Saturday 13 January 2018

புனித இலாரி


     விவிலியம் வாசித்தபோது உண்மை கடவுள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்பதை உணர்ந்து கொண்டு அவருக்கே தனது வாழ்வை அர்ப்பணம் செய்தார். திருப்பாடல்கள், இறைவாக்கினர் நூல்களை வாசித்து இறைவனின் வலிமை, ஆற்றல், அன்பு, இரக்கம் ஆகியவயவற்றை உணர்ந்து கொண்டவர். கிறிஸ்துவின் உண்மைச் சீடராக வாழ்ந்து திறமையான மறையுரயாலும், எழுத்தாலும் கிறிஸ்துவின் இறையாட்சி பணியை திறம்பட செய்தவரே புனித இலாரி.
         இலாரி பிரான்ஸ் நாட்டில் பாய்ட்டியாஸ் நகரில் 310ஆம் ஆண்டு பிறந்தார். தனது 30ஆம்கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டு திருமுழுக்குப் பெற்றார். கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு ஒவ்வொரு நாளும் இறைவார்த்தையை வாழ்வாக்கி சான்று பகர்ந்தார். ஆன்மீக வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய இலாரி 350ஆண்டு ஆயராக அருள்பொழிவு பெற்றார். இறைமக்களின் தேவையை உணர்ந்து செயல்பட்டார். 
      ஏழை எளிய மக்களின் நண்பராக செயல்பட்டார். அனைத்து மக்களும் கிறிஸ்துவை அரசராக ஏற்றுகொள்ள அயராது உழைத்தார். கிறிஸ்துவின் அன்பை மறையுரை வழியாகவும் நற்செயல்கள் வழியாகவும் எடுத்துரைத்தார். திருச்சபையின் வளர்ச்சிக்கு அரும்பாடுப்பட்டு உழைத்தார். ஆரியுஸின் தப்பறைக் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். இவரின் நற்செய்களை விரும்பாத பேரரசர் கான்ஸ்டன்சியஸ் இலாரியை நாடு கடத்தினார். மூவொரு இறைவனிடம் உறவு கொண்டு வாழ்ந்த இலாரி 368ஆம் ஆண்டு இறந்தார்.

No comments:

Post a Comment