Sunday 30 September 2018

புனித ஜெரோம்

 
 புனித ஜெரோம், “செபித்து, பின் விவிலியத்தை படிக்கத் தொடங்கு. அதைப் படித்த பின் செபி. விவிலியத்தை அறியாதவன் கிறிஸ்துவை அறிவதில்லை. எப்பொழுதும் வேலை செய்துகொண்டே இரு. கடவுள் வந்து பார்த்தாலும், அலகை சோதிக்க வந்தாலும் நீ சுறுசுறுப்புடன் இருப்பதை காணவேண்டும்”என்று கூறியவர்.


  கி.பி. 342ஆம் ஆண்டு டால்மேஷியாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் எரோணிமூஸ். லத்தின், கிரேக்கம், எபிரேயம் போன்ற மொழிகளில் புலமைப் பெற்றார். தனது 39ஆம் வயதில் குருவாக அருள்பொழிவு பெற்று இறையாட்சி பணியை ஆரம்பித்தார்.  இவரது தாராக மந்திரம், “விவிலியத்தை அறியாதவன் கிறிஸ்துவை அறியாதவன்” என்பதாகும்.  

 

  தூய ஆவியன் தூண்டுதலால் வானதூதரின் வழிகாட்டுதலால். விவிலியத்தை லத்தினில் மொழிபெயர்த்தார். இந்த மொழி பெயர்ப்பு வுல்கத்தா என்று அழைக்கப்படுகிறது. அதாவது சாதரணமாக பயன்படுத்துவது. அல்லது எளிமையானது என்பது பொருள். 

 

ஜெரோம், 420ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து, விண்ணக வாழ்வில் நுழைந்தார். புனித ஜெரோம் விவிலிய அறிஞர்கள், நூலகங்கள், நூலகப் பணியாளர்கள், பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகள், மாணவர்கள் ஆகியோரின் பாதுகாவலராக விளங்குகிறார்.

Saturday 29 September 2018

புனித கபிரியேல்: புனித இரபேல்



    இவரின் பெயருக்கு எபிரேய மொழியில் "கடவுளின் ஆற்றல் அல்லது கடவுளின் செய்தி" என்பது பொருள். கடவுளின் முக்கிய அதிதூதர்கள் ஏழுபேரில் இவரும் ஒருவர். மரியன்னைக்கு மங்களவார்த்தையின் வழியாக இறைமகன் இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தவர். திருமுழுக்கு யோவானின் பிறப்பை, சக்கரியாசுக்கு முன்னறிவித்தவரும் இவர்தான். தனித்தீர்வையின்போது, இறைவனின் முன்னிலையில் நிற்பவர் இவர். இறைவனால் தேர்ந்தெடுக்கப்படும், அவரின் மக்களின் நெற்றியில் ஆசீர் அளிப்பவரும் இவர். இயேசுவின் பிறப்பை, பெத்லேகேமில் இடையர்களுக்கு அறிவித்தவர். இஸ்லாமியர்கள் இவரை தேவதூதர்களின் தலைவர்களாகக் கருதுகின்றனர். இவர் தாழ்ச்சியையும், ஆறுதலையும் இறைவனிடமிருந்து பெற்று மக்களுக்கு தருகின்றார். இவர், பெர்சியா என்ற நாட்டிற்கு நிகழவிருந்த வீழ்ச்சியையும், வெற்றியையும் முன்னறிவித்தார். இவர் மரியன்னையிடம் கூறிய வாழ்த்துச் செய்தியை இன்று திருச்சபை மூவேளை செபமாக செபிக்கப்படுகின்றது. 



புனித இரபேல் 

   
        எபிரேய மொழியில் கூறப்படும் இவரின் பெயரின் பொருள் "கடவுள் குணமளிக்கின்றார்" என்பது. இவரும் இறைவனின் முக்கிய தூதர்கல் எழுவரில் ஒருவர். இவர் கடவுளிடம் பரிந்துப்பேசி குணமளிக்கிறவராக இருக்கின்றார். நீண்ட பயணங்களிலும் பாதுகாப்பான பயணத்தை கொடுக்கின்றார் 

புனித மிக்கேல்


மிக்கேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு "கடவுளுக்கு நிகர் யார்?" என்பது பொருள். விண்ணகத்தில் இறைதூதர்களின் நடுவே பிரச்சனைகள் ஏற்பட்டபோது, புனித மிக்கேல் தூதரின் தலைமையில் கடவுளுக்கு நிகர் யார் என்று கூறி குழப்பம் செய்த லூசிபர் சாத்தானையும் அதன் தோழர்களையும் நெருப்பில் தள்ளினார். நோயாளிகள், அதிதூதர் மிக்கேலின் பெயரைக் கூறி செபித்தால், நோய் நீங்கும் என்றும் ஆதிகாலத்திலிருந்து கூறப்படுகின்றது. மனிதர்கள் இறந்ததும், அவர்களின் ஆன்மாவை சாத்தானிடமிருந்து விடுவித்து, தனித்தீர்வைக்கு இறைவனிடம் கொண்டு சேர்ப்பதை, தன் வேலையாக கொண்டு செயல்பட்டார் மிக்கேல். 

