Wednesday 17 January 2018

புனித ஜோசப் வாஸ்

           புனித ஜோசப் வாஸ் இந்தியாவில் கோவாவில் 1651ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள் ஆறு பேர் கொண்ட பிள்ளைகளின் குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். உயர் கல்விக்காக கோவா நகரத்திற்கு சென்றார். இவர் போர்த்துக்கீசம், லத்தின் ஆகிய மொழிகளை கற்றுத்தேர்ந்தார். சிறவயதிலேயே தவத்திலும் சிறந்து விளங்கினார். ஏழை எளிய மக்கள்மீது மிகுந்த கரிசனை கொண்டவர். புனித அக்வீனாஸ் குருமடத்தில் சேர்ந்து 25ஆம் வயதில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 

         கத்தோலிக்க மக்கள் வழிபட்டு வந்த ஆலயங்கள் ஒல்லாந்தர்களினால் அழிக்கப்பட்டன. கத்தோலிக்க குருக்களை தீயிட்டு எரித்துக் கொலை செய்தனர். ஒல்லாந்தர்களிடம் இருந்து கத்தோலிக்க மதத்தினை மீட்டெடுக்கும் பொருட்டு அருட்தந்தை ஜோசப் வாஸ் அவர்கள் செயற்படத் தொடங்கினார். மாறுவேடத்தில் யாழ்ப்பாணம் சல்லாலைப் பகுதியில் வந்து இறங்கிய ஜோசப் வாஸிற்கு அக்கிராம மக்கள் பாதுகாப்பும் அடைக்கலமும் கொடுத்தனர். ஒல்லாந்தர்களின் பிடியிலிருந்து தப்பி மறைபரப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் மாறுவேடத்தில் இறையாட்சி பணியை தொடங்கினார்.

             அனைத்து மக்களும் உண்மையை அறிந்திடவும், வெளிப்படையாக தமது மத நம்பிக்கைகளை வெளிப்படுத்தவும், சுதந்திரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். உண்மையான இறைவழிபாடு, இனப்பாகுபாடு, வெறுப்பு, வன்முறை ஆகியவற்றை விளைவிக்காது மாறாக, மனித உயிரின் புனிதத் தன்மை மற்றவரின் மாண்பு சுதந்திரம் மட்டில் மரியாதை, பொது நலனிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். 
                1690ஆம் ஆண்டு காண்டி நகரில் சேசுசபை குருக்கள் பணியாற்றி ஆலயத்தைக் கண்டுப்படித்தார். அங்கு வாழ்ந்த மக்களை கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார். இத்தருணம் அவர் இறையாட்சி பணி செய்த தளங்களை மாட்டுவண்டியில் பார்வையிட சென்ற போது இவர் வேவு பார்ப்பவன் என்று எண்ணி அரசு சிறையில் அடைத்தனர். அவருடன் இருந்த ஏழு பேரை தூக்கிலிட்டு கொன்றனர். தந்தை ஜோசப் வாஸ் அவர்கள் குற்றமற்றவர் என்று அரசன் உணர்ந்து கொண்டான். தந்தை அவர்கள் நான்கு ஆண்டுகள் சிறை தண்டணைக்கு பின் விடுதலை செய்து கத்தோலிக்க மக்கள் மத்தியில் பணியாற்ற அனுமதி வழங்கினார்.

            1697ஆம் ஆண்டு கண்டிநகர் மக்கள் பிளேக் நோய்க்கும் பெரிய அம்மை நோய்க்கும் எண்ணற்ற மக்கள் பியாக இறந்தனர். அரசனும் அவரது தோழர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஜோசப் வாஸ் அவர்கள் அஞ்சா நெஞ்சத்துடன் நோயுற்ற மக்களை சந்தித்து ஆறுதல் கூறி மருத்துவ உதவிகளைச் செய்தார். இவரது நற்செயலால் டச்சு நாட்டு வெறியர்கள் இவரைப் பிடிக்க குறிப்பார்த்தனர். இவரை பிடிக்க முடியாத தருணம் ஏழை கத்தோலிக்க மக்களை பிடித்து சிறையில் அடைத்தனர். சிலரின் காது, மூக்கையும் துண்டித்தனர். ஏழை கிறிஸ்தவ மக்கள்மீது புலிபோல் பாய்ந்து சித்ரவதை செய்து ஊரைவிட்டுத் துரத்தினர். இத்தருணம் குறுமன்னர்கள் இறையாட்சி பணி செய்ய உதவியாக இருந்தனர்.

            இறையாட்சி பணியின் பாதையில் இவர் பல்வேறு சோதனைகளுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உட்பட்டிருந்த போதும் சலிப்பில்லாமல் இறையாட்சி பணியின் வழியாக கத்தோலிக்க மக்களின் விசுவாசத்தை கட்டியெழுப்பினார். இவரின் அயராது இறைபணியால் கத்தோலிக்கத் திருச்சபையானது மீண்டும் இலங்கையில் புத்துயிர் பெற்றது.இறுதியாக தரிகோணமலையில் பணியாற்றி தருணம் நோய்யுற்றார். தனக்கு ஒரு படுக்கையைப் பயன்படுத்த தனக்குத் தகுதியில்லை என்றுகூறி தரையில் படுத்துக்கொண்டார். இறுதியாக 1711ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் நாள் இயற்கை எய்தினார்.

No comments:

Post a Comment