Tuesday 2 January 2018

புனித பெரிய பாசில்


         
        ஆன்மா உலக இன்பங்கள்மீது ஆவல் கொள்ளாதப்படி பார்த்துக்கொள்வதே நிலைவாழ்வை அடைவதற்கான வழி என்று கூறியவர். நிலைவவாழ்வு தருகின்ற இறைவார்த்தையை தனதாக்கி வாழ்ந்தவர். இறைவனே நிலையான செல்வம். தனது உடமைகள் அனைத்தும் வற்று ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தவர். செபம், தவம், உழைப்பு, தன்னொடுக்க முயற்ச்சிகள் வழியாக இயேசு கிறிஸ்துவை சொந்தாமக்கிய இறைவனின் அளவற்ற அன்பும், அமைதியும், இரக்கமும் பெற்று உத்தமாக துறவியாக வாழ்ந்தவரே புனித பெரிய பாசில்.

         பாசில் 330ஆம் ஆண்டு கப்பதோக்கியாவில் செசரியா என்ற இடத்தில் இறைபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பாசில் தாய் எமிலி இருவரும் புனிதர்கள். புனிதம் மிகுந்த பெற்றோரின் பாதுகாப்பில் வளர்ந்த பாசில் இறையன்பிலும் இறைபக்தியிலும் சிறந்து விளங்கினார். இறைவனோடு உறவு கொண்டு வாழ்ந்தார். நாளும் நற்பண்பில் வளர்ந்து வந்தார். உலகப் புகழ்பெற்ற கொண்ஸ்தாந்தினோபிள் உயர் கல்வி கற்று ஆசிரியராக பணியாற்றினார்.

        பாசில் ஆசிரியராக பணியாற்றினாலும் அவரது மனம் இறைவனை தேடியது. இறைவன் தன்னை துறவு வாழ்வுக்கு அழைப்பதை உணர்ர்ந்து கொண்டார். தனது செல்வத்தை ஏழைகளுக்கு பகர்ந்தளித்தார். ஆன்மீக வாழ்வில் ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடைந்தார். இறையன்பிலும் சகோதர அன்பிலும் வளர்ந்து சமுகப்பணியில் தனனை ஈடுப்பட்டு இறைவனோடு ஒன்றிணைந்து வாழ்ந்தார். தனது சகோதரி மாக்ரீனா துறவு இல்லம் ஆரம்பித்து துறவற வாழ்க்கை வாழ்ந்தார். அவரின் துணையோடு இறைவனுக்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்தார்.

       இறைதாகம் கொண்ட பாசில் நற்செய்தியை வாழ்வாக்கினார். சிரியா, பாலஸ்தீனம், மெசபடோமியா, எகிப்து போன்ற நாடுகளுக்கு சென்று துறவிகளின் வாழ்க்கை கண்டார். பின் தாயகம் திரும்பி துறவு இல்லங்களை ஆரம்பித்தார்.  பலரும் துறவு வாழ்க்கைக்காக அவருடன் இணைந்தனர். துறவிகளுக்காக புதிய சட்டங்கள் இயற்றினார். செபம், தவம், உழைப்பு இவற்றின் வழியாக இறைவனோடு ஒன்றிணைந்து வாழ வாழ்க்கை வழியாக எடுத்துரைத்தார். தனிப்பட்ட வாழ்விலும் சமூகத்திலும் பல மாற்றங்கள் ஏற்படுத்தினார். பாசிலின் தூய வாழ்வை பார்த்த செசரியா

மறைமாவட்டத்தின் பேரரயர் யுசேபியுஸ் இவரை 364ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தினார். பேரரயர் யுசேபியுஸ் மறைவுக்குப் பின் செசரியா மறைமாவட்டத்தின் பேரரயராக அருள்பொழிவு பெற்றார். இறைமக்களை நன்முறையில் வழி நடத்தினர். சமூகத்தில் நிலவிய தீமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். ஏழைகள் மீது அன்பு செலுத்தினார். கைவிடப்பட்ட மக்களுக்காக மறுவாழ்வு இல்லங்கள் நிறுவினார். அநீதி இழக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தார். சமூகத்தில் ஒதுக்கித் தள்ளப்பட்ட தொழுநோயாளர்களின் நல்வாழ்வுக்காக மருத்துவ மனைகள் ஏற்படுத்தினார். செல்வந்தர்கள் நீதியுடன் செயல்பட வழிகாட்டினார்.  கிறிஸ்துவின் இறையாட்சி பணியை சிறப்பாக செய்தார். நற்செய்தியை வாழ்வாக்கி மறையுரை வழியாகவும், நற்செயல்கள் வழியாகவும் எடுத்துரைத்த பாசில் 379ஆம் ஆண்டு மண்ணக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து விண்ணக வாழ்வில் நுழைந்தார். 

No comments:

Post a Comment