Friday 21 September 2018

செப்.18. புனித ஜோசப் குப்பெர்டினோ

கடவுளை அன்பு செய்; கடவுளின் அன்பு ஒருவரிடம் ஆட்சி செய்யுமானால் அவரே உண்மையானச் செல்வந்தர் என்று வாழ்க்கை அனுபவத்தால் மொழிந்தவர். வானதூதரின் தூய்மையும், அன்னை மரியாவின் தாழ்ச்சியும், அசிசியாரின் ஏழ்மையையும் தனதாக்கி வாழ்ந்தவரே புனித ஜோசப் குப்பெர்டினோ. இவர் இத்தாலி நாட்டிலுள்ள நேப்பிள்ஸ் அருகிலுள்ள குப்பெர்டினோ என்ற இடத்தில் ஏழ்மையும், தூய்மையும் நிறைந்த எளிய குடும்பத்தில் 1603ஆம் ஆண்டு பிறந்தார்.
 

          ஜோசப் குப்பெர்டினோ கல்வி கற்பதில் பின்தங்கிய மாணவராக இருந்தார். 8 வயது முதல் இறைகாட்சிகள் காணும் வரம் பெற்றிருந்தார். தனது 17ஆம் வயதில் தருமம் கேட்டு வந்த பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த துறவியைப் பார்த்தார். தானும் ஒரு துறவியாக மாறிட ஆவல் கொண்டார். தனது 17ஆம் வயதில் பிரான்சிஸ்கன் துறவற சபையில் துணைச் சகோதரராகச் சேர்ந்தார். பல தடைகள் வந்த தருணத்தில் நற்கருணை ஆண்டவர் முன்னிலையில் அமர்ந்து தனது தடைகள் நீங்க வேண்டுதல் செய்தார். தடைகளைப் படிக்கற்களாக மாற்றி 1628, மார்ச் 28ஆம்  நாள் குருவாக அருட்பொழிவுப் பெற்று, இறைவனுக்கு உகந்தவராக மாறினார். 

இறைமாட்சிமைக்காகத் தனது வேலைகளைச் செய்தார். அன்னை மரியாவின்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். கடவுள் இவருக்கு வருங்கால நிகழ்வுகளை முன்னறிவிப்பது, நோயாளிகளை குணமாக்குவது போன்ற பல அரிய வரங்கள் கொடுத்திருந்தார். ஜோசப் திடீரென ஆலய வாசலிருந்து பலிபீடத்திற்குப் பறந்து செல்வார். ஆலய மணியோசை கேட்டாலோ அல்லது இயேசு மற்றும் அன்னை மரியாவின் பெயரைக் கேட்டாலோ தன்நிலை மறந்து இறையனுபவத்தில் காற்றில் உயர்ந்து பறந்துவிடுவார். ஜோசப் ஆண்டிற்கு ஒருமுறை நாற்பது நாள் நோன்பு இருந்தார். இறைவன் தனது அன்பின் பாதையைக் காட்டிய போது, அந்தப் பாதையில் இறுதிவரை பாதங்கள் பதறாமல் நடந்து இறையன்பின் செல்வந்தரானார். 

       

            1657ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் அன்னை மரியாவின் விண்ணேற்பு திருநாளன்று கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். நான் இறந்த பின் என்னை யாரும் பார்க்க முடியாத இடத்தில் அடக்கம் செய்யுங்கள் என்று கூறினார். 1663 செப்டம்பர் 18ஆம் நாள் மண்ணுலக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து மரணம் வழியாக இறைவனடிச் சேர்ந்தார். திருத்தந்தை 13ஆம் கிளமண்ட், 1767ஆம் ஆண்டு  ஜøலை திங்கள் 16ஆம் நாள் ஜோசப் குப்பெர்டினோவை புனிதர் நிலைக்கு உயர்த்தினார்இவர் மாணவர்களின் பாதுகாவலர். ஆகாய விமான போக்குவரத்து, மனம் பேதத்தவர்களின் பாதுகாவலர். செப்டம்பர் 18ஆம் நாள் திருநாள். 

செப்.17. புனித ராபர்ட் பெல்லார்மின்



      இறைவேண்டுதல் வழியாக இறைஞானம் பெற்று கிறிஸ்துவின் போதனைகளை திறம்படகற்பித்தவர். ஒவ்வொருநாளும் இறைவனை போற்றி புகழ்ந்தவர். தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். ஆசிரியராக பணியற்றியபோது மாணவர்கள் கிறிஸ்துவின் விழுமியங்களில் வளர்ந்து இறைநம்பிக்கையில் வளர வழிகாட்டியவரே புனித ராபர்ட் பெல்லார்மின். இவர் இத்தாலி நாட்டில் 1542ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் நாள் பிறந்தார். கல்வி கற்று அறிவில் சிறந்து விளங்கினார். குடும்ப செபங்களில் ஆர்வமுடன் பங்கேற்றார். பல்வேறு மொழிகளை கற்றுக்கொண்டு கவிதைகள் இயற்றினார்.


