Saturday 30 December 2017

புனித சாபினும், தோழர்களும்


    இயேசு கிறிஸ்துரை அரசராக ஏற்றுக்கொண்டவர்கள். கிறிஸ்துவுக்காக துன்பங்களை ஏற்றுக்கொண்டு மறைசாட்சியாக இறந்தவர்களே புனித சாபினும், தோழர்களும். டயோக்கிளிசியனால் நிறமிக்கப்பட்ட ஆளுநன் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட ஆயர் சாபினும் அவரது தோழர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தினர். 300ஆம் ஆண்டு மறைசாட்சியாக இறந்தனர்.

Friday 29 December 2017

அன்னை மரியா

         
         புனித குழந்தை இயேசுவின் தெரசா சிறுவயதில் தன் தாயை இழந்தார். அன்னை இறந்தபின் அக்காவின் கண்காணிப்பில் வளர்ந்தார். தெரசா நோயுற்ற தருணத்தில் அம்மா! அம்மா! என்று தொடர்ந்து அழைத்துக் கொண்டேயிருந்தார். தோட்டத்திலிருந்த அன்னை மரியாவின் திருசொரூபத்தை நோக்கித் திரும்பினார். இவ்வுலகில் எந்த உதவியும் பெற இயலாத தெரசா, அன்னை மரியாவிடம் சரண் அடைந்தார். தன்மீது இரக்கம் காட்டும்படி முழுஇதயத்தோடு மன்றாடினார். உடனடியாக அருள் நிறைந்த அன்னை மரியா அவருக்குக் காட்சி கொடுத்தார். அவரது அன்பையும், அருளையும் வெளிக் கொணர்ந்து புன்னகைத்தார்.
       
     தெரசா அனுபவித்த வேதனைகள்அன்னை மரியாவின் அருளால் மாறி எண்ணில்லா ஆனந்தம் அடைந்தார். அந்நேரம் முதல் இன்ப துன்பங்களில் அன்னை மரியின் அரவணைப்பையும் துணையையும்  நாடினார். 1884ஆம் ஆண்டு மே திங்கள் 8ஆம் நாள் முதல் முறையாக நற்கருணை பெற்றார். அந்நாளை இயேசுவின் முதல் முத்தம் பெற்ற நாள் என்று கூறுகிறார். தொடர்ந்து இயேசுவின் முத்தம் பெற ஆசைப்பட்டு பெüலீன் அக்காவைப்போல கார்மெல் மடத்தில் சேர விழைந்தார். அன்னையின் துணையோடு துறவற வாழ்வை மேற்கொண்டு புனிதராக மாறினார்.

புனித தாமஸ் பெக்கட்


          திருச்சபையை அதிகம் அன்பு செய்தவர். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டவர். இறைவன் வழிநடத்தலை உணர்ந்து வாழ்ந்தவர். கிறிஸ்துவின் நிலைவாழ்வு தருகின்ற இறைவார்த்தைகளை ஆர்த்துடன் போதித்தார். இறையாட்சி பணி செய்ய நோன்பிருந்து செபித்து தன்னை தயார் செய்தவரே புனித தாமஸ் பெக்கட். இவர் லண்டன் மாநகரில் 1118ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 21ஆம் நாள் பிறந்தார்.

 தாமஸ் இறைபக்தியில் வளர்ந்து வந்தார். அன்னை மரியாவிடம் பக்தி கொண்டு தினமும் செபமாலை செபித்தார். பாரிஸ் பல்கலை கழகத்தில் சட்டம் மற்றும் திருச்சபை சட்டம் கற்றார். துணி வியாபாரம் செய்த பெற்றோர் நோயுற்று இறந்தனர். தாமஸ் குடும்ப பொறுப்பைக் கவனித்தார். திறமையும், ஞானமும், நற்பண்புகளும் நிறைந்த தாமஸ் ஷெரிப் நீதி மன்றத்தில் எழுத்தளராக பணியாற்றினார். இறைப்பணி செய்ய ஆவல் கொண்டார். பின் 1154ஆம் ஆண்டு திருத்தொண்டராக அருள்பொழிவு பெற்று தலைமை திருத்தொண்டராக உயர்ந்தார்.
  1155ஆம் ஆண்டு அரசர் இரண்டாம் ஹென்றியின் அரசவையில் அரசனுக்கு அடுத்த பதவியில் பணியாற்றினார். அரசருடன் தோழமையுடன் செயல்பட்டார். தாமஸின் திறமை மிகுந்த செயல்களினால் அரசரின் மனம் கவர்ந்தார். 1162ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்று அடுத்த நாள் பேராயராக பதவி ஏற்றார். அரசனின் விருப்படி செயல்படாத நிலை ஏற்பட்டது. அரசனுக்கும் பேராயருக்கும் இடையில் பிளவுகள் ஏற்றட்டன. தலைமை திருத்தொண்டர் பதவியிலிருந்து விலக அரசன் கூறினான். தமாஸ் அதற்கு இணங்கவில்லை.

      மறைமாவட்டத்திற்கு சொந்தமான தோட்டங்களை அரசன் தனதாக்க முயன்றான். பேராயர் தாமஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அன்புடன் உடையாடி விவேகத்துடன் பேசினார். அரசன் விரும்பிய நிலங்கள் கிடைக்கவில்லை. ஆத்தரம் அடைந்து கோபத்தில் புலம்பினான். 1170ஆம் டிசம்பர் 29ஆம் நாள் தாமஸ் ஆலயத்தில் செபித்துக் கொண்டிருந்தார். இத்தருணத்தில் கயவர்கள் நேரே பலி பீடத்திற்கு சென்று இறைவனோடு உரையாடிக் கொண்டிருந்த தாமûஸ வாளால் வெட்டி கொலை செய்தார்கள். 1173 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் திருதந்தை மூன்றாம் அலெக்ஸôண்டர் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். 

Thursday 28 December 2017

மாசில்லா குழந்தைகள் விழா


    புனித அகஸ்டின் “வான் வீட்டில் அரும்புகள் மலர்ந்தன” என்று கூறினார். மாசற்ற குழந்தைகள் கொல்லப்பட்டதை நற்செய்தியில் காண்கின்றோம். ஏரோது ஆட்சி காலத்தில் உலகின் மீட்பர் இயேசு யூதேயாவில் உள்ள பெத்லகேமில் பிறந்தார். யூதர்களின் அரசர் பிறந்துள்ள செய்தியை அரசர்கள் மூலம் தெரிந்துக்கொண்டான் ஏரோது. 

         இயேசு யூதர்களின் அரசர் என்ற காரணத்தால் ஏரோது இயேசுவை கொலைச் செய்ய தேடினான். பெத்லேமுக்கு அருகில் 2 வயதும் அதற்குட்பட்டதுமான ஆண் குழந்தைகளை வாளுக்கு இரையாக்கி மகிழ்ந்தான். மீட்பர் இயேசுவுக்காக மாசற்ற குழந்தைகள் இறந்தனர். விவரம் அறியும் முன்னே மரணத்தைத் தழுவிய இக்குழந்தைகளைத் திருச்சபை பெருமையுடன் வணங்குகிறது. ஏனென்றால் மறைக்கலகத்தில் மடிந்த முதல் குழந்தைகள் இவர்கள். இக்குழந்தைகள் கிறிஸ்துவுக்காக தங்கள் உயிரை கையளித்தனர். 

Wednesday 27 December 2017

புனித யோவான்


       

          திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்து, இயேசுவின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவராக வாழ்ந்தவர். இரா உணவின்போது இயேசுவின் மார்பில் தலைசாய்த்து அவரின் இதயத்துடிப்புகளை தனதாக்கியவர். இயேசுவை கைது செய்யப்பட்டபோது எல்லா திருதூதர்களும் ஓடிவிட்டபோது இயேசுவை பின்தொடர்ந்தார். கிறிஸ்துவின் உண்மை சீடராக வாழ்ந்தவரே புனித யோவான்.

        யோவான் என்பதற்கு கடவுளின் கொடை என்பது பொருள். இயேசுவின் சிலுவை மரணம்வரை அவரை பின்தொடர்ந்தார். இயேசு தனது அன்புத் தாய் அன்னை மரியாவை யோவானிடம் ஒப்படைத்தார். அன்னை மரியாவிடம் மிகுந்த அன்பும் பற்றும் கொண்டு அன்னையின் அரவணைப்பில் வாழ்ந்தார். கோவிலின் அழகு வாயிலில் இருந்த கால் ஊனமுற்றவரை குணப்படுத்தினார். தூய ஆவியின் அருள்பொழிவு பெற்று இயேசு கிறிஸ்துவை எங்கும் அறிவித்தார்.
      இயேசுவை அறிவித்த காரணத்திற்காக பேதுரு கைது செய்யப்பட்டபோது உடன் இருந்து தைரியம் பகர்ந்தார். சமரியா, எபேசில் பகுதிகளுக்கு சென்று மிகுந்த ஆர்வத்துடன் நற்செய்தி அறிவித்தார். 49ஆம் ஆண்டு நடைபெற்ற எருசலேம் முதல் சங்கத்தில் பங்கேற்றார். கிறிஸ்துவின் பொருட்டு புதுமைகள் பல செய்தார். இறுதியில் கொடுங்கோலன் தொமீசின் கைது செய்து உரோமைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.

     கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு, அவரது அன்பிற்காகவே வாழ்ந்து, அன்பின் திருமுகங்கள் எழுதி, கிறிஸ்துவின் பொருட்டு துன்பங்களை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். இவரை கொதிக்கும் எண்ணெய் கொப்பரைக்குள் போட்டார்கள். கிறிஸ்துவுக்காக துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டு இறக்காத நிலையை பார்த்தபோது அவரை பாத்மோஸ் தீவிற்கு நாடுகடத்தினர். பாத்மோஸ் தீவில் இருந்தபோது திருவெளிபாடு என்ற நூல் எழுதினார். 96ஆம் ஆண்டு நெர்வா அரசன் விடுதலை செய்தார். விடுதலை அடைந்தப் பின் எபேசில் வாழ்ந்தார். யோவான் நற்செய்தி மற்றும் மூன்று திருமுகங்கள் எழுதினார். கிறிஸ்துவுக்காக வாழ்ந்த யோவான் 100ஆம் ஆண்டு விண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து மரணம் வழியாக விண்ணக வாழ்வில் நுழைந்தார். 

Sunday 24 December 2017

அன்னை மரியா



புனித யோவான் கந்ஷியஸ்


          தாழ்ச்சி, ஏழ்மையை பின்பற்றி கிறிஸ்துவின் உண்மை சீடராக வாழ்ந்வர். அன்பினால் அனைவருக்கும் பணிவிடைகள் செய்தார். இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து நற்செயல்கள் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தினார். தன்னிடமிருந்த அனைத்து பொருட்களையும் ஏழை எளிய மக்களுக்கு பகர்ந்தளித்தார். சமூகத்தில் பின்தள்ளப்பட்ட மக்களை தேடிச் சென்று உதவி செய்தவரே புனித யோவான் கந்ஷியஸ்.
        யோவான் கந்ஷியஸ் போலந்து நாட்டில் க்ராக்கோ மறைமாவட்டத்தில் காண்டி என்னுமிடத்தில் 1390ஆம் ஆண்டு ஜøன் 23ஆம் நாள் பிறந்தார். இறைபக்தியில் சிறந்து விளங்கிய யோவான் கந்ஷியஸ் குருவாக இறையாட்சி பணி செய்ய விரும்பினார். பட்டங்கள் பல பெற்றார். இறையியல் கற்றுத்தேர்ந்து குருவாக அருள்பொழிவு பெற்றார். கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார்.
       ஓக்குஸ் பங்கு தந்தையாக நியமிக்கப்பட்டார். பங்குமக்களை ஆன்மீக வாழ்வுக்கு வழிகாட்டினார். துன்பத்தில் வாழ்ந்த மக்களை தேடிச் சென்று உதவினார். தன்னிடமிருந்த பொருட்களை இறைமக்களுக்கு பகர்ந்தளித்தார். அருட்சாதன வாழ்வில் ஆர்வமின்றி வாழ்ந்த மக்கள் இறையருள் பெற்றுக்கொள்ள தன்னொடுக்க முயற்சிகள் வழியாக அறிவு புகட்டினார். விவிலியத்தை இறைமக்களுக் விளக்கி கொடுப்பதில் மகிழ்ச்சி அடைந்தார். நிறைவாழ்வு தருகின்ற இறைவார்த்தையை வாழ்வாக்கி சான்று பகர்ந்தார். 
        மறைசாட்சியாக மாறிட ஆவல் கொண்டார். மறைசாட்சிகளின் அரசியான அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டு வாழ்ந்தார். அன்னையின் கரங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்து அன்பு, உண்மை, தாழ்ச்சி, பொறுமை இவற்றிற்கு சொந்தகாரகாக வாழ்ந்த யோவான் கந்ஷியஸ் 1473ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இறந்தார். திருத்தந்தை 13ஆம் கிளமண்ட் 1767ஆம் ஆண்டு ஜøலை 16ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். 

அன்னை மரியா


Saturday 23 December 2017

புனித தோர்லாக்


         இறைஞானம் மிகுந்த குருவாக இறையாட்சி பணி செய்தவர். கற்பு நெறியை கடைப்பிடித்து கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தவர். ஒழுக்கம் மிகுந்தவராய் தூய்மைக்கு சான்றாக வாழ்ந்தவர். இறைவனுக்கு தனது வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்தவரே புனித தோர்லாக். இவர் ஐஸ்லாந்தில் ஃபியாட்ஷில்த் என்னும் இடத்தில் 1133ஆம் ஆண்டு பிறந்தார்.

     இறைபக்தியில் சிறந்து விங்கிய தோர்லாக் தனது 18ஆம் வயதில் குருவாக அருள்பொழிவு பெற்றார். தவறுகள் செய்ய வாய்ப்புகள் தன்னை நெருங்கியத் தருணத்தில் இறைவனின் துணை நாடினார். தவறுகள் செய்யாமல் புனிதராக வாழ்ந்தார். தோர்லாக் இறைவனின் திருவுளப்படி உத்தம துறவியாக வாழ்ந்தார். 1178ஆம் ஆண்டு ஸ்கால்ஹோல்ட் மறைமாவட்டத்தின் ஆயராக திருப்பொழிவு பெற்று இறைமக்களை இறைவழியில் வழிநடதóதினார். சமூகத்தில் நிலவிய தவறுகளைக் கண்டித்தார். 
         

        குருக்களை அன்புடனும் பாசத்துடனும் வழிநடத்தினார். இறைமக்களுக்கு நல்வமிகாட்டி அறிவு புகட்டினார். திருச்சûயின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு உழைத்தார். ஏழை எளிய மக்களை அன்பு செய்தார். அன்னை மரியாவிடம் தனது மறைமாவட்டத்தை அர்ப்பணம் செய்து அன்னை அருள் பெற்று மக்களை வழிநடத்தினார். 1193ஆம் ஆண்டு ஆயராக இறைபணியாற்றி தோர்லாக் விண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து விண்ணக வாழ்வில் நுழைந்தார். 


Friday 22 December 2017

புனித பிரான்செஸ் சேவியர் காப்ரினி


       “கீழ்ப்படிதல் மற்றும் ஒழுக்கமாக நடத்தல் வழியாக இறைவனை நெருங்கலாம்”  என்றுகூறி அவ்வாறே வாழ்ந்நவர். தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணித்தவர். “நம்பிக்கை உள்ளவர்களின் விசுவாசத்தை மீட்டெடுப்பதே எமது பணி” என்று கூறியவரே புனித பிரான்செஸ் சேவியர் காப்ரினி. இவர் இத்தாலி நாட்டில், லம்பார்டி பகுதியில் 1850ஆம் ஆண்டு ஜøலை திங்கள் 15ஆம் நாள் பிறந்தார்.

     “செபியுங்கள் எப்பொழுதும் செபியுங்கள்; செபவாழ்வு நடத்த கடவுளின் உதவியை இடைவிடாது கேளுங்கள். கடவுள் விரும்புவதை ஆர்வமாய் தேடுங்கள்” என்றுகூறிய அவ்வாறே வாழ்ந்தார். காப்ரினி குழந்தைப் பருவம் முதல் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். தாழ்ச்சி, கீழ்ப்படில், பொறுமை, ஒழுக்கம், ஏழ்மை, தூய்மை ஆகியவற்றைப் பின்பற்றி வாழ்ந்தார். நற்கருணை ஆண்டவரிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.

        வாழ்நாள் முழுவதும் இயேசுவுக்காக இறையாட்சி பணி செய்வேன் என்று தீர்மானித்தார். இறைநம்பிக்கை மிகுந்த வாழ்க்கை வழியாக கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்தார். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தார்.  மறைப்பணியாளராகப் இறையாட்சி பணி செய்ய சீனாவுக்குச் செல்ல விரும்பினார். திருஇருதய சபை சகோதரிகள் துறவு இல்லத்தில் கன்னிமை வாழ்க்கை வாழ சென்றார். காப்ரினி உடல்மெலிந்து காணப்பட்டதால் துறவு கூடத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. பின் கடோனா இடத்திலுள்ள அனாதை குழந்தைகளைக் கவனித்து வந்தார்.

         1874ஆம் ஆண்டு நாசரேத்து சகோதரிகள் சேர்ந்து கற்பு, ஏழ்மை, கீழ்ப்படில் போன்ற வார்த்தைப்பாடு வழியாக இறைவனுக்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்தார். இறையன்பிற்கும், பாசத்திற்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். 1880ஆம் ஆண்டு ஆயர் டொமினிகோ ஜெல்மினி என்பவரின் துணையுடன் திரு இருதய மறைபணியாளர்கள் சபையை ஆரம்பித்தார். 1888ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் திருத்தந்தையின் அனுமதி பெற்றார். திருதந்தை 13ஆம் சிங்கராயர் வேண்டுகோலுக்கு இணங்கி நியூôர்க் சென்று இறைபணி செய்தார்.

       குழந்தைகளை அன்புடன் கவனித்துக்கொண்டார். நம்பிக்கை வாழ்வில் நலியுற்றவர்களை ஊக்கப்படுத்தினார். பெற்றோர்களால் கைவிடப்பட்ட பிள்ளைகளை தாயன்புடன் வழிநடத்தினார். சிறந்த முறையில் கல்வி பணியாற்றினார். குழந்தைகளுக்கு அநாதை இல்லங்கள் ஆரம்பித்து அன்புடன் கவனித்தார். அனைவரின் ஆன்ம நலனுக்காக சிறப்பாக இறையாட்சி பணி செய்தார். இறைவனிடம் நம்பிக்கை கொள்ளுங்கள் நீங்கள் புதுமைகளைப் பார்ப்பீர்கள் என்று கூறிய காப்ரினி 1917ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 22ஆம் நாள் இறந்தார். திருதந்தை 12ஆம் பத்திநாதர் 1946ஆம் ஆண்டு ஜøலை 7ஆம் நாள் புனிதராக உயர்த்தினார்.

Thursday 21 December 2017

புனித பேதுரு கனிசியுஸ்


           நாட்டை சீர்திருத்த சிறந்த வழி உத்தம குருக்களை ஏராளமாக உருவாக்குவதே சிறந்தது என்று கூறியவர். தாயின் அன்பை அன்னை மரியாவிடமிருந்து பெற்றுக்கொண்டவர். கடவுளின் உதவியுடன் தனது ஒவ்வொரு செயலையும் செய்தவர். கிறிஸ்துவின் வழித்தடங்களில் நடந்து இறையாட்சிப் பணியை திறம்பட செய்தவரே புனித  பேதுரு கனிசியுஸ். இவர் டச்சு நகரான நிஜ்மெகன் நகரில் 1521ஆம் ஆண்டு மே திங்கள் 8ஆம் நாள் பிறந்தார்.

   தாயிடமிருந்து செபம் செய்ய கற்றுக்கொண்டார். சிறுவயதிலேயே தாயை இழந்தார். தாயின் அன்புக்காக ஏங்கியத் தருணத்தில் அன்னை மரியாவின் துணை நாடினார். மரியாவிடமிருந்து அன்பும் பாசமும்   பெற்றுக்கொண்டார். நான் குழந்தையாக இருந்தபோது என் அன்னை அழுதுக்கொண்டே கடவுளுக்கு என்னை அர்ப்பணம் செய்தார். தாயின் விருப்படியே இறைவனுக்கு என்னை முற்றிலும் அர்ப்பணம் செய்து, இறையாட்சி பணி செய்ய தன்னை தயார்செய்தார்.
        

         கனிசியுஸ் தனது 19ஆம் வயதில் ஜெர்மன் நாட்டு கொலோன் பல்கலைக் கழகத்தில் சட்டவியலில் பட்டம் பெற்றார். இறைவன் இறையாட்சிப் பணிக்காக அழைப்பதை உணர்ந்த கனிசியுஸ் இயேசு சபையில் சேர்ந்து 1546ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்றார். 1547ஆம் ஆண்டு நடைபெற்ற திரெந்து பொது சங்கத்தில் பொறுப்பேற்றார். கல்லுரியில் ஆசிரியராக பணியாற்றினார். கல்வி கற்பிப்பதிலும், சிறந்த நூல்கள் எழுதுவதிலும், மறையுறை ஆற்றுவதிலும், திறமைமிக்கவராக காணப்பட்டார். திருமறைச்சுவடி என்னும் நூலை எழுதினார்.
          

       அரசர் ஃபெர்டினான்டின் தலையீட்டினால் இறையியல் கற்பிக்க வியன்னா சென்றார். ஜெர்மனி நாடெங்கும் ஒரே குழப்பாக இருந்தது. மக்களுக்கு சிறந்த கல்விப் பயிற்சி அளித்து தீமைகள் எங்கும் பரவாமல் தடுத்தார். தப்பறைக் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், சிறுவர்களுக்கு ஆலோசனை வழங்கி வழிகாட்டினார். பல்வேறு இடங்களில் கல்லூரிகள் நிறுவினார். இறைவனில் வழியில் இறைமக்களை வழிநடத்த, நாட்டை சீர்திருத்த சிறந்த வழி உத்தம குருக்களை ஏராளமாக உருவாக்குவதே சிறந்தது என்றுகூறி குருத்துவ கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தினார்.

       கிறிஸ்துவின் வழித்தடங்களில் நடந்து இறையாட்சி பணியை சிறந்த முறையில் செய்தார். நற்கருணையை வாழ்வின் உயிர்மூச்சாக கொண்டார். நிலைவாழ்வு தருகின்ற இறைவார்த்தையை வாழ்வின் சட்டமாக ஏற்றுக்கொண்டார். தேவநற்கருணை வாங்கியப் பின் நீண்டநேரம் இயேசுவுடன் உரையாடி மகிழ்நார். சமூகத்தில் நீதி நிலவிட பாடுப்பட்டு உழைத்தார். சமூகத்தில் நிலவிய அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுத்தார். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்தினார். மக்களுக்காக மக்களில் ஒருவராக வாழ்ந்த பேதுரு கனிசியுஸ் 1597ஆம் ஆண்டு இறந்தார். திருத்தந்தை 11ஆம் பத்திநாதர் 1925ஆம் ஆண்டு மே திங்கள் 21ஆம் நாள் புனிதர் பட்டத்தையும், மறைவல்லூநர் பட்டத்தையும் சேர்த்து வழங்கினார்.


Wednesday 20 December 2017

அன்னை மரியா

         


        “எனது வாழ்வின் இறுதிவார்த்தைகளாக மரியாவின் இனிய நாமத்தை உச்சரிக்க வரம்  வேண்டும்”
. (புனித ஜெர்மானுஸ்). “அலகையின் கூட்டம் மரியாவின் பெயரை யாராவது உச்சரிக்க கேட்டவுன் மிரண்டு ஓடுகின்றன. வானதூதர்கள் மரியாவின் பெயரை மரியின் பக்தர்கள் உச்சரிக்கக் கேட்டவுடன் விரைந்து ஓடிவந்து உதவி புரிகின்றனர்”. (புனித பிரிஜித்). “மரியின் இனிய நாமம் எனது உள்ளத்தின் ஆழத்தில் மீட்பின் தைலமாக இறங்கட்டும்”. (புனித அம்புரோஸ்)

சிலோஸ் நகர புனித தோமினிக்


     
        இயேசுவின் அருகில் இருந்து அவருடன் பேசுகிறேன் என்று கூறியவர். சிறுவயது முதல் இறைபக்தியில் சிறந்து விளங்கியவர். தனிமையில் இருந்து இறைவனோடு உரையாடி மகிழ்ந்தார். இறைவனின் அருட்கரம் பற்றி நடந்தார். துயரத்தின் மத்தியில் இறைவனிடம் செபித்து ஆறுதல் அடைந்தவரே புனித தோமினிக். இவர் ஸ்பெயின் நாட்டில் 1000ஆம் பிறந்தார். சிறுவயது முதல் ஆடுமேய்கும் தொழில் செய்தார்.

         தினந்தோறும் ஆலயம் சென்று அன்னை மரியாவிடம் செபித்து நற்பண்பில் வளர்ந்து வந்தார். ஆடுமேய்கும் தருணத்தில் இறைவனிடம் உரையாடி மகிழ்ந்தார். இறைவன் அழைத்தபோது அவரது குரல் கேட்டு ஆசிர்வாதப்பர் துறவு சபையில் சேர்ந்தார். துறவற பயிற்சி பெற்று கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் போன்ற வார்த்தைப்பாடுகள் வழியாக இறைவனுக்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்து உத்தம துறவியாக வாழ்ந்தார்.
         நவாரா அரசன் மூன்றாம் கார்சியா சான்செஷ் என்பவர் துறவு இல்லத்தை அபகரித்தபோது அரசனுக்கு எதிராக குரல் கொடுத்தார். இறைநம்பிக்கையுடன் செபித்தார். காஸ்டில் நாட்டு அரசன் முதலாம் பெர்டினான்ட் துணையுடன் சிலோஸ் நகரில் துறவிகளுக்கு தலைமைத் துறவியாக தோமினிக் வழிநடத்தினார்.

         ஏழை எளிய மக்களில் ஒருவராக வாழ்ந்தார். இரக்கச் செயல்கள் வழியாக இறைவனை மாட்சிமைப் படுத்தினார். ஆன்மீக வாழ்வில் சிறந்து விளங்கி இறைமக்களுக்கு நல்வழி காட்டினார்.  நற்கருணை ஆண்டவரின் முன்பாக அமர்ந்து உரையாடினார். வாழ்நாள் முழுவதும் இரக்கமும், தாழ்ச்சியும், கற்பும் உள்ளவராக வாழ வேண்டுதல் செய்தார். மக்களோடு மக்களாக வாழ்ந்த தோமினிக் 1073ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 20ஆம் நாள் இறந்தார்.

Tuesday 19 December 2017

புனித நெமேசியுஸ்


   
கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டு அவருக்காக தனது வாழ்வை அர்ப்பணம் செய்தவர். துன்பத்தின் மத்தியில் இறைவனை புகழ்ந்து பாடினார். உயிர் போகும் அளவுக்கு கொடூரமான சித்திரவதைகளை கிறிஸ்துவுக்காக துணிவுடன் ஏற்றுக்கொண்டவரே புனித நெமேசியுஸ். இவர் எகிப்தில் 249ஆம் ஆண்டு பிறந்தார்.
   
          நெமேசியுஸ் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார். கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட காரணத்திற்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தினர். இவர் மீது பொய்யான குற்றங்களைச் சுமத்தினர். துன்பத்தின் மத்தியிலும் கிறிஸ்துவை அரசராக அறியிக்கையிட்டார். நெமேசியுஸ் வாழ்ந்த காலத்தில் கிறிஸ்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்து கிறிஸ்துவை மறுதலித்து சிலைகளுக்கு பலி செலுத்த வற்புறுத்தினர். சிலைகளுக்கு பலி செலுத்தாதவர்களின் உடமைகள் பரிமுதல் செய்து நடுகடத்தினர்.

          நெமேசியுஸ் கிறிஸ்தவர் என்பதற்காக கைது செய்யப்பட்டார். சாட்டையால் அடித்தார்கள். எட்டி உதைத்தார்கள். முகத்தில் துப்பினார்கள். கால்களை ஒடித்தனர். கொடூரமான துன்பங்களுக்கு மத்தியில் கிறிஸ்துவே உண்மையான உயிருள்ள கடவுள் என்று அறிக்கையிட்டார். அத்திரம் அடைந்த பேரரசன் நெமேசியுஸ் தலையை உயிருடன் எரித்துக் கொலை செய்தார்கள்.

Monday 18 December 2017

புனித வினிபால்ட்


         துறவு வாழ்க்கை வழியாக இறைவனை மாட்சிமைப்படுத்தியவர். இயேசு கிறிஸ்துவை கண் முன்பாக கொண்டு வாழ்ந்தவர். அர்த்தமுள்ள ஆன்மிக வாழ்க்கை வாழ தியான வாழ்வை பின்பற்றினார். இறைவனின் அருட்கரம் பற்றி நடந்து எண்ணற்ற நன்மைகள் செய்து வாழ்ந்தவரே புனித வினிபால்ட். இவர் இங்கிலாந்து நாட்டில் 702ஆம்ஆண்டு பிறந்தார். சிறுவயது முதல் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். 
      வினிபால்ட் உரோம் நகருக்கு திருபயணம் சென்றார். உரோம் நகரில் 7 ஆண்டுகள் கல்வி கற்றார். துறவு வாழ்க்கையின் மீது தாகம் கொண்டார். துறவு வாழ்க்கையின் முன் அடையாளமாக தனது உச்சந்தலையில் வட்டமாக மொட்டைஅடித்துக்கொண்டார். கிறிஸ்துவின் உண்மை சீடராக வாழ விரும்பினார். உயர் கல்வி முடித்து தாயகம் திரும்பினார். 
      அன்னை மரியாவின் மீது பக்தி கொண்டு வாழ்ந்தார். செபாலை வாழியாக தூய வாழ்க்கைக்கு தேவையான அருளை அன்னை மரியாவின் வழியாக பெற்றுக்கொண்டார். பெற்றோரின் வழிகாட்டுதலால் ஆன்மீக வாழ்வில் வளர்ச்சி அடைந்தார். குருத்துவ வாழ்வை தேர்ந்தெடுத்தார். குருவாக அருள்பொழிவு பெற்று ஜெர்மன் மற்றும் பவாரியா பகுதிகளுக்கு சென்று நற்செய்தியை அறிவித்தார். சிலைவழிபாட்டை அகற்றினார். தப்பறைகளுக்கு எதிராக குரல்கொடுத்தார்.

      ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தார். இறைமக்களின் நலன் கருதி எண்ணற்ற புதுமைகள் செய்தார். வினிபால்டின் தன்னலமற்ற பிறரன்பு பணிகளை விரும்பாதி எதிர்கள் அவரது உணவில் விஷம் கலந்தனர்.  இறைவனில் அருட்கரம் அவரோடு இருந்ததால் எத்தீங்கும் அவரை நெருங்கவில்லை. துறவு இல்லங்களை நிறுவினார். புனித ஆசிர்வாதப்பரின் விதிமுறைகளைப் பின்பற்றினார். துறவிகளிடம் இறைவனை கண் முன்பாக கொண்டு வாழுங்கள். எத்துன்பம் வந்தாலும் தூய்மைக்கு கலங்கம் ஏற்படால் வாழ வழிகாட்டிய வினிபால்ட்761ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் இறந்தார்.

Sunday 17 December 2017

புனித இலாசர்



         இயேசுவின் நெருங்கிய நண்பர். மார்த்தா, மரியா இவர்களின் சகோதரன். இறந்து நான்கு நாட்களுக்கு பிறகு இயேசு இவரை உயிருடன் எழுப்பினார். இயேசுவினால் அதிகம் அன்பு செய்யப்பட்டவரே புனித இலாசர். இவர் எருசலேம் அருகிலுள்ள பெத்தானியா என்ற ஊரில் பிறந்தவர். இலாசர் என்பதற்கு, “கடவுள் உதவி செய்கிறார்” என்பது பொருள் இயேசுவின் போதனைகளை ஏற்று அதன்படி வாழ்ந்து வந்தார்.

       

         இயேசுவுடன் நெஞ்சுருக பேசினார். அவரோடு தோழமை உறவுகொண்டார். தனது 30ஆம் வயதில் நோயுற்றார். இத்தருணத்தில் அவரது சகோதரிகள் மார்த்தா, மரியா இயேசுவை அழைத்துவர ஆள் அனுப்பினார்கள். இயேசுவால் வரமுடியவில்லை. அதற்குள் இலாசர் இறந்துவிட்டார். இலாசர் இறந்து நான்கு நாள்கள் ஆயிற்று. கல்லறையின் அருகில் சென்று, “இலாசரே வெளியே வா” என்றுகூறி இயேசு இலாசரை உயிருடன் எழுப்பினார். மூவொரு இறைவனின் அன்பை வெளிப்படுத்தி வாழ்ந்த இலாசர் 60ஆம் வயதில் இறந்தார்.

