Friday 19 January 2018

மரியா அமல உற்பவி



           
        “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் இடையே பகையை உண்டாக்குவோம். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்
” (தொ.நூல் 3:15) என்று இறைவன் பாம்பிடம் கூறினார். அலகையை அழிக்கும் அவளது வித்து என்பது இயேசு கிறிஸ்துவே. அந்தத் தாய் அன்னை மரியா. இவரே பாம்பின் தலையை நசுக்கி, அழிக்க முன்குறிக்கப்பட்டவர். எனவே அன்னை மரியா நிச்சயமாகவே தன் பிறப்பு முதல் பாவக்கறையற்று பிறந்திருப்பார். 

         1839ஆம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் “பாவக்கறையற்று கருவான அரசியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்” என்று செபித்தார். மேலும் “மிகவும் பேறுபெற்ற கன்னிமரியா கருவான முதல் நொடியிருந்தே, எல்லாம் வல்ல இறைவனுடைய தனிப்பட்ட அருளாலும், சலுகையாலும் மனித குலத்தின் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களை முன்னிட்டுச் சென்மப் பாவத்தின் எல்லாக் கறையினின்றும் விடுவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டார். இக்கோட்பாடு இறைவனால் வெளிப்படுத்தப்பட்டதாகும். எனவே, இது எல்லா விசுவாசிகளாலும், உறுதியாக இடைவிடாது விசுவசிக்கப்பட வேண்டும் என்பதை நாம் அறிக்கையிடுகிறோம், அறிவிக்கிறோம், வரையறுக்கிறோம்” என்று திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் 1854ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 8ஆம் நாள் அறிவித்தார்

No comments:

Post a Comment