      ராபர்ட் பெல்லார்மின் 1560ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் நாள் இயேசு சபையில் சேர்ந்தார். இறையியல் கற்று கருவாக அருள்பொழிவு பெற்றார். பல்கலைக்கழகத்தில் ஏழு ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார். தப்பறைகளுக்கு எதிராக குரல்கொடுத்தார். திருத்தந்தை 13ஆம் கிரகோரியாரின் அழைப்பு பெற்று குருமாணவர்களுக்கு ஆசிரியராக பணியாற்றினார். திருச்சபையின் வளர்ச்சிக்கு குடுமையாக உழைத்தார். திருச்சபையின் வளர்ச்சியை கண்முன் கொண்டு செயல்பட்டார். இறைவனின் கரம்பற்றி நடந்த ராபர்ட் பெல்லார்மின் 1598ஆம் ஆண்டு ஆயராகவும், 1599ஆம் ஆண்டு கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார். இறைவன் காட்டிய பாதையில் பாதங்கள் பதராமல் பயணம் செய்து 1621ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் இறந்தார்.

Sunday 16 September 2018

புனித சிப்ரியன்


     தனது உடமைகளை ஏழை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தவர். அறிவும், இறைஞானமும், திறமைகள் பல பெற்றவர். கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டு இறையாட்சி பணி செய்தவரே புனித சிப்ரியன். இவர் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடக்கு ஆப்பிரிக்காவில் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார். இவர் 248ஆம் ஆண்டில் திருமுழுக்கு வழியாக கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டார். கிறிஸ்துவுக்காக தனது வாழ்வை அர்ப்பணம் செய்தார். தனது உடமைகளை விற்று ஏழைகளுக்கு கொடுத்து கிறிஸ்துவின் ஏழ்மையில் பங்கு சேர்ந்தார். பேரரசர் தீசியுஸ் கிறிஸ்தவ மக்களை துற்புறுத்தி கிறிஸ்துவை மறுதலிக்க கட்டயப்படுத்தினார். சிலர் பேரரசரின் துன்புறுத்தலுக்கு உள்ளானர். சிப்ரியன் இறைவனின் தூண்டுதலால் தப்பி ஒடி தலைமறைவானார். மறைவாக வாழ்ந்த தருணத்தில் உரோமை மறைமாவட்ட குரு நொவேற்றஸ் என்பவரால் திருத்தொண்டராகத் திருப்பொழிவு பெற்றார். 251 இல் கார்த்தேஜியின் ஆயராக அருள்பொழிவு பொற்றார். முதலாம் வலேரியன் 256இல் பேரரசரானான். வலேரியன் சிலைகளுக்கு பலியிடுமாறு வற்புறுத்தினான். சிப்ரியன் கிறிஸ்துவை மறுதலிக்கு சிலைகளுக்கு பலியிடமாட்டேன் என்று கூறினார். ஆத்திரம் அடைந்த வலேரியன் கரூபிஸ் என்ற இடத்திற்கு நாடு கடத்தினார். 258ஆம் மீண்டும் சிலைகளுக்கு பலியிட கூறினார். சிப்ரியன் மறுதலித்தபோது மரண தண்டணை அளித்து 258ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் மறைசாட்டியாக இறந்தார். 

Saturday 15 September 2018

புனித வியாகுல அன்னை

 
    அக்காலத்தில் சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், ``அம்மா, இவரே உம் மகன்'' என்றார். பின்னர் தம் சீடரிடம், ``இவரே உம் தாய்'' என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். யோவா 19: 25-27  'சிமியோன் இயேசுவின் தாயாகிய மரியாவை நோக்கி, "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாள மாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள் ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் ' என்றார்." (லூக்கா 2:34-35)

 இறைவாக்கினர் சிமியோனின் வார்த்தைகள் நிறைவேறும் வகை யில், இயேசுவின் சிலுவைப் பாடுகளிலும் மரியா பங்கேற்றார். சிலுவையின் அடியில் வியாகுலத் தாயாக நின்ற அவரை, "இதோ உன் தாய்" என்ற வார்த்தைகள் மூலம் இயேசு தனது சீடர்கள் (கிறிஸ்தவர்கள்) அனைவருக்கும் தாயாகத் தந்தார். இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகியவற்றுக்கு பிறகு இயேசுவின் சீடர்கள் அனைவரும் மரியாவின் வழிகாட்டுதல்படியே வாழ்ந்து வந்தனர். அன்னை மரியாவோடு வேண்டுதல் செய்து கொண்டிருந்த போதுதான், திருத்தூதர்கள் மீது தூய ஆவியார் இறங்கி வந்தார். அவர்கள் பல்வேறு நாடுகளுக்கு நற்செய்தி அறிவிக்க சென்றபின் திருத்தூதர் யோவானின் பாதுகாப்பில் மரியா வாழ்ந்து வந்தார்.