Saturday 16 December 2017

புனித அடிலெய்ட்


          கிறிஸ்துவின் விழுமியங்களை தனதாக்கி, தன்னலம் மறந்து அயலானின் வளர்ச்சிக்காக உழைத்தவர். ஆன்மிக வாழ்வில் வளர்ச்சி அடைந்து மற்றுள்ளவரையும் ஆன்மீக வாழ்வில் வளர்ச்சி அயைட வழிகாட்டிவர். கிறிஸ்துவின் விழுமியங்களை நற்செய்கள் வழியாக வெளிக்கொணர்ந்து வாழ்ந்தவரே புனித அடிலெய்ட். இவர் 931ஆம் ஆண்டு பார்கன்டி அரசர் இரண்டாம் ருடால்ஃபின் மகளாகப் பிறந்தவர்.

      தனது 16ஆம் வயதில் லொதேயர் என்பவரை திருமணம் செய்தார். ஒரு குழந்தைக்கு தாயான தருணத்தில் கணவனை இழந்தார். இறைவன்மீது நம்பிக்கை கொண்ட அடிலெய்ட் பெரென்கர் அரசரின் மகனை திருணம் செய்து கொள்ள வற்புறுத்தினர். திருமணம் செய்து கொள்ள மறுத்தார் அடிலெய்ட். இக்காரணத்தால் அவரை சிறையில் அடைத்து துன்புறுத்தினர். துன்பத்தின் மத்தியில் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்.

           நான்கு மாதங்கள் கடந்தவேவையில் 951ஆம் ஆண்டு, ஜெர்மன் பேரரசர் ஒட்டோ முற்றுகையிட்டு பெரென்கரை வீழ்த்தினார். பேரரசர் ஒட்டோ, அடிலெய்ட் அழகில் மயங்கி அவரை திருமணம் செய்தார். சில நாள்களில் ஒட்டோ இறந்தார். அடிலெய்ட் முழுப்பொறுப்பேற்று ஆட்சி செய்த தருணத்தில் தனது சொந்த மகனால் அரண்மனை வாழ்விலிருந்து வெளியேற்றப்பட்டார்.

     அரண்மணை வாழ்விலிருந்து வெளியேறிய அடிலெய்ட் மைன்ஸ் மறைமாவட்ட ஆயர் புனித வில்லிஜிஸ் என்பவரின் வழிகாட்டுதலால் ஆன்மீக வாழ்வில் வளர்ச்சி அடைந்தார். கிறிஸ்துவின் வாழ்வுதரும் வார்த்தையை வாழ்வாக்கி சான்று பகர்ந்தார். அயலானின் வளர்ச்சிக்காக ஆர்வமுடன் உழைத்தார். அடிப்படை வசதிகள் இல்லாமல் துன்புற்ற மக்களுக்கு உதவினார். ஆலயங்கள் மற்றும் துறவு இல்லங்கள் கட்டினார். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்த அடிலெய்ட் 999ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் நாள் இறந்தார்.


Friday 15 December 2017

அன்னை மரியா


அன்னை மரியா

           

          புனித பொனவெந்தூர் நமது நம்பிக்கையை கூர்மைப்படுத்தும் வகையில் இவ்வாறு கூறுகிறார். “மீட்பர் இயேசு கிறிஸ்து எனது அக்கிரமங்களினிமித்தம் என்னைப் புறக்கணித்துவிட்டால், நான் இரக்கம் மிகுந்த மரியாவின் பாதங்களில் சரணடைந்துவிடுவேன். எனக்கு இறைமன்னிப்பை மரியா பெற்றுத் தரும்வரை அதே நிலையில் வீழ்ந்துகிடப்பேன்”  என்கிறார். பெரிய பெரிய புனிதர்கள் உருவாக்கும் பணி உலகின் இறுதிவரை மரியன்னைக்கு முற்றிலும் உரித்தானது. ஒவ்வொரு புனிதர்களும் அன்னை துணையோடு தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து புனிதர்களாக மாறினார்கள். செபமாலை செபிக்கின்றவர்களிடம் அலகை நெருங்காது. புனித ஜான்போஸ்கோ, “நான் மரியாவைப் பார்க்காமல்கூட இருந்துவிடுவேன். ஆனால் செபமாலை சொல்லாமல் இருக்கமாட்டேன்”  என்று கூறியுள்ளார். புனித அம்புரோஸ், “மரியின் இனிய நாமம் எனது உள்ளத்தின் ஆழத்தில் மீட்பின் தைலமாக இறங்கட்டும்”  என்று செபித்தார்.

புனித லூசியா


        தூய்மையான உள்ளம் உடையோர் இறைவன் வாழும் ஆலயம் என்றுகூறி தூய்மைக்கு சான்றாக வாழ்ந்தவர். செல்வந்த குடுமம்பத்தில் பிறந்தவர். கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு அவரது ஏழ்மையை பின்பற்றி அவருக்காக தன் வாழ்வை அர்ப்பணம் செய்தவர். மறைசாட்சிகளின் வாழ்கையை கேட்டு தெரிந்துகொண்டவர். கிறிஸ்துவுக்காக எத்துன்பங்களையும் துணிவுடன் ஏற்றுக்கொண்டவரே புனித லூசியா. இவர் இத்தாலியில் சிராக்யுஸ் என்னும் இடத்தில் 283ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார்.

      செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தாலும் ஏழ்மையான வாழ்வை விரும்பினார். ஏழை எளிய மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். தனது பெரும் செல்வத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பதில் மகிழ்ச்சி அடைந்தார். தனது கற்பை கிறிஸ்துவுக்கு அர்ப்பணம் செய்து வாழ்ந்தார். இத்தருணத்தில் அவரது பெற்றோர் அவருக்கு ரிருமண ஏற்பாடு செய்தனர். லூசியா திருமணம் செய்து கொள்ள மறுத்தார். தனது இவ்வுலக வாழ்வு கிறிஸ்துவுக்கு மட்டுமே உரியது என்பதில் உறுதியுடன் இருந்தார்.
 

       லூசியாவின் விருப்பத்திற்கு மாறாக திருமண நிச்சயம் நடந்தது. இத்தருணத்தில் அவரது தாய் நோயுற்று படுக்கையானார். லூசியா தனது தாயை அழைத்துக் கொண்டு புனித ஆகத்தாம்மாள் கல்லறைக்கு சென்று வேண்டுதல் செய்தார். தாய் முழுமையாக குணம் அடைந்தார். லூசியாவின் தாய் அவரது விரும்பத்திற்கு இசைவு தெரிவித்தார். இவ்வாறு லூசியா தன் தாயின் அனுமதியுடன் தனது கற்பை கிறிஸ்துவுக்கு கையளித்தார். தனது பெரும் செல்வத்தை விற்று ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தார்.

       லூசியாவுக்கு நிச்சயம் செய்யப்பட்ட இளைஞன் கடும் கோபம் கொண்டான். கிறிஸ்தவ மக்களை துன்புறுத்திய டயோக்கிளிசியான் என்ற பேரரசனிடம் லூசியா கிறிஸ்தவள் என்று காட்டிக்கொடுத்தான். ஆளுநன் பஸ்காசியுஸ், லூசியாவை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தினான். லூசியாவை கொலைக் களத்திற்துக் கொண்டு செல்ல காவலர்கள் லூசியாவை இழுத்தார்கள். ஆனால் லூசியா இருந்த இடத்தைவிட்டு நகர முடியாமல் இறைவன் தடுத்து நிறுத்தினார்.

காவலர்களால் லூசியாவை கொலைக் களத்திற்கு அழைத்து செல்ல இயலவில்லை. ஆளுநனின் ஆணைப்படி லூசியாவை சுற்றிலும் விறகுக் கட்டைகளை அடுக்கி தீ மூட்டினார்கள். நெருப்பு லூசியாவை நெருங்கவில்லை. இறுதியாக 304ஆம் ஆண்டு லூசியாவை வாளுக்கு இரையாக்கினர். இவ்வாறு கிறிஸ்துவுக்காக லூசியா வீர மரணம் அடைந்தார்.

Thursday 14 December 2017

மரியா மன்னிப்பு பெற்று தருபவர்


         புனித பெர்னார்து, “மரியா பாவிகளின் ஏணிப்படி என்றும். இரக்கத்தின் அரசி மரியா, பாவச்சேற்றில் அமிழ்ந்துக் கிடப்போர்க்குத் தனது கரத்தை நீட்டி, பாவப் பாதாளத்தினின்று வெளியேறவும் இறைவனுடன் ஒப்புரவாகவும் உறுதுணையாய் இருக்கின்றார்” என்று கூறுகிறார். மேலும், “நோவேயின் காலத்தில் கடவுளின் கட்டளைப்படிக் கட்டப்பட்ட பேழையுடன் மரியாவை ஒப்பிடுகின்றார்.  நோவேயின் நாட்களில் ஜலப்பிரளயம் மனம்மாறாத பாவிகளை வாரிக்கொண்டுபோன போது, எவ்வாறு பேழையில் இடம் பெற்றிருந்த கொடிய விலங்குகள்கூடக் காப்பாற்றப்பட்டனவோ, அவ்வண்ணமே கொடிய பாவிகளுக்கும் மரியா இறை மன்னிப்பைப் பெற்றுத் தருகின்றார்” என்கிறார்.  

புனித மரிய கிராசிஃபிசா தி ரோசா


        துன்பப்படுகின்ற மக்களை பார்கின்றபோது அவர்களோடு நானும் துன்பப்படுகிறேன் என்றுகூறியவர். நோயாளிகளுக்கும், ஏழை மக்களுக்கும் உதவி செய்தார். இறைமக்கள் ஆன்மிக வாழ்வில் வளர்ச்சி அடைய வழிகாட்டினார். கைம்பெண்களுக்கு உதவியாக வாழ்ந்தவர். கிறிஸ்துவுக்கு தன்னை அர்ப்பணித்து நற்செய்தியை வாழ்வாக்கினார். அன்னை மரியாவை தன் தாயாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவரே புனித மரிய கிராசிஃபிசா தி ரோசா. இத்தாலி நாட்டில் 1813ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 6ஆம் நாள் செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் பவுலா ஃபிரான்செஸ்கா.


        பவுலா சிறுவயது முதல் இறைநம்பிக்கையில் வளர்ந்து வந்தார். தனது 10ஆம் வயதில் தாயை இழந்தார். குழந்தைப் பருவம் முதல் விசிட்டேசன் துறவற சபை அருட்சகோதரிகளின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.  நாளும் இறையன்பிலும் பிறரன்பிலும் சிறந்து விளங்கினார். பவுலாவுக்கு இவரது தந்தை திருமண ஏற்பாடு செய்தார்.  தந்தையிடம் தனது வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணித்து துறவற வாழ்வை தேர்ந்தெடுக்க விருப்பம் தெரிவித்தார். தந்தை துறவற வாழ்வு மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்தார். இத்தருணத்தில் பங்கு குருவானவரின் துணையோடு துறவற வாழ்வை தொடர தந்தையிடமிருந்து அனுமதி பெற்றார்.



    சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவினார். பிளேக் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார். இவரது தந்தை சொந்தமாக நூற்பு ஆலை வைத்திருந்தார். எண்ணற்ற மக்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்தார். தமது 27ஆம் வயதில் கபிரியல்லா போர்னாடி என்ற கைம்பெண்ணின் துணையுடன் கருணை சகோதரிகள் சபையை நிறுவினார். துறவற சபைக்கு திருத்தந்தையின் அனுமதி கிடைத்தது.  1840ஆம் சபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சகதுறவிகள் ஆன்மிக வாழ்வில் வளர்ச்சி அடைய வழிகாட்டினார். அன்னை மரியாவிடம் தன்னை ஒப்படைத்து அம்மா மரியே என்னை இறையன்பில் வழிநடத்தும் என்று செபித்து அன்னை அரவணைப்பில் வாழ்ந்துஸவந்தார். நற்கருணையின் முன்பாக தனது தேவைகளை எடுத்துரைத்தார். கிறிஸ்துவின் பிரசன்னத்தில் பாதங்கள் பதராமல் வாழ்ந்த பவுலா 42ஆம் வயதில் 1855ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் நாள் இயற்கை எய்தினார்.

Wednesday 13 December 2017

புனித சிலுவை யோவான்

               

      
              மனிதன் தன்னை இழந்தால் புனிதனாக முடியும். ஆம்! உலகத்துச் செல்வங்களை எல்லாம் ஒருங்கே தனதாக்கியப் பின்னும் வாழ்வில் அன்பும், அமைதியும் இழந்து தவிக்கும் மக்களைப் பார்த்து, நிலையற்றச் செல்வங்களைத் துறந்து, அழியாச் செல்வமாகிய இறைவனின் அன்பையும், அமைதியையும், அரவணைப்பையும் தனதாக்க நம்மை அழைப்பவரே புனித சிலுவை யோவான். 

          இவர் ஸ்பெயின் நாட்டில் 1542ஆம் ஆண்டு ஜøன் திங்கள் 24ஆம் நாள் பிறந்தார். தமது 16ஆம் வயதில் மருத்துவமனையில் தனது சேவையைத் தொடங்கினார். ஒய்வு நேரங்களில் மருத்துவமனைக்குச் சென்று வேலை செய்து தன் தாய்க்கு உதவினார். அன்னை மரியாவுக்குத் தன் வாழ்வை அர்ப்பணமாக்கி செபித்த தருணம் இறையழைத்தலை உணர்ந்தார். கார்மெல் சபையில் சேர்ந்து 1563ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் நாள் கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்ற வார்த்தைப்பாட்டின் வழியாக இறைவனுக்குத் தன்னை அர்ப்பணித்துத் துறவற வாழ்வைத் தொடங்கினார். 

       1567இல் குருவாக அருட்பொழிவு பெற்றார். இவர் ஆழ்ந்த இறைஞானம், தூய்மையான வாழ்க்கை, கனிவான பேச்சு, முதிர்ச்சியடைந்த உறவுகளில் சிறந்து விளங்கினார். மாணவர்கள் இறைவனின் அன்பிலும், பிறரன்பிலும் வளர வழிகாட்டினார். கார்மெல் சபையானது இறையனுபவத்தில் நவுற்றபோது அர்ப்பண வாழ்வில் முழுக்கவனம் செலுத்தினார். கார்மெல் சபையைப் புதுப்பிக்கத் திட்டம் வகுத்துத் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார். இதற்குத் திருத்தந்தை நான்காம் இன்னோசென்ட் அவர்கள் ஒப்புதல் அளித்தார். இறைவனின் அன்பும், அமைதியும் அனைவரும் பெற்றிட, தன்னலம் கருதாமல் மெய்வருத்தம் பாராமல் உழைத்த சிலுவை யோவான் 591ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 14ஆம் நாள் தமது 49ஆம் வயதில் இயற்கை எய்தினார்.  1726ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26ஆம் நாள் திருத்தந்தை 13ஆம் ஆசீர்வாதப்பர் புனிதர் பட்டம் வழங்கினார்.


Tuesday 12 December 2017

அன்னை மரியா அமைதி தருபவர்


       புனித வின்சென்ட் பெரர், “மரியன்னை என்றால் மதுரம், இனிமை” என்பதற்கு புனித பிரிஜித்தம்மாளின் வரலாற்றினின்று ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார்.  புனித பிரிஜித் அம்மாள் ஓர் குடும்பத் தலைவி. அவரது மகன் சார்லஸ் போர்வீரனாக இருந்த நிலையில் தீடீரென இறந்துவிட்டார். பிரிஜித், “இறுதி வேளையில் என் மகன் என்ன ஆன்ம நிலையில் இறந்தானோ” என்று கலங்கிப் பரிதவித்துக் கொண்டிருந்தார். இத்தருணத்தில் அன்னை மரியா பிரிஜித்துக்குக் காட்சியளித்து, “மகளே கலங்காதே. உன்மகன் இறக்கும் வேளையில் அவனுக்கு அருகில் இருந்தேன். அலகைகளின் கூட்டத்தை நான் நெருங்கவிடவில்லை. சார்லஸின் ஆன்மா அமைதியாக இறைவனிடம் சென்றது”  என்றுகூறி அன்னை மரியா பிரிஜித்தை அமைதிப்படுத்தினார். 

புனித ஜேன் பிரான்செஸ் தே சாந்தால்



          உங்கள் இருதயம் இயேசுவின் இருதயத்தைப் போல கனிவும் தாழ்ச்சியும், இளகிய மனமும் கொண்டதாக மாற வேண்டும். மேலும் அன்னை மரியாவைப் போல பிறரன்புச் சந்திப்பில் நீங்களும் வளர வேண்டும் என்று கூறிய புனித சலேசியாரின் வார்த்தையை இறுதிவரை கடைப்பிடித்து இறைபக்தி முயற்சியில் சிறந்து விளங்கிய புனித ஜேன் பிரான்செஸ் தே சாந்தால். பிரான்ஸ் நாட்டில் டிஜோன் என்னும் இடத்தில் 1572ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 28ஆம் நாள் பிறந்தார்.

        

       இவரது தந்தை பர்கன்டி பாராளுமன்றத்தில் தலைவராக பணியாற்றினார். தாய் சிறுவயதிலேயே இழந்தார். தனது 20ஆம் வயதில் பரோன் தே சாந்தால் என்பவரை திருமணம் செய்தார். கிறிஸ்தவ மதிப்பிடுகளுக்கு சான்றாக வாழ்ந்த ஜேன் ஆறு குழந்தைகளுக்கு தாயானார். ஜேன் தனது பிள்ளைகளுக்கு இறைநம்பிக்கையை அமுதாய் ஊட்டினார். பிள்ளைகள் நற்பண்பில் வளர வழிகாட்டினார். தன் கணவரையும் பிள்ளைகளையும் அன்பு செய்தார். குடும்ப வாழ்வில் அன்பும் அமைதியும் அனைவருக்கும் பகிர்ந்தளித்து மகிழ்ச்சியின் நிறைவில் வாழ்ந்த இத்தருணத்தில் கணவனையும் மூன்று பிள்ளைகளையும் இழந்தார்.

     

      தான் வாழ்ந்த அரண்மனையின் பொறுப்பேற்றார். பிள்ளைகளை இறைபராமரிப்பில் வழி நடத்தினார். மறுமணம் செய்து கொள்ளாமல் இறைவேண்டலில் ஈடுப்பட்டார். பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய செயல்களை செம்மையாக செய்தார். பிள்ளைகள் சிறந்த முறையில் கல்வி கற்பித்தார். இறைபக்தியில் வளர வழிகாட்டினார். இடைவிடாமல் இறைவேண்டுதல் செய்த ஜேனை ஒருநாள் இறைவன் சந்தித்தார். இறைவன் ஒர் ஆன்ம குருவை ஜேனிற்குக் காட்டினார். மேலும் உனக்காக ஒதுக்கி வைத்திருக்கிறேன் என்று கூறினார். இத்தருணத்தில் தான் புனித பிரான்சிஸ் சலேசியாரை சந்தித்தார்.


           

       1604ஆம் ஆண்டு டிஜோன் சென்றார். புனித சலேசியாரின் மறையுரையைக் கேட்டார். அவரோடு உரையாடினார். அவரின் வழிகாட்டுதலால் செல்வ செழிப்பான வாழ்வை துறந்து துறவற வாழ்வை மேற்கொண்டார். இறைவனுக்காக தன்னை அர்ப்பணம் செய்தார். தனது பிள்ளைகளை தனது சகோதரரின் பொறுப்பில் ஒப்படைத்து துறவு மேற்கொண்டார். அவ்வாறு 1610ஆம் ஆண்டு புனித பிரான்சிஸ் சலேசியாரின் கரங்களிலிருந்து துறவு வாழ்கைக்கு தேவையான விதிமுறைகளை பெற்றுக்கொண்டார். விசிட்டேசன் சபை உருவானது. இறைவனுக்கு உகந்த முறையில் வாழ்ந்த ஜேன் 1641ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13ஆம் நாள் இறந்தார். திருத்தந்தை 13ஆம் கிளமண்ட் 1767ஆம் ஆண்டு ஜøலை 16ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.

Monday 11 December 2017

அன்னையின் வழியில்


         
            அன்னையின் கரங்களில் தன்னை அர்ப்பணம் செய்து அவரது கரம்பற்றி அவரின் வழியில் நடந்த அனைவரும் புனிதர்களாய் மாறினர். ஒருவர் புனிதராய் மாறவிரும்பினால் அன்னை மரியின் கரங்களில் தன்னை அர்ப்பணம் செய்ய வேண்டும். அன்னை சொல்வதை செய்ய வேண்டும். அப்போது நாம் புனிதராய் மாறமுடியும். புனித லயோலா இஞ்ஞாசியார் தமது 26வது வயதில் 1521ஆம் ஆண்டு பம்பலூனா கோட்டையைப் பிரெஞ்சு நாட்டவரிடமிருந்து காப்பாற்ற நடந்த போரில், எதிரியின் பீரங்கிக்குண்டு ஒன்று இஞ்ஞாசியாரின் வலது காலில் பாய்ந்து எலும்பு ஒடிந்தது.


         இஞ்ஞாசியார் மருத்துவ சிகிச்சைப்பெற்று ஓய்வு எடுத்த பொழுது, ஒருநாள் மாலை வேளையில் குழந்தை இயேசுவைக் கரங்களில் ஏந்தியவாறு அன்னை மரியா அவருக்கு காட்சிக்கொடுத்தார். அத்தருணத்தில் அவரது உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது. தனது கடந்தகால வாழ்வில் தூய்மைக்கு எதிராகச் செய்த பாவங்களை ஆராய்ந்து பொது ஒப்புரவு செய்தார். “இறைவனுக்கும் திருச்சபைக்கும் நம்பிக்கையின் வீரனாக வாழ்வேன்” என்று உறுதிகொண்டார். அதன் அடையாளமாக படைவீரருக்குரிய ஆயுதங்களை அன்னையின் பாதத்தில் அôóப்பணித்தாôó. தனது ஆடைகளை ஒரு பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டு, அன்னை மரியாவின் கரம்பிடித்து அன்னையின் வழியில் நடந்து புனிதராக மாறினார்.

