Friday 1 December 2017

புனித எலிஜியஸ்


 
             திறமையும் நேர்மையும் மிகுந்த மாமனிதர். இரக்கச் செயல்கள் வழியாக ஏழைகளுக்கு உதவி செய்தார். அடிமை மக்களின் மக்களுக்காக பாடுப்பட்டார். ஒழுக்கம் மிகுந்த நற்பண்புகளின் நாயகன். நற்செய்தியை அறிவித்து எண்ணற்ற மக்களை கிறஸ்துவின் உண்மை சீடராக மாற்றியவரே புனித எலிஜியஸ். இவர் 590ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார்.

       எலிஜியஸ் சிறுவயது முதல் பொற்கொல்லரிடம் சென்று தனது திறமைகளை வளர்த்துக்கொண்டார். நெஸ்தீரியா சென்று அரசக்கருவூலத்தின் தலைவராக இருந்த பாபோ என்பவரிடம் சேர்ந்து வேலை செய்தார். தனது திறமையால் க்லோடய்ரே அரசரின் அரண்மனையில் தங்கள், விலையுர்ந்த கற்களால் சிற்பங்கள் செய்தார்.  உண்மையும் நேர்மையும் பொறுப்பும் மிகுந்தவராய் அரசரின் மனம் கவர்ந்த ஆலோசகராக மாறினார்.
    ஏழை எளிய மக்களை தேடிச் சென்று உதவி செய்தார். சமுகத்தில் பின்தங்கிக் காணப்பட்ட மக்களை அன்பு செய்து தனது நேசக்கரம் நீட்டினார். அவர்களின் வாழ்க்கை நிலை உயர்ந்திட அரும்பாடுப்பட்டார். இரக்கச் செயல்கள் வழியாக எண்ணற்ற நன்மைகள் செய்தார். மார்செய்ல் நகரில் அடிமைகளாக வாழ்ந்த மக்களின் விடுதலைக்காக உழைத்தார்.

         அரண்மனை வாழ்வை துறந்து துறவற வாழ்வை மேற்கொண்டார். அரசரின் உதவியுடன் ஆலயங்கள் பல எழுப்பினார். குருத்துவப் பயிற்சி பெற்று குருவாக அருள்பொழிவு பெற்றார்.640ஆம் ஆண்டு மே திங்கள் 13ஆம் நாள் நோயன் தொர்னாய் மறைமாவட்டத்தின் ஆயராக பொறுப்பேற்றார். இறைவார்த்தைக்கு சான்றாக வாழ்ந்த எலிஜியஸ் தனது மறையுரை வழியாக எண்ணற்ற மக்களை கிறிஸ்துவின் உண்மை சீடராக மாற்றினார். இறைவனுக்கு உகந்த முறையில் இறையாட்சி பணி செய்த ஆயர் எலிஜியஸ் 660ஆம் டிசம்பர் திங்கள் 1ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment