Friday 21 September 2018

செப்.17. புனித ராபர்ட் பெல்லார்மின்



      இறைவேண்டுதல் வழியாக இறைஞானம் பெற்று கிறிஸ்துவின் போதனைகளை திறம்படகற்பித்தவர். ஒவ்வொருநாளும் இறைவனை போற்றி புகழ்ந்தவர். தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். ஆசிரியராக பணியற்றியபோது மாணவர்கள் கிறிஸ்துவின் விழுமியங்களில் வளர்ந்து இறைநம்பிக்கையில் வளர வழிகாட்டியவரே புனித ராபர்ட் பெல்லார்மின். இவர் இத்தாலி நாட்டில் 1542ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் நாள் பிறந்தார். கல்வி கற்று அறிவில் சிறந்து விளங்கினார். குடும்ப செபங்களில் ஆர்வமுடன் பங்கேற்றார். பல்வேறு மொழிகளை கற்றுக்கொண்டு கவிதைகள் இயற்றினார்.


      ராபர்ட் பெல்லார்மின் 1560ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் நாள் இயேசு சபையில் சேர்ந்தார். இறையியல் கற்று கருவாக அருள்பொழிவு பெற்றார். பல்கலைக்கழகத்தில் ஏழு ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார். தப்பறைகளுக்கு எதிராக குரல்கொடுத்தார். திருத்தந்தை 13ஆம் கிரகோரியாரின் அழைப்பு பெற்று குருமாணவர்களுக்கு ஆசிரியராக பணியாற்றினார். திருச்சபையின் வளர்ச்சிக்கு குடுமையாக உழைத்தார். திருச்சபையின் வளர்ச்சியை கண்முன் கொண்டு செயல்பட்டார். இறைவனின் கரம்பற்றி நடந்த ராபர்ட் பெல்லார்மின் 1598ஆம் ஆண்டு ஆயராகவும், 1599ஆம் ஆண்டு கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார். இறைவன் காட்டிய பாதையில் பாதங்கள் பதராமல் பயணம் செய்து 1621ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment