Wednesday 30 October 2019

மரியா இறைவனின் தாய்

  

 ஒரு தாயானவள் தனது பிள்ளைகள்மீது வைக்கும் பாசம் இயற்கையானது. தாய்க்கு நிகர் தாயே. தாய் என்றால் அன்பும் ஆதரவும், பண்பும் பாசமும், நேர்மையும் நேசமும், தியாகமும் இரக்கமும், கனிவும் ஈகையும் நிறைவாகப் பெற்றவர். இதையே கவிஞர் ஒருவர், தாயன்பை எடுத்துரைக்க உலக மொழிகளில் போதிய  வார்த்தைகளே இல்லை என்கிறார். ஆம்! சாதாரண மனிதனை ஈன்ற தாயை வருணிக்கப்போதிய வார்த்தைகளே இல்லை என்றால், விண்ணையும் மண்ணையும் எக்காலத்தும் ஆள்கின்ற கிறிஸ்து அரசரை ஈன்ற தாயை நாம் எவ்வாறு வருணிக்க முடியும். இதையே புனித அகுஸ்தினார், ஒரு மனிதனின் உடலுள்ள உறுப்புகளெல்லாம் நாக்குகளாக மாறினும் மரியன்னையை அவருடைய தகைமைக்கு ஏற்றவாறு புகழ முடியாது என்கிறார்


அன்னை மரியா இறைவனின் தாய்நம் ஒவ்வொருவரின் தாய்இதையே எசபெத் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரத்த குரல், “என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” என்று கேட்கிறார்மரியா ஆண்டவரின் தாய் என்றால்உண்மையிலேயே இறைவனின் தாய்கி.பி 431ஆம் ஆண்டு எபேசில் கூடிய பொதுச்சங்கம்இம்மானுவேல் உண்மையிலேயே கடவுள்எனவே பேறுபெற்ற கன்னி மரியா உண்மையிலேயே இறைவனின் தாய்ஏனெனில் அவர் கடவுளிடமிருந்து பிறந்த வார்த்தையானவரை ஊனுடல் ஈன்றெடுத்தார்எவரொருவர் இதை ஏற்றுக்கொள்ளவில்லையோ அவர் சபிக்கப்பட்டவராவார்” என்று தெளிவாகக் கூறுகிறதுநாம் சபிக்கப்பட்டவர்களாய் மாறாமல் அன்னை மரியா இறைவனின் தாய் என்றும்சிறப்பாக நம் ஒவ்வொருவரின் தாயாகவே ஏற்றுக்கொள்வோம்.

         

மரியாகடவுள்மீது கொண்டுள்ளப் பேரன்பால் நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்கிறார்புனித யோவான் பெர்க்மான்ஸ், “மிகவும் இனிய மாமரியேதங்களை அதிகமாக அன்பு செய்பவன் பேறுபெற்றவன்மரியாவை நான் அன்பு செய்தால்நிச்சயம் விண்ணகத்தில் உறுதியுடனிருப்பேன்கடவுளிடமிருந்து கேட்பவற்றையெல்லாம் பெற்றுக்கொள்வேன் என்றார்புனித பிரான்சிஸ் சலேசியார், “அம்மா மாமரியேநான் நித்திய நரகத்திற்குச் செல்லாமருக்கஇவ்வுலகில் பாவம் செய்யாமல் இறைவனையும்உம்மையும் அதிகமாக அன்பு செய்து தூய்மையுடன் வாழ வேண்டும்” என்று மன்றாடினார்.

Friday 26 July 2019

புனித சுவக்கின், அன்னம்மாள்

புனித சுவாக்கின் மற்றும் அன்னா இவர்கள் அன்னை மரியாவின் பெற்றோர். இறைவனின் பார்வையில் நீதிமான்களாக வாழ்ந்தவர். இறைநக்பிக்கையில் சிறந்து பக்தி நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தவர். நாசரேத்தில் செல்வ செழிப்பான வாழ்க்கை வாழ்ந்தனர். செல்வமும் செல்வாக்கு இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லாமல் துன்புற்றனர். அன்னை மரியின் பெற்றோர்கள் திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்துள்ளனர். சுவாக்கின் ஆலயத்தில் பலி செலுத்தினார். ஆண்டவரின் இரக்கம் அவருக்கு கிடைக்க அவருக்கு கிடைக்கும்வரை காத்திருந்தார். செப, தவ, ஒறுத்தல்கள் பல புரிந்து, நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்கு "மரியா" என்று பெயர் சூட்டினர். 

