Friday 20 July 2018

புனித அப்போலினாரிஸ்

    வீசுவாத்தின் வீரராக இறையாட்சி பணி செய்தவர். கிறிஸ்துவை அறிவிக்க தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் கையளித்தவர். துருக்கி நாட்டில், 2 ஆம் நூற்றாண்டில் இருந்த ஆயர்களில் "சிறந்தவர்" என்ற பெயர் பெற்றவர். கிறிஸ்துவுக்காக துன்பங்களை துனிவுடன் ஏற்றுக்கொண்டவரே புனித அப்போலினாரிஸ். இவர் 2வது நூற்றாண்டில் தலைச்சிறந்த ஆயராக இறையாட்சி பணி செய்தவர். துருக்கி பிரிஜியா மாநிலத்தில் ஆயராக பணியாற்றினார். இவர் துருக்கி நாட்டில் பிரிஜியா மாநிலத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிறிஸ்துவை அந்நாட்டில் பரப்ப பெரும்பாடுபட்டார். இதனால் அந்நாட்டு அரசன் அவுரேலியஸ் என்பவரால் பல துன்பங்களை அனுபவித்தார். ஆனால் ஆயர் தன்னுடைய செபத்தால் அரசனை வென்றார். ஆயரின் சொல்படி நடந்த அரசன், திருச்சபைக்காக பல உதவிகளை செய்தான். அந்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுத்தான். அப்போலினாரிஸிடமிருந்து, பல விசுவாச போதனைகளை கற்றுக் கொண்டான். ஆயர் மன்னனின் மனதை கவர்ந்து விசுவாசத்தை அம்மண்ணில் நிலைநாட்டியதால் "வீரம் கொண்ட விசுவாச தந்தை" என்ற பெயரை பெற்றார். கிறிஸ்துவர்களின் முன்னேற்றத்திற்காக ஆயருக்கு, அரசர் உதவியதால் , அரசனின் எதிரிகளால் ஆயர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment