Monday 29 January 2018

பாவமில்லாமல் உற்பவித்த மரியா


       
      புனித கேத்தரின் அன்னை மரியாவை அளவில்லாமல் அன்பு செய்தவர். அன்னை மரியாவை தன் தயாகவே ஏற்றுக்கொண்டார். அன்னை மரியா இவருக்கு பல முறை காட்சிக்கொடுத்தார். 1830ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 27ஆம் நாள் ஆலயத்தில் செபித்துக்கொண்டிருந்த தருணத்தில் அன்னை மரியா காட்சிக்கொடுத்தார். அன்னையைச் சுற்றிலும் ஓர் ஒளி சுற்றி நிற்க காடóசி கொடுத்தார். ஒளியின் நடுவில், “பாவமில்லாமல் உற்பவித்த ஒ மாமரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்” என்னும் சொற்கள் தங்க எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது. அப்போது நான் தருகின்ற சுரூபம் அனைவரும் அணிய வேண்டும். இந்த சுருபத்தை அணிகின்றவர்கள் கேட்கும் வரத்தை பெற்றுக்கொள்வார்கள் என்று கூறினார் மரியா. 

           சுரூபத்தின் ஒரு பகுதியில் அன்னை மரியா இருகரங்களையும் விரித்தவராய் இருக்கிறார். மறுபக்கத்தில் எம் என்ற எழுத்தும், அதன் மேல் திருச்சிலுவையையும், இயேசுவின் திருதயம், அதைச் சுற்றிலும் முட்கள் அதன் அருகில் வாள் ஊடுருவிய மரியாவின் இருதயம் இருந்தது. கேத்தரின் பார்த்த காட்சியைப்பற்றி பணியாளர்  அருள்தந்தை யோவான் மரியா அலடெல் என்பவரிடம் சொல் என்றார் மரியா. கேத்தரின் தந்தையின் துணையுடன் சுரூபத்தை தயார் செய்து பறைசாற்றினார். இந்த சுரூபத்தை நம்பிக்கையுடன் அணிகின்றவர்கள் இறைவனின் அருள்வரங்களை நிறைவாகப் பெற்றுக்கொள்வர். இந்த சுரூபம் வழியாக எண்ணற்ற புதுமைகள் நிகழ்ந்தன. இக்காரணத்தால் இந்த சுரூபம் புதுமை சுரூபம் என்று அழைக்கப்படுகிறது

No comments:

Post a Comment