புனித தமாசுஸ்


        திருச்சபையில் பிளவுகள் குழப்பங்கள் நிலவியத் தருணத்தில் இறைமக்கள் கத்தோலிக்க விசுவாசத்தில் நிலைத்து நிற்க வழிகாட்டியவர். தனது உடல் உள்ளம் ஆன்மா கறைப்படாமல் என்றும் தூய்மையில் வாழ்ந்தார். தனது வாழ்வின் இறுதி மூச்சுவரை கிறிஸ்துவின் இறையாட்சி பணிக்காக ஆர்முடன் உழைத்தவர். கிறஸ்துவின் ஏழ்மையையும், அன்னை மரியாவின் தாழ்ச்சியை தனதாக்கி கற்புநெறியில் சிறந்து வாழ்ந்தவரே புனித தமாசுஸ்.

         தமாசுஸ் உரோம் நகரில் 304ஆம் ஆண்டு பிறந்தார். குழந்தைப்பருவம் முதல் இறைநம்பிக்கையில் சிறந்து விளங்கினார். தலைமை திருத்தொண்டராக இறைபணி செய்தார். 367ஆம் ஆண்டு திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொலினாரிஸ் என்பவரின் தவறான கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். புனித ஜெரோம் இவரின் செயலாளராக பணியாற்றினார்.

          தமாசுஸ் வழிகாட்டுதலால் ஜெரோம் விவிலியத்தை மொழிபெயர்த்தார். இறைமக்கள் அனைவரும் கிறிஸ்துவுக்கு நற்சான்று பகர வழிகாட்டினார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டார். திருச்சபையை  வழிநடத்த அன்னை மரியாவின் துணையை ஒவ்வொரு நிமிடமும் நாடினார். அன்னையின் தாழ்ச்சியைப் பின்பற்றினார். ஏழைகள்மீது மிகுந்த அன்பு செலுத்தினார். சமூகத்தில் பின்தள்ளபப்பட்ட மக்களின் நலனுக்காக அரும்பாடுப்பட்டார்.
     
        ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்தார். இறைமக்கள் இறைபக்தியில் நாளும் வளர வழிகாட்டினார். தனக்கு எதிராக குற்றம் செய்தவர்களை பாசத்துடன் மன்னித்து அன்பு செய்தார். இறைத்தந்தையும் இயேசு கிறிஸ்துவும் ஒரே இறையியல் கொண்டவர்கள் என்று கூறிய ஆரியுஸ் தப்பறைக்கு எதிராக குரல் கொடுத்தார். உரோமைப் பழமைவாய்ந்த வரலாறுகளை பாதுகாக்க வரலாற்று காப்பகம் அமைத்தார். மறைசாட்சிகள் இடங்களை பாதுகாத்தார். கன்னித்தன்மை குறித்து எண்ணற்ற உரைநடை மற்றும் கவிதைகள் எழுதினார். கன்னித் தன்மையை தனது வாழ்வில் பின்பற்றிய தாமசுஸ் 384ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து விண்ணக வாழ்வில் நுழைந்தார்.

Sunday 10 December 2017

அன்னையின் அருளால் பாவத்தை வெல்வோம்


 

இறைமக்கள் தங்களின் பாவத்தை வென்று தூய்மையில் ஒவ்வொரு நாளும் முன்னேற நற்பண்புகளின் முன்மாதிரியாக மிளிரும் மரியாவை நோக்கித் தம் கண்களை உயர்த்த வேண்டும். பாவத்தை வென்று தூய்மை நிலையில் முன்னேற செபமாலை என்ற ஆயுதத்தை கரங்களில் எடுக்க வேண்டும். கிறிஸ்துவின் வாழ்க்கை நிகழ்வுகளைத் தியானித்து கிறிஸ்துவின் அருளை அன்னையின் வழியாகப் பெற்றுக்கொள்வோ. புனித தாமசின் அருளப்பர்,“மரியா இல்லாத சூழலில் நோயுற்றோர் கண்ணீரால் தம் படுக்கையை நனைக்கின்றனர். எனவே இத்தகைய அவலநிலை நீங்க வேண்டுமாயின் மரியன்னையைக் கூப்பிடு” என்கிறார். 




புனித யுலாலியா


      தனது உடல் பொருள் ஆவி அனைத்தும் கிறிஸ்துவுக்காக அர்ப்பணம் செய்தவர். உடலை மட்டும் கொல்லக்கூடிய மனிதர்களைப் பயப்படாமல் ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் தள்ளக்கூடிய இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்தவர். இடைவிடாமல் இறைபிரசன்னத்தில் வாழ்ந்தவர். தன்னை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து வாழ்ந்தவரே புனித யுலாலியா.

    யுலாலியா 304ஆம் வண்டு ஸ்பெயின் நாட்டில் பிறந்தார். சிறுவயது முதல் அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். தன் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அன்னை மரியாவின் துணை நாடினார். கிறிஸ்துவின்மீது கொண்ட அன்பினால் இறைவார்த்தையை வாழ்வாக்கி சான்று பகர்ந்தார். இத்தருணத்தில் டயோக்கிளேசியன் என்ற பேரரசர் கிறிஸ்தவ மக்களை கொடுமைப்படுத்தி துன்புறுத்தினான். கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு அவரைப் பின்பற்றி, இறைவார்த்தையை வாழ்வாக்கி சான்று பகர்ந்த யுலாலியாவை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தினான். 

    பேரரசன் வணங்கும் கடவுளுக்குப் பலியிட்டு வணங்குமாறு யுலாலியாவை வற்புறுத்தி கட்டளையிட்டான். யுலாலியா, “நான் கிறிஸ்தவள். கிறிஸ்துவுக்காக என் வாழ்வை அர்ப்பணம் செய்துள்ளேன். நீ வழிபடும் கடவுளை வணங்கமாட்டேன்.  ஆண்டவராகியா இயேசு கிறிஸ்துவே உயிருள்ள ஒரே கடவுள் அவரை ஒருவரை மட்டுமே வணங்கி ஆராதிப்பேன். என் உடல்மீது உனக்கு அதிகாரம் இருக்கலாம். ஆனால் என் ஆன்மாவோ கடவுளுக்கு மட்டுமே சொந்தமானது” என்று கூறினார். கோபம் அடைந்த அரசன் யுலாலியாவை சந்தை கூடும் இடத்திற்கு இழுத்துச் சென்று தடியால் அடித்து நெருப்பிலிட்டு எரித்துக் கொலை செய்யுமாறு தீர்ப்பிட்டான். யுலாலியாவின் இறப்பைப் பார்த்த எண்ணற்ற மக்கள் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை வைத்தனர். 

Saturday 9 December 2017

அன்னை மரியா ஓர் அருளோவியம்


 
            “மரியா இல்லாத சூழலில் நோயுற்றோர் கண்ணீரால் தம் படுக்கையை நனைக்கின்றனர். எனவே இத்தகைய அவலநிலை நீங்க வேண்டுமாயின் மரியன்னையைக் கூப்பிடு” என்கிறார் புனித தாமசின் அருளப்பர். அன்னை மரியா ஓர் அருளோவியம்; மாசணுகாதவர்; அன்பின் உறைவிடம்; தாழ்ச்சியின் சிகரம்; விண்ணகத்தின் வாசல்; விண்ணக மண்ணக அரசி; அமல உற்பவி; இறைவனின் தாய்; விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்டவர்; உடன்படிக்கையின்பேழை எனப்பலவாறு அழைக்கிப்படுகின்றார்.

         

             புனித கிறிசோஸ்தம் அருளப்பர், “கடவுளின் அன்னையும் எங்களின் அன்னையுமான மரியே நீர் வாழ்க; விண்ணகத்தில் வீற்றிருப்பவரும் அரியணையினின்று அருள்வளங்களை வாரி இறைப்பவருமான இறை இயேசுவிடம், மரியே எமக்காகப் பரிந்துபேசி, நாங்கள் இறுதிநாள் தீர்ப்பில் மாட்டிக் கொள்ளாதிருக்கவும், இறைவனை முகமுகமாகத் தரிசிக்க வரமும் பெற்றுத்தாரும்”  என்று செபித்தார். 

புனித பேதுரு ஃபோரியர்


          குருத்துவ அருள்பொழிவு பெற்று உத்தம துறவியாக வாழ்ந்தவர். தன்மீது குற்றம் சுமத்தியவர் மனம் காயப்படக்கூடாது என்று நினைத்து அமைதி காத்தவர். இறையன்பின் பணியாளராக இறையாட்சி பணி செய்தவர். தன்னலம் பாராமல் தன்நலன்களை மறந்து அயலானின் ஆன்மீக முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தவரே புனித பேதுரு ஃபோரியர். ஃபோரியர் இறைஞானம் பெற்று அறிவில் சிறந்து விளங்கினார். உலக இன்பங்களை துறந்து உத்தம துறவியாக வாழ்ந்து கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்தார். 
            


       தனது 24ஆம் வயதில் குருவாக அருள்பொழிவு பெற்று சீரும் சிறப்புமாக பணியாற்றினார். இறைமக்கள் ஆன்மிக வாழ்விலும் பொருளாதார வாழ்விலும் வளர்ச்சி அடைய அயராது உழைத்தார். தனது வாழ்வின் பெரும்பகுதியை நற்செய்தி அறிவிக்கவே செலவிட்டார். கிறிஸ்துவை அறிவிக்க தனது உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்தார். கிறிஸ்தவ புண்ணியங்களை பின்பற்றினார். செப வாழ்வில் அனைவருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்தார். அன்னை மரியாவிடம் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். செபமாலை செபிக்க அனைவரையும் ஊக்கப்படுத்தினார். 
         


          குழந்தைகளை அன்பு செய்தார். இலவசமாக அனைவருக்கும் கல்வி வழங்கினார். பிளேக் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார். இறைமக்கள் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொள்ள அயராது உழைத்தார். இரவு நேரங்களில் கண்விழித்து செபித்தார். இறைமக்களின் பாவங்களுக்காகவும் தவ ஒறுத்தல்கள் செய்தார். அருளாளர் அலிக்ஸ் லே கிளர்க் என்பவருடன் இணைந்து மீட்பரின் துறவற சபையை ஏற்படுத்தினார். இறைவனின் இரக்கத்தில் வாழ்ந்த ஃபோரியர் 1640ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9ஆம் நாள் இறந்தார். திருத்தந்தை 13ஆம் சிங்கராயர் 1897ஆம் ஆண்டு மே திங்கள் 27ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.   

Friday 8 December 2017

அன்னை மரியா

         

அமல உற்பவ அன்னை மரியா


            பெர்னதெத்தின் தனது தங்கை மேரி, அண்டை வீட்டுப் பெண் ஜோன்  ஆகியோருடன் சேர்ந்து விறகு சேகரிக்க கேவ் ஆற்றங்கரைப் பகுதிக்குச் சென்றார். அப்பகுதியில் தண்ணீர் குகை இருந்தது. அது மசபியேல் குகை எனப்பட்டது. தண்ணீர் குகையைக் கடந்து செல்ல வேண்டும். மேரி, ஜோன்  தண்ணீர் குகையை எளிதில் கடந்தனர். பெர்னதெத் குளிரால் தண்ணீரில் கால் வைக்கத் தயங்கி நின்றார். அப்போது பலமான காற்று வீசியது சுற்றிலும் பார்த்தார்.
       
    

             அருகிருந்த குகையில் ஓர் அற்புதமான காட்சியைக் கண்டார். “அமல உற்பவியான அன்னை மரியா, எழில் மிக்க ஓர் இளம் பெண்ணாகத் தோற்றமளித்தார். அன்னை மரியின் முகம் விண்ணக ஒளியினால் பிரகாசித்தது. நீண்ட வெள்ளைநிற ஆடையணிந்து, இடையில் நீலநிற இடைக்கச்சைக் கட்டியிருந்தார். பாதங்கள் மஞ்சள் நிற ரோஜா மலர்களால் அழகு செய்யப்பட்டிருந்தன. கரத்தில் செபமாலை தொங்கியது. அன்னை மரியா பெர்னதெத்தை தன்னுடன் சேர்ந்த்து செபமாலை செபிக்க அழைத்தார்”.  சிறிது நேரத்திற்குப் பின்னர் அன்னை மரியா மறைந்தார். இவ்வாறு பல நாட்கள் தோன்றினார்.  பெர்னதெத் தான் கண்ட காட்சியை வீட்டில் சென்று தன் தாயிடம் கூறினார். “அம்மா! அந்த அழகான சீமாட்டியைப் பார்த்துக் கொண்டே  இருக்க விழைகின்றேன்.  அவர் யார் என்று தெரியவில்லை” என்றார். தாய், “இது எல்லாம் அலகையின் தந்திரம். இனி நீ அங்குச் செல்லக் கூடாது”என்றார். மீண்டும் விறகு சேகரிக்கச் சென்ற பெர்னதெத், அன்னை மரியாவைத் தரிசித்தார். இந்த செய்தியைக் கேட்ட சிலர் நம்பினார்கள். பலர் ஏளனமாகப் பேசினர். திரளானோர் அவருடன் அன்னையைத் தரிசிக்கச் சென்றார்கள். 

          

            பலமுறை மகிழ்ச்சியோடு காட்சியளித்த அன்னை மரியா, ஒரு நாள் முகத்தில் பெரும் துயரத்துடன் காணப்பட்டார். பெர்னதெத், “அம்மா! ஏன் இன்று வருத்தமாக இருக்கின்றீர்கள்” என்றார். “மகளே! உலகில் எண்ணற்ற மக்கள் கடவுளைப் புறக்கணித்து பாவம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் மனம் மாற நீ செபமாலை செபிக்க வேண்டும்” என்றார். மற்றொரு நாள், “தவம்! தவம்! தவம்!” என்று அன்னை கூறினார். அன்னையின் அறிவுரைக்கேற்ப, “பாவிகள் மனம்மாற செபமாலை செபிக்கவும், தவ முயற்சிகள் செய்வேன்” என்று உறுதிகொண்டார். இதைக் கேள்விப்பட்ட சபைத் தலைவர்கள், காவலர்கள் பெர்னதெத்தைக் குகைக்குச் செல்ல தடை விதித்தனர். பெர்னதெத்தின் தந்தை தன் மகள் இறையொளியால் வழி நடத்தப்படுகிறார் என்பதை உணர்ந்து குகைக்குச் செல்ல அனுமதித்தார்.

   பங்கு குருவானவர், “நீ அவர்களிடம் பெயர் என்ன? என்று கேள்” என்றார். 1858, ஜøலை 16ஆம் தேதிக்குள் மொத்தம் 18 முறை பெர்னதெத்திற்குக் காட்சி தந்தார். அன்னை மரியாவிடம், “நீங்கள் யார்? உங்கள் பெயர் என்னவென்று சொல்வீர்களா?” என்றார். 16வது காட்சியின் போது அன்னை மரியாள், “நாமே அமல உற்பவம், அதாவது நான் சென்மப் பாவமில்லாமல் உற்பவித்தவள்” என்று கூறி மறைந்தார். அங்கு அற்புதமான நீரூற்றும் உருவாயிற்று. அந்த நீரைப் பருகியோர் நோயிருந்து விடுதலை பெற்றனர். இப்புதுமையான காட்சி பற்றிய தகவல் எங்கும் பரவியதும். நான்கு திசையில் இருந்து மக்கள் அலையெனத் திரண்டு லூர்துநகர் நோக்கிவர ஆரம்பித்தார்கள். அன்னை மரியாமீது அளவு கடந்தப் பக்தி வளரத் தொடங்கியதால் இது குறித்து ஆராய்வதற்காகத் தார்பஸ் மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் ஒரு குழுவை ஏற்படுத்தினார்.

     

            பலதரப்பட்ட மக்களை நான்கு ஆண்டுகள் விசாரித்த அக்குழு தமது அறிக்கையை ஆயரிடம் கொடுத்தார்கள். அறிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆயர் லாரன்ஸ் 1862ஆம் ஆண்டு, “பெர்னதெத் குகையில் கண்ட அனைத்தும் முற்றிலும் உண்மையே. மேலும் அவள் குகையில் கண்ட பெண்மணி பிரகடனப் படுத்தியது அது வேறுயாருமல்ல, அது கன்னி மரியே” என்று உறுதிப்படுத்தினார். பல நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் அங்கு ஆலயம் கட்டப்பட்டது. “மிகவும் பேறுபெற்ற கன்னிமரியா கருவான முதல் நொடியிருந்தே, எல்லாம் வல்ல இறைவனுடைய தனிப்பட்ட அருளாலும், சலுகையாலும் மனித குலத்தின் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களை முன்னிட்டுச் சென்மப் பாவத்தின் எல்லாக் கறையினின்றும் விடுவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டார். இக்கோட்பாடு இறைவனால் வெளிப்படுத்தப்பட்டதாகும். எனவே, இது எல்லா விசுவாசிகளாலும், உறுதியாக இடைவிடாது விசுவசிக்கப்பட வேண்டும் என்பதை நாம் அறிக்கையிடுகிறோம், அறிவிக்கிறோம், வரையறுக்கிறோம்” என்று திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் 1854ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 8ஆம் நாள் அறிவித்தது முற்றிலும் உண்மையே.  

Wednesday 6 December 2017

குவாதலூப்பே அன்னை

மெக்சிகோ நகரில் 1531ஆம் ஆண்டு அன்னை மரியா தன்னை ஏழை விவசாயி யுவான் தியெகோவிற்கு வெளிப்படுத்தினார். யுவான் தியெகோ தனது மாமா பெர்னார்தினோ, திடீரென நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தார். அவருக்கு நோயில்பூசுதல் வழங்க குருவானவரை அழைத்துவர தேபியாக் குன்றின் அடியில் இருந்த சாலை வழியாக நடந்துக் கொண்டிருந்தார். இத்தருணத்தில் அன்னை மரியா அவருக்கு காட்சி கொடுத்தார். குன்றின் உச்சியில் சூரியனைப் போன்ற பிரகாசமான ஒளியின் நடுவில் அன்னை மரியா தோன்றி, அவரை குன்றின் உச்சியில் ஏறிவருமாறு அழைத்தார். விண்ணக ஒளியின் மத்தியில் அன்னை மரியா நின்றிருந்தார். யுவான் தியெகோவிடம் குன்றின்மீது ஆலயம் கட்ட ஆயரிடம் தெரிவிக்குமாறு கூறினார். தியெகோவும், ஆயரிடம் சென்று அன்னையின் விருப்பத்தைக் கூறினார். அப்போது ஆயர் அடையாளம் கேட்டார்.  யுவான் தியெகோ அன்னை மரியாவிடம் ஆயரின் மறுமொழியைக் கூறினார்.




         
            யுவான் தியெகோவிடம் உனது மாமா நோயிலிருந்து குணம் அடைவார், இறக்கமாட்டார். எனவே நான் உனக்கு மூன்று முறை காட்சி தந்த குன்றின்மீது பூத்துக்குலுங்கி இருக்கும் மலர்களைப் பறித்துக்கொண்டு வருமாறு கூறினார்
. பாறைகள் நிறைந்த குன்றின்மீது பூக்கள் மலர வாய்ப்பில்லை என்று தெரிந்தும் நம்பிக்கையுடன் குன்றின்மீது ஏறினார். அற்புதமான முறையில் மலர்ந்திருந்த மலர்களைப் பறித்து தனது மேற்போர்வையில் பொதிந்து அன்னையிடம் கொண்டு வந்தார். அன்னை மரியா அவற்றை ஆயரிடம் கொண்டு கொடுக்கக் கூறினார். ஆயர் நம்பும் அடையாளம் இதுவே. தியெகோ ஆயரிடம் சென்று தனது மேற்போர்வையைத் திறந்து காண்பித்தார். அப்போது மலர்கள் கீழே விழுந்தது, மேற்போர்வையில் அழகான அன்னை மரியாவின் திருவுருவம் பதிந்திருந்தது. ஆயரும் நம்பினார். இங்கு ஆலயம் கட்டப்பட்டது. இவ்வாலய அன்னை குவாதலூப்பே அன்னை என்று அழைக்கப்படுகிறார். 


புனித ஜெத்ரூத்

     
             உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக இடைவிடாமல் இறைவனிடம் மன்றாடியவர். இறைவழிபாடு என்பது செபவாழ்வின் அடித்தளம் என்றுகூறி இடைவிடாமல் இறைவனை மாட்சிமைப் படுத்தியவர். 
கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பினால் துன்பங்களை மகிழ்வுடன் தாங்கிக்கொண்டவர். இவர் ஜெர்மனியில் 1256ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் நாள் பிறந்தார்.

             ஐந்து வயதுமுதல் துறவு இல்லத்தில் வாழ்ந்தார். சிறுவயது முதல் துறவு இல்லத்தின் ஒழுங்குமுறைகளை கடைப்பிடித்து வாழ்ந்தார். இலக்கியம், மெய்யியல் ஆகியவற்றை திறம்பட கற்றுத்தேர்ந்தார்.  இறைவனுக்கு தன்னை முற்றிலுமாக அர்ப்பணம் செய்து துறவற வாழ்வை தேர்ந்தெடுத்தார். இறையன்பு, இறைஞானம், சகோதர அன்பு, இறைபக்கி மற்றும் நற்பண்பு களில் நாளும் சிறந்து விளங்கினர். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். 
           

            ஒவ்வொரு நிமிடமும் அன்னை மரியாவின் பாதுகாப்பும் அரவணைப்பும் பெற்று இறையுறவில் வளர்ந்து வந்தார். இறைவார்த்தையை நாளும் தியானித்தார். வார்த்தையான கிறிஸ்துவிடமிருந்து ஞானத்தை பெற்றுக்கொண்டார். ஒவ்வொரு நாளும் நற்கருணை முன்பாக பலமணிநேரம்  காத்திருந்தார். இவருடை சொற்களை கேட்போர் இறையன்பால் ஈர்க்கப்பட்டனர். ஏழை எளியவர், உயர்ந்தோர் தாழ்ந்தோர், படித்தவர் படிக்காதோர், பணக்காரர் பாமரர் என்ற வேறுபாடு இல்லால் அனைவரிடத்திலும் நட்புடன் பழகினார். 

         
ஒருமுறை இயேசு, ஜெத்ரூத்க்கு காட்சி அளித்து “இயேசு, மரியா, சூசை என்று ஒருமுறை செபிக்கின்றபோது உத்தரிக்கிற ஒரு ஆன்மா மீட்புபெறும்” என்று கூறினார். தனது வாழ்வின் பெரும் பகுதியை உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக வேண்டுதல் செய்து நிலைவாழ்வு பெற்றுக்கொள்ள வழிகாட்டிவர். ஜெத்ரூத் 1302ஆம் ஆண்டு மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து விண்ணக வாழ்வில் நுழைந்தார். இவர் பயணிகளின் பாதுகாவலர்.

