Tuesday 3 July 2018

புனித தோமா

   உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள் என்று கூறிய கிறிஸ்துவின் வார்த்தையை வாழ்வாக்க இந்திய திருநாட்டில் நற்செய்தி அறிவித்தவர். ஏழை மக்களுக்கு எண்ணற்ற உதவிகள் செய்தார். கிறிஸ்துவின்மீது பற்றுகொண்டு வாழ்ந்தார்.  "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம் நிலைவாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன என்று இறைவனை இறுகப்பற்றிக்கொண்டவர். கிறிஸ்துவுக்காக துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டார். தான் பெற்ற இறையனுபவத்தின் வெளிப்படாக   "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்"   என்று நம்பிக்கையை அறிக்கையிடும் அன்பரே புனித தோமா. 
 
   தோமா கலிலேயாவில் ஏழை மீனவப் பெற்றோருக்கு பிறந்தார். இயேசுவின் 12 திருத்தூதர்களுர் ஒருவர். நாமும் அவரோடு இறப்போம் என்று கூறினர். கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்க இந்திய நாட்டுக்கு தச்சர் தொழில் செய்பவராக வந்தார். தட்சசீலம் முதலில் வந்து தனது போதனையை ஆரம்பித்தார். அரசர் தோமாவிடம் அழகிய அரண்மனை கட்டித்தருமாறுப் பணத்தை தோமாவிடம் கொடுத்தார். தோமையார் அரசனிடமிருந்து பெற்ற பணத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தார். இக்காரணத்தால் அரசன் அவர்களை சிறையில் அடைக்க உத்தரவு ஆணை பிறப்பித்தார். இத்தருணத்தில் அரசனின் சகோதரன் காத் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார். பின் தனது அண்ணன் கனகவில் தோன்றி, "விண்ணகத்தில் தோமா கட்டியுள்ள அரண்மனையில் நான் நலமோடு இருக்கிறேன். அவரை ஒன்றும் செய்துவிடாதே என்று கூறினார். தோமா முதன் முதலில் கிராங்கனூர் கடற்கரையை வந்தடைந்தார் எனவும், மலபாரில் மட்டும் 7 ஆலயங்கள் எழுப்பினார் எனவும், பின்னர் குமரி கடற்கரை வழியாக சென்னை வந்தடைந்தார் எனவும், அங்கே பலரையும் மனந்திருப்பிய பின் "சிறிய மலை" என்ற பெயர் கொண்ட இடத்தில் குத்திக் கொல்லப்பட்டார் எனவும் வரலாறு கூறுகின்றது. அவர் மைலாப்பூரில் அடக்கம் பண்ணப்பட்டதற்கு கல்லறை ஆதாரங்களும் உள்ளது.

No comments:

Post a Comment