Saturday 6 October 2018

புனித புரூனோ

    நற்செயல்கள் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தியவர். இறைவார்த்தையை வாழ்வாக்கி இறைஞானம் பெற்று தனது சொல்லாலும், செயலாலும் இறையாட்சி பணி செய்தவர். குழந்தைப்பருவம் முதல் தூயவராக வாழ்ந்து புண்ணியங்கள் செய்தவரே புனித புரூனோ. இவர் ஜெர்மனியின் கொலொன் நகரில் 1030ஆம் வண்டு பிறந்தார்.  இறைபக்தியில் வளர்ந்து இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்தார். தனது 25ஆம் வயதில் குருவாக அருள்பொழிவு பெற்று இறைபணி செய்ய தன்னை அர்ப்பணம் செய்தார். தமது பேச்சாற்றல் வழியாக இறையியல், மெய்யியல் கருத்துக்களை மாணவர்களுக்கு எளிய நடையில் எடுத்துரைத்து மாணவர்களின் மனதை கவர்ந்தவர். 

    மிக தைரியத்துடன் விசுவாசத்தை அறிவித்தார். திருச்சபையில் சிறந்த எழுத்தாளராக திகழ்ந்தார். பல புத்தகங்களை எழுதினார். கல்லூரியின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பையும் ஏற்றார். பின்னர் 1075 ஆம் ஆண்டில் ரைம்சில் ஆலய நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். ரீமிஸ் மறைமாவட்ட செயலராக சிறந்த முறையில் பணியாற்றினார். 1090ஆம் ஆண்டு புரூனோ திருதந்தையின் ஆலோசகராக தாழ்ச்சியுடன் செயல்பட்டார். இறைவனோடு தனிமையில் தியான வாழ்வை தொடர விரும்பி இத்தாலிக்கு சென்றார். ஒரு குடில் அமைத்து இறையருள் பெற்று இறைவனை ஆராதித்த புரூனோ 1101ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் நாள் இறந்தார். 

No comments:

Post a Comment