Monday 21 January 2019

புனித ஆக்னஸ்

    இறையன்பு, தூய்மை, பொறுமை ஆகிய பண்புகளைத்  தனதாக்கி அறநெறி ஒழுக்கத்தில் சாலச்சிறந்தவர். இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்று விசுவசித்து, எனது கன்னிமை இறைவனுக்கே சொந்தம் என்றுகூறி இறையன்பின் சுடராகத் திகழ்ந்தவரே புனித ஆக்னஸ். இவர் உரோமை நகரில் பட்ரீசியன் என்ற உயர்குலத்தில் கி.பி. 291இல் பிறந்தார். ஆக்னஸ் என்றால் தூய்மை அல்லது புனிதம் என்பது பொருள்.


     ஆக்னஸிடம், புல்வியன் தன்னை ஏற்கும்படி கட்டாயப்படுத்தினான். மீறினால் நீ கிறிஸ்தவள் என்று காட்டிக்கொடுப்பேன் என்றான். ஆக்னஸ் புல்வியனிடம், “எனது அன்பு, ஆசைகள் அனைத்தும் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவுக்கே உரியவை. அவர் ஒருவரே என் முழு அன்பிற்கும் சொந்தக்காரர் ஆவார்” என்றார். புல்வியனின் விருப்பத்திற்கு இணங்காத ஆக்னûஸ கிறிஸ்தவள் என்று உரோமை அதிகாரி செம்ப்ரோனியன் என்பவரிடம் காட்டிக்கொடுத்தான். ஆக்னஸ் கிறிஸ்துவைப் பின்பற்றிய காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டார்.


     ஆக்னஸின் கன்னிமையைக் களங்கப்படுத்த, விலைமாதர் இல்லத்திற்கு கொண்டு செல்லுமாறும், யாரும் இவரைக் கறைபடுத்தலாம் என்றும் என்றுகூறி விலைமாதர் அறையில் அடைத்தனர். அங்கு தீய இளைஞர்கள் அவரை அணுக முயன்றும் அவர்களால் முடியாமற்போயிற்று. ஆக்னஸ், “உனது வாளினால் என் இரத்தக்கறை படிந்தாலும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணமான எனது உடலை கறைப்படுத்த முடியாது” என்றார். எப்போதும் கூடவே காவலாய் இருக்கும் காவல்தூதர் ஆக்னûஸத் தீமையிலிருந்து காப்பாற்றினார்.


    அரசன், கிறிஸ்தவ மறையை விட்டுவிடு உரோமைக் கடவுளது கோவில் இருக்கும் சிலையை வணங்கி, அதற்கு தூபம் காட்டுமாறு கூறினான். ஆக்னஸ், “என் உயிரே போனாலும் நான் இதைச் செய்யமாட்டேன். எனது உடலும் ஆன்மாவும் என்றும் உள்ள இறைவனுக்கே” என்று கூறினார். இதைக்கேட்ட அரசன், “ஆக்னஸ் நமது குலதெய்வத்தை வணங்க மறுத்ததால் அவள் தலையை வெட்டி கொலை செய்ய ஆணையிடுகிறேன்” என்று சாவின் தீர்ப்பைக் கூறினான். இறைவனுக்காக தனது கன்னிமையைக் காத்துக்கொண்ட ஆக்னஸ் 304ஆம் ஆண்டு, ஜனவரி 21ஆம் நாள் மரணம் வழியாக இறைவனின் திருப்பாதம் சேர்ந்தார். ஆக்னஸின் உடல் இன்றும் அழியாமல் இருக்கின்றது. இவரது திருநாள் ஜனவரி 21, திருமணம் நிச்சயமானவர்களின் பாதுகாவலர்.