Friday 14 September 2018

புனித நோட்பர்கா

     ஏழை எளிய மக்களிடத்தில் அன்பும் அக்கறையும் கொண்டு ஆதரவும் காட்டியவர். நற்செயல்கள் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தியவர். துன்பத்தின் மத்தியில் இறைவனை இரக்கத்திற்காக வேண்டய இறையருள் பெற்றவர்.  நோயுற்று துன்புற்ற வேளையில் இறைவனை தஞ்சம் என்று வாழ்ந்தவரே புனித நோட்பர்கா. இவர் ஆஸ்ட்ரியாவில் ராட்டன்பார்க் என்னுமிடத்தில் 1265ஆம் ஆண்டு ஏழைமையான குடும்பத்தில் பிறந்தார். ராட்டன்பார்க் வாழ்ந்த செல்வந்தர் ஹென்றி என்பவரது வீட்டில் சமையல் வேலைகள் செய்தார். வறுமையில் வாழ்ந்தாலும் அன்பிலும் பணிவிலும் இறைபக்தியிலும் சிறந்து விளங்கினார். வீட்டில் மீதமுள்ள உணவுகளை வீணாக்காமல் ஏழை மக்களுக்கு கொடுப்பதில் ஆனந்தம் அடைந்தார். பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவு கொடுப்பது இறைபணியாக கருதினார்.

    நோட்பர்காவின் இறைபணியை வீட்டு தலைவி விரும்பவில்லை. ஏழைகளுக்கு மீதமுள்ள உணவுகளை கொடுப்பதற்கு கண்டித்தார். மீதமுள்ள உணவுகளை பன்றிகளுக்கு கொட்ட கட்டளையிட்டார். தனக்குரிய உணவுகளை சேமித்துவைத்து ஏழை மக்களுக்கு கொடுத்தார். ஒருமுறை ஏழைகளுக்கு உணவு கொண்டு செல்லுகையில் நோட்பர்காவை வீட்டு எஜமான் வழியில் பார்த்தார். அது என்ன என்று வினவி அவற்றை காண்பிக்க கூறனார். நோட்பர்கா இறைவனிடம் வேண்டுதல் செய்தப் பின் எஜமானிடம் உணவு பொருட்களை காட்டினார். இறைவல்லமையால் உணவு மரத்துண்டுகளாக மாறின. இறைவனே தஞ்சம் என்று வாழ்ந்தார். திருப்பலியில் பங்கேற்று நற்கருணை ஆண்டவரை இதயத்தில் சுமந்து வாழ்ந்த நோட்பர்கா 1313ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் நாள் இறந்தார்.

Monday 10 September 2018

புனித நிக்கோலாஸ் டொலென்டினோ

     வானதூதரின் துயை பெற்று அறிவிலும் ஞானத்திலும் சிறந்து வளங்கியர். இயேசுவின் ஏழ்மையின் பாதையில் பயணம் நோன்பிருந்து ஒறுத்தல் வழியாக இறைவனை மாட்சிமைப்படுத்தியவரே புனித நிக்கோலாஸ் டொலென்டினோ. இவர் இத்தாலி நாட்டில் பிறந்து உண்மை, அன்பு, நீதி போன்ற நற்பண்புகளில் வளர்ந்து இறைபக்தியை சொந்தமாக்கினார். இவரது தாய் புனித நிக்கோலாஸ் திருத்தலம் சென்று வேண்டுதல் செய்ததன் பயனாக இவர் பிறந்த காரணத்தால் இவரது பெற்றோர் இவருக்கு நிக்கோலாஸ் என்று பெயர் சூட்டினார்கள். வானதூதரை அடிக்கடி காட்சியில் கண்டார். இறைபக்தியில் சிறந்து விளங்கினார். அன்னை மரியாவிடம் பக்தியும், பற்றும் கொண்டு புண்ணிய வாழ்வில் சிறந்து வளங்கினார். துறவு வாழ்வுக்கு தன்னை அர்ப்பணம் செய்து 1654ஆம் செப்டம்பர் திங்கள்9ஆம் நாள் இறந்தார்.

Saturday 8 September 2018

அன்னை மரியா அமல உற்பவி

 
   அன்னை மரியா ஓர் அருளோவியம்; மாசணுகாதவர்; அன்பின் உறைவிடம்; தாழ்ச்சியின் சிகரம்; விண்ணகத்தின் வாசல்; விண்ணக மண்ணக அரசி; அமல உற்பவி; இறைவனின் தாய்; விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்டவர்; உடனóபடிக்கையினó பேழை எனப்பலவாறு அழைக்கிப்படுகின்றார். கடவுளின் தனிப்பட்ட அருளால் பாவமாசு அணுகாதவராய், சென்மப்பாவத்திற்கு உட்படாமல் மரியா ‘அமல உற்பவியாகப்’ பிறந்தார். பிரான்ஸ் நாட்டில் 1858ஆம் ஆண்டு பெர்னதெத் என்ற சிறுமி, தனது தங்கை மேரி மற்றும் உறவினர் யோவான் ஆகியோருடன் சோóந்து விறகு சேகரிக்க கேவ் ஆற்றங்கரைப் பகுதிக்குச் சென்றார்.  அப்பகுதியில் தண்ணீர் குகை இருந்தது. அது மசபியேல் குகை என்று அழைக்கப்பட்டது.  தண்ணீர் குகையைக் கடந்து செல்ல வேண்டும். மேரி மற்றும் யோவான் தண்ணீர் குகையை எளிதில் கடந்தனர். பெர்னதெத் குளிரால் தண்ணீரில் கால் வைக்க முடியாமல் தயங்கி நின்றார். அப்போது பலமான காற்று வீசியது சுற்றிலும் பார்த்தார். 
        
