Monday 8 January 2018

புனித செவரின்

                                                                               
       செபம், தவத்தின் வழியாக தூயவராக வாழ்ந்து வந்தார். சாக்கு உடை அணிந்து நோன்பிருந்து இறைவனின் அளவற்ற இரக்கம் பெற்றுக்கொண்டவர். தன்னால் இயன்ற உதவிகளை அனைவருக்கும் செய்து வந்தார். கிறிஸ்துவின் வாழ்வுதரும் இறைவார்த்தையை வாழ்வாக்கி நற்செயல்கள் வழியாக சிறப்பான முறையில் இறையாட்சி பணி செய்தவரே புனித செவரின். இவர் 410ஆம் ஆண்டு உரோம் நகரில் பிறந்தார். இறைபக்தியில் சிறந்து விளங்கினார். அன்னை மரியாவின் மீது பக்தி கொண்டு வாழ்ந்தார்.

          ஆஸ்திரியா பகுதியில் பஞ்சம் ஏற்பட்டபோது அப்பகுதி மக்களுக்கு உதவி செய்தார். ஆர்வமுடன் இறைவார்த்தையை அறிவித்தார். கிறிஸ்துவின் அன்பை மறையுரை வழியாக எடுத்துரைத்தார். இறைவனின் உடனிருப்பை உணர்ந்து வாழ்ந்தார். செபத்தின் வழியாக இறைவனோடு உரையாடினார். வருங்கால நிகழ்வுகளை முன்னறிவித்தார். துன்பத்தில் வாழ்ந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார். மக்களின் தேவையை அறிந்து உதவினார். 
          

   நற்செயல்கள் வழியாக மக்கள் மனதில் இடம்பிடித்தார். சாக்கு உடை அணிந்து தவ வாழ்க்கை மேற்கொண்டார். தியான வாழ்வை விரும்பினார். துன்பத்தின் வாழ்ந்த மக்களின் வாழ்வில் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்படுத்தி இறைவனின் நம்பிக்கை வைத்து வாழ வழிகாட்டினார். துறவு வாழ்வை தேர்ந்தெடுத்து உத்தம துறவியாக வாழ்ந்தார். துறவு இல்லங்கள் நிறுவினார். ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவை நற்செயல்கள் வழியாக பிரதிபலித்த செவரின் 482ஆம் ஆண்டு இறந்தார். 

No comments:

Post a Comment