Monday 8 October 2018

oct.8. புனிதர்களான செர்ஜியுஸ் மற்றும் பாக்கஸ்

     
    கிறிஸ்துவின் போதனைகளை வாழ்வாக்கி நற்சான்று பகர்ந்தவர்கள். திறமையான போர்வீரர்கள் கிறிஸ்துவுக்காக துன்பங்களை துணிவுடன் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டவர்களே புனிதர்களான செர்ஜியுஸ் மற்றும் பாக்கஸ். இவர்கள் உரோமை நகரில் மூன்றாம் நூன்றாண்டில் வாழ்ந்தவர்கள். இருவமே மாக்கியானுஸ் போர் படையில் இராணுவ வீரர்களாக பணியாற்றியவர்கள். நற்பண்புகள் வழியாக பதவிகள் பல பெற்று சிறப்பான முறையில் தங்கள் கடமைகளை செய்து வந்தார்கள். 

   சகபோர் படைவீரர்கள் வழியாக கிறிஸ்துவின் போதனைகளை கேட்டார்கள். திருமுழுக்கு வழியாக கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டார்கள். கிறிஸ்துவின் நிலைவாழ்வுதரும் இறைவார்த்தையை தங்கள் வாழ்வின் நியமங்களாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்த தருணத்தில் படைவீரர்கள் ஒன்றிணைந்து ஜøபிடர் கோவிலுக்கு நுழைந்தார்கள். செர்ஜியுஸ் மற்றும் பாக்கஸ் கோவிலுக்குள் செல்லாமல் வெளியே நின்று கொண்டிருந்தார்கள். இந்நிகழ்வு கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட மக்கள் என்று சகபடை வீரர்கள் உணர்ந்துக்கொண்டனர். 

   இந்நிகழ்வினால் ஆளுநன் முன்பாக விசராணைக்காக நிறுத்தப்பட்டார்கள். விசராணையில் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட விவரம் தெரியவந்தது. ஆளுநன் முன்பாக கிறிஸ்துவை பெரும்மிதத்துடன் அறிக்கையிட்டார்கள். ஆளுநன் செர்ஜியுஸ் மற்றும் பாக்கஸ் மீது கோபம் கொண்டு துன்புறுத்தினான். கடுமையான துன்புறுத்தல்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். 303ஆம் ஆண்டு கிறிஸ்துவின் பொருட்டு மறைசாட்சியானார்கள். 

No comments:

Post a Comment