Wednesday 31 January 2018

மரியா கிறிஸ்தவர்களின் சகாயம்


       
      புனித தொன்போஸ்கோவின் பாதுகாப்பில் வளர்ந்த பிள்ளைகளுக்கு அவரது தாய் துணையாக இருந்து பற்பல பணிவிடைகள் புரிந்து வந்தார். மாலையில் விவிலியக் கதைகளைக் கற்றுக்கொடுத்தார். இரவில் சிறுவர்களின் கிழிந்துபோன உடைகளைத் தையல் போட்டு சீர்ப்படுத்தினார். திடீரென அவரது தாய் இறந்துவிட்டார். அன்னையின் அரவணைப்பையும், பாதுகாப்பையும் இழந்த தொன்போஸ்கோ, அன்னை மரியாவிடம், “கன்னிமரியே, எனது பிள்ளைகளைப் பாரும். இவர்களுக்கு இனிமேல் எந்தத் தாயும் இல்லை. இந்நேரம் முதல் நீரே இவர்களுக்குத் தாயாக துணையாக இருப்பீராக” என்று செபித்தார். அன்று முதல் அன்னை மரியாவை, ‘கிறிஸ்தவர்களின் சகாயமே’ என்று அழைத்தார். அன்னை மரியாவின் அரவணைப்பிலும், பாதுகாப்பிலும் வாழ்ந்து புனிதராக மாறினார்.




          இரண்டாம் வத்திக்கான் சங்கம், “நிறைவாழ்வு வரலாற்றில் ஆழ்ந்து ஊன்றிய மரியா நம்பிக்கைப் பேருண்மைகளைத் தம்மில் ஒருவாறு இணைத்துப் பிரதிபலிக்கின்றார். தாம் பறைசாற்றப்படும் போதும் வணங்கப்படும் போதும் நம்பிக்கை கொண்டோரைத் தம் மகனிடமும் அவரது தந்தையின் அன்புக்கும் இட்டுச் செல்கின்றார். எனவே தன் திருத்தூதுப் பணியிலும் கிறிஸ்துவை ஈன்றவரையே திருச்சபை வழியாக நம்பிக்கை கொண்டோர் இதயங்களிலும் கிறிஸ்து பிறந்து வளர வேண்டும் என்பதற்காகவே தூய ஆவியால் கருவாகி, அவர் கன்னிமரியாவிடமிருந்து பிறந்தார். தூய கன்னி தம் வாழ்வில் தாய்க்குரிய அன்பிற்கு மாதிரியையாய் உள்ளார்” என்று கற்பிக்கிறது. 

No comments:

Post a Comment