Tuesday 5 December 2017

புனித ஆக்னஸ்

       இறையன்பு, தூய்மை, பொறுமை ஆகிய பண்புகளைத் தனதாக்கி அறநெறி ஒழுக்கத்தில் சாலச்சிறந்தவர். இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்று விசுவசித்து, எனது கன்னிமை இறைவனுக்கே சொந்தம் என்றுகூறி இறையன்பின் சுடராகத் திகழ்ந்தவரே புனித ஆக்னஸ். இவர் உரோமை நகரில் பட்ரீசியன் என்ற உயர்குலத்தில் கி.பி. 291இல் பிறந்தார். ஆக்னஸ் என்றால் தூய்மை அல்லது புனிதம் என்பது பொருள்.


         ஆக்னஸிடம், புல்வியன் தன்னை ஏற்கும்படி கட்டாயப்படுத்தினான். மீறினால் நீ கிறிஸ்தவள் என்று காட்டிக்கொடுப்பேன் என்றான். ஆக்னஸ் புல்வியனிடம், “எனது அன்பு, ஆசைகள் அனைத்தும் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவுக்கே உரியவை. அவர் ஒருவரே என் முழு அன்பிற்கும் சொந்தக்காரர் ஆவார்” என்றார். புல்வியனின் விருப்பத்திற்கு இணங்காத ஆக்னûஸ கிறிஸ்தவள் என்று உரோமை அதிகாரி செம்ப்ரோனியன் என்பவரிடம் காட்டிக்கொடுத்தான். ஆக்னஸ் கிறிஸ்துவைப் பின்பற்றிய காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டார்.


     ஆக்னஸின் கன்னிமையைக் களங்கப்படுத்த, விலைமாதர் இல்லத்திற்கு கொண்டு செல்லுமாறும், யாரும் இவரைக் கறைபடுத்தலாம் என்றும் என்றுகூறி விலைமாதர் அறையில் அடைத்தனர். அங்கு தீய இளைஞர்கள் அவரை அணுக முயன்றும் அவர்களால் முடியாமற்போயிற்று. ஆக்னஸ், “உனது வாளினால் என் இரத்தக்கறை படிந்தாலும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணமான எனது உடலை கறைப்படுத்த முடியாது” என்றார். எப்போதும் கூடவே காவலாய் இருக்கும் காவல்தூதர் ஆக்னûஸத் தீமையிலிருந்து காப்பாற்றினார்.




    அரசன், கிறிஸ்தவ மறையை விட்டுவிடு உரோமைக் கடவுளது கோவில் இருக்கும் சிலையை வணங்கி, அதற்கு தூபம் காட்டுமாறு கூறினான். ஆக்னஸ், “என் உயிரே போனாலும் நான் இதைச் செய்யமாட்டேன். எனது உடலும் ஆன்மாவும் என்றும் உள்ள இறைவனுக்கே” என்று கூறினார். இதைக்கேட்ட அரசன், “ஆக்னஸ் நமது குலதெய்வத்தை வணங்க மறுத்ததால் அவள் தலையை வெட்டி கொலை செய்ய ஆணையிடுகிறேன்” என்று சாவின் தீர்ப்பைக் கூறினான். இறைவனுக்காக தனது கன்னிமையைக் காத்துக்கொண்ட ஆக்னஸ் 304ஆம் ஆண்டு, ஜனவரி 21ஆம் நாள் மரணம் வழியாக இறைவனின் திருப்பாதம் சேர்ந்தார். ஆக்னஸின் உடல் இன்றும் அழியாமல் இருக்கின்றது. இவரது திருநாள் ஜனவரி 21, திருமணம் நிச்சயமானவர்களின் பாதுகாவலர்.  


Monday 4 December 2017

புனித யோவான் டமாசின்


           கிறிஸ்துவின் விழுமியங்களான அன்பு, அமைதி, பொறுமை, நேர்மை, உண்மை, நீதி, மன்னித்தல் போன்ற விழுமியங்களுக்கு சான்றாக வாழ்ந்தவர். செல்வச் செழிப்பில் வாழ்வதற்கான வசதிகளை துறந்து கிறிஸ்துவின் ஏழ்மையை தனதாக்கியவர். இஸ்லாமியா பெற்றோருக்கு பிறந்து கிறஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டவரே புனித யோவான் டமாசின். இவர் 650ஆம் ஆண்டு அராபியா நாட்டில் பிறந்தார்.

       இவரது தந்தை கருவூல அதிகாரியாக பணி செய்தார். கிறிஸ்தவ மக்களை அடிமை வாழ்விலிருந்தது விடுவித்தார். டமாசின் தந்தையின் வழிகாட்டுதலால் அறிவில் சிறந்து விளங்கினார். இசை, வானியல், இறையியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். தத்துவஞானி யூக்ளிட் என்பவருக்கு இணையான அளவுக்கு அறிவில் சிறந்து விளங்கினார். தந்தையின் மறைவுக்குப் பின் தமஸ்கு நகரின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றார்.


          மூன்றாம் சிங்கராயர் 726இல் திருவுருவ வழிபாட்டற்கும், பொது இடங்களில் திருவுருவங்களை நிறுவுவதற்கு தடைவித்தார். கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிராக பேசியவர்களை கண்டித்தார். அவற்றிற்கு எதிராக நூல்கள் வழியாக குரல் கொடுத்தார். இவரது செயலை விரும்பாத இஸ்லாமிய சமூகத்தின் தலைவர் காலிஃப் என்பவர் இவரது வலது கையை வெட்டினார். கரம் வெட்டப்பட்ட நிலையில் அன்னை மரியாவிடம் வேண்டுதல் செய்தார். புதுமையாக வெட்டுண்ட கை அவரது உடலுடன் இணைந்தது.
         யோவான் டமாசின் திருமுழுக்கு பெற்று ஆலோசகர் பதவியை துறந்து துறவு மேற்கொண்டார். பின் குருத்துவ பயிற்சி பெற்று குருவாக அருள்பொழிவு பெற்றார். தனது போதனையால், எழுத்தாற்றல் திறமையைப் பயன்படுத்தி கிறிஸ்துவின் அன்பை அறிவித்தார். இறைவனை அளவில்லாமல் அன்பு செய்த டமாசின் 749ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். 1883ஆம் ஆண்டு திருத்தந்தை 13ஆம் சிங்கராயர் திருச்சபையின் மறைவல்லுநராக அறிவித்தார்.


Sunday 3 December 2017

புனித பிரான்சிஸ் சவேரியார்


        ஒரு மனிதன் இறையன்பால் உருமாற்றம் பெறும் போது அது அவரோடு நின்றுவிடாமல் பிறரது வாழ்வையும் அந்நிலைக்குக் கொண்டு வருவதே உண்மையான மனமாற்றம் என்ற  தத்துவத்தை கற்றுக்கொடுத்த மாபெரும் உத்தமர். புதிய வரலாறு படைத்தவர். நாளும் நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கின்றவர். கீழ்த்திசை நாடுகளில் இயேசுவின் நற்செய்தியை அறிவித்து, இறையன்பினால் தமது வாழ்வைக் கட்டியெழுப்பியவரே பார்போற்றும் புனித பிரான்சிஸ் சவேரியார். இவர் ஸ்பெயின் நாட்டில் நவரா என்னுமிடத்தில் சவேரியார் கோட்டையில் 1506ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் நாள் பிறந்தார்.

        பிரான்சிஸ் சவேரியார் பார்போற்றும் பாரிஸ் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். இங்குதான் புனித இலெயோலா இஞ்ஞாசியார் சவேரியாரை சந்தித்தார். சவேரியார் உலக நாட்டங்களில் மூழ்கி, ஆடம்பர வாழ்ந்தார். இஞ்ஞாசியார் இவருக்குப் பலவிதமான உதவிகளைச் செய்தார். சவேரியார் இஞ்ஞாசியாரின் உண்மையான அன்பை உணர்ந்து அவருடன் நெருங்கிப்பழகினார். இத்தருணத்தில் இலெயோலா இஞ்ஞாசியார் பிரான்சிஸ் சவேரியாரை நோக்கி, “மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?”(மத் 16:26) என்ற இறைவார்த்தையைக் கூறினார். இஞ்ஞாசியாரின் அறிவுரைக்கேற்ப சவேரியார் இயேசுவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு முற்றிலும் புதிய மனிதனாக, புனிதராகவே மாறினார்.

     பிரான்சிஸ் சவேரியாரின் எண்ணங்கள், ஏக்கங்கள், கவலைகள் அனைத்தும் ஆன்மாக்களின் தாகமே.  “ஆண்டவரே எனக்கு ஆன்மாக்களைத் தாரும். மற்றவை அனைத்தையும் என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளும்” என அடிக்கடி செபித்தார். ஆன்ம தாகத்தோடு பணியாற்றியதால் மக்களின் இதயங்களில் இறையாட்சி மலர்ந்தது. மக்கள் முழுநம்பிக்கையுடன் அருட்சாதனங்களைப் பெற்றுக்கொண்டார்கள். ஆலயங்களில் மக்களின் வருகை அதிகரித்து. கிறிஸ்துவை அறிவித்து இறையரசை கட்டியெழுப்பினார். தனது சிந்தனை, சொல், செயல்கள் வழியாக கிறிஸ்துவை அறிவித்தார்
           இந்தியாவிலும், கிழக்காசிய நாடுகளிலும் மக்களின் இதயத்தில் நம்பிக்கை தீபம் ஏற்றினார். பத்து ஆண்டுகளில் சிறிதும், பெரிதுமாக ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் இறைநம்பிக்கையின் தீபத்தை ஏற்ற கடல் பயணமும், கால்நடைப் பயணமும் செய்தார். இவருக்கு நிகர் வேறு எவரும் இல்லையென்றே சொல்லலாம். போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரான ஸ்பனிருந்து கோவாவுக்கும், கோவாவிலிருந்து மலாக்காவுக்கும், அங்கிருந்து மொளுக்கஸ், டெர்னாட்டே, மோரோட்டாய் தீவுகளுக்கும், பின்னர் கோவாவிருந்து ஜப்பானுக்கும் பயணமானார்.

       பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை இயேசுவின் பாதத்திற்கு அழைத்து வந்தவர் .சீனாவிற்குச் செல்லும் வாய்ப்பிற்காக சான்சியன் என்னும் தீவில் காத்திருக்கும் வேளையில் காய்ச்சனால் நோயுற்று, இயேசுவின் நாமத்தை உச்சரித்தவாறு 1552ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 2ஆம் நாள் அன்னை மரியின் கரங்களில் சாய்ந்த நிலையில் சான்சியன் தீவில் இயற்கை எய்தினார். திருத்தந்தை 15ஆம் கிரகோரி 1622ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 12இல் புனிதராகவும் உயர்த்தினார். சவேரியாரின் உடல் இன்றும் அழியாமல் இருக்கின்றது. கோவாவில் எல்லாரும் காணக்கூடிய வகையில் வைக்கப்பட்டுள்ளது.