Friday 14 September 2018

புனித நோட்பர்கா

     ஏழை எளிய மக்களிடத்தில் அன்பும் அக்கறையும் கொண்டு ஆதரவும் காட்டியவர். நற்செயல்கள் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தியவர். துன்பத்தின் மத்தியில் இறைவனை இரக்கத்திற்காக வேண்டய இறையருள் பெற்றவர்.  நோயுற்று துன்புற்ற வேளையில் இறைவனை தஞ்சம் என்று வாழ்ந்தவரே புனித நோட்பர்கா. இவர் ஆஸ்ட்ரியாவில் ராட்டன்பார்க் என்னுமிடத்தில் 1265ஆம் ஆண்டு ஏழைமையான குடும்பத்தில் பிறந்தார். ராட்டன்பார்க் வாழ்ந்த செல்வந்தர் ஹென்றி என்பவரது வீட்டில் சமையல் வேலைகள் செய்தார். வறுமையில் வாழ்ந்தாலும் அன்பிலும் பணிவிலும் இறைபக்தியிலும் சிறந்து விளங்கினார். வீட்டில் மீதமுள்ள உணவுகளை வீணாக்காமல் ஏழை மக்களுக்கு கொடுப்பதில் ஆனந்தம் அடைந்தார். பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவு கொடுப்பது இறைபணியாக கருதினார்.

    நோட்பர்காவின் இறைபணியை வீட்டு தலைவி விரும்பவில்லை. ஏழைகளுக்கு மீதமுள்ள உணவுகளை கொடுப்பதற்கு கண்டித்தார். மீதமுள்ள உணவுகளை பன்றிகளுக்கு கொட்ட கட்டளையிட்டார். தனக்குரிய உணவுகளை சேமித்துவைத்து ஏழை மக்களுக்கு கொடுத்தார். ஒருமுறை ஏழைகளுக்கு உணவு கொண்டு செல்லுகையில் நோட்பர்காவை வீட்டு எஜமான் வழியில் பார்த்தார். அது என்ன என்று வினவி அவற்றை காண்பிக்க கூறனார். நோட்பர்கா இறைவனிடம் வேண்டுதல் செய்தப் பின் எஜமானிடம் உணவு பொருட்களை காட்டினார். இறைவல்லமையால் உணவு மரத்துண்டுகளாக மாறின. இறைவனே தஞ்சம் என்று வாழ்ந்தார். திருப்பலியில் பங்கேற்று நற்கருணை ஆண்டவரை இதயத்தில் சுமந்து வாழ்ந்த நோட்பர்கா 1313ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment