Monday 23 July 2018

ஸ்வீடன் புனித பிரிஜித்

      இறைவனுக்காக தன்னை அர்ப்பணம் செய்து இறையாட்சி பணி செய்தவர். தன்னலமற்ற பிறரன்பு பணிகள் வழியாக இறைவனை மாட்சிமைப்படுத்தியவர். திருச்சபையின் வளர்ச்சிக்காக நாளும் ஆர்வமுடன் உழைத்தவர். குழந்தைப்பருவம் முதல் திருச்சிலுவைவியின் முன்பாக செபம் செய்தவர். திருச்சிலுவை ஆண்டவரை பலமுறை காட்சியில் கண்டு அவரோடு உரையாடி மகிழ்ந்தார். இடைவிடாமல் இறைபிரசன்னத்தில் வாழ்ந்து வாழ்வில் சந்தித்த தோல்விகளை பொறுமையோடு ஏற்றுக்கொண்டவர். வாழ்நாளில் அன்பும் அமைதியும் பொறுமையும் மிகுந்தவராய் வாழ்ந்தவரே புனித பிரிஜித்.


    பிரிஜித் ஸ்வீடன் நாட்டில் 1303ஆம் ஆண்டு பிறந்தார். சிறந்த முறையில் கல்வி கற்று இறைஞானத்தில் சிறந்து விளங்கினார். தனது ஏழாம் வயதில் இறைவன் தன்னை அழைப்பதாக உணர்ந்து இறைவனுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்தார். இயேசுவின் துன்பாடுகளைக் காட்சியாக கண்டு இயேசுவின் துன்பப்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்டார். இவர் தனது 14 ஆம் வயதிலேயே ஸ்வீடன் நாட்டு அரசர் மாக்னஸ் என்பவரை திருமணம் செய்தார். பின்னர் 8 பிள்ளைகளைப்பெற்று தாயானார். தன் பிள்ளைகளை ஆன்மீக காரியங்களில் ஈடுபடுத்தி வளர்த்தார். இறைவன் மீது தணியாத தாகம் கொண்டு வாழ்ந்தார். இவர் தியானம் செய்யும்போது பலமுறை இயேசுவின் திருப்பாடுகளை காட்சியாக கண்டார் திருமணத்திற்கு பின்னும் ஆலயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திகொண்டு, பல துறவற சபைகளுக்கு உதவி செய்தார். அப்போது தன் கணவர் இறந்துவிடவே, தன்னை புனித பிரான்ஸ்கன் 3 ஆம் சபையில் இணைத்துக்கொண்டு ஆன்ம வாழ்வில் வளர்ந்து, பிறருக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். 


      இவர் அரசர் மனைவி என்பதால், கணவருக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் இவருக்கே கொடுக்கப்பட்டது. இவர் அவை அனைத்தையும் வைத்து இவர் பெயரில் ஒரு துறவற மடத்தை நிறுவினார். அதன்பிறகு உரோமைக்கு சென்று, அந்நாட்டில் உள்ள மக்களுக்கு ஆன்ம வாழ்வில் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தார். தான் மேற்கொண்ட கடுந்தவத்தின் காரணமாய், பல நாட்டிற்கு திருப்பயணம் சென்றார். அப்பயணங்களில் பல நூல்களையும் எழுதினார். இளம் வயதிலிருந்தே இறைவனிடமிருந்து தான் பெற்ற காட்சிகள் அனைத்தையும், புத்தகங்களில் வடிவமைத்தார். புனித நாட்டிற்கு பயணம் செய்யும்போது தன்னுடைய மகன்களில் ஒருவர் இறந்துவிட்ட செய்தியை கேட்டார். இதனால் மிகவும் மனத்துயர் அடைந்து, புனித நாட்டிற்கு செல்லாமல் மீண்டும் உரோம் நகர் திரும்பினார். தனது மற்ற பிள்ளைகளை சந்திக்க திட்டமிட்டார். ஆனால் அத்திட்டம் நிறைவேறாமல் போகவே, மனத்துயர் அடைந்து நோய்வாய்ப்பட்டு இறைவனடி சேர்ந்தார். இறக்கும்வரை இறைவனை மட்டுமே இறுகப் பற்றிக்கொண்டிருந்தார். 

    இவர் தியானம் செய்யும்போது பலமுறை இயேசுவின் திருப்பாடுகளை காட்சியாக கண்டார் ஒருமுறை சிலுவையில் துன்புறும் இயேசுவை காட்சியில் கண்ட கண்ணீர் விட்டு அழுதார். இயேசுவிடம், “உமக்கு யார் இந்த துன்பத்தைத் தந்தார்கள்” என்று கேட்டார். அதற்கு இயேசு, “என் அன்பை யாரெல்லாம் புறக்கணிக்கிறார்களோ அவர்களே” என்று கூறினார். பிரிஜித் தனது 10ஆம் வயதில் தாயை இழந்தார். தனது தாயின் சகோதரியின் அரவணைப்பில் வாழ்ந்தார்.தனது பிள்ளை இறைபக்தியிலும் நற்பண்பில் வளர்த்தினார்.  இறைவனோடு உறவு கொண்டு கடுந்தவம் செய்து வாழ்ந்தார். தனது 41ஆம் வயதில் துறவு வாழ்வை தொடங்கினார். இறைவனை அன்பு செய்து 1373ஆம் ஆண்டு இறந்தார்.   

No comments:

Post a Comment