     அருகிருந்த குகையில் ஓர் அற்புதமான காட்சியைக் கண்டார். “அமல உற்பவியான அன்னை மரியா, எழில் மிக்க ஓர் இளம் பெண்ணாகத் தோற்றமளித்தார். அன்னையின் முகம் விண்ணக ஒளியினால் பிரகாசித்தது. நீண்ட வெள்ளைநிற ஆடையணிந்து, இடையில் நீலநிற இடைக்கச்சைக் கட்டியிருந்தார். பாதங்கள் மஞ்சள் நிற ரோஜா மலர்களால் அழகு செய்யப்பட்டிருந்தன. கரத்தில் செபமாலை தொங்கியது. மரியா பெர்னதெத்தைத் தன்னுடன் சேர்ந்து செபமாலை செபிக்க அழைத்தார்”. சிறிது நேரத்திற்குப் பின் அன்னை மரியா மறைந்தார். இவ்வாறு பல நாட்கள் தோன்றினார்.  பெர்னதெத் தான் கண்ட காட்சியை வீட்டிற்குச் சென்று தன் தாயிடம் கூறினார்.“அம்மா! அந்த அழகான சீமாட்டியைப் பார்த்துக் கொண்டே இருக்க விழைகின்றேன். அவர் யார் என்று தெரியவில்லை” என்றார். தாய்“ இது எல்லாம் அலகையின் தந்திரம். இனி நீ அங்கு செல்லக் கூடாது” என்றார். மீண்டும் விறகு சேகரிக்கச் சென்ற பெர்னதெத், அன்னை மரியாவைத் தரிசித்தார். இந்தச் செய்தியைக் கேட்ட சிலர் நம்பினார்கள். பலர் ஏளனமாகப் பேசினர். திரளானோர் அவருடன் அன்னையைத் தரிசிக்கச் சென்றார்கள்.

    அன்னை மரியா, ஒருநாள் முகத்தில் பெரும் துயரத்துடன் காணப்பட்டார். பெர்னதெத்“அம்மா, ஏன் இன்று வருத்தமாக இருக்கின்றீர்கள்”என்று கேட்டார்.  அன்னை மரியா “மகளே! உலகில் எண்ணற்ற மக்கள் கடவுளைப் புறக்கணித்து பாவம் செய்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மனம்மாற நீ செபமாலை செபிக்க வேண்டும்”என்றார். மற்றொரு நாள்“ தவம்! தவம்! தவம்!” என்று அன்னை கூறினார். அன்னையின் அறிவுரைக்கேற்ப“பாவிகள் மனம்மாற செபமாலை செபிப்பேன். தவ முயற்சிகள் செய்வேன்”என்று உறுதிகொண்டார். இதைக் கேள்விப்பட்ட தலைவர்கள், காவலர்கள் பெர்னதெத்தைக் குகைக்குச் செல்ல தடை விதித்தனர். பெர்னதெத்தின் தந்தை தன் மகள் இறையொளியால் வழி நடத்தப்படுகிறார் என்பதை உணர்ந்து குகைக்குச் செல்ல அனுமதித்தார். 

    பங்கு குருவானவர்,“நீ அவர்களிடம் பெயர் என்ன? என்று கேள்”என்றார். 1858, ஜøலை 16ஆம் தேதிக்குள் மொத்தம் 18முறை பெர்னதெத்திற்குக் காட்சி தந்தார் மரியா. அன்னை மரியிடம்“நீங்கள் யார்? உங்கள் பெயர் என்னவென்று சொல்வீர்களா?”என்றார். 16வது காட்சியின் போது அன்னை மரியாள்,“நாமே அமல உற்பவம், அதாவது நான் சென்மப் பாவமில்லாமல் உற்பவித்தவள்”என்று கூறி மறைந்தார். அங்கு அற்புதமான நீரூற்றும் உருவாயிற்று. அந்த நீரைப் பருகியோர் நோயிருந்து விடுதலை பெற்றனர். இப்புதுமையான காட்சி பற்றிய தகவல் பரவியதும், எல்லா திசையிலும் இருந்தும் மக்கள் அலையெனத் திரண்டு லூர்துநகர் நோக்கி வர ஆரம்பித்தார்கள். அன்னை மரியாவின்மீது அளவு கடந்தப் பக்தி வளரத் தொடங்கியதால் இது குறித்து ஆராய்வதற்காகத் தார்பஸ் மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் ஒரு குழுவை ஏற்படுத்தினார். 

    பலதரப்பட்ட மக்களையும் நான்கு ஆண்டுகள் விசாரித்த அக்குழு தமது அறிக்கையை ஆயரிடம் கொடுத்தது. அறிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆயர் லாரன்ஸ் 1862ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் நாள், “பெர்னதெத் குகையில் கண்ட அனைத்தும் முற்றிலும் உண்மையே. மேலும் அவள் குகையில் கண்ட பெண்மணி  வேறுயாருமல்ல, அது கன்னி மரியே” என்று உறுதிப்படுத்தினார். பல நிகழ்ச்சிகளுக்குப்பின் அங்கு ஆலயம் கட்டப்பட்டது. இதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான், 1854, டிசம்பர் 8ஆம் நாள் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர், “மரியா அமல உற்பவி” என்ற கோட்பாட்டை அறிக்கையிட்டார். 

Thursday 6 September 2018

புனித எலியத்தூரியஸ்

     இயேசுவின் ஏழ்மையின் பாதையில் பயணம் செய்தவர். உண்மை, அன்பு, நீதி இவற்றிற்கு சாட்சியாக வாழ்ந்தவர். மன்னிக்கும் மனநிலையுடன் தூயவராக வாழ்ந்தவரே புனித எலியத்தூரியஸ். இவர் குழந்தைப்பருவம் முதல் இறையன்பிலும் பிறரன்பிலும் வளர்ந்து வந்தார். மனசாட்சியின் குரலுக்கு செவிகொடுத்து வாழ்ந்தார். தூய ஆவியாரிடம் மிகுந்த பக்தி கொண்டு அவரது துணை நாடினார். துறவு வாழ்க்கை வாழ ஆவல்கொண்டு புனித மாற்கு துறவு இல்லத்தில் சேர்ந்து தவமுயற்சிகள் செய்து இறைவனை மாட்சிப்படுத்தினார். மக்களின் தேவைகள் அறிந்து செயல்பட்டார். தீய ஆவியல் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை நோன்பிருந்து, தவமுயற்சிகள் வழியாக குணப்படுத்தினார். திருதந்தைக்காக தினமும் தியாகம் செய்து செபம் செய்தார். கிறிஸ்துவின் பாதையில் பாதங்கள் பதராமல் தூயவராக பயணம் செய்த எலித்தூரியஸ் 585ஆம் ஆண்டு இறந்தார்.

Wednesday 5 September 2018

புனித அன்னை தெரேசா

  புனித அன்னை தெரேசா எட்டு வயதானபோது, அவரது தந்தை மரணமடைந்தார். பின்னர், அவரது தாயார் அவரை நல்லதொரு கத்தோலிக்க பெண்ணாக வளர்த்தார். தமது பதினெட்டாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி, "லொரேட்டோ சகோதரிகளின்" சபையில் மறைப் பணியாளராகத் தம்மை இணைத்துக் கொண்டார். அதற்குப் பிறகு தமது தாயையோ அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் சந்திக்கவில்லை. 1929ம் ஆண்டு அவர் இந்தியா வந்தடைந்து இமயமலை அருகே உள்ள டார்ஜீலிங்கில் தமது துறவற புகுநிலையினருக்கான பயிற்சியினை ஆரம்பித்தார். தனது முதல் நிலை துறவற உறுதிமொழியினை அவர் 1931 மே 24 அன்று அளித்தார். அச்சமயம், மறைப்பணியாளரின் பாதுகாவலரான “லிசியே நகரின் புனிதர் தெரேசாவின்” பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

   பள்ளிக்கூடத்தில் கற்பிக்கும் பணியை தெரேசா விரும்பினாலும் கல்கத்தாவில் அவரைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமாய் கலங்கச் செய்தது. பிறர் அன்பின் பணியாளர் சபை  செப்டம்பர் 10, 1946ல் ஆண்டு தியானத்திற்காகக் கல்கத்தாவிலிருந்து, டார்ஜீலிங்கின் லொரேட்டோ கன்னிமடத்திற்கு தெரேசா பயணம் செய்தபொழுது அவருக்கு நேர்ந்த உள்ளுணர்வை அவர் பின்நாட்களில் "அழைப்பினுள் நிகழ்ந்த அழைப்பு" என அழைத்தார். "நான் கன்னியர் மடத்தை விட்டு வெளியேறி, ஏழைகள் மத்தியில் வாழ்ந்து கொண்டே அவர்களுக்கு உதவ வேண்டும். 1948ம் ஆண்டில் ஏழைகளுடனான தமது சேவையை ஆரம்பித்தார். லொரேட்டோ துறவற சபையின் சீருடைகளைக் களைந்து, நீல நிற கரையிட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை சீருடையாய் அணிந்தவராய், இந்திய குடியுரிமையினைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் சேவை செய்தார்.

தொடக்கத்தில் மோதிஜில்லில் பள்ளிக்கூடம் ஆரம்பித்த அவர் பின்னர் ஆதரவற்றோர் மற்றும் பசியினால் வாடுவோரின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார். ஏழை, எளியவர்களுக்கு சேவை செய்தல். உடல் ஊனமுற்றோர்க்கு உதவி செய்தல். பள்ளியில் உள்ள மாணவ மாணவியருக்கு உதவி செய்தல் தேவாலயங்களைப் பெருக்கி சுத்தம் செய்தல்• மருத்துவ மனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு மருந்து போட்டு விடுதல். அவரது முயற்சிகள் விரைவிலேயே பிரதமர் உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதல்களைப் பெற்றுத்தந்தன. தெரேசா தனது நாட்குறிப்பில், தனது முதல் வருடம் துன்பங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் வசதிகளுக்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் தனது நாட்குறிப்பில் எழுதினார்.




செப். 4 புனித ரோஸ் விற்றர்போ

   இயேசுவின் நிலைவாழ்வுதரும் வார்த்தைகளுக்கு முற்றிலும் கீழ்ப்படித்நவர். இயேசுவின் துன்பப்பாடுகளில் பங்குசேர்ந்தவர். கிறிஸ்துவின் அன்பிற்கு தன்னை அர்ப்பணம் செய்து வாழ்ந்தவரே புனித ரோஸ் விற்றர்போ. இவர் இத்தாலி நாட்டில் விற்றர்போ என்னும் இடத்தில் 1235ஆம் ஆண்டு பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் இறைபக்தியில் வளர்ந்து இறையன்பின் செல்வந்தராக வாழ்ந்தார். துயவராக வாழ்ந்த ரோஸ் புதுமைகள் செய்யும் வரம் பெற்றிருந்தார். குழந்தைப்பருவம் முதல் தவ முயற்ச்சிக்ள் மேற்கெண்டு வாழ்ந்தார். அன்னை மரியாவிடம் அளவு கடந்த பக்தியும் அன்பு கொண்டார். வாழ்வில் துன்பங்கள் துயரங்கள் வருத்தங்கள் ஏழமாற்றங்கள் குழப்பங்கள் சந்தித்தபோது அன்னையின் துணை நாடி அருள்பெற்று துன்பங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். அன்னையின் வழிகாட்டுதலால் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் சேர்ந்து உத்தம துறவியாக வாழ்ந்தார். ஜெர்மனி அரசர் இரண்டாம் ஃபிரடெரிக் திருத்தந்தைக்கு எதிராக செயல்பட்டார். இத்தருணத்தில் உண்மை எதுவென்று நகர்வீதிகளில் சென்று போதித்தார். “இயேசு எனது பாவங்களுக்காக அடிப்படார் எனில் அவருக்காக அடிபட நானும் தயராக இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆண்டவர் எனக்கு உணர்த்துகிறாரோ அதையே செய்கிறேன்” என்றுகூறி 1250ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் இறந்தார்.

Monday 3 September 2018

புனித பெரிய கிரகோரி

   இரக்கத்தை அவர்கள் வழியாக தம் மக்கள் மீது பொழிகிறார். உங்கள் மீது பொழியப்படும் இந்த விண்ணக ஆசிர் உங்கள் மக்கள் மீது பொழியப்படும் என்று கூறியவர். கிறிஸ்தவ வழிபாடுகளின் தந்தை என்று அழைக்கப்படுபவர். கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு கிறிஸ்துவை அறிவிப்பதில் அளவில்லா ஆனந்தம் அடைந்தவரே புனித பெரிய கிரகோரி. இவர் 540ஆம் ஆண்டு உரோம் நகரில் பிறந்தார். செல்வமும் வசதியும் பெற்றிருந்தவேளையில் ஏழ்மையாக வாழ்ந்தார். கல்வி கற்று இறைஞானத்தில் சிறந்து விளங்கினார். துறவு வாழ்க்கையின் மீது ஆர்வம் கொண்டார். தனது 30 ஆம் வயதில் உரோம் நகரின் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடவுள் இவரை தம் பணிக்கு அழைப்பதை உணர்ந்த கிரகோரியார், அப்பதவியிலிருந்து விலகி புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்தார். மிகுந்த பக்தியோடு பயிற்சிகளை பெற்று குருவானார். 590 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் பேதுருவின் அரியணைக்கு உயர்த்தப்பெற்றார். அப்பொறுப்பை ஏற்ற நாளிலிருந்து இடைவிடாமல் திருச்சபைக்காக உழைத்தார். எச்சூழலிலும் நேர்மையை கடைபிடித்து ஆட்சி செய்தார். தன்னால் இயன்றவரை ஏழை எளியவர்களுக்கு உதவினார். சிசிலி என்ற தீவில் பல துறவற மடங்களை தொடங்கி இறைப்பணியை வளர்த்தெடுத்தார்.தொண்டருக்கெல்லாம் தொண்டராக பணியாற்றிய கிரகோரியார் 604ஆம் மார்ச் 12ஆம் நாள் இநற்தார்.

02.9.18 புனித வில்லியம் ரோஸ்கில்ட்

    கிறிஸ்துவின் நிலைவாழ்வுதரும் வார்த்தை வாழ்வாக்கி அறிவித்தவர். நன்மைகள் செய்ய வாய்ப்பு கிடைத்தபோது நன்கு பயன்படுத்தியவர். அயலானின் தவறுகளை தயங்காமல் சுட்டிக்காட்டியவர். தூய வாழ்க்கையால் தியாகம் நிறைந்த செயல்களால் எண்ணற ஆன்மாக்களை மீட்டு கிறிஸ்துவின் ஆன்மாக்களுக்காகன தாகம் தீர்தவரே புனித வில்லியம் ரோஸ்கில்ட். இவர் சிறுவயது முதல் இறைஞானத்தில் வளர்ந்து இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்து வாழ்ந்தவர். குருவாக அருள்பொழிவு பெற்று இறையாட்சி பணி செய்தார். டென்மார்க் நகரில் சிலைவழிபாட்டிலும், மூடநம்பிக்கையில் வாழ்ந்த மக்கள் மனதில் கிறிஸ்துவின் ஒளி ஏற்றினார். நற்செய்தியை வாழ்வாக்கி அறிவித்தவில்லவியம் ஆயராக அருள்பொழிவு பெற்றார். . துன்பங்கள் மத்தியில் இறைவனின் துணை நாடினார். அரசனின் தவறுகளை கண்டித்தார். ஆயரின் வழிகாட்டுதலால் அரசன் மனமாறினான். கிறிஸ்துவுக்காக வாழ்ந்த வில்லியம் 1070ஆம் ஆண்டு இறந்தார். 

