Sunday 14 January 2018

புனித நோலா நகர் ஃபெலிக்ஸ்

                                                                             

      
            உலக இன்பங்களைத் துறந்து, தனது உடமைகளை ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்தளித்து, குருத்துவ வாழ்வின் வழியாக இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்தவர். உண்மைக்கும் நேர்மைக்கும் உழைப்புக்கும் தூய்மைக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவரே புனித நோலா நகர் ஃபெலிக்ஸ். இவர் இத்தாலி நாட்டில் நேப்பிள்ஸ் அருகிலுள்ள நோலா நகரில் பிறந்தார். தனது சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தார். இறைவன் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் வைத்து வாழ்ந்தார். 

         கிறிஸ்துவின் நிலைவாழ்வு தருகின்ற வார்த்தையை வாழ்வாக்கினார். நற்செயல்கள் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தி வாழ்ந்தார். இத்தருணத்தில் கிறிஸ்துவ மக்களை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தினர். சிறு காலம் பாலைவனத்திற்கு சென்றார். ஃபெலிக்ஸ் கைது செய்தனர். கழுத்தில் இரும்பு வளையத்தைச் சுற்றி இழுத்து சென்று சிறையில் அடைத்தனர். துன்பத்தின் மத்தியில் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார். காவல் தூதர் துணையாக இருந்து வழிநடத்தினார். இறைவனே தஞ்சம் என்று வாழ்ந்த ஃபெலிக்ஸ் 251ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 14ஆம் நாள் இறந்தார்.

 ஃபெலிக்ஸ் தனது இளமைப்பருவத்தில் உலக இன்பங்களை துறந்தார். இறைவன்மீது பற்றுக்கொண்டு இறையாட்சி பணி செய்ய ஆவல்கொண்டு குருவாக அருள்பொழிவு பெற்றார். ஏழை எளிய மக்களிடம் அன்பு செலுத்தினார். அவர்களின் தேவைகளை அறிந்து உதவி செய்தார். ஆயருக்கு உண்மையுள்ளவராக பணி செய்தார். நற்கருணை ஆண்டவரை அன்பு செய்தார். திருப்பலியை மிகுந்த பக்தியுடன் நிறைவேற்றினார். 

No comments:

Post a Comment