Monday 30 July 2018

புனித பேதுரு கிறிசாலொகு

       கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர். மறையுரைகள் வழியாக மக்களுக்கு நற்செய்தி அறிவித்தார். தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். அன்னை மரியாவின் மீது பக்தி கொண்டு வாழ்ந்தவரே புனித பேதுரு கிறிசாலொகு. இவர் இத்தாலி நாட்டில் 380ஆம் ஆண்டு பிறந்தார். ஆயர் கொர்னேலியுஸ் கரங்களால் திருமுழுக்குப் பெற்று இறைபக்தியல் வளர்ந்து வந்தார். கிறிஸ்துவின் இறையாட்சி பணிகள் மீது ஆர்வம் கொண்டு குருத்துவ வாழ்வை தேர்ந்தெடுத்தார். குருவாக அருள்பொழிவு பெற்று இறைமக்களுக்கு பணியாற்றினார். திருச்சபையின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இறைவார்த்தையை மக்களுக்கு எடுத்துரைத்தார். அன்னை மரியாவிடம் தனது வாழ்வை அர்ப்பணம் செய்து தூய வாழ்க்கை வாழ்ந்தார். தனது தன்னலமற்ற பணிகள் வழியாக 433ஆம் ஆண்டு ரவென்னா மறைமாவட்ட ஆயராக அருள்பொழிவு பெற்றார். திருச்சபைக்கு எதிராக எழுந்த ஒரியல்பு தப்பறைக்கு எதிராக குரல் கொடுத்தார். திருத்தூதர்களின் நம்பிக்கை, அன்னை மரியா, கிறிஸ்துவின் மறைபொருளைப் பற்றி மக்களுக்கு எளிய நடையில் எடுத்துரைத்தார். இறைவனுக்காக வாழ்ந்த பேதுரு கிறிசாலொகு450ஆம் ஆண்டு இறந்தார்.

No comments:

Post a Comment