Wednesday 31 January 2018

மரியா பாவிகளின் ஏணிப்படி

         
             “கடவுளின் அன்னையும் எங்களின் அன்னையுமான மரியே நீர் வாழ்க; விண்ணகத்தில் வீற்றிருப்பவரும் அரியணையினின்று அருள்வளங்களை வாரி இறைப்பவருமான இறை இயேசுவிடம், மரியே எமக்காகப் பரிந்து பேசி, நாங்கள் இறுதிநாள் தீர்ப்பில் மாட்டிக் கொள்ளாதிருக்கவும், இறைவனை முகமுகமாகத் தரிசிக்க வரமும் பெற்றுத்தாரும்”  என்று செபித்தார் புனித கிறிசோஸ்தம் அருளப்பர்.

          புனித பெர்னார்து, “மரியா பாவிகளின் ஏணிப்படி என்றும். இரக்கத்தின் அரசி மரியா, பாவச்சேற்றில் அமிழ்ந்துக் கிடப்போர்க்குத் தனது கரத்தை நீட்டி, பாவப் பாதாளத்தினின்று வெளியேறவும் இறைவனுடன் ஒப்புரவாகவும் உறுதுணையாய் இருக்கின்றார்” என்று கூறுகிறார்.


அன்னை மரியா

 
      அன்னை மரியா ஓர் அருளோவியம்; மாசணுகாதவர்; அன்பின் உறைவிடம்; தாழ்ச்சியின் சிகரம்; விண்ணகத்தின் வாசல்; விண்ணக மண்ணக அரசி; அமல உற்பவி; இறைவனின் தாய்; விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்டவர்; உடன்படிக்கையின் பேழை எனப்பலவாறு அழைக்கிப்படுகின்றார். “மரியா இல்லாத சூழலில் நோயுற்றோர் கண்ணீரால் தம் படுக்கையை நனைக்கின்றனர். எனவே இத்தகைய அவலநிலை நீங்க வேண்டுமாயின் மரியன்னையைக் கூப்பிடு”. (புனித தாமசின் அருளப்பர்)

மரியா கிறிஸ்தவர்களின் சகாயம்


       
      புனித தொன்போஸ்கோவின் பாதுகாப்பில் வளர்ந்த பிள்ளைகளுக்கு அவரது தாய் துணையாக இருந்து பற்பல பணிவிடைகள் புரிந்து வந்தார். மாலையில் விவிலியக் கதைகளைக் கற்றுக்கொடுத்தார். இரவில் சிறுவர்களின் கிழிந்துபோன உடைகளைத் தையல் போட்டு சீர்ப்படுத்தினார். திடீரென அவரது தாய் இறந்துவிட்டார். அன்னையின் அரவணைப்பையும், பாதுகாப்பையும் இழந்த தொன்போஸ்கோ, அன்னை மரியாவிடம், “கன்னிமரியே, எனது பிள்ளைகளைப் பாரும். இவர்களுக்கு இனிமேல் எந்தத் தாயும் இல்லை. இந்நேரம் முதல் நீரே இவர்களுக்குத் தாயாக துணையாக இருப்பீராக” என்று செபித்தார். அன்று முதல் அன்னை மரியாவை, ‘கிறிஸ்தவர்களின் சகாயமே’ என்று அழைத்தார். அன்னை மரியாவின் அரவணைப்பிலும், பாதுகாப்பிலும் வாழ்ந்து புனிதராக மாறினார்.




          இரண்டாம் வத்திக்கான் சங்கம், “நிறைவாழ்வு வரலாற்றில் ஆழ்ந்து ஊன்றிய மரியா நம்பிக்கைப் பேருண்மைகளைத் தம்மில் ஒருவாறு இணைத்துப் பிரதிபலிக்கின்றார். தாம் பறைசாற்றப்படும் போதும் வணங்கப்படும் போதும் நம்பிக்கை கொண்டோரைத் தம் மகனிடமும் அவரது தந்தையின் அன்புக்கும் இட்டுச் செல்கின்றார். எனவே தன் திருத்தூதுப் பணியிலும் கிறிஸ்துவை ஈன்றவரையே திருச்சபை வழியாக நம்பிக்கை கொண்டோர் இதயங்களிலும் கிறிஸ்து பிறந்து வளர வேண்டும் என்பதற்காகவே தூய ஆவியால் கருவாகி, அவர் கன்னிமரியாவிடமிருந்து பிறந்தார். தூய கன்னி தம் வாழ்வில் தாய்க்குரிய அன்பிற்கு மாதிரியையாய் உள்ளார்” என்று கற்பிக்கிறது. 

புனித தொன் போஸ்கோ


        சிறார்களுக்கும், இளைஞர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற வாஞ்சையோடு அனைவரையும் தனது அன்பினாலும், சேவையினாலும் காந்தம்போல் கவர்ந்திழுக்கும் ஆற்றலும், வல்லமையும் நிறைந்தவர். யாரையும் தண்டிக்காமல் அனைவரிடமும் அன்பும் கனிவும், கரிசனையும் காட்டியவர். அசைக்க முடியாத இறைநம்பிக்கையால் தனது குருத்துவ வாழ்வைக் கட்டியெழுப்பியவர். வாழ்நாள் முழுவதும் தான் சந்தித்த மக்களுக்கு இறையன்பை ஊட்டி வளர்த்தவர்தான் புனித தொன் போஸ்கோ. இவர் வட இத்தாயில் பெச்சி என்ற இடத்தில் 1815, ஆகஸ்ட் 16ஆம் நாள் பிறந்தார்.

     

        குழந்தைப்பருவத்தில் தாயின் வழிகாட்டுதலால் ஒழுக்கத்திலும், ஆன்மீகத்திலும், இறைநம்பிக்கையிலும் வளர்ந்து புனிதத்தில் சிறந்து விளங்கினார். கயிற்றில் மிக எளிதாக நடந்தார். சகமாணவர்களின் மத்தியில் நகைச்சுவை நாயகனாகவே வலம் வந்தார். ஏழைகளிடம் அன்பு கொண்டு, அவர்களுக்கு உதவி செய்தார். தூய்மையான வாழ்க்கையால் இறைவனை மாட்சிமைப்படுத்தினார். தொன்போஸ்கோ தூய ஆவியின் தூண்டுதலால் குருவானவராகப் பணியாற்றினார். தினந்தோறும் சிறைச்சாலைகளைச் சந்தித்தார். பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறார்களையும், இளைஞர்களையும் ஒன்று திரட்டி பராமரித்து வந்தார். 
         

          திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் இவரிடம் இளைஞர்களுக்காக ஒரு துறவற சபையை ஆரம்பிக்கக் கூறினார். புனித பிரான்சிஸ் சலேசியாரின் ஆன்மீகம் மற்றும் கொள்கைகளைத் தனதாக்கினார். தாம் முன்னெடுத்தப் பணிகளைத் தொடர்ந்து கொண்டு செல்ல ஆண்களுக்கான சலேசிய சபையையும், புனித மரிய மசரெல்லோடு இணைந்து பெண்களுக்கென கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் புதல்வியர் என்னும் துறவற சபையையும் தொடங்கினார். 1876இல் பொது நிலையினருக்காக சலேசிய உடன் உழைப்பாளர்கள் என்னும் சபையினைத் துவங்கினார். இந்த மூன்று சபைகளுக்கு ஒழுங்கு முறைகள் எழுதினார். “நற்கருணைமீதும், அன்னை மரியாள்மீதும் பக்தி வைத்திருந்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை” என்றுகூறி 1888ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 31ஆம் நாள் இயற்கை எய்தினார்.

Monday 29 January 2018

பாவமில்லாமல் உற்பவித்த மரியா


       
      புனித கேத்தரின் அன்னை மரியாவை அளவில்லாமல் அன்பு செய்தவர். அன்னை மரியாவை தன் தயாகவே ஏற்றுக்கொண்டார். அன்னை மரியா இவருக்கு பல முறை காட்சிக்கொடுத்தார். 1830ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 27ஆம் நாள் ஆலயத்தில் செபித்துக்கொண்டிருந்த தருணத்தில் அன்னை மரியா காட்சிக்கொடுத்தார். அன்னையைச் சுற்றிலும் ஓர் ஒளி சுற்றி நிற்க காடóசி கொடுத்தார். ஒளியின் நடுவில், “பாவமில்லாமல் உற்பவித்த ஒ மாமரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்” என்னும் சொற்கள் தங்க எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது. அப்போது நான் தருகின்ற சுரூபம் அனைவரும் அணிய வேண்டும். இந்த சுருபத்தை அணிகின்றவர்கள் கேட்கும் வரத்தை பெற்றுக்கொள்வார்கள் என்று கூறினார் மரியா. 

           சுரூபத்தின் ஒரு பகுதியில் அன்னை மரியா இருகரங்களையும் விரித்தவராய் இருக்கிறார். மறுபக்கத்தில் எம் என்ற எழுத்தும், அதன் மேல் திருச்சிலுவையையும், இயேசுவின் திருதயம், அதைச் சுற்றிலும் முட்கள் அதன் அருகில் வாள் ஊடுருவிய மரியாவின் இருதயம் இருந்தது. கேத்தரின் பார்த்த காட்சியைப்பற்றி பணியாளர்  அருள்தந்தை யோவான் மரியா அலடெல் என்பவரிடம் சொல் என்றார் மரியா. கேத்தரின் தந்தையின் துணையுடன் சுரூபத்தை தயார் செய்து பறைசாற்றினார். இந்த சுரூபத்தை நம்பிக்கையுடன் அணிகின்றவர்கள் இறைவனின் அருள்வரங்களை நிறைவாகப் பெற்றுக்கொள்வர். இந்த சுரூபம் வழியாக எண்ணற்ற புதுமைகள் நிகழ்ந்தன. இக்காரணத்தால் இந்த சுரூபம் புதுமை சுரூபம் என்று அழைக்கப்படுகிறது

புனித செசிலியா

 


            கிறிஸ்துவின் வீரர்களே! எழுவீர் இரவுக்கு உரிய செயல்களை விட்டுவிடுங்கள். ஒளியின் போராயுதத்தை அணிந்து கொள்ளுங்கள் என்று வீரமுழக்கம் செய்து இறுதிவரை இறைவனுக்காக வாழ்ந்தவரே புனித செசிலியா. இவர் உரோமை நகரில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் 2ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். சிறுவயது முதல் இறையன்பில் தன்னைக் கரைத்துக்கொண்டார். நாளும் செபம் செய்வதில் ஆனந்தம் அடைந்தார். வாழ்நாள் முழுவதும் இறைவனின் திருவுளப்படி வாழ இறைவனுக்குத் தன்னை அர்ப்பணம் செய்தார்.
         
           செசிலியா நற்பண்பிலும், தூய்மையிலும் சிறந்து விளங்கினார். இறைவனை மாட்சிமைப் படுத்துவதை இலட்சியமாகக் கொண்டார். தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணித்தார். இசைக்கருவிகளை ஆர்வத்தோடு இசைத்தார். இசைகளின் வாயிலாக இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார். வாழ்வு தருகின்ற,  நலமளிக்கின்ற, ஞானத்தைத் தரக்கூடிய விவிலியத்தை எங்கு சென்றாலும் தம் கரங்களில் ஏந்திச் சென்றார். 

           தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்த செசிலியாவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர், இயேசு கிறிஸ்துவைத் அறியாத வலேரியன் என்பவரைத் தேர்ந்தெடுத்து இறையன்பு, அறிவு, அழகு, தூய்மை நிறைந்த செசிலியாவை வலேரியன் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.திருமண விழாவில் இசைக்கருவிகள் இசைத்து தனது பாடல் வழியாக தனது கன்னிமை இறைவனுக்கு மட்டுமே சொந்தம் என்று பாடினார். வலேரியன் திருமுழுக்கு பெற்றுக்கொள்ள விரும்பினார். பின் அர்பன் என்னும் திருத்தந்தையிடம் சென்று திருமுழுக்கு பெற்றுகொண்டார்.
          

       வேத விரோதிகளின் ஆதிக்கம் அதிகரித்தது. ஆங்காங்கே கிறிஸ்தவர்கள் காரணமின்றி துன்புறுத்தப்பட்டு, உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. செசிலியாவைக் கைது செய்து தெர்த்துல்லியனிடம் ஒப்படைத்தார். செசிலியாவிடம் இயேசுவின் பெயரை அறிக்கையிடக்கூடாது; கிறிஸ்து இயேசுவை மறுதலிக்க வேண்டும்; உரோமை கடவுளுக்கு பலிசெலுத்தவும் உத்தரவிட்டான். செசிலியா, “நான் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி” என்பதை நீ தெரிந்துகொள் என்று துணிவுடன் கூறினார். இதைக்கேட்ட தெர்த்துல்லியன் கோபங்கொண்டு செசிலியாவின் தலையை வெட்டிக் கொலை செய்தான்.
   

Sunday 28 January 2018

அன்னை மரியாவின் துணை

   
             யூப்ராஸியா,
அன்னை மரியாவின் துணையால் இயேசுவை அளவில்லாமல் அன்பு செய்தார். அன்னை மரியாவைத் தனது வாழ்க்கையின் முன்மாதிரியாக தேர்ந்தெடுத்தார். எல்லா நாள்களும் செபமாலையைப் பக்தியுடன் செபித்தார். அமலோற்ப அன்னை இரவுநேரங்களில் காட்சி கொடுத்து, தனது அன்பை பகிர்ந்து கொடுத்தார். யூப்ராஸியாவும் அன்னை மரியாவிடம் மனம் திறந்து உரையாடினார். அலகையால் துன்புறுத்தப்பட்டத் தருணங்களில் அன்னையின் அருளாசீரால் அலகையை வென்றார்.

         புனித குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா, “அம்மா மாமரியே! உம்மில் சரணடைகின்றேன். உமது நினைவுகள் இதயத்திற்கு இன்பம் தருகின்றன. உமது திருமுன்னில் அடியேன் என்னை அர்ப்பணிக்கின்றேன். உமது நினைவுகள் என் நெஞ்சில் நீங்காதிருக்க வரம்தாரும்” என்று நாளும் செபித்தார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். கார்மல் அன்னையிடம் அளவில்லா அன்பு கொண்டிருந்த காரணத்தினால்தான் இவர் தொடங்கிய துறவற சபைக்கு கார்மல் அன்னையின் பெயரை வைத்தார். அன்னையின் துணையோடு இறையாட்சி பணியைத் திறம்பட செய்தார். குழந்தைப்பருவம் முதல் அன்னை மரியாவிடம், “அம்மா மாமரியே! நான் தூய்மையிலும், ஞானத்திலும், அறிவிலும் வளர்ந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்த முறையில் பணி செய்து, இறைவனை மகிமைப்படுத்த வரம்தாரும்” என்று செபித்தார்.

புனித பெரிய ஆல்பர்ட்

        நீதியும் அன்புமே நிரந்தர அமைதிக்கு அடிப்படை; இந்த இரண்டுமின்றி நீடிக்கும் அமைதி ஒருபோதும் நீடிக்காது. உலக அமைதிக்காக அன்னை மரியா காட்டும் வழிகளை நாம் கையாளவேண்டும் என்று கூறியவர்.  இறைஞானத்துடன் செயல்பட்டவர். ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தவர். ஆன்மிக வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்றடுத்தியவர்.

              ஆல்பர்ட் சிறுவயது முதல் இறைபக்தியல் சிறந்து விளங்கினார். அனனை மரியாவை தன் தாயாக ஏற்றுக்கொண்டு அன்பிலும் நீதியிலும் ஒழுக்கத்திலும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். அன்னை மரியா காட்சி தந்து சாமிநாதர் சபை துறவியாகும்படி கேட்டுக்கொண்டார். கல்வியில் சிறந்து விளங்கிய ஆல்பர்ட் தனது பெற்றோரிடம் துறவற வாழ்வை மேற்கொள்ள அனுமதி கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டது. பல எதிர்ப்புகளைத் தாண்டி 1223ஆம் ஆண்டு சாமிநாதர் சபையில் சேர்ந்தார்.


           ஆல்பர்ட் இறையியலில் முனைவர் பட்டம் பெற்று விரிவுரையாளராக கல்லூரியில் பணியாற்றினார். 1254ஆம் ஆண்டு சாமிநாதர் சபையில் 1254ஆம் ஆண்டு மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். மிகுந்த இறைஞானத்துடன் செயல்பட்டார். துறவிகளின் ஆன்ம நலனுக்காக கருத்துடன் செயல்பட்டார். ஆன்மீக வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்றடுத்தினார். இறைவார்த்தையின் அடிப்படையில் வாழ்வை கட்டியெழுப்பு வழிகாட்டினார்.

           1260ஆம் ஆண்டு ரீகன்ஸ்பர்க் மறைமாவட்டத்தின் ஆயராக பதவி ஏற்றார். இறைமக்களின் நலனுக்காக அரும்படுப்பட்டார். ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தார். அனைத்து மக்களும் இறையன்பிலும் சகோதர அன்பிலும் வளர்ந்திட வழிகாட்டினார். அன்னை மரியாவிடம் தனது மறைமாவட்ட மக்களை அர்ப்பணம் செய்தார். பகைமை உள்ள இடத்தில் அமைதியை ஏற்படுத்தினார்.இறைமக்களின் நலனுக்காக  உழைத்த ஆல்பர்ட் 1280ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 15ஆம் நாள் இறந்தார்.

Saturday 27 January 2018

மரியா கடவுளின் அன்னை

       
       புனித அம்புரோஸ், “மரியின் இனிய நாமம் எனது உள்ளத்தின் ஆழத்தில் மீட்பின் தைலமாக இறங்கட்டும்” என்று செபித்தார். யோவான் பெர்க்மான்ஸ்,  “என்னும் நான் வாழ்நாள் முழுவதும் தூய்மையான வாழ்க்கை வாழ்வேன் என்று நற்கருணை ஆண்டவர் முன்பாக உறுதிமொழி எடுத்தார். அன்னையே உமது அமல உற்பவத்தை நம்புகிறேன். மரியே என்னைக் கைவிடாதேயும்; நான் உம்முடைய மகன்; எனக்கு ஆயிரம் இதயங்கள் இருந்தாலும், அவற்றால் உம்மை நேசிப்பேன்” என்று எழுதி இரத்தத்தால் கையொப்பமிட்டார்.


           புனித ஜான்போஸ்கோ, “நான் மரியாவப் பார்க்காமல்கூட இருந்துவிடுவேன். ஆனால் செபமாலை சொல்லாமல் இருக்கமாட்டேன்” என்றார். புனித கிறிஸ்சோஸ்தம் அருளப்பர், “கடவுளின் அன்னையுமான மரியே நீர் வாழ்க; விண்ணகத்தில் வீற்றிருப்பவரும் அரியணையின்று அருள்வளங்களை வாரி இறைப்பவருமான இறை இயேசுவிடம், மரியே எமக்காகப் பரிந்து பேசி, நாங்கள் இறுதிநாள் தீர்ப்பில் மாட்டிக்கொள்ளாதிருக்கவும், இறைவனை முகமுகமாகத் தரிசிக்க வரமும் பெற்றுத்தாரும்” என்று மன்றாடினார்.  

புனித லீமாரோஸ்

  
       துன்பங்கள் இன்றி வாழ்க்கையில்லை. சிலுவை இல்லாமல் கிறிஸ்தவ வாழ்வு இல்லை  என்று உணர்ந்து கொண்டு, “ஆண்டவரே எனது துன்பத்தை அதிகமாக்கும். எனது இதயத்தில் உம்மீதுள்ள அன்பைப் பெருகச் செய்யும்” என்றுகூறி வாழ்நாள் முழுவதும் தனது துன்பத்தின் வழியாக இறைவனை மாட்சிமைப் படுத்தியவரே புனித லீமாரோஸ். இவர் தென் அமெரிக்காவில் பெரு நாட்டில் உள்ள லீமா என்னும் ஊரில் 1586ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் நாள் பிறந்தார்.         
                   

             குழந்தைப்பருவம் முதல் பெற்றோருக்குக் கீழ்ப்படிதல் உள்ளவராக வாழ்ந்து வந்தார்.. இவருக்கு  திருமுழுக்கின் போது இட்ட பெயர் இசபெல். குழந்தையாக இருந்தபோது ஒருமுறை இவரது முகம், ரோஜா மலர் போல் ஒளி வீசுவதை வீட்டில் உள்ளவர்கள் பார்க்க நேர்ந்தது. மேலும் குழந்தையாகத் தொட்டில் கிடந்த தருணம் ஓர் அழகிய ரோஜா மலர் தொட்டில் விழுவதை அவரது தாய் கண்டார். அன்று முதல் ரோஸ் என்று அழைக்கப்பட்டார். ரோஸ் துறவு மேற்கொண்டு இறைவனை அன்பு செய்யத் தீர்மானித்தார்.
                

         தனது 20ஆம் வயதில் புனித சாமிநாதரின் மூன்றாம் சபையில் சேர்ந்தார். ரோஸ் நோன்பு இருந்து தியாகச் செயல்கள் வழியாக இறைவனை மாட்சிமைப்படுத்தி தூயவராக வாழ்ந்து வந்தார். ஏழைகளிடம் மிகுந்த அன்பும், கரிசனையும், இரக்கமும் காட்டினார். ஏழைகளுக்கும், நோளிகளுக்கும், ஆதரவற்றோருக்கும் உதவினார். “நமது ஆன்மாவை விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லும் சாலை தான் சிலுவை. சிலுவையைத் தவிர விண்ணகத்திற்கு ஏறிச் செல்ல வேறு எந்த ஏணியும் இல்லை” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

             

            னது தியாக வாழ்வால் இறைவனை மாட்சிமைப்படுத்திய ரோஸ், கூர்மையான ஆணிகளால் செய்யப்பட்ட வளையம் ஒன்றை கிரீடமாகச் செய்து தலையில் அணிந்துகொண்டார். கூர்மையான ஆணிகள் குத்தி இரத்தம் வெளிவந்தது. இதையாரும் பார்க்காமல் மறைத்துக் கொள்வார். பக்கவாதத்தால் கடுமையாகத் தாக்குண்டார். 1617ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் நாள் இயற்கை எய்தினார். திருத்தந்தை 10ஆம் கிளமண்ட் 1671ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 2ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். இவர் தோட்டபணியாளர், மலர் விற்பனையாளர், தையல்காரர், இலத்தீன் அமெரிக்கா, அமெரிக்க பழங்குடியினர் ஆகியோரின் பாதுகாவலர்.  

Friday 26 January 2018

மரியாவின் நாமம்

           
            புனிதபொனவெந்தூர், “மரியே உமது இனிய நாமத்தைப் பக்தி வணக்கத்துடன் உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் தப்பாமல் ஒரு நன்மை உபகாரத்தைப் பெற்றுக்கொள்கிறோம்” என்றார். புனித அம்புரோஸ்,“மரியே உமது நாமம் ஒரு வாசனைத் தைலம். அதன் நறுமணம் அருங்கொடையைப் பொழிகின்றது” என்று கூறுகிறார். புனித பெர்னார்து, “மரியன்னையின் பக்கம் திரும்பி உமது இனிய நாமத்தின் பொருட்டு ஓ! பேருபகாரியே, பக்தி மிகுந்தவரே, முற்றிலும் நீர் போற்றுதற்குரியவரே என்றுகூறிப் பூரிப்படைகின்றார். உமது இனிய நாமத்தை உச்சரித்தாலே, இறையன்பும் உம்மீது கொண்ட அன்பும் எங்கள் உள்ளத்தில் ஊற்றாகச் சுரக்கின்றது” என்றார்.



இரண்டாம் வத்திக்கான் சங்கம், “நிறைவாழ்வு வரலாற்றில் ஆழ்ந்து ஊன்றிய மரியா நம்பிக்கைப் பேருண்மைகளைத் தம்மில் ஒருவாறு இணைத்துப் பிரதிபலிக்கின்றார். தாம் பறைசாற்றப்படும் போதும் வணங்கப்படும் போதும் நம்பிக்கை கொண்டோரைத் தம் மகனிடமும் அவரது தந்தையின் அன்புக்கும் இட்டுச் செல்கின்றார். எனவே தன் திருத்தூதுப் பணியிலும் கிறிஸ்துவை ஈன்றவரையே திருச்சபை வழியாக நம்பிக்கை கொண்டோர் இதயங்களிலும் கிறிஸ்து பிறந்து வளர வேண்டும் என்பதற்காகவே தூய ஆவியால் கருவாகி, அவர் கன்னிமரியாவிடமிருந்து பிறந்தார். தூய கன்னி தம் வாழ்வில் தாய்க்குரிய அன்பிற்கு மாதிரியையாய் உள்ளார்” என்று கற்பிக்கிறது. 



        

புனித மார்ட்டீன்

               
          கிறிஸ்துவைத் தனதாக்கிட இராணுவப் பணியைத் துறந்தவர். ஏழ்மை கோலம் பூண்டு துறவியாக மாறியவர். எளியவரில் எளியவராக, ஏழைகளின் நண்பராக வாழ்ந்தவரே புனித மார்ட்டீன். 
இவர் கி.பி. 316ஆம் ஆண்டில் பிறந்தவர். இராணுவத்தில் இணைந்து  படைத்தலைவனாக மாறிய மார்ட்டீன் தனது பணியாளர்கள் அனைவரிடமும் நண்பராகவே பழகினார். கிறிஸ்தவப் போர்வீரர்களிடம் நெருங்கிப் பழகினார். மார்ட்டீன் சில நாட்களுக்குப் பின் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவரானார். 

      

           இயேசு கிறிஸ்துவைத் தனது தலைவராகவும் நண்பராகவும் ஏற்றுக் கொண்டார். ஓய்வு நேரங்களில் ஆலயத்திற்குச் சென்று இயேசுவிடம் உரையாடவும், இறைவார்த்தையைத் தியானிக்கவும், செபிக்கவும் ஆர்வம் காட்டினார். அந்நாட்களில் பாலஸ்தீனத்திருந்து திருத்தலப் பயணிகளாக சிலர் வந்தனர். அவர்கள் காடு, மலைகளில் செபம், அமைதி, தியானம், வேலைகள் பல செய்து கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்து, துறவிகளாக  வாழ்ந்தவர்களைச் சந்தித்தார். தானும் துறவியாக மாறிட ஆவல் கொண்டார்.

           மார்ட்டீன், ஏழைகளிடம் மிகுந்த இரக்கம் காட்டினார். தன் வருவாயில் பெரும் பகுதிகளை ஏழைகளுக்குக் கொடுத்தார். குளிர் காலத்தில் உணவு, உடை, உறைவிடமின்றி தவித்தவர்களுக்கு உதவினார். ஒருநாள் ஓர் ஏழை மனிதன் குளிரில் நடுங்கியவாறு தன்மீது இரக்கம் காட்டுமாறு கெஞ்சினார். இரத்தத்தையும் உறைய வைக்கும் குளிரில் அவர் தவிப்பது கண்டு மனம் துடித்தார். தன்னிடம் எதுவும் இல்லாத நிலையில் திடீரென வாளினால் தனது போர்வையை இரண்டாகக் கிழித்து அதன் ஒரு பகுதியை அந்த ஏழைக்குப் போர்த்திவிட்டார். 

           

               ஆயர் ஹிலாரியஸ் உதவியோடு விவியத்தை கற்றுக்கொண்டார். இறைவார்த்தையைத் தியானித்தும், செபத்திலும் நேரத்தைச் செலவிட்டார். மக்களுக்கு நலம் தரும் நற்செய்தியைப் போதிப்பதில் ஆர்வம் காட்டினார். கடினமான வேலை, ஏழ்மையான வாழ்வு, இறைபற்று மிகுந்த செபம், ஆழ்நிலை தியானம் இவைகளின் வழியாகப்  படைகளின் ஆண்டவரை மாட்சிமைப் படுத்தினார். இவரின் புனிதமான வாழ்க்கை, செப முறைகளைக் கண்ட பலர் இவருடன் இணைந்து துறவறம் மேற்கொண்டனர்.397ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 11ஆம் நாள் இயற்கை எய்தினார். 


Thursday 25 January 2018

மரியா நமதருகே

   
          ஓ என் இறைவனின் தாயே! பாவப்பட்ட ஒரு பாவி மீது இரங்குங்கள். தங்களின் கடைகண் பார்வை எனக்குக் கிடைக்க நான் தகுதியற்றவள். ஆனால் தாங்ககள் பாவிகளின் அடைக்கலம். அன்னை மரியா நமதருகே இருக்கவேண்டும். மரியா செபமாலை சொல்வோரின் அருகில் விரைந்து வருகின்றார். புனித பவுஸ்தீனாவுக்கு ஒருமுறை குழந்தை இயேசுவுடன் அன்னை மரியா தோன்றினார். பவுஸ்தீனா அன்னை மரியாவிடம், “கன்னி மரியே! எனது தாயே! நான் எவ்வளவு துன்பப்படுகிறேன் என்பது உமக்குத் தெரியுமே!” என்று கூறினார். 




          அன்னை மரியா பவுஸ்தீனாவிடம், “மகளே நீ அதிகமாகத் துன்பப்படுகிறாய் என்பது எனக்குத் தெரியும் நீ பயப்பட வேண்டாம். நானும் உன்னுடன் இணைந்தே துன்பப்படுகிறேன். எப்பொழுதும் உன் அருகில் ஆறுதலாய் இருப்பேன்” என்றார். பவுஸ்தீனா செபமாலையின் வழியாக துன்பங்களை எதிர்கொள்ள ஆற்றல் பெற்றார். நாம் பாவத்தை வென்று தூய்மையில் முன்னேற வேண்டுமானால் செபமாலை செபிக்கவேண்டும். செபமாலை வழியாக கிறிஸ்துவின் வாழ்க்கை நிகழ்வுகளைத் தியானித்து அன்னையின் அருட்கரம் வழியாக இறையருள் பெறமுடியும்.

புனித பவுல் மனமாற்றம்


                சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து இன்றும் உயிரோடு வாழ்கிறார். அவரே ஆண்டவர்; மீட்பின், வாழவின் ஊற்று. நேற்றும் இன்றும் நாளையும் மாறதவர். நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் அழகானவை என்று வாழ்வின் அனுபவம் வழியாக எடுத்துரைத்தவரே புனித பவுல். இவர் சிசிலியா என்ற உரேமை மாநிலத்தின் தலைநகரான தர்சு நகரத்தில் 10ஆம் நூற்றாண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் சவுல். செல்வ செழிப்பில் வாழ்ந்தார். யூத குலத்தைச் சேர்ந்தவர். உரோமை குடியுரிமை பெற்று வாழ்ந்தவர். கிரேக்கப் பண்பாட்டிலும், மெய்யியலும் கற்று ஞானியாக வாழ்ந்தார்.

          

         யூதச் சட்டங்களை கற்றுத்தேர்ந்தார். புகழ் பெற்ற கமாலியேல் என்னும் யத ராபியிடம் கல்வி பயின்றார். யூத குலத்தின் முறைகளை நன்கு கற்றிருந்தார். கிறிஸ்தவ மறையை தழுவியவர்களை புறக்கணித்தார். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை மெசியா என்று கூறியதை அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. கண்ணில் பட்ட கிறிஸ்தவ மக்களை துன்புறுத்தினார். தார்சியுஸ் நகருக்கு கிறிஸ்தவ மக்களை துன்புறுத்த அரசரின் கடிதம் பெற்று செல்லும் வழியில் கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட்டு மனமாற்றம் அடைந்து கிறிஸ்துவின் சீடராக மாறினார். சவுல் என்ற பெயரை பவுல் என்று மாற்றி கிறிஸ்துவுக்காக வாழ்ந்து, கிறிஸ்துவை அறிவித்து, கிறிஸ்துவை வேற்றினத்தாரிடையில் அறிவித்து வேற்றினத்தாரின் திருத்தூதர் என்றும், ஐந்தாம் நற்செய்தியாளர், முதல் இறையியலார், பதின்மூன்றாம் திருத்தூதர் என்றும் அழைக்கப்படுகிறார்

Wednesday 24 January 2018

புனித பிரான்சிஸ் சலேசியார்

         

 
          “இறைவன் நமது உடலாகிய கோவில் குடிக்கொள்ள விரும்புகிறார். எனவே நமது உடலைத் தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும். குருத்துவ மாண்பே மற்ற உலகப் பதவிகளைவிட மேன்மையானது.  இறைவா! எனக்கு ஆன்மாக்களைத் தாரும். மற்றெல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும்” என்ற வரிகளுக்கு வாழ்க்கையால் சான்று பகர்ந்தவரே புனித பிரான்சிஸ் சலேசியார். இவர் பிரான்ஸ் நாட்டில் அரசக் குடும்பத்தில் 1567ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 21ஆம் நாள் பிறந்தார். பிறப்பாலே அன்பு, அமைதி, பொறுமை, தாழ்ச்சி இவைகளுக்குச் சொந்தக்காரர்.
      

           தினந்தோறும் தவறாமல் திருப்பலிக்குச் சென்றார். தனது வாழ் நாட்களில் தூய்மைக்கு எதிரான சிந்தனை, சொல், செயல் ஈடுப்படவில்லை. நாளும் விவியம் வாசித்து வாழ்வாக்கிட முயன்றவர். செபம் தனது வாழ்வின் உயிர்மூச்சாகவே மாற்றினார். அன்னை மரியாளின் பாதத்தில் விழுந்து “அம்மா மாமரியே! நான் நித்திய நரகத்திற்குச் செல்லாமருக்க, இவ்வுலகில் பாவம் செய்யாமல் இறைவனையும், உம்மையும் அதிகமாக அன்பு செய்து தூய்மையுடன் வாழ வேண்டும்” என்று உருக்கமாக மன்றாடினார். குருவானவராகப் பணியாற்ற தனக்கு இறையழைத்தல் இருப்பதை உணர்ந்தார்.

          

         பிரான்சிஸ் இறைவனுக்காகப் பணிசெய்ய தனது உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார். “இன்று முதல் இறைவனே எனது மாபெரும் சொத்து. அவரது வார்த்தைகளை வாழ்வாக்கி வழங்கிடச் செல்கிறேன்” என்று கூறினார். குருத்துவப் பயிற்சி பெற்று 1593இல் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். “குருத்துவ மாண்பே மற்ற உலகப் பதவிகளைவிட மேன்மையானது” என்று கூறினார். இறைநம்பிக்கையில் வளர்ந்த பிரான்சிஸ் தெளிந்த பார்வையோடு இறைபணியைத் தொடங்கினார். தனது பணியை முதல் முறையாகப் பிரிந்து சென்ற கால்வின் சபை உறுப்பினர்களை, மறுபடியும் தாய்த் திருச்சபையில் சேர்த்திட ஆவல் கொண்டார். வீடுகள்தோறும் சென்று மறையுரையாற்றினார். மக்கள் கதவுகளை அடைத்துக் கொண்டார்கள். ஆனால் பிரான்சிஸ், “இறைவனே எனது பாதுகாப்பு, அரண், கோட்டை, தஞ்சம். நான் அவருடைய ஊழியன். அவர்மீது என் முழு நம்பிக்கையை வைக்கின்றேன். நீங்கள் வன்முறையைக் கைவிட்டு, தாய்த் திருச்சபையில் மறுபடியும் இணைய வேண்டும்” என்று கூறி வீறுநடைப் போட்டார். பெரியோர்கள், இவரின் குரலுக்குச் செவிமடுத்து 40,000 பேர் கத்தோக்கத் திருச்சபையில் இணைந்தனர். நம்பிக்கையின் வெளியடையாளமாக மக்கள் மத்தியில் நற்கருணை நாதரைப் பவனியாக அழைத்துச் சென்றார்.


 

          இவர் ஜெனிவா நகரத்தின் ஆயராக 1602இல் திருநிலைப்படுத்தப்பட்டார். மக்களின் உள்ளங்கள் இறையன்பால் பண்பட்டு, ஆன்மீக வளர்ச்சியடைந்து  புனிதமான வாழ்க்கை வாழக் கடினமாக உழைத்தார். உலக இன்பங்களைப் புறக்கணித்தார். மக்கள் பாவ வாழ்க்கையிருந்து மனந்திரும்ப ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்கினார். “எதற்கும் ஆசைப்படாதே, எதையும் கேட்காதே, எதையும் வேண்டாம் என்று சொல்லாதே. கோபம்வரும் நேரத்தில் வாயைத் திறவாமல் இருப்போம்” என்று கூறி அவ்வாறே வாழ்ந்து காட்டினார். மகிழ்ச்சியான நேரத்தில் சமநிலையோடு இருந்தார். எப்பொழுதும் இறைவனின் துணை நாடினார். கடவுள்மீது என் பார்வையைப் பதித்து நான் எனது வாழ்க்கைப் படகைச் செலுத்துகிறேன். ஏழ்மையிலும் திருப்தியுடன் இருக்கிறேன் என்றுகூறி வாழ்ந்து வந்தார். இயேசுவே உம்மை நான் அன்பு செய்கிறேன். மேலும் “தாழ்ச்சி” என்னும் வார்த்தையைக் கடைசியாக  கூறினார். 1622, டிசம்பர்  28 ஆம் நாள் இயற்கை எய்தினார்


மரியா பாவிகளின் சகாயம்

 

        புனித எஃபிரேம்,
“ஓ எம் ஆன்மாவின் நம்பிக்கையே வாழ்க! ஓ கிறிஸ்தவர்களுடைய நிச்சயமான மீட்பே வாழ்க; ஓ பாவிகளின் சகாயமே வாழ்க; விசுவாசிகளின் அரணே, உலகின் மீட்பே வாழ்க; என்று வாழ்த்தி வேண்டுகிறார்.பிற புனிதர்களும், கடவுளுக்குப் பின் நம் ஏக நம்பிக்கை மாமரி தான் என்று ஞாபகப் படுத்துகிறார்கள். எனவே அவர்கள் மரியாவை, கடவுளுக்கடுத்தபடி எம் ஏக நம்பிக்கையே” என்று அழைக்கின்றனர்.


  

புனித தாமசின் அருளப்பர்,   “மரியா இல்லாத சூழலில் நோயுற்றோர் கண்ணீரால் தம் படுக்கையை நனைக்கின்றனர். எனவே இத்தகைய அவலநிலை நீங்க வேண்டுமாயின் செபமாலை வழியாக மரியன்னையைக் கூப்பிடுங்கள்” என்கிறார். அன்னை மரியா இவ்வுலக வாழ்விலும் விண்ணக வாழ்விலும் நமக்கு துணையாக வரக்கூடியவர். எல்லா புனிதர்களுடைய வாழ்வில் அன்னையின் அருட்கரமும் வழிநடத்தலும் அரவணைப்பும் இருந்தது. நமது இதயம் அன்னையிடம் அர்ப்பணிக்கவேண்டும். காரணம் அன்னையிடம் கொடுக்கின்றபோது இதயத்திலுள்ள பாவ மாசுகளை அகற்றி இறையன்பால் நிறைத்து தருவார்.தூய்மையான இதயத்தில் இறைவன் குடிக்கொள்வார். 


Tuesday 23 January 2018

புனித இல்டபோன்சஸ்


        அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டு இறையன்பின் பணியாளராய் பணி செய்தவர்.  மரியாவின் கன்னிமையின் மறைவல்லுநர் என்று அழைக்கப்பட்டவர். இதோ எனது பணியாளர் என்று அன்னை மரியாவால் அழைக்கப்பட்டவர். எண்ணற்ற நூல்கள் எழுதியவர். பொது நிலையினரின் விசுவாச வாழ்வுக்காக பாடுபட்டு உழைத்தவரே புனித இல்டபோன்சஸ்.            

       இல்டபோன்சஸ் என்பவர் ஸ்பெயின் நாட்டில் 607 ஆம் ஆண்டு பிறந்தார். சிறுவயது முதல் இறைபக்தியில் சிறந்து வளங்கினார். இறைவனின் அருட்கரம் தன்னோடு இருப்பதை உணர்ந்து வாழ்ந்தார். அன்னை மரியாவிடம் தன்னை அர்ப்பணம் செய்து வாழ்தார். ஒவ்வொரு நாளும் அன்னை மரியாவின் துணை நாடினார். அன்னையின் துணையுடன் புனித ஆசீர்வாதப்பர் துறவு மடத்தில் சேர்ந்தார்.
          

        துறவு இல்லத்தில் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தார். 630ஆம் ஆண்டு திருத்தொண்டராக அருள் பொழிவு பெற்றார். பின்  டொலேடோ நகரின் பேராயராக அருள்பொழிவு பெற்றார். எண்ணற்ற நூல்கள் எழுதினார். மரியாவின் கன்னித்தன்மை பற்றி எழுதினார். எனவே இவரை மரியாவின் கன்னிமையின் மறைவல்லுநர் என்று அழைக்கப்படுகிறர். அன்னை மரியா என்றும் கன்னி என்று எடுத்துரைத்தார். ஒருமுறை மரியா வானதூதர்களுட் காட்சி தந்து இதோ எனது பணியாளர், நம்பிக்கைக்குரியவர் என்று கூறினார். இல்டபோன்சஸ் 667ஆம் ஆண்டு இறந்தார்.


Monday 22 January 2018

விண்ணேற்பு அன்னை

         அன்னை மரியா நம் அனைவருக்கும் விண்ணகத்தின் முன்சுவையைத் தருகின்றவராக இருக்கின்றார். “அமல உற்பவியும், கடவுளின் தாயும், என்றும் கன்னியுமான மரியாள், இவ்வுலக வாழ்க்கைப் பயணத்தை முடித்துவிட்டு, உடலோடும், ஆன்மாவோடும் விண்ணிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்”. இதைத் திருத்தந்தை பன்னிரெண்டாம் பத்திநாதர் 1950இல் விசுவாசப் பிரகடனம் செய்தார். 

      மரியாவின் விண்ணேற்றத்தின் போது, மரியாவின் பெயரை வானதூதர்கள் மும்முறை, “பாலை நிலத்திருந்து புகைத்தூண்போல் எழுந்து நறுமணம் கமழ வருவது யாரோ?. மீண்டும் விடிவேளை வானம்போல் எட்டிப்பார்க்கும் அவள் யாரோ?” என்று வியந்து போற்றினர். (காண்.இபா3:6). இனிமை மிகுபாடல் காணப்படும் நாயகி, தம் திருமகனுடன் வெற்றி வாகைசூடி, விண்ணக மணவாட்டியாய், உயர்த்தப்பட்ட மரியாவின் உருவகமாகக் காணப்படுகிறார்.

அன்னை மரியா இன்றும் அருள்வரங்களையும், அருளையும் இயேசுவிடமிருந்து நமக்குப் பெற்றுத்தருகிறார். இனிமையான மரியின் நாமத்தை உச்சரிப்போம். காரணம், “மாமரியினுடைய பெயர் கடவுளின் தெய்வீகக் கருவூலத்திருந்து வந்தது” என்கிறார் புனித பீட்டர் டேமியன். மாமரியின் நாமம் சகல இனிமையும், தெய்வீக நறுமணமும் நிறைந்துள்ளது. இதைப்பற்றி பிராங்கோன் என்ற மடாதிபதி, “இறைமகன் இயேசுவின் நாமத்திற்கு அடுத்தாக, விண்ணிலோ, மண்ணிலோ, மாமரியின் நாமத்தைப் போல் வேறெந்த நாமமும் கிடையாது. அந்நாமத்திருந்து பக்தியுள்ள நெஞ்சங்கள் எவ்வளவோ அருட்கொடைகளையும், நம்பிக்கையையும், இனிமையையும், புனிதத்தையும் நிறைவாகப் பெறுகின்றன” என்கிறார். 

புனித வின்சென்ட் பல்லொட்டி


 
        கிறிஸ்துவின் நல்ல படைவீரர்; இறைஞானத்தின் மாமனிதர்; நன்மைகளின் உறைவிடம்; இறையன்பின் தூதர்; திருச்சபையில் சிறந்த மறைபணியாளர்; கடின உழைப்பாளி; தியாகத்தின் செம்மல்; கத்தோலிக்கச் செயல்பாடுகளின் முன்னோடி; மற்றும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தவர். “நாம் ஏழைகளுக்குக் கொடுக்கும்போது கிறிஸ்துவுக்கே கொடுக்கிறோம்”என்று கூறியவர். “கிறிஸ்துவின் அன்பு எம்மை ஆட்கொள்கிறது” என்ற விருதுவாக்குடன் அயராது உழைத்தவரே புனித வின்சென்ட் பல்லொட்டி. 

          

           1795ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 21ஆம் நாள் பிறந்தார். பெற்றோர், இவரை இறைபக்தியில் வளர்த்தார்கள். தினமும் அதிகாலையில் எழுந்து திருப்பலிக்குச் செல்வார். திருப்பலி முடிந்ததும் அன்னை மரியாவிடம் “பிரியமுள்ள அம்மா! என்னை நல்ல குழந்தையாக மாற்றுங்கள்” என்று செபிப்பது வழக்கம். தனக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்களை சகமாணவர்களோடு பகிர்ந்து கொண்டார். ஓய்வு நேரங்களில் சகமாணவர்களை ஒன்று சேர்த்து செபமாலை செபிப்பர். 

           வின்சென்ட் , தந்தையின் அனுமதியுடன் மறைமாவட்ட குருவாகப் பணிசெய்ய குருமடத்தில் சேர்ந்தார். குருத்துவப் படிப்பை முடித்து 1818ஆம் ஆண்டு மே திங்கள் 16ஆம் நாள் குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார். தினமும் இறைமக்களின் நலனுக்காக இறைவனிடம் தியாகத்துடன் கரங்களை விரித்தவாறே செபம் செய்தார். திருப்பலியைப் பக்தியோடு நிறைவேற்றினார். ஆன்மீகத்தில் பின்தங்கிக் காணப்பட்ட பங்கு மக்கள், ஆன்மீக வாழ்வில் வளர்ச்சியடைய சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பான தியான வழிபாடுகள் நடத்தினார்.

     

       “விவிலியம் வாழ்க்கையின் அடித்தளம்” என்றும் அறிவுரை கூறி மக்களை விவிலியம் வாசிக்க ஊக்கப்படுத்தினார். தந்தை எங்கு சென்றாலும் தமது “கரங்களில் திருச்சிலுவையும், செபமாலையும்” எடுத்து சென்றார். தந்தையின் கடினமான உழைப்பாலும், ஓய்வின்றி வழங்கிய ஒப்புரவு அருள்சாதனத்தினாலும் பலரை மனம் மாற்றினார். மறைபரப்புப் பணி வழியாகக் கிறிஸ்துவின் அன்பு, இரக்கம், கனிவு, அமைதி, பொறுமை மற்றும் தூய்மை இவற்றைப் பகிர்ந்து கொடுத்தார். “கிறிஸ்துவை அன்பு செய்கின்றவர்கள் திருச்சபையையும் அன்பு செய்வார்கள்” என்று கூறி 1850ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 22ஆம் நாள் இரவு ஒன்பது மணிக்கு இயற்கை எய்தினார்.     
                                 

Sunday 21 January 2018

புனித ஆக்னஸ்


       
     
இறையன்பு, தூய்மை, பொறுமை ஆகிய பண்புகளைத் தனதாக்கி அறநெறி ஒழுக்கத்தில் சாலச்சிறந்தவர்.
 இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்று விசுவசித்து, எனது கன்னிமை இறைவனுக்கே சொந்தம் என்றுகூறி இறையன்பின் சுடராகத் திகழ்ந்தவரே புனித ஆக்னஸ். இவர் உரோமை நகரில் பட்ரீசியன் என்ற உயர்குலத்தில் கி.பி. 291இல் பிறந்தார். ஆக்னஸ் என்றால் தூய்மை அல்லது புனிதம் என்பது பொருள்.  ஆக்னஸிடம், புல்வியன் தன்னை ஏற்கும்படி கட்டாயப்படுத்தினான். மீறினால் நீ கிறிஸ்தவள் என்று காட்டிக்கொடுப்பேன் என்றான். ஆக்னஸ் புல்வியனிடம், “எனது அன்பு, ஆசைகள் அனைத்தும் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவுக்கே உரியவை. அவர் ஒருவரே என் முழு அன்பிற்கும் சொந்தக்காரர் ஆவார்” என்றார். புல்வியனின் விருப்பத்திற்கு இணங்காத ஆக்னûஸ கிறிஸ்தவள் என்று உரோமை அதிகாரி செம்ப்ரோனியன் என்பவரிடம் காட்டிக்கொடுத்தான். ஆக்னஸ் கிறிஸ்துவைப் பின்பற்றிய காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டார்.


     ஆக்னஸின் கன்னிமையைக் களங்கப்படுத்த, விலைமாதர் இல்லத்திற்கு கொண்டு செல்லுமாறும், யாரும் இவரைக் கறைபடுத்தலாம் என்றும் என்றுகூறி விலைமாதர் அறையில் அடைத்தனர். அங்கு தீய இளைஞர்கள் அவரை அணுக முயன்றும் அவர்களால் முடியாமற்போயிற்று. ஆக்னஸ், “உனது வாளினால் என் இரத்தக்கறை படிந்தாலும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணமான எனது உடலை கறைப்படுத்த முடியாது” என்றார். எப்போதும் கூடவே காவலாய் இருக்கும் காவல்தூதர் ஆக்னûஸத் தீமையிலிருந்து காப்பாற்றினார்.


