Tuesday 2 January 2018

அன்னை மரியா



       புனித குழந்தை இயேசுவின் தெரசா சிறுவயதில் தன் தாயை இழந்தார். அன்னை இறந்தபின் அக்காவின் கண்காணிப்பில் வளர்ந்தார். தெரசா நோயுற்ற தருணத்தில் அம்மா! அம்மா! என்று தொடர்ந்து அழைத்துக் கொண்டேயிருந்தார். இவ்வுலகில் எந்த உதவியும் பெற இயலாத தெரசா, தோட்டத்திலிருந்த அன்னை மரியாவின் திருசொரூபத்தை நோக்கித் திரும்பினார். அன்னை மரியாவிடம் சரண் அடைந்தார். தன்மீது இரக்கம் காட்டும்படி முழுஇதயத்தோடு மன்றாடினார். உடனடியாக அருள் நிறைந்த அன்னை மரியா அவருக்குக் காட்சி கொடுத்தார். அவரது அன்பையும், அருளையும் வெளிக்கொணர்ந்து புன்னகைத்தார்.
         தெரசா அனுபவித்த வேதனைகள் அன்னை மரியாவின் அருளால் மாறியது. எண்ணில்லா அமைதியும் ஆனந்தமும் அடைந்தார். அந்நேரம் முதல் இன்ப துன்பங்களில் அன்னை மரியின் அரவணைப்பையும் துணையையும்  நாடினார். 1884ஆம் ஆண்டு மே திங்கள் 8ஆம் நாள் முதல் முறையாக நற்கருணை பெற்றார். அந்நாளை இயேசுவின் முதல் முத்தம் பெற்ற நாள் என்று கூறுகிறார். தொடர்ந்து இயேசுவின் முத்தம் பெற ஆசைப்பட்டு மடத்தில் சேர விழைந்தார். அன்னையின் துணையோடு துறவற வாழ்வை மேற்கொண்டு புனிதராக மாறினார்.

No comments:

Post a Comment