Saturday 2 December 2017

புனித பிபியானா


        இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்ட காரணத்தால் கொலை செய்யப்பட்டவர். இடைவிடாமல் இறைவனிடம் செபித்தவர். இறுலிவரை இறைநம்பிக்கையில் நிலைத்து நின்றவர். கிறிஸ்துவுக்காகத் துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டவரே புனித பிபியானா. இவர் உரோமையில் பிறந்தவர். 

        இவரது காலத்தில் கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டவர்களை துன்புறுத்திய காலம். பேரரசர் ஜøலியன் பிபியானாவை கைது செய்து சிறையில் அடைத்தான். கிறிஸ்துவை மறுதலிக்க துன்புறுத்தினான். நோன்பிருந்து மன்றாடினார். ஆளுநன், பிபியானாவிடம் ஆசை வார்த்தைகளைகூறி கிறிஸ்துவை மறுதலிக்கக் கூறினான். 

           தனது இறைநம்பிக்கையில் உறுதியுடன் இருந்த பிபியானவை தூணில் கட்டி சவுக்கால் அடித்தான். சதைகள் கிழிந்து இரத்தம் வடிந்தது. இந்நிலையிலும் கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கையில் மனம் தளரவில்லை. ஆத்திரம் அடைந்த பேரரசன் பிபியானாவை கொடிய விலங்குகளுக்கு இரையாக்கினார். கொடிய விலங்குகளுக்கு இரையான பிபியானா 363ஆம் ஆண்டு இறந்தார். 

No comments:

Post a Comment