    அரசன், கிறிஸ்தவ மறையை விட்டுவிடு உரோமைக் கடவுளது கோவில் இருக்கும் சிலையை வணங்கி, அதற்கு தூபம் காட்டுமாறு கூறினான். ஆக்னஸ், “என் உயிரே போனாலும் நான் இதைச் செய்யமாட்டேன். எனது உடலும் ஆன்மாவும் என்றும் உள்ள இறைவனுக்கே” என்று கூறினார். இதைக்கேட்ட அரசன், “ஆக்னஸ் நமது குலதெய்வத்தை வணங்க மறுத்ததால் அவள் தலையை வெட்டி கொலை செய்ய ஆணையிடுகிறேன்” என்று சாவின் தீர்ப்பைக் கூறினான். இறைவனுக்காக தனது கன்னிமையைக் காத்துக்கொண்ட ஆக்னஸ் 304ஆம் ஆண்டு, ஜனவரி 21ஆம் நாள் மரணம் வழியாக இறைவனின் திருப்பாதம் சேர்ந்தார். ஆக்னஸின் உடல் இன்றும் அழியாமல் இருக்கின்றது. இவரது திருநாள் ஜனவரி 21, திருமணம் நிச்சயமானவர்களின் பாதுகாவலர்.  

Saturday 20 January 2018

செபமாலை அன்னை

         
புனித அல்போன்ஸ் லிகோரி தனது வாழ்வில் சந்தித்தத் தடைகளை செபமாலை வழியாக வெற்றியின் படிக்கற்களாக மாற்றினார். ஆன்மீக வாழ்வில் இறையன்பின் உச்ச நிலைக்கு அடைந்தது செபமாலை வழியாகவே என்று கூறினார். 
வயதான நிலையில் ஒருமுறை சக்கர வண்டியில் வைத்து அவரை ஒரு சகோதரர் மடத்துக்கு வெளியே காற்றோட்டமான இடத்திற்கு தள்ளிக்கொண்டு வந்தார். 


    

  அப்போது லிகோரி அந்த சகோதரனைப் பார்த்து, ‘இன்று நீ செபமாலை செபித்தாயா?’ என்று கேட்டார்அந்த சகோதரன், ‘எனக்கு ஞாபகமில்லை’ என்று கூறினார். உடனே அல்போன்ஸ் கோரி, ‘அப்படியென்றால் நாம் இப்பொழுது செபமாலை செபிப்போம்’ என்றார். அச்சகோதரன், ‘நீங்கள் களைப்பாகத்தானே இருக்கிறீர்கள், ஒருநாள் செபமாலை செபிக்கவில்லை என்றால் என்ன ஆகிவிடப்போகிறது?’ என்று பதில் கூறினார். அதற்கு லிகோரி, “ஒருநாள் செபமாலை செபிக்காவிட்டால் நான் என் முடிவில்லா மீட்பைப்பெறத் தவறிவிடுவேனோ? என்று அஞ்சுகிறேன்” என்றார்

புனித பபியான்



           சிறுவயது முதல் நற்பண்பில் வளர்ந்தவர். அன்பின் அமைதியின் தூதராக இறையாட்சி பணி செய்தவர்.  திருச்சபையை அன்பு செய்து திருச்சபையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர். அன்னை மரியாவை அளவில்லாமல் அன்பு செய்தார். அன்னை மரியாவின் உதவியுடன் கிறிஸ்துவுக்கு தன்னை அர்ப்பணம் செய்து திருச்சபையை சிறந்த முறையில் வழி நடத்தியவரே புனித பபியான். இவர் உரோம் நகரில் 200ஆம் ஆண்டு பிறந்தார்.

           பபியான் சிறுவயது முதல் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். கிறிஸ்துவுக்காக தன்னை அர்ப்பணம் செய்து குருத்துவ வாழ்வை தேர்ந்தெடுத்து சிறந்த முறையில் இறையாட்சி பணி செய்தார். கிறிஸ்துவின் வாழ்வு தருகின்ற நலமளிக்கின்ற வார்த்தை பறைசாற்றினார். திருத்தந்தை அந்தேரூஸ் இறந்தப் பின் பபியான் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தருணத்தில் ஒரு புறா இவர்மீது வந்தமர்ந்தது. 


      கிறிஸ்துவின் பணியை சிறந்த முறையில் செய்தார். நற்செயல்கள் வழியாக தந்தை கடவுளை மாட்சிப்படுத்தினார். திருச்சபையில் ஒழுங்கு முறைகளை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தினார்.  திருச்சபையில் நிலவிய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார். உரோமையை ஏழு மாவட்டங்களாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் திருத்தொண்டர்களை ஏற்படுத்தினார். கிறிஸ்துவின் நற்செய்தி எங்கும் அறிவிக்க அயராது பாடுப்பட்டார். 

         பெரிய வியாழன் அன்று திரு எண்ணெய் மந்திரிக்கும் முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தார். இறைமக்களின் நலனுக்காக பாடுப்பட்டு உழைத்தார். ஏழை எளிய மக்களை தேடிச் சென்று உதவிகரம் நீட்டினார். நற்கருணை ஆண்டவரை அளவில்லாமல் அன்பு செய்தார். தனது ஒவவொரு செயலையும் இறைவனுக்கு அர்ப்ணம் செய்தார். பேரரசன் தீசியுஸ் கிறஸ்தவ மக்களை துன்புறுத்தினான். கொடூரமான முறையில் கொலை செய்தான். கிறிஸ்துவை மறுதலிக்க வற்புறுத்தினான். பபியான் கிறிஸ்துவை ஆர்வமுடன் பறைசாற்றியக் காரணத்தால் கொலை செய்தனர். அவ்வாறு பபியான் 250ஆம் ஜனவரி திங்கள் 20ஆம் நாள் இறந்தார்.

Friday 19 January 2018

மரியா அமல உற்பவி



           
        “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் இடையே பகையை உண்டாக்குவோம். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்
” (தொ.நூல் 3:15) என்று இறைவன் பாம்பிடம் கூறினார். அலகையை அழிக்கும் அவளது வித்து என்பது இயேசு கிறிஸ்துவே. அந்தத் தாய் அன்னை மரியா. இவரே பாம்பின் தலையை நசுக்கி, அழிக்க முன்குறிக்கப்பட்டவர். எனவே அன்னை மரியா நிச்சயமாகவே தன் பிறப்பு முதல் பாவக்கறையற்று பிறந்திருப்பார். 

         1839ஆம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் “பாவக்கறையற்று கருவான அரசியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்” என்று செபித்தார். மேலும் “மிகவும் பேறுபெற்ற கன்னிமரியா கருவான முதல் நொடியிருந்தே, எல்லாம் வல்ல இறைவனுடைய தனிப்பட்ட அருளாலும், சலுகையாலும் மனித குலத்தின் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களை முன்னிட்டுச் சென்மப் பாவத்தின் எல்லாக் கறையினின்றும் விடுவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டார். இக்கோட்பாடு இறைவனால் வெளிப்படுத்தப்பட்டதாகும். எனவே, இது எல்லா விசுவாசிகளாலும், உறுதியாக இடைவிடாது விசுவசிக்கப்பட வேண்டும் என்பதை நாம் அறிக்கையிடுகிறோம், அறிவிக்கிறோம், வரையறுக்கிறோம்” என்று திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் 1854ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 8ஆம் நாள் அறிவித்தார்

புனித நான்காம் கனூட்


    கிறிஸ்துவின் உண்மை சீடராக வாழ்ந்தவர். கத்தோலிக்க திருச்சபையின் மீது மிகுந்த பற்று கொண்டவர். உலகனைத்தையும் ஆண்டவர் முன்பாக அர்ப்பணம் செய்து வாழ்ந்தவரே புனித நான்காம் கனூட் என்பவர். இவர் 1042ஆம் ஆண்டு பிறந்தார். அரச குடும்பத்தில் பிறந்தாலும் ஏழ்மையான வாழ்வை விரும்பினார். கத்தோலிக்க திருச்சபையைஅன்பு செய்தார்.
    தனது தந்தை இறந்தப் பின்னர் ஸ்வீடன் நாட்டிற்கு சென்றார். 1080ஆம் ஆண்டு கனூட் டென்மார்க்கின் அரசராக மணி முடி சூட்டிக்கொண்டார். அரசர் முதலாம் ராபர்ட் என்பவரின் மகளை திருமணம் செய்தார். கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்ந்து வந்தார். திருச்சபையின் கட்டளைகளை பின்பற்றினார். இறைவனுக்கு உகந்த முறையில் வாழ்ந்து வந்த கானூட் 1086ஆம் ஆண்டு ஜøலை 10ஆம் நாள் இறந்தார். 

மரியா வாழ்வின் துணை


         அன்னை மரியாவை வாழ்வின் துணையாக தேர்ந்தெடுக்க வேண்டும். அன்னை மரியாவை அளவில்லாமல் அன்பு செய்கின்றபோது மரியா கிறிஸ்துவின் அன்னை ஆடையாக அணிவித்து வழிநடத்துவார். எல்லா மக்களும் கிறிஸ்துவை பின்பற்ற வழிகாட்டுவார். செபமாலை ஆண்டவரிடமிருந்து நமக்கு வரங்களைப் பெற்றுத்தரும். மரியாளுக்கு சொல்லப்படும் செபங்களில் அழகானதும் வளமையானதும் செபமாலையே. அது கடவுளின் தாய் மரியாவின் உள்ளத்தைத் தொடும் செபம். அன்னை மரியாவின் கரம்பிடித்து கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல், பக்தி, இரக்கம் ஆகியவற்றைத் தனதாக்கி, இறையாட்சி பணிகளைச் செம்மையாக செய்து புனிதராக மாறுவோம்.

Thursday 18 January 2018

புனித வனத்து அந்தோணியார்



           நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய் உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் என்ற இயேசுவின் வார்த்தையார் ஈர்க்கப்பட்டு, இயேசுவுக்காக வாழ்வை அர்ப்பணம் செய்தவர். தாயின் வழிகாட்டுதலால் செபம் செய்ய கற்றுக்கொண்டவர். கிறிஸ்துவுக்காக வாழ்வை அர்ப்பணம் செய்து உத்தம துறவியாக வாழ்ந்தார். தன்னொடுக்க முயற்சிகளால் இறைவனை மாட்சிமைப்படுத்தி வாழ்ந்தவரே புனித வனத்து அந்தோணியார்.
      வனத்து அந்தோணியார் 251ஆம் ஆண்டு எகிப்தில் கோமா என்னும் இடத்தில் பிறந்தார். சிறுவயது முதல் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். தினமும் ஆலயம் சென்று திருப்பலியில் பங்குகொண்டார். துறவு வாழ்கை வாழ ஆவல் கொண்டார். இறைவார்த்தையை வாசித்து வாழ்வாக்கினார். கிறிஸ்துவின்மீது தணியாத தாகம்கொண்டு தியான வாழ்வை ஆரம்பித்தார்.

       துறவு வாழ்கை வாழ வனத்தில் துறவு வாழ்கை வாழ்ந்த துறவியிடம் சென்றார். தன்னொடுக்க முயற்சிகள் செய்தார். தியான வாழ்வை ஆர்முடன் தொடர்ந்தார். இளமைப்பருவத்தில் சந்தித்த சோதனைகளை செபம் செய்து வெற்றி அடைந்தார். தனது உள்ளம் உலக இன்பங்கள்மீது ஆவல் கொண்டபோது திருச்சிலுவையை நெஞ்சோடு அணைத்து வேண்டுதல் செய்தார். தனது 35ஆம் வயதில் நைல் நதியின் கிழக்கு கரையில் உள்ள மலைக்கு சென்று தியானம் செய்தார். காகம் அவருக்கு தினமும் உணவாக  அப்பம் கொண்டு வந்து தருவது வழக்கம்.

        அந்தோணியாரின் தூய வாழ்வை கேள்விப்பட்டு அவரைத் தேடி மக்கள் வந்தனர். சீடராக பலர் சேர்ந்தனர். அவரும் அவர்களை கிறிஸ்துவின் உண்மை சீடராக வாழ வழிகாட்டினார். தன்னை சந்தித்த மக்களுக்கு இறைவனின் அன்பை எடுத்துரைத்தார். நோயுற்றேரை நலமாக்கினார். துன்பத்தில் வாழ்ந்த மக்களின் கவலையை போக்கினார். அனைத்தையும்விட கிறிஸ்துவை அன்பு செய் கற்பித்தார். அனைத்து மக்களையும் இறையன்பிலும் சகோதர அன்பிலும் வளர வழிகாட்டி வனத்து அந்தோணியார் தனது 105ஆம் வயதில் இறந்தார். 

Wednesday 17 January 2018

புனித ஜோசப் வாஸ்

           புனித ஜோசப் வாஸ் இந்தியாவில் கோவாவில் 1651ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள் ஆறு பேர் கொண்ட பிள்ளைகளின் குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். உயர் கல்விக்காக கோவா நகரத்திற்கு சென்றார். இவர் போர்த்துக்கீசம், லத்தின் ஆகிய மொழிகளை கற்றுத்தேர்ந்தார். சிறவயதிலேயே தவத்திலும் சிறந்து விளங்கினார். ஏழை எளிய மக்கள்மீது மிகுந்த கரிசனை கொண்டவர். புனித அக்வீனாஸ் குருமடத்தில் சேர்ந்து 25ஆம் வயதில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 

         கத்தோலிக்க மக்கள் வழிபட்டு வந்த ஆலயங்கள் ஒல்லாந்தர்களினால் அழிக்கப்பட்டன. கத்தோலிக்க குருக்களை தீயிட்டு எரித்துக் கொலை செய்தனர். ஒல்லாந்தர்களிடம் இருந்து கத்தோலிக்க மதத்தினை மீட்டெடுக்கும் பொருட்டு அருட்தந்தை ஜோசப் வாஸ் அவர்கள் செயற்படத் தொடங்கினார். மாறுவேடத்தில் யாழ்ப்பாணம் சல்லாலைப் பகுதியில் வந்து இறங்கிய ஜோசப் வாஸிற்கு அக்கிராம மக்கள் பாதுகாப்பும் அடைக்கலமும் கொடுத்தனர். ஒல்லாந்தர்களின் பிடியிலிருந்து தப்பி மறைபரப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் மாறுவேடத்தில் இறையாட்சி பணியை தொடங்கினார்.

             அனைத்து மக்களும் உண்மையை அறிந்திடவும், வெளிப்படையாக தமது மத நம்பிக்கைகளை வெளிப்படுத்தவும், சுதந்திரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். உண்மையான இறைவழிபாடு, இனப்பாகுபாடு, வெறுப்பு, வன்முறை ஆகியவற்றை விளைவிக்காது மாறாக, மனித உயிரின் புனிதத் தன்மை மற்றவரின் மாண்பு சுதந்திரம் மட்டில் மரியாதை, பொது நலனிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். 
                1690ஆம் ஆண்டு காண்டி நகரில் சேசுசபை குருக்கள் பணியாற்றி ஆலயத்தைக் கண்டுப்படித்தார். அங்கு வாழ்ந்த மக்களை கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார். இத்தருணம் அவர் இறையாட்சி பணி செய்த தளங்களை மாட்டுவண்டியில் பார்வையிட சென்ற போது இவர் வேவு பார்ப்பவன் என்று எண்ணி அரசு சிறையில் அடைத்தனர். அவருடன் இருந்த ஏழு பேரை தூக்கிலிட்டு கொன்றனர். தந்தை ஜோசப் வாஸ் அவர்கள் குற்றமற்றவர் என்று அரசன் உணர்ந்து கொண்டான். தந்தை அவர்கள் நான்கு ஆண்டுகள் சிறை தண்டணைக்கு பின் விடுதலை செய்து கத்தோலிக்க மக்கள் மத்தியில் பணியாற்ற அனுமதி வழங்கினார்.

            1697ஆம் ஆண்டு கண்டிநகர் மக்கள் பிளேக் நோய்க்கும் பெரிய அம்மை நோய்க்கும் எண்ணற்ற மக்கள் பியாக இறந்தனர். அரசனும் அவரது தோழர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஜோசப் வாஸ் அவர்கள் அஞ்சா நெஞ்சத்துடன் நோயுற்ற மக்களை சந்தித்து ஆறுதல் கூறி மருத்துவ உதவிகளைச் செய்தார். இவரது நற்செயலால் டச்சு நாட்டு வெறியர்கள் இவரைப் பிடிக்க குறிப்பார்த்தனர். இவரை பிடிக்க முடியாத தருணம் ஏழை கத்தோலிக்க மக்களை பிடித்து சிறையில் அடைத்தனர். சிலரின் காது, மூக்கையும் துண்டித்தனர். ஏழை கிறிஸ்தவ மக்கள்மீது புலிபோல் பாய்ந்து சித்ரவதை செய்து ஊரைவிட்டுத் துரத்தினர். இத்தருணம் குறுமன்னர்கள் இறையாட்சி பணி செய்ய உதவியாக இருந்தனர்.

            இறையாட்சி பணியின் பாதையில் இவர் பல்வேறு சோதனைகளுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உட்பட்டிருந்த போதும் சலிப்பில்லாமல் இறையாட்சி பணியின் வழியாக கத்தோலிக்க மக்களின் விசுவாசத்தை கட்டியெழுப்பினார். இவரின் அயராது இறைபணியால் கத்தோலிக்கத் திருச்சபையானது மீண்டும் இலங்கையில் புத்துயிர் பெற்றது.இறுதியாக தரிகோணமலையில் பணியாற்றி தருணம் நோய்யுற்றார். தனக்கு ஒரு படுக்கையைப் பயன்படுத்த தனக்குத் தகுதியில்லை என்றுகூறி தரையில் படுத்துக்கொண்டார். இறுதியாக 1711ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் நாள் இயற்கை எய்தினார்.

Tuesday 16 January 2018

புனித அர்னால்டு ஜான்சன்


                                                                   
             இறைவனின் துணையுடன் அனைத்து செயல்களையும் நன்றாக செய்தவர். இயேசுவின் திரு இதயத்தின் மீது அதிக பற்றும் பக்தியும் கொண்டவர். இறைமாட்சிக்காக கடினமான வேலைகளையும் செய்தார். தூய ஆவியாரின் துணையுடன் நற்செயல்கள் புரிந்தவர்.  இரவும் பகலும் திருச்சபையின் வளர்ச்சிக்காக நற்கருணையின் முன்பாக கண் வழித்து செபித்தவரே புனித அர்னால்டு ஜான்சன். இவர் ஜெர்மனியில் கோச் என்னும் இடத்தில் 1837ஆம் ஆண்டு பிறந்தார்.

        அர்னால்டு ஜான்சன் பெற்றோரின் வழிகாட்டுதலால் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். நாளும் இறைவார்த்தையை வாசித்து செபிக்க கற்றுக்கொண்டார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டு வாழ்ந்தார். செபமாலைமிகுந்த பக்தியுடன் செபித்தார். குருமாணவர்களுக்கான பள்ளியில் தொடக்க கல்வியை கற்றார். கணிதம், அறிவியல் பாடத்தை மிகுந்த ஆர்வமுடன் கற்று பேரராசிரியராக பணியாற்றினார்.

          இயேசுவின் மீது மிகுந்த உறவு கொண்டு வாழ விரும்பினார். திரு இதயத்தின்மீது மிகுந்த பக்தியும் அன்பும் செலுத்தினார். ஆசிரியர் பணியை துறந்து அச்சம் தொடங்கினார். திரு இருதய சிறு தூதன் என் சிற்றிதழை ஆரம்பித்தார். தனது திறமையான எழுத்து மூலம் மறைபணியை ஆரம்பித்தார். இத்தருணத்தில் பிஸ்மார்க் அரசன் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆணை பிப்பித்தான். ஆயர்கள், குருக்கள், துறவிகள் இவர்கள் இறையழைத்தலை துறந்து கிறிஸ்துவை மறுதலிக்க சிறையில் அடைத்து துன்புறுத்திய தருணத்தில் அச்சு பிரதிகள் வழியாக அரசனுக்கு எதிராக குரல் கொடுத்தார்.
      கிறிஸ்துவை ஆர்வத்துடன் அறிவித்தார். அரசனால் விட்டப்பட்ட குருக்களையும், துறவிகளையும் ஒன்றிணைத்து அண்டை நாடுகளுக்கு சென்று இறைபணி செய்ய ஆவல் கொண்டார். அவ்வாறு தூய ஆவியின் தூண்டுதலால் அர்ப்பண வாழ்க்கை வாழ அருட்சகோதரிகளுக்காக 1889ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் நாள்  தூ ஆவியார் திருத்தூது சகோதரிகள் சபையை ஆரம்பித்தார். இரவும் பகலும் நற்கருணை ஆராதனை நடத்தினார் துறவிகள் செப வாழ்வில் வளர வழிகாட்டினார். கிறிஸ்துவின் வாழ்வை அனைவரும் பின்பற்ற அயராது உழைத்த அர்னால்டு ஜான்சன் 1909ஆம் ஆண்டு இறந்தார்.

Monday 15 January 2018

மரியா

           

          மரியாவிற்கு மூன்று வயது நடக்கும் பொழுது சிறுமியை ஆலயத்திற்குக் கூட்டிச் சென்று கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தனர். ஆலயத்தில் வேதாகமக் கூடத்தில் பயின்று, திருவுடைகள் தயாரித்து, இறைவழிபாட்டில் பங்குப்பெற்றார். இவ்வாறு பன்னிரெண்டு வயதுவரை மரியா ஆலயத்தில் தங்கிய பின்னர் வீடு திரும்பினார். மரியா தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து, காலம் தாழ்த்தாமல், கடமைகளைச் சரிவர செய்தார். ஆலய வேதாகமக் கூடத்தின் ஒழுங்குகள், குருக்களின் அறிவுரைகளை ஏற்று நடந்தது மரியாவின் தாழ்ச்சியை, இறைவனின் அன்பை, ஞானத்தைக் குறிக்கின்றன.

        இறையுறவில் வாழ்ந்து வந்த மரியா செபத்துடன் தனது வேலைகளைச் செய்தார்.  யூதமத நூல்களைக் குறிப்பாகப் பழைய ஆகமத்தைத் தெள்ளத்தெளிவாகக் கற்றுக்கொண்டார். இறைவார்த்தையை மனதில் தியானித்து, இறைவனோடு ஒன்றித்து வாழ்ந்த தருணத்தில், அவரது பெற்றோர் மரியாவை தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்பவருக்குத் திருமண ஒப்பந்தம் செய்தனர். திருமண ஒப்பந்தத்திற்குபின் மரியா நாசரேத்தில் தங்கினார். 

புனித வனத்துப் பவுல்

                                                                        

     கடவுள்மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார். நாளும் இறைநக்பிக்கையில் வாழ்ந்தவர். இறைவனே தஞ்சம் என்று வாழ்ந்தவர். பாலைவனத்திற்கு சென்று தவம் செய்தார். விலங்குகள் அவருக்கு துணையாக இருந்தன. இறைவன் அன்றாடம் தேவையான உணவைத் தருவார் என்று இறைவனை முழுமையாக நம்பி வாழ்ந்தவரே புனித வனத்து பவுல். இவர் எகிப்து நாட்டில் 229ஆம் ஆண்டு செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் பிறந்தார். அடிப்படை வசதிகளை பெற்றிருந்த பவுல் நன்கு கல்வி கற்று அறிவில் சிறந்து விளங்கினார். 

பவுல் தனது 15ஆம் வயதில் பெற்றோரை இழந்து தனிமையானார். இறைவனை முழுமையாக நம்பினார். இறையுறவில் நாளும் வளர்ந்து வந்தார். இத்தருணத்தில் செசார் தீசியுஸ் கிறிஸ்தவ மக்களை வாளுக்கு இறையாக்கினான். செசாரிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள வனத்துக்கு சென்று தவ வாழ்க்கையை ஆரம்பித்தார். இறைவனோடு இணைந்திருப்பதில் ஆனந்தம் அடைந்தார்.


     வனத்தில் வாழ்ந்த பவுல் குகையில் தனிமையில் இருந்தாலும் விலங்குகள் அவருக்கு துணையாக இருந்தன. இறைவன் பவுல் மீது அன்பு செலுத்தினார். அவரது குகையின் அருகில் பேரிச்சை மரம் ஒன்று வளர செய்தார். பேரிச்சை பழத்தை உணவாக அருந்தி உயிர் வாழ்ந்தார். காகம் தினமும் இவருக்கு ரொட்டி கொண்டு வந்து கொடுக்கும். இவரே முதலில் பாலைவத்தில் சென்று தவ வாழ்க்கையை ஆரம்பித்தார். இறைவனை பாடிப்புகழ்ந்து இறைபிரசன்னத்தில் வாழ்ந்தார். 
    வனத்தில் வாழ்ந்த பவுல் இவரைப்பற்றி புனித அந்தோணியாருக்கு வெளிப்படுத்தப்பட்டது. அந்தோணியார் பவுலை சந்தித்தார். அன்று காகம் இரண்டு ரெட்டி கொண்டு வந்து கொடுத்தது. பவுல், பாருங்கள் கடவுள் எவவளவு நல்லவரென்று. இத்தனை ஆண்டுகளாக இந்த பறவைகள் எனக்கு பாதி ரொட்டித் துண்டு தினமும் கொண்டு வந்து தருகிறது. இப்போது உங்களது வருகையை முன்னிட்டு இரண்டு ரொட்டித் துண்டுகள் கொண்டுவந்துள்ளது என்று கூறினார். இருவரும் இறைவனை புகழ்ந்து போற்றினர். இறைவனை மட்டும் தியானித்து வாழ்ந்த பவுல் தனது 113ஆம் வயதில் இறந்தார்.

Sunday 14 January 2018

அன்னை மரியா நமதருகே


         அன்னை மரியா நமதருகே இருக்கவேண்டும். மரியா செபமாலை சொல்வோரின் அருகில் விரைந்து வருகின்றார்.
புனித பவுஸ்தீனாவுக்கு ஒருமுறை குழந்தை இயேசுவுடன் அன்னை மரியா தோன்றினார். பவுஸ்தீனா அன்னை மரியாவிடம், “கன்னி மரியே! எனது தாயே! நான் எவ்வளவு துன்பப்படுகிறேன் என்பது உமக்குத் தெரியுமே!” என்று கூறினார். அன்னை மரியா பவுஸ்தீனாவிடம், “மகளே நீ அதிகமாகத் துன்பப்படுகிறாய் என்பது எனக்குத் தெரியும் நீ பயப்பட வேண்டாம். நானும் உன்னுடன் இணைந்தே துன்பப்படுகிறேன். எப்பொழுதும் உன் அருகில் ஆறுதலாய் இருப்பேன்” என்றார். பவுஸ்தீனா செபமாலையின் வழியாக துன்பங்களை எதிர்கொள்ள ஆற்றல் பெற்றார். நாம் பாவத்தை வென்று தூய்மையில் முன்னேற வேண்டுமானால் செபமாலை செபிக்கவேண்டும். செபமாலை வழியாக கிறிஸ்துவின் வாழ்க்கை நிகழ்வுகளைத் தியானித்து அன்னையின் அருட்கரம் வழியாக இறையருள் பெறமுடியும்.

புனித நோலா நகர் ஃபெலிக்ஸ்

                                                                             

      
            உலக இன்பங்களைத் துறந்து, தனது உடமைகளை ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்தளித்து, குருத்துவ வாழ்வின் வழியாக இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்தவர். உண்மைக்கும் நேர்மைக்கும் உழைப்புக்கும் தூய்மைக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவரே புனித நோலா நகர் ஃபெலிக்ஸ். இவர் இத்தாலி நாட்டில் நேப்பிள்ஸ் அருகிலுள்ள நோலா நகரில் பிறந்தார். தனது சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தார். இறைவன் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் வைத்து வாழ்ந்தார். 

         கிறிஸ்துவின் நிலைவாழ்வு தருகின்ற வார்த்தையை வாழ்வாக்கினார். நற்செயல்கள் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தி வாழ்ந்தார். இத்தருணத்தில் கிறிஸ்துவ மக்களை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தினர். சிறு காலம் பாலைவனத்திற்கு சென்றார். ஃபெலிக்ஸ் கைது செய்தனர். கழுத்தில் இரும்பு வளையத்தைச் சுற்றி இழுத்து சென்று சிறையில் அடைத்தனர். துன்பத்தின் மத்தியில் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார். காவல் தூதர் துணையாக இருந்து வழிநடத்தினார். இறைவனே தஞ்சம் என்று வாழ்ந்த ஃபெலிக்ஸ் 251ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 14ஆம் நாள் இறந்தார்.

 ஃபெலிக்ஸ் தனது இளமைப்பருவத்தில் உலக இன்பங்களை துறந்தார். இறைவன்மீது பற்றுக்கொண்டு இறையாட்சி பணி செய்ய ஆவல்கொண்டு குருவாக அருள்பொழிவு பெற்றார். ஏழை எளிய மக்களிடம் அன்பு செலுத்தினார். அவர்களின் தேவைகளை அறிந்து உதவி செய்தார். ஆயருக்கு உண்மையுள்ளவராக பணி செய்தார். நற்கருணை ஆண்டவரை அன்பு செய்தார். திருப்பலியை மிகுந்த பக்தியுடன் நிறைவேற்றினார்.