Saturday 1 September 2018

புனித தோமஸ் அக்குவினாஸ்

புனித தோமஸ் அக்குவினாஸ் செல்வாக்கு மிகுந்த பிரபு குடும்பத்தில் பிறந்தவர். உலகம் அதன் இன்பகளையும் துறந்து டொமினிக் துறவற சபையில் சேர்ந்து இரந்து உண்ணும் துறவியாக மாறினார். இச்செயல் அவரது குடும்பத்தினர் அவமானச் செயலாக கருதினர். அக்குவினாஸிடம் துறவு வாழ்வை கைவிட்டு வீட்டிற்குத் திரும்பிவருமாறு கட்டாயப்படுத்தினர். அவர் மறுத்தபோது அவரின் தூய்மை மிகுந்த துறவற வாழ்வை களங்கப்படுத்த தீர்மானித்து இரண்டு வருடம் அவரை ஒரு அறையில் அடைத்து வைத்தனர். இத்தருணத்தில் அக்குவினாஸிடம் சிறிதளவும் உலக இன்பங்களுக்கான தாகம் ஏற்படவில்லை. அவருடைய சகோதரர்கள், அக்குவினாஸ் இருந்த அறையில் வேசிப்பெண் ஒருவரை அனுப்பினர். அக்குவினாஸ் தீ மிகுந்த விறகு துண்டால் அப்பெண்னை அடித்து விரட்டினார். பின் நாட்களில் மேன்மேலும் புனிதத்தன்மையில் சிறந்து விளங்கினார். இறைஞானத்தின் தத்துவங்கள் பற்றி பல நூல்கள் எழுதினார். நேப்பில்ஸ் என்ற இடத்தில் ஒருமுறை சிலுவையில் இருந்து, “தோமஸ், நீ என்னைப்பற்றி நன்றாக எழுதுகின்றாய். அதற்குப் பதிலாக உனக்கு என்ன வேண்டும்?” என்ற குரல் கேட்டார். தோமஸ், “ஆண்டவரே உம்மையன்றி வேறு எதுவும் எனக்கு வேண்டாம்” என்று கூறினார்.


No comments:

Post a Comment