Tuesday 23 January 2018

புனித இல்டபோன்சஸ்


        அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டு இறையன்பின் பணியாளராய் பணி செய்தவர்.  மரியாவின் கன்னிமையின் மறைவல்லுநர் என்று அழைக்கப்பட்டவர். இதோ எனது பணியாளர் என்று அன்னை மரியாவால் அழைக்கப்பட்டவர். எண்ணற்ற நூல்கள் எழுதியவர். பொது நிலையினரின் விசுவாச வாழ்வுக்காக பாடுபட்டு உழைத்தவரே புனித இல்டபோன்சஸ்.            

       இல்டபோன்சஸ் என்பவர் ஸ்பெயின் நாட்டில் 607 ஆம் ஆண்டு பிறந்தார். சிறுவயது முதல் இறைபக்தியில் சிறந்து வளங்கினார். இறைவனின் அருட்கரம் தன்னோடு இருப்பதை உணர்ந்து வாழ்ந்தார். அன்னை மரியாவிடம் தன்னை அர்ப்பணம் செய்து வாழ்தார். ஒவ்வொரு நாளும் அன்னை மரியாவின் துணை நாடினார். அன்னையின் துணையுடன் புனித ஆசீர்வாதப்பர் துறவு மடத்தில் சேர்ந்தார்.
          

        துறவு இல்லத்தில் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தார். 630ஆம் ஆண்டு திருத்தொண்டராக அருள் பொழிவு பெற்றார். பின்  டொலேடோ நகரின் பேராயராக அருள்பொழிவு பெற்றார். எண்ணற்ற நூல்கள் எழுதினார். மரியாவின் கன்னித்தன்மை பற்றி எழுதினார். எனவே இவரை மரியாவின் கன்னிமையின் மறைவல்லுநர் என்று அழைக்கப்படுகிறர். அன்னை மரியா என்றும் கன்னி என்று எடுத்துரைத்தார். ஒருமுறை மரியா வானதூதர்களுட் காட்சி தந்து இதோ எனது பணியாளர், நம்பிக்கைக்குரியவர் என்று கூறினார். இல்டபோன்சஸ் 667ஆம் ஆண்டு இறந்தார்.


No comments:

Post a Comment