  தன் ஒரே மகளை ஞானத்திலும், அறிவிலும், பக்தியிலும் சிறந்த பெண்ணாக வளர்த்தெடுத்தனர். இவர்கள் இறுதியாக எருசலேமில் வாழ்ந்துள்ளனர். அன்னாவும், சுவக்கின் என்பவர்களும் அன்னை மரியின் பெற்றோர்கள் . 6ஆம் நூற்றாண்டிலிருந்தே அன்னாவுக்கு வணக்கம் செலுத்தப்பட்டு வந்தது.  புனித அன்னா ஜூலை மாதம் 25 ஆம் நாள்தான் இறந்தார் என்ற வரலாற்று செய்தியைக் கொண்டு, 550 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிளில் ஆட்சி செய்த அரசன் புனித அன்னா பெயரில் பேராலயம் கட்டினான்.  அன்னை மரியின் பெற்றோர்களின் மீதிருந்த பக்தி உலகம் முழுவதும் பரவியது. ஜூலை 26ஆம் நாள் இப்புனிதர்களின் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. 

Thursday 25 July 2019

புனித பெரிய யாக்கோபு

புனித பெரிய யாக்கோபு இயேசுவின் சீடர்களில் ஒருவர். இயேசுவின் உருமாற்றத்தை கண்ட சீர்களில் இவரும் இருந்தார். தொடக்ககால திருச்சபையில் பேதுருவுக்குப் பின் திருச்சபையின் தலைவராக இருந்தவர். அல்பேயுவின் மகனான யாக்கோபு நான்காவது நபர். இவர் நீதிமான் என்று அழைக்கப்படுகிறார். பெத்சாய்தா ஊரைச் சார்ந்த செபதேயு, சலோமின் இவர்களுடைய மகன். இயேசுவின் அழைப்புக்கு செவிமடுத்து இயேசுவுடன் தங்கி அவரது போதனைகளை பின்பற்றினார். இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் ஸ்பெயின் நாட்டில் உள்ள இபெயரின் பகுதியில் நற்செய்தி அறிவித்தார். ஸ்பெயின் நாட்டில் வடபகுதியில் உள்ள உள்ள சரகோசா என்ற இடத்தில் ஒரு தூணில் அன்னை மரியா காட்சி கொடுத்தார். உங்களை நான் எப்போதும் பாதுகாப்பேன், கைவிடமாட்úட், உடனிருப்பேன் என்பதன் அடையாளமாக இங்கே ஒர் ஆலயம் கட்டுமாறு அன்னை மரியா கூறினார். 42ஆம் ஆண்டு ஏரோது அக்கிரிப்பா யாக்கோபை வாளால் வெட்டி கொலை செய்தார்.

Monday 15 July 2019

புனித தோமினிக்

    கடவுளின் திருமுன்னால் தூய்மையாக வாழ வேண்டும். கிறிஸ்துவின் இறையாட்சி பணி மற்றும் ஒழுக்கம் ஆகியவை இரு கண்களாகப் போற்றப்பட வேண்டும். சொந்தமாக செல்வம் சேர்த்து வைத்திருக்கக் கூடாது. கூடிய மட்டும் பிச்சை எடுத்தே உண்ணவேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்தவரே புனித தோமினிக். இவர் ஸ்பெயின் நாட்டில் 1170ஆம் ஆண்டு பிறந்தார். தோமினிக் என்றால், ‘நான் கடவுளுக்குச் சொந்தமானவன்’ என்பது பொருள். தனது 16ஆம் வயதில் புனித அகஸ்டின் துறவற சபையில் சேர்ந்தார். இறையியல் பட்டம் பெற்று இறையாட்சி பணியை ஆரம்பிதத்தார். ஊர் ஊராக சென்று இறையாட்சி அறிவித்தார். இறைமக்கள் இறைவனோடு இணைந்து வாழ செப வாழ்வை அமுதாய் ஊட்டினார். இறைவார்த்தைக்கேற்ப வாழ்ந்து, கிறிஸ்துவை தங்கள் வாழ்வில் பிரதிபலிக்க இரவும் பகலும் அயராது உழைத்தார்.


     1204ஆம் ஆண்டு டென்மார்க் அரசியைக் காப்பாற்ற அரசர் எட்டாம் அல்ஃபோன்சோ என்பவர் ஓஸ்மா மறைமாவட்ட ஆயர் தியாகோ மற்றும் தோமினிக் இருவரையும் டென்மார்க்கிற்கு அனுப்பினார். அவர்கள் தென் பிரான்ஸ் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஆல்பிஜென்சிய தப்பறையைப் பின்பற்றிய மக்களைச் சந்தித்தார்.  தப்பறைக்கு எதிராகக் குரல் கொடுக்க திருத்தந்தை மூன்றாம் இன்னோசென்ட், தோமினிக்கை நியமித்தார். தோமினிக், அன்னை மரியாவிடம் பக்தி கொண்டிருந்தார். அன்னையின் துணையால் ஆல்பிஜென்சிய தப்பறையின் மீது வெற்றி பெறமுடியும் என்று நம்பினார். தோமினிக் தூலூஸ் நகருக்கு அருகிலுள்ள காட்டிற்கு சென்று அன்னையின் உதவிக்காகவும், இறைவன் மக்களின் பாவங்களை மன்னிக்கவும் மன்றாடினார்.  மக்களைப் புனிதப்படுத்தத் தன்னைப் புனிதப்படுத்தினார். அன்னை மரியா மூன்று வானதூதருடன் தோன்றி, “நீர் போதனை செய்யும் போது, மக்கள் செபமாலை செபிக்கச் சொல்லும். அதன் வழியாக உம் வார்த்தைகள் ஆன்மாக்களில் விழுந்து மிகுந்த பலனைக் கொடுக்கும்” என்றார். செபமாலையின் வழியாக ஆல்பிஜென்சிய தப்பறையும் முறியடிக்கப்பட்டது. செபமாலை என்பது ‘ஏழைகளின் திருப்பாடல்’ மற்றும் ‘நற்செய்தியின் சுருக்கம்’ என்று அழைக்கப்படுகிறது.  அன்னை மரியாவின் துணையோடு இறையாட்சி பணி செய்த தோமினிக் 1221ஆம் ஆண்டு இறந்தார். 

Monday 21 January 2019

புனித ஆக்னஸ்

    இறையன்பு, தூய்மை, பொறுமை ஆகிய பண்புகளைத்  தனதாக்கி அறநெறி ஒழுக்கத்தில் சாலச்சிறந்தவர். இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்று விசுவசித்து, எனது கன்னிமை இறைவனுக்கே சொந்தம் என்றுகூறி இறையன்பின் சுடராகத் திகழ்ந்தவரே புனித ஆக்னஸ். இவர் உரோமை நகரில் பட்ரீசியன் என்ற உயர்குலத்தில் கி.பி. 291இல் பிறந்தார். ஆக்னஸ் என்றால் தூய்மை அல்லது புனிதம் என்பது பொருள்.


     ஆக்னஸிடம், புல்வியன் தன்னை ஏற்கும்படி கட்டாயப்படுத்தினான். மீறினால் நீ கிறிஸ்தவள் என்று காட்டிக்கொடுப்பேன் என்றான். ஆக்னஸ் புல்வியனிடம், “எனது அன்பு, ஆசைகள் அனைத்தும் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவுக்கே உரியவை. அவர் ஒருவரே என் முழு அன்பிற்கும் சொந்தக்காரர் ஆவார்” என்றார். புல்வியனின் விருப்பத்திற்கு இணங்காத ஆக்னûஸ கிறிஸ்தவள் என்று உரோமை அதிகாரி செம்ப்ரோனியன் என்பவரிடம் காட்டிக்கொடுத்தான். ஆக்னஸ் கிறிஸ்துவைப் பின்பற்றிய காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டார்.


     ஆக்னஸின் கன்னிமையைக் களங்கப்படுத்த, விலைமாதர் இல்லத்திற்கு கொண்டு செல்லுமாறும், யாரும் இவரைக் கறைபடுத்தலாம் என்றும் என்றுகூறி விலைமாதர் அறையில் அடைத்தனர். அங்கு தீய இளைஞர்கள் அவரை அணுக முயன்றும் அவர்களால் முடியாமற்போயிற்று. ஆக்னஸ், “உனது வாளினால் என் இரத்தக்கறை படிந்தாலும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணமான எனது உடலை கறைப்படுத்த முடியாது” என்றார். எப்போதும் கூடவே காவலாய் இருக்கும் காவல்தூதர் ஆக்னûஸத் தீமையிலிருந்து காப்பாற்றினார்.


    அரசன், கிறிஸ்தவ மறையை விட்டுவிடு உரோமைக் கடவுளது கோவில் இருக்கும் சிலையை வணங்கி, அதற்கு தூபம் காட்டுமாறு கூறினான். ஆக்னஸ், “என் உயிரே போனாலும் நான் இதைச் செய்யமாட்டேன். எனது உடலும் ஆன்மாவும் என்றும் உள்ள இறைவனுக்கே” என்று கூறினார். இதைக்கேட்ட அரசன், “ஆக்னஸ் நமது குலதெய்வத்தை வணங்க மறுத்ததால் அவள் தலையை வெட்டி கொலை செய்ய ஆணையிடுகிறேன்” என்று சாவின் தீர்ப்பைக் கூறினான். இறைவனுக்காக தனது கன்னிமையைக் காத்துக்கொண்ட ஆக்னஸ் 304ஆம் ஆண்டு, ஜனவரி 21ஆம் நாள் மரணம் வழியாக இறைவனின் திருப்பாதம் சேர்ந்தார். ஆக்னஸின் உடல் இன்றும் அழியாமல் இருக்கின்றது. இவரது திருநாள் ஜனவரி 21, திருமணம் நிச்சயமானவர்களின் பாதுகாவலர்.