01.9.18 புனித ஜைல்ஸ்

     மண்ணக வாழ்வில் இறைவனுக்கு உகந்தவராக தூய்மையான வாழ்க்கை வாழ்ந்தவர். தனிமையில் இறைவனோடு இருப்பதில் அளவில்லா ஆனந்தம் அடைந்தவர். இயற்கையை அன்பு செய்தார். தூய ஆவியின் அருள்பெற்று இறையாட்சி பணி செய்தவர். இறைவனுக்கு தனது உடல், பொருள் அனைத்தையும் அர்ப்பணம் செய்து ஆண்டவரின் அடிமையாக வாழ்ந்தவரே புனித ஜைல்ஸ். இவர் கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் 650ஆம் ஆண்டு பிறந்தார். கிறிஸ்துவுக்கு தன்னை அர்ப்பணம் செய்து தூயவராக வாழ்ந்து மக்களுக்கு நன்மைகள் செய்தார். துறவு மடம் அமைத்து தனிமையில் வாழ்ந்தார். கிறிஸ்துவை அளவில்லாமல் அன்பு செய்து நன்மைகைள் செய்த ஜைல்ஸ் 710ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 1ஆம் நாள் இறந்தார்.

அன்னை மரியா

       புனித அல்போன்ஸ் மரிய  லிகோரி அன்னை மரியாவின் கரங்கள் வழியல்லாமல் நாம் ஒன்றையும் பெற முடியாது என்பதை உணர்ந்தார். தனது வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் அன்னையின் வழியாக இறையருளை பெற்றார். எல்லா சனிக்கிழமைகளிலும் அன்னை மரியாவை நினைவு கூரவும், தினமும் செபமாலை செய்ய குருக்களுக்கும், இறைமக்களுக்கும் அழைப்பு விடுத்தார். “நமது வாழ்வில் துன்பங்கள், சோதனைகள், வருத்தங்கள், ஏமாற்றங்கள், கவலைகள் பெருகும் போது அன்னை மரியாவின் உதவியை நாடவேண்டும். அன்னையின் நாமம் நமது உதடுகளைவிட்டு நீங்காதிருக்கட்டும். அன்னை மரியாவை பின்பற்றினால் மீட்பின் பாதையில் எளிதாக நடக்க இயலும். நம்பிக்கை இழக்கமாட்டோம்; சோர்வடைய மாட்டோம்; தீமைக்குப் பயப்பட வேண்டாம்; விண்ணக வாழ்வை பெற்றுக் கொள்வோம்” என்றார்.   “செபமாலை சொல்லும் ஒரு படையை எனக்கு கொடுங்கள்; நான் இவ்வுலகையே வென்றுக்  காட்டுகிறேன்” என்பதற்கேற்ப செபமாலையை கரங்களில் ஏந்தி தினமும் செபம் செய்தார். செபமாலையின் சக்தியால் தப்பறைகளை தோற்கடித்தார். 

Saturday 1 September 2018

புனித தோமஸ் அக்குவினாஸ்

புனித தோமஸ் அக்குவினாஸ் செல்வாக்கு மிகுந்த பிரபு குடும்பத்தில் பிறந்தவர். உலகம் அதன் இன்பகளையும் துறந்து டொமினிக் துறவற சபையில் சேர்ந்து இரந்து உண்ணும் துறவியாக மாறினார். இச்செயல் அவரது குடும்பத்தினர் அவமானச் செயலாக கருதினர். அக்குவினாஸிடம் துறவு வாழ்வை கைவிட்டு வீட்டிற்குத் திரும்பிவருமாறு கட்டாயப்படுத்தினர். அவர் மறுத்தபோது அவரின் தூய்மை மிகுந்த துறவற வாழ்வை களங்கப்படுத்த தீர்மானித்து இரண்டு வருடம் அவரை ஒரு அறையில் அடைத்து வைத்தனர். இத்தருணத்தில் அக்குவினாஸிடம் சிறிதளவும் உலக இன்பங்களுக்கான தாகம் ஏற்படவில்லை. அவருடைய சகோதரர்கள், அக்குவினாஸ் இருந்த அறையில் வேசிப்பெண் ஒருவரை அனுப்பினர். அக்குவினாஸ் தீ மிகுந்த விறகு துண்டால் அப்பெண்னை அடித்து விரட்டினார். பின் நாட்களில் மேன்மேலும் புனிதத்தன்மையில் சிறந்து விளங்கினார். இறைஞானத்தின் தத்துவங்கள் பற்றி பல நூல்கள் எழுதினார். நேப்பில்ஸ் என்ற இடத்தில் ஒருமுறை சிலுவையில் இருந்து, “தோமஸ், நீ என்னைப்பற்றி நன்றாக எழுதுகின்றாய். அதற்குப் பதிலாக உனக்கு என்ன வேண்டும்?” என்ற குரல் கேட்டார். தோமஸ், “ஆண்டவரே உம்மையன்றி வேறு எதுவும் எனக்கு வேண்டாம்” என்று கூறினார்.