Tuesday 31 July 2018

தூய இலயோலா இஞ்ஞாசியார்

       கிறிஸ்துவே உலகின் ஒளி; கிறிஸ்துவே இறைவனின் ஞானம்; கிறிஸ்துவே வாழ்வும், வழியும், உண்மையும் உயிரும், உயிர்ப்புமானவர். எனவே கிறிஸ்துவை அறிவது இறைவனையே அறிவதாகும். கிறிஸ்துவை அன்பு செய்வது இறைவனை அன்பு செய்வதாகும். என்று வாழ்க்கையால் சான்று பகிர்ந்தவர். இதயத்தில் இயேசு என்ற திருநாம் பொன்னெழுத்துக்களால் பொறித்தவர். எல்லாம் இறைவனின் அதிமகிமைக்கே செய்தவரே புனித லொயோலா இஞ்ஞாசியார். இவர் ஸ்பெயின்நாட்டிலுள்ள பாஸ்க் மாவட்டத்தில் லொயோலா கோட்டையில் 1491ஆம் ஆண்டு  டிசம்பர் 27ஆம் நாள் பிறந்தார்.


     தனது 15ஆம் வயதில் பர்டினான்ட் இஸபெல்லாவினது அரசவையில் போர்வீரராகப் பணியாற்றினார். அந்தியோக்கு நகர் இஞ்ஞாசியார் 107ஆம் ஆண்டு மறைசாட்சியாய் உயிர்விட்ட நேரத்தில் அவரது இதயத்தில் “இயேசு கிறிஸ்துவின் மகிமை நிறைந்த திருப்பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்ததாம் என்பதை அவருடைய சுயசரிதையில் படித்த நேரம்முதல் அப்புனிதரின் பெயரே தனக்கும் வேண்டும் என்று விரும்பி இனிகோ என்ற பெயரை ‘இஞ்ஞாசியார்’ எனóறு மாற்றிக்கொண்டார். இஞ்ஞாசியார் தமது 26வது வயதில் போரில் எதிரியின் பீரங்கிக்குண்டு இஞ்ஞாசியாரின் வலது காலில் பாய்ந்து எலும்பு ஒடிந்தது. ஓய்வு எடுத்த இஞ்ஞாசியார் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு, மற்றும்  புனித பிரான்சிஸ் அசிசியார், புனித சாமிநாதர் ஆகியோருடைய வாழ்க்கை வரலாற்று நூல்கள் படித்து, நான் ஒரு புனிதராக மாறக்கூடாது என்று எண்ணி தன் வாழ்வை இயேசுவுக்கு அர்ப்பணித்து இறைபணிக்கு செய்தார்.


   வாழ்க்கையில் எதையும் சவாலாக ஏற்றுக்கொண்ட இஞ்ஞாசியார் 1534இல் இறையியலுடன் இலக்கியமும் படித்தார். 1534ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள்  “இறை இயேசுவின் சேவகர்கள் சபை”  தொடங்கினார். கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் வார்த்தைப்பாடுகளை கொடுத்தார். இவரது கல்விப்பணி, அப்போஸ்தலப்பணி ஆர்வத்தைப் பார்த்த திருத்தந்தை 3ஆம் பவுல் இஞ்ஞாசியாரால் தொடங்கப்பட்ட சபைக்கு அனுமதியும், குருப்பட்டம் வழங்க ஆயர்களுக்கு அனுமதியும் கொடுத்தார். இஞ்ஞாசியாரும் குருவானவராக அருள்பொழிவு பெற்றார். 1540இல் இயேசு சபையின் உயர்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1556ஆம் ஆண்டு ஜøலை திங்கள் 31ஆம் நாள் இயற்கை எய்தினார்.

No comments:

Post a Comment