வேதனையுள்ள மனதில் மன்னிப்பையும்; ஐயமுள்ள சூழல் நம்பிக்கையையும்; இருள் சூழ்ந்த இடத்தில் ஒளியையும்; துயரம் நிறைந்த இதயத்தில் மகிழ்ச்சியையும் விதைத்தது, தாய்த் திருச்சபையால் இரண்டாம் கிறிஸ்து என்று அழைக்கப்படுபவரே புனித பிரான்சிஸ் அசிசி. இவர் இத்தாலி நாட்டில் அசிசிப் பட்டணத்தில் 1182ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை செல்வந்தரும், சமூகத்தில் செல்வாக்கு பெற்றவர். இவரது தாய் ஒழுக்கமும், இறையன்பும் நிறைந்தவர். பிரான்சிஸ் உல்லாசமாக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார். நண்பர்களுடன் விளையாட்டிலும், கேக்கூத்துகளிலும், வீரச்செயல்களிலும் நாட்களைச் செலவழித்தார். 


    ஒருமுறை தந்தையின் வியாபாரத்தைக் கவனித்து வந்தவேளையில் அங்கு வந்த ஒரு தர் மக்காரர்  கை நீட்டினார் . அப்போது பிரான்சிஸ் ஒன்றும் கொடுக்கவில்லை. மாலை வியாபாரம் முடி செல்வாக்கு பெற்றவர். அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு அந்த தர் மக்காரரை தேடிச்சென்று அன்றைய வருமானத்தை முழுவதும் கொடுத்தார் . பிரான்சிஸ் ஒரு உன்னதப் போர் வீரனாக வேண்டுமென்பதே இலட்சியக் கனவு. 1201இல் அசிசி, பெர்ஜியா என்ற நாடுகளுக்கிடையே போர் மூண்டது. தனது கனவை நிறைவேற்றிட போர்க்களம் நோக்கிப் பயணமானார். எதிரிகளால் சிறைப்படுத்தப்பட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் . ஓராண்டுக்குப் பின் பிரான்சிஸ் விடுதலையானார் .


         புனித தமியானோ ஆலயத்தில் சிலுவையிருந்து, “பிரான்சிஸ் நீ ஏன் ஒரு சிறிதளவு மதிப்புக் கொடுக்காத இந்த மனிதர்களிடம் இவ்வளவு தாராளமாகவும், அன்பாகவும் இருக்கிறாய். உனக்கு அளவிட முடியாத அளவுக்கு அன்பும், மதிப்பும் கொடுக்கக்கூடிய ஆண்டவராகிய கடவுளிடம் நீ ஏன் உன் தாராள உள்ளத்தையும், அன்பின் சேவையையும் ஒப்புக்கொடுக்கக் கூடாது, உனது பணி தலைவனுக்கா அல்லது சாமானிய மனிதனுக்கா” என்று கேட்டார் . உடனே பிரான்சிஸ் “எனது பணி தலைவனுக்கே” என்று பதிலளித்தார். இயேசுவின் குரலைக் கேட்ட இவர் தம் வாழ்வுப் பாதையே மாற்றியமைத்தார். உலக வாழ்வை துறந்தார். பிரான்சிஸ் களியாட்டங்கள் தவிர்த்தார். நண்பர்கள், “திருமணம் செய்யும் ஆசை வந்து விட்டதோ” என்று கூறினர். “ஆம்! ஆனால் நீங்கள் யாரும் எதிர்பார்க்காத, விரும்பாத அழகுமிக்க பெண்ணை நான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். அது தான் ஏழ்மை” என்றும் கூறினார். 


   பிரான்சிஸ், இறையழைப்பிற்கு செவிமடுத்து அமைதியான பேச்சு, அன்பான பார்வை, நிதானமான உரையாடல், முழு அர்ப்பணத்துடன் இறைபணி செய்ய தயாரானார். தனது உடைமைகளையும், பணத்தையும் எடுத்து ஆலயம் செப்பனிட விரைந்தார். பெர்னார்டோ, ஆயரிடம் முறையிட்டு பிரான்சிஸ் இனிமேல் என் மகன் இல்லை. என்னுடைய பணத்தை என்னிடம் கொடுக்க கட்டளையிடும் என்றார். பிரான்சிஸ் பணத்தை தந்தையிடம் கொடுத்துவிட்டு இந்நாள்வரை பீட்டர் பெர்னார்டோவை என் தந்தை என்று அழைத்தேன். ஆனால் இப்போது முதல் உண்மையிலேயே பரலோகத்தில் இருக்கும் விண்ணகத் தந்தையை என் தந்தை என்று  சொல்ல முடியும் என்று கூறினார்.


     பிரான்சிஸ் ஏழ்மைக்கும், இறையன்புக்கும் எடுத்துக்காட்டாக மாறினார். அறநெறிபற்று மிக்கவராக வாழ்ந்தார். இறைபக்தியையும், தாழ்ச்சியையும் உடன் பிறப்புகளாகவும், எளிமையையும், ஏழ்மையையும் அன்றாட வாழ்வின் படிச்சுவடுகளாகவும் மாற்றினார். உடமைகள் அனைத்தையும் துறந்து வெறுங்காலுடன் நடந்தார். தியாகம் புரிந்து வாழ்வதே நோக்கம். உழைத்து உண்பதே குறிக்கோள். சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நிலை நாட்டி, இறைவார்த்தையை தியானித்து வாழ்வாக்கினார்.  “பிரான்சிஸ்கன் துறவறச் சபையை”  ஏற்படுத்தினார். துறவு சபையின் ஒழுங்குகள் மிகக்கடினமாக இருந்தது. “விண்ணரசையும், நீதியையும் முதல் தேடுங்கள், மற்ற அனைத்தும் உங்களுக்குக் கூட்டிக் கொடுக்கப்படும்” என்ற இயேசுவின் போதனை வழி அகிலமெங்கும் நற்செய்தியைப் பரப்பினார்.


        கிறிஸ்துவின் பிறப்பு விழாவை கொண்டாடினார். அன்று முதல் குடில் அமைக்கும் முறை உருவானது. 1224ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் அல்வோனிய மலை உச்சிக்குச் சென்று “ஆண்டவரே! நான் இறக்கும் முன் உமது பாடுகளை எம் உடல் அனுபவிக்க ஆசைப்படுகிறேன்; எனக்குத் தாரும்” என்று கூறினார். ஐந்து  கிறிஸ்துவின் ஐந்து காயங்களை தனதாக்கி, தாய்த் திருச்சபையால் ‘இரண்டாம் கிறிஸ்து’ என்று அழைக்கப்படுகிறார். வணிகரின் மகனாகப் பிறந்து, வசதியுடன் வாழ்ந்திருந்தும் ஏழ்மையைத் தனதாக்கியவர். வாழ்க்கையின் இன்பத்தைத் துறந்து, வானகத் தந்தையை ஏற்றவர். வழியாம் சத்தியத்தை அறிந்து ஏழ்மையின் அன்பராய் மாறியவர். மனிதனையும் இயற்கையையும் இயன்றவரை நேசித்து, இறைபிரசன்னத்தை உணர்ந்து 1226ஆம் ஆண்டு அக்டோபார் திங்கள் 4ஆம் நாள் இயற்கை எய்தினார். 

   

1 comment: