Wednesday 31 October 2018

புனித அல்போன்சுஸ் ரொட்ரிகுவஸ்

   இதயத்தில் இறைவார்த்தையையும், கரங்களில் செபமாலையும், அன்பை ஆயுதமாகவும், எளிமையை வாழ்வின் அடித்தளமாகவும் கொண்டு, “இதோ வருகிறேன் ஆண்டவரே” என்றுகூறி இறைவனுக்காக அயராது இறைபணி செய்தவரே புனித அல்போன்சுஸ் ரொட்ரிகுவஸ். இவர் ஸ்பெயின் நாட்டில் 1532ஆம் ஆண்டு ஜøலை திங்கள் 25ஆம் நாள் பிறந்தார். குழந்தைப்பருவம் முதலே ஆன்மிக வாழ்வில் கவனம் செலுத்தினார். நாள்தோறும் திருப்பலியில் பங்கேற்றார்.

        அல்போன்சுஸ் தமது 26ஆம் வயதில் மரியா ஃபிரன்சிஸ் சுவாரஸ் என்ற இளம் பெண்ணை திருமணம் செய்தார். மூன்று குழந்தைகளுக்கு தந்தையானார். திடீரென மனைவியும் மூன்று பிள்ளைகளும் இறந்தனர். இந்நிகழ்வுகள் அவரை கிறிஸ்துவோடு ஒன்றிணைத்தது. தமது 50ஆம் வயதில் இயேசு சபையில் துணை சகோதரராக சேர்ந்தார். உலக இன்பங்களை துறந்தார். இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்தார். தன்னொடுக்க முயற்சிகளில் ஈடுப்பட்டு தன்னை புனிதப்படுத்தினார். “இறைவனை நான் முழுமையாக அன்பு செய்தால் எனக்கு என்னுடையது, என்று எதுவும் இருக்க முடியாது” என்றுகூறிய அல்போன்சுஸ் மயோர்கா தீவில் கல்லூரியில் வாயிற் காப்பாளராக பணியாற்றினார்.

     தனது நற்பண்புகளினால் அனைவரின் அன்புக்கு பாத்திரமானார். துன்பத்தில் இருப்போருக்கு ஆறுதல் கூறினார். இருளில் இருப்பவர்களை உலகின் ஒளியான கிறிஸ்துவிடம் அழைத்து வந்தார். அடிமைகளாக விற்க்கப்பட்ட மக்களின் ஆன்மாவைக் குறித்து கவலைப்பட்டார். அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடினார். அன்னை மரியாவின் துணை நாடினார். “அன்னை மரியா என்னிடம் என்ன விரும்புகின்றார்களோ அதுதான் என் விரும்பம்” என்று வாழ்ந்த அல்போன்சுஸ் ரொட்ரிகுவஸ் 1617ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் இறந்தார். திருத்தந்தை 13ஆம் சிங்கராயர் 1888ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாள் இவரை புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.

Tuesday 30 October 2018

புனித ஜெரார்டு மஜெல்லா

    நற்கருணையில் கிறிஸ்து மறைந்திருக்கிறார். எனது அயலானில் கிறிஸ்துவைக் காண்கிறேன்
என்றுகூறி வாழ்நாள் முழுவதும் இறைபிரசன்னத்தில் வாழ்ந்தவர். இறைவனையும், அன்னை மரியாவையும் அளவில்லாமல் அன்பு செய்தவரே புனித ஜெரார்டு மஜெல்லா. இவர் தென் இத்தாலியில் நேப்பிள்ஸ் முரோ என்னுமிடத்தில் 1726ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள் பிறந்தார். ஐந்து வயது முதல் ஆலயத்திற்கு தினந்தோறும் தன் தாயுடன் திருப்பலிக்கு செல்வது வழக்கம்.

          ஒருமுறை தனது தாயுடன் ஆலயத்தில் சென்று திருப்பலியில் பங்கேற்று, நற்கருணை அருந்த வரிசையில் நின்றார். குருவானவர் மஜெல்லாவிற்கு 10வயது பூர்த்தியாகக் காரணத்தால் நற்கருணை வழங்கவில்லை. கவலையோடு வீடுதிரும்பினார். மஜெல்லாவை அன்பு செய்த இயேசு அவரது கவலையைப்போக்க விரும்பினார். அன்றிரவு மிக்கேல் அதிதூதர் தூக்கத்திலிருந்த மஜெல்லாவை எழுப்பினார். தான் கொண்டு வந்த நற்கருணையை வழங்கினார். மஜெல்லாவும் பக்தி ஆதரவோடு நற்கருணை பெற்றுக்கொண்டார்.

         இறைவனை முழுமையாக நம்பினார். பகல் முழுவதும் வேலை செய்தார். இரவு முழுவதும் ஆலயத்தில் சென்று செபித்தார். இவரது தியாக வாழ்வைக் கண்ட மக்கள் சிலர் இவரை ‘வாழ்கின்ற புனிதர்’  என்று கூறினர். “நான் ஒரு புனிதனாவதற்காகச் செல்கிறேன்” என்றுகூறி இரட்சகர் சபையில் சேர்ந்தார். 1752ஆம் ஆண்டு ஜøலை 16இல் கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்ற வார்த்தைப்பாடுகளுடன் இறைவனுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். எளிய பணிகள் செய்து எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக மாறினார்.

            தனது அறையில் பெரிய சிலுவை ஒன்றை வைத்தார். சிலுவையில்  இயேசுவே  காயங்களை உற்றுநோக்கி தியானித்தார்.  கட்டிலில் கூர்மையான கல்லும், முள், ஆணி, வைக்கோல் போன்றவைகளைப் பரப்பி அதன்மீது படுத்து உறங்கினார். தலையணைக்குப் பதிலாக இரண்டு செங்கற்களை வைத்துக் கொண்டார். இயேசுவே, அம்மா மரியே என்று அழைத்தவாறு 1755ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் இயற்கை எய்தினார். திருத்தந்தை 10ஆம் பத்திநாதர் 1904ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.

Monday 29 October 2018

புனித நார்சிசுஸ்

      இறைவனோடு உறவு கொண்டு, புனிதம் மிகுந்த வாழ்க்கை வழியாக பிளவுபட்டு வாழ்ந்த மக்களிடத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தினார். இறையன்பிலும் பிறரன்பிலும் வளர்ந்து இறைபணியிலும் சமூகபணியிலும் சிறந்து விளங்கினார். குழந்தைப்பருவம் முதல் ஆன்மிக வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மக்கள் மத்தியில் சிறந்து மாமனிதராக, வாழும் புனிதராக வாழ்ந்தவரே புனித நார்சிசுஸ். இவர் எருசலேமில் 99ஆம் ஆண்டு பிறந்தார்.  

          இறைவார்த்தையை வாசித்து தியானித்து வாழ்வாக்கியபோது கிறிஸ்துவின் இறையாட்சி பணி அவரில் வேரூன்றி வளர்ந்தது. இறைவார்த்தை வழியாக தனது இறையழைத்தலை உணர்ந்துகொண்டார். குருவாக அருள்பொழிவு பெற்று இறையாட்சி பணியை ஆரம்பித்தார். இயன்றவரை இறைமக்களை அன்பு செய்தார். மக்களின் ஆன்மிக தேவைகளை நிறைவேற்றினார். மக்கள் மத்தியில் புனிதராக வாழ்ந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை  பிரதிபலித்தார்.

        இறைவனின் அன்பை நற்செயல்கள் வழியாக பகிர்ந்தளித்தார். நிலைவாழ்வு தரும் இறைவார்த்தையை மறையுரை வழியாக பரைசாற்றினார். தனது செல்லிலும் செயலிலும் கிறிஸ்துவை பிரதிபலித்த நார்சிசுஸ் 180ஆம் ஆண்டு எருசலேமின் 30வது ஆயராக அருள்பொழிவு பெற்றார். பாலஸ்தீனத்தில் நடைப்பெற்ற ஆயர்களின் மாநாட்டிற்கு தலைமை ஏற்று சிப்பாக வழி நடத்தினார். உயிர்ப்பு திருவிழா ஞாயிற்று கிழமை கொண்டாடுகின்ற முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

       ஒருமுறை உயிர்ப்பு திருவிழாவின்போது ஆலயத்தில் உள்ள விளக்குகளில் போதுமான அளவு எண்ணெய் இல்லை. இத்தருணத்தில் தண்ணீரை எண்ணெயாக மாற்றினார். இறைபணியில் ஏற்றபட்ட தடைகளை இறை வேண்டுதலால்  வெற்றி படிகளாக மாற்றினார். தனக்கு எதிராக குற்றம் சுமத்தியவர்களை முழுமனதுடன் மன்னித்து அன்பு செய்து, ஆசிமழை பொழிந்த நார்சிசுஸ் 116ஆம் வயதில் 216ஆம் இயற்கை எய்தினார்.    

Saturday 27 October 2018

புனித சீமோன், புனித யூதா

    புனித சீமோன் என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர். இவர் கானான் நாட்டில்   பிறந்தார். இவரை தீவிரவாதியாய் இருந்த சீமோன் என்று அழைத்தனர். இறைகட்டளைகளை பின்பற்றுவதிலும், பாவத்தை எதிர்த்து போராடுவதிலும், இறைவனிடம் மக்களை கொண்டு சேர்ப்பதிலும் ஆர்வமுடன் உழைத்தார்.

       பரசீக நாட்டில் கிறிஸ்துவின் நற்செய்தியை ஆர்முடன் அறிவித்தார். கி.பி 67ஆம் ஆண்டு உரோமில் தலைகீழாக சிலுவையில், இரத்தசாட்சியாய் இறந்தார். இவர் மரம் வெட்டுவோர், கரியர்கள் ஆகியோரின் பாதுகாவலர்.                                                                                 

        புனித யூதா என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர். சின்னயாக்கோபின் சகோதரர், இயேசுவின் உறவினர். தூய ஆவியை பெற்றுக்கொண்ட பின் யூதேயா, சமாரியா, இதுமேயா, சரியா, மெசபொத்தோமியா மற்றும் லீபியா போன்ற இடங்களில் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார். 

     புனித யூதா எழுதிய நிரூபம் மிகச் சிறியதாக இருந்தாலும் மிகப் பயனுள்ள கருத்துக்களை உள்ளடக்கியது. 67ஆம் ஆண்டு லெபனான் நாட்டில் கோடாரியினால் வெட்டப்பட்டு இரத்தச்சாட்சியாய் இறந்தார். இவர் கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலர்.

Friday 26 October 2018

அன்னை மரியா, புனித பியோ

 புனித பியோ அன்னை மரியாவின்மீது மிகுந்த அன்பு கொண்டு, அதிக நேரம் அன்னை மரியாளைப் புகழ்ந்து போற்றினார். ஒருமுறை ஒரு எழுத்தாளர் அவரிடம், “உங்கள் வாழ்வில் அன்னை மரியின் பங்கு என்ன?” என்று கேட்டார். அதற்குத் தந்தை பியோ,“என்னில் செயலாற்றும் அதிசய ஆற்றலுக்கும், அருட்கொடைகளுக்கும், ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றும் அற்புத ஆற்றலுக்கும், வானதூதர்களோடு நட்புடன் உரையாடுவதற்கும் காரணம், அன்னை மரியாவின் அருட்கரம் என்மீது செயலாற்றுவதே” என்று பதிலளித்தார்.

         1959ஆம் ஆண்டு பாத்திமா அன்னையின் சொரூபம் ரெட்டோன்போ ஆசிரமத்திற்கு கொண்டு வரப்பட்டது. பியோ, அன்னைக்கு தங்கச் செபமாலை ஒன்றை அணிவித்தபோது, நோயின் காரணமாக சோர்ந்து கீழே விழுந்தார். ரொட்டோன்டோ ஆசிரமத்திலிருந்த அன்னையின் திருசொரூபம் ஹெகாப்டர் மூலமாக எடுத்துச் சென்றனர். அப்போது தந்தை பியோ, என் அன்பு அன்னையே நீ இத்தாலிக்கு வரும்போது உம் மகனாகிய நான் நோயுடன் துடிப்பதை நீ அறிவாய். இப்போதும் நான் துன்பப்படுவதை நீ காண்கிறாய். அம்மா! நீங்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் இந்த தருணத்திலாவது உன் மகனை கடைக்கண்நோக்கி பார்க்கமாட்டாயா என்று வேதனையோடு கதறி அழுதார்.  அப்போது அன்னையின் சொரூபத்தோடு ஆசிரமத்திற்கு மேல் பறந்து சென்ற விமானம் மூன்று முறை ஆசிரமத்தை வட்டமடித்தது. அந்நேரம் இறையொளி அவரில் ஊடுருவிச் சென்று உடலிருந்த புற்றுக்கட்டி மறைந்து குணமடைந்தார். 

            அன்னை மரியாவின் அன்பு அளவு கடந்தது. தம் மகனை நமக்காகப் பலியாகத் தருகின்ற அளவுக்கு ஆழமானது. எனவே, “அன்னையின் அன்பு இதயத்தில் உங்கள் செவிகளை வைத்துக்கொள்ளுங்கள். அன்னை மரியாவின் ஆலேசனைக்கு செவிகொடுங்கள்” என்று கூறினார். ஒரு நாளைக்கு 35 முறை 153 மணி  செபமாலை சொல்லுவார். அனைத்து மக்களிடமும், “அன்னை மரியாளை அன்பு செய்யுங்கள். அன்றாடம் செபமாலை செபியுங்கள். உலகத்தின் தீமைகளை வெல்ல அதுதான் சிறந்த ஆயுதம். மேலும் கடவுள் கொடுக்கும் அனைத்து வரங்களுமே அன்னை மரியாவின் வழியாக வருகின்றன” என்று கூறினார். அன்னையின் அன்பில் மெழுகாகக் கரைந்த தந்தை பியோ அன்றாடம் ஆசிரமத்திலுள்ள அன்னை மரியாவின் திருசொரூபம் முன்பாக முழந்தாள்படியிட்டு, கரங்களை விரித்தவாறே செபித்து வந்தார்.

Thursday 25 October 2018

புனித கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான்

   இயேசு கிறிஸ்துவின் உயிருள்ள வார்த்தையை வாழ்வாக்கி, செபமும், கடின உழைப்பையும் படிகற்களாக மாற்றி, இறையாட்சி பணியின் வழியாக இறையன்பின் ஒளியாக சுடர்வீசியவர்கள் புனித கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான். உரோமை நகரில் செல்வந்த குடும்பத்தில் 3ஆம் நூற்றாண்டு பிறந்தார்கள். இருவரும் ஒருதாய் பிள்ளைகள் என்று நம்பப்படுகிறது. இவரது பெற்றோர் சமூகத்தில் மதிப்பும், மாண்பும், செல்வாக்கும் பெற்றவர்கள்.

             நற்செய்தியின் மீதான ஆர்வத்தின் மிகுதியாலும், இறையாட்சி பணி ஈடுபாட்டினாலும் செல்வாக்கு மிகுந்த வாழ்வை கைவிட்டு கிறஸ்துவை ஒப்பற்ற செல்வமாக ஏற்றுக்கொண்டனர். கிறிஸ்துவின் இறையாட்சி பணியை தங்களது பணியாக ஏற்றுக்கொண்டனர். அழியா நிலைவாழ்வு தரும் இறைவார்த்தையை வாழ்வாக்கி சான்று பகர்ந்திட பிரான்ஸில் சொய்சோன் பகுதிக்கு சென்று தங்களது இறைபணியை ஆரம்பித்தனர். பிரான்ஸில் சொய்சோன் பகுதியில் பாதணி தயாரிக்கும் மக்களில் ஒருவராகவே மாறினர். அம்மக்களோடு இணைந்து பாதணி தயாரிக்கும் வேளையில் ஈடுப்பட்டனர். இயேசுவின் நெஞ்சுக்கு நெருக்கமாக மாறினர். தோழமை உணர்வில், மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து இறைபணி கிறிஸ்துவை அறிவித்தனர்.  

         உரோமையின்  டயோக்கிளிசியன் பேரரசனின் ஆளுநன் மாக்சிமியான் கிறிஸ்துவ மக்களை கொடூரமான முறையில் துன்புறுத்தி மகிழ்ந்தான். கிறிஸ்தவர்களை அடியோடு அழிக்க ஆவல் கொண்டான். பாதணி தொழில் செய்து, கிறிஸ்துவை போதித்து வந்த கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்து கிறிஸ்துவை மறுதலிக்க துன்புறுத்தினர். அவர்கள், “எங்களது வாழ்க்கை கிறிஸ்துவுக்காகவே. நாங்கள் இறந்தாலும் அது எங்களுக்கு ஆதாயமே.  கிறிஸ்துவுக்காக இறப்பதில் மன மகிழ்ச்சி அடைகிறோம்” என்றனர். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த மாக்சிமியன் கிறிஸ்துவை மறுதலிக்க வற்புறுத்தினான். கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்த கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான் இருவரையும் தலைவெட்டி கொன்றனர். கிறிஸ்துவுக்காக தங்கள் இன்னுயிரை கையளித்து கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான் மறைசாட்சியானார்கள்.

Wednesday 24 October 2018

செபமாலை அன்ன

   அனுதினமும் செபமாலை செபிக்கும்போது அன்னை மரியாளோடு நம் இதயம் இயேசுவின் மறையுண்மைகளை நோக்கிப் பயிற்சி பெறுகின்றது. செபமாலைத் தியானத்தில் நாம் ஒவ்வொரு மறையுண்மைகள் வழியாக இறைமகன் இயேசுவின் மீட்புச்செயலை தியானிக்கின்றோம். இறைவனின் மீட்புத்திட்டத்தில் கன்னி மரியாள் எவ்வாறு தன்பங்களிப்பை வழங்குகின்றாள் என்பதைத் தியானிக்கின்றோம். மீட்புச் செயலை முன்னெடுத்துச் செல்லும் திருச்சபையில் அன்னை மரியாவின் பங்களிப்பையும் பரிந்துரையையும் தியானிக்கின்றோம்செபமாலையின் மலர்கள் என்றும் அழுகிப்போகாது” என்கிறார் திருத்தந்தை 12ம் பத்திநாதர் - திருத்தந்தை இரண்டாவது அருள் சின்னப்பர் “கன்னி மரியாவுக்கு மிகவும் பிரியமான செபம் செபமாலை” என்கின்றார் - திருத்தந்தை 16ம் பெனடிக்ட் “மாலை நேரத்தில் செபமாலை செபிக்கும் குடும்பம் எவ்வளவு அழகானது” என்கிறார்.

       செல்லஸின் மடாதிபதி என்பவர் “அன்னை மரியா அருட்கொடைகளின் இருப்பிடம்.  அனைவரும் அன்னையிடம் செபிக்க வேண்டும். ஏனெனில் உலகமும் மனித இனம் முழுவதும் மாமரியிடம் மன்றாட வேண்டும். ஏனெனில் நாம் எதிர்நோக்கும் எல்லா நன்மையும் அன்னையின் கரங்கள் வழியாகவே பெற்றுக் கொள்கிறோம்” என்று கூறுகிறார். 13ஆம் நூற்றாண்டில் நன்மைகள் குறைந்து தீமைகள் பெருகியகாலம். தீமைகள் விளைவிக்கும் கொள்கைகள் நிறைந்த ஆல்பிஜென்ஸிய தப்பறை தலைதூக்கியது. இத்தப்பறைக்கு எதிராகக் குரல் கொடுக்க புனித சாமிநாதரை திருத்தந்தை மூன்றாம் இன்னசென்ட் அவர்கள் நியமித்தார். புனித சாமிநாதரின் போதனைகள் பலன் அளிக்கவில்லை. புனித சாமிநாதர் துலூஸ் நகருக்கு அருகிலுள்ள காட்டிற்குச் சென்று கண்ணீரோடு அன்னையிடம் உதவிக்காகவும், இறைவன் மக்களின் பாவங்களை மன்னிக்கவும் மன்றாடினார். தனது உடலை சாட்டையால் அடித்துக்கொண்டார்.  மக்களைப் புனிதப்படுத்தத் தன்னைப் புனிதப்படுத்தினார்.
     
புனித அந்தோணி மரிய கிளாரட்

மரியா என் தாய், என் பாதுகாவலி, என் எஜமானி, என் வழிகாட்டி,என் ஆறுதல், என் பலம், என் அடைக்கலம் என்றுகூறி அன்னையிடம் மிகுந்த அன்பும் பற்றும் கொண்டவர். இறைவனின் மாட்சிக்காகவும், அயலானின் மீட்புக்காகவும், விசுவாசிகளின் நல்வழிகாட்டியாகவும் மாறியவர். இறைவார்த்தையில் ஆழ்ந்த பற்றும், இறைவார்த்தை வழியாக தான் யார் என்பதையும், எதற்காக வாழவேண்டும் என்பதையும் நன்கு உணர்ந்து இறைவனின் திருவுளம் நிறைவேற்றியவரே புனித அந்தோனி மரிய கிளாரட். இவர் ஸ்பெயின் நாட்டில் கட்டலோனியா என்னும் இடத்தில் 1807ஆம் ஆண்டு நெசவு தொழிலாளியின் மகனாகப் பிறந்தார்.

    கிளாரட் சிறுவயது முதல் இறைபக்தியில் வளர்ந்தார். ஓய்வு நேரங்களை நன்கு பயன்படுத்தினார். தினந்தோறும் ஆலயம் சென்று திருப்பலியில் பங்கேற்றார். என்னுடைய இதயத்தில் இயேசு எப்போது வருவார் என்று தன்னிடம் கேட்டுக்கொள்வார். கறைபடாத, களங்கமற்ற உள்ளத்தோடும், பக்தியோடும் தனது பத்தாம் வயதில் முதல் முறையாக நற்கருணை நாதரை தனது இதயத்தில் ஏற்றுக்கொண்டார். “இயேசுவே நீர் என்னை ஒரு புனிதனாக மாற்றும்” என்று செபித்தார். பக்தியும் புத்தியும் மிகுந்த கிளாரட் இறைவன் தன்னை அழைப்பதை உணர்ந்து கொண்டார். இறைவனுக்காக இறையாட்சி பணி செய்யவும், கர்த்தூசியன் துறவியாகும் எண்ணத்துடன் பார்சலோனாவை விட்டு கிளம்பி விக் என்ற இடத்தில் இருந்த மடத்தில் 1826ஆம் ஆண்டு சேர்ந்தார். 1835ஆம் ஆண்டு ஜøன் 13ஆம் நாள் குருவாக அருள்பொழிவு பெற்றார்.

   இறையன்பின் பணியாளராக கிறிஸ்துவின் அன்பை பற்பல பணிகள் வழியாக பகிர்ந்தளித்தார். அன்னை மரியாவிடம் பல மணிநேரம் செபித்தார். இரவு காலங்களில் நற்கருணை நாதரே தஞ்சம் என்று வாழ்ந்தார். இறைவார்த்தையை தியானிக்கும்போது அமைதியாக அமரமுடியாத அளவுக்கு அன்புத் தீ அவரில் எரிந்தது. “இறைவா! உமது திருவுளம் என்னவென்று எனக்குக் காண்பியும்! அதை நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்” என்றுகூறி, ஆன்மாக்களை மீட்க ஆர்வமாக உழைத்தார். ஆன்மாக்களை இறைவனிடம் கொண்டு வருவதையே தனது இலக்காக கொண்டார். மக்களது இதயத்தில் கிறிஸ்துவின் ஆட்சியை ஏற்படுத்த நூல்கள் பல எழுதினார். 1849ஆம் ஆண்டு ஜøலை 16ஆம் நாள் கிளரீசியன் சபையைத் தோற்றுவித்தார்.

புனித அந்தோனி மரிய கிளாரட்

     “ஒவ்வொரு நாளும் மரியே நான் உங்கள் பிள்ளையென்பதையும், நீங்கள் என் தாயென்பதையும் மறந்துவிட வேண்டாம். எனது கற்பைக் காத்துக் கொள்ளுங்கள்” என்று செபித்தார். சந்தியாகோ பேராயராக 1850ஆம் ஆண்டு திருப்பொழிவு பெற்றார். இக்கட்டு இடையூறுகளில் செபத்தின் வழியாக ஆறுதல் அடைந்தார். மறையுரையின் போதும் திருப்பலியின் போதும் இறையொளி அவரை சூழ்ந்திருப்பதை மக்களால் பார்க்க முடிந்தது. 1869ஆம் ஆண்டு உரோமை சென்று முதல் வத்திக்கன் சங்கத்தில் பங்குகொண்டார். இரவு பகலாக எப்பொழுதும் கிறிஸ்துவை இதயத்தில் சுமந்த, அந்தோனி மரிய கிளாரட் நோயுற்று 1870ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் உயிர்நீத்தார். திருதந்தை 12ஆம் பத்திநாதர் 1950ஆம் ஆண்டு மே திங்கள் 7ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். இவர் துணிவியாபாரிகளின் பாதுகாவலர். திருநாள் அக்டோபர் 24ஆம் நாள்

Sunday 21 October 2018

புனித கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான்

    இயேசு கிறிஸ்துவின் உயிருள்ள வார்த்தையை வாழ்வாக்கி, செபமும், கடின உழைப்பையும் படிகற்களாக மாற்றி, இறையாட்சி பணியின் வழியாக இறையன்பின் ஒளியாக சுடர்வீசியவர்கள் புனித கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான். உரோமை நகரில் செல்வந்த குடும்பத்தில் 3ஆம் நூற்றாண்டு பிறந்தார்கள். இருவரும் ஒருதாய் பிள்ளைகள் என்று நம்பப்படுகிறது. இவரது பெற்றோர் சமூகத்தில் மதிப்பும், மாண்பும், செல்வாக்கும் பெற்றவர்கள்.

             நற்செய்தியின் மீதான ஆர்வத்தின் மிகுதியாலும், இறையாட்சி பணி ஈடுபாட்டினாலும் செல்வாக்கு மிகுந்த வாழ்வை கைவிட்டு கிறஸ்துவை ஒப்பற்ற செல்வமாக ஏற்றுக்கொண்டனர். கிறிஸ்துவின் இறையாட்சி பணியை தங்களது பணியாக ஏற்றுக்கொண்டனர். அழியா நிலைவாழ்வு தரும் இறைவார்த்தையை வாழ்வாக்கி சான்று பகர்ந்திட பிரான்ஸில் சொய்சோன் பகுதிக்கு சென்று தங்களது இறைபணியை ஆரம்பித்தனர். பிரான்ஸில் சொய்சோன் பகுதியில் பாதணி தயாரிக்கும் மக்களில் ஒருவராகவே மாறினர். அம்மக்களோடு இணைந்து பாதணி தயாரிக்கும் வேளையில் ஈடுப்பட்டனர். இயேசுவின் நெஞ்சுக்கு நெருக்கமாக மாறினர். தோழமை உணர்வில், மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து இறைபணி கிறிஸ்துவை அறிவித்தனர்.  

         உரோமையின்  டயோக்கிளிசியன் பேரரசனின் ஆளுநன் மாக்சிமியான் கிறிஸ்துவ மக்களை கொடூரமான முறையில் துன்புறுத்தி மகிழ்ந்தான். கிறிஸ்தவர்களை அடியோடு அழிக்க ஆவல் கொண்டான். பாதணி தொழில் செய்து, கிறிஸ்துவை போதித்து வந்த கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்து கிறிஸ்துவை மறுதலிக்க துன்புறுத்தினர். அவர்கள், “எங்களது வாழ்க்கை கிறிஸ்துவுக்காகவே. நாங்கள் இறந்தாலும் அது எங்களுக்கு ஆதாயமே.  கிறிஸ்துவுக்காக இறப்பதில் மன மகிழ்ச்சி அடைகிறோம்” என்றனர். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த மாக்சிமியன் கிறிஸ்துவை மறுதலிக்க வற்புறுத்தினான். கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்த கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான் இருவரையும் தலைவெட்டி கொன்றனர். கிறிஸ்துவுக்காக தங்கள் இன்னுயிரை கையளித்து கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான் மறைசாட்சியானார்கள்.

Friday 12 October 2018

புனித புளோரா

        புனித புளோரா சிறு வயதிலிருந்தே பக்தியில் வளர்த்தனர். இவர் வளர்ந்த பின்னர், இவரின் பெற்றோர், இவரை திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த புளோரா பெற்றோரை எதிர்த்தார். தான் பிறந்த வீட்டைவிட்டு வெளியேறி, தாதியர் படிப்பைப் படிக்க சென்றார். 1324 ஆம் ஆண்டில் ஜெருசலேம் புனித ஜான் மருத்துவ பள்ளியில் தனது படிப்பை முடித்தார். பிறகு அவர் பல சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டார். மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டார். பிறகு துறவறத்தைச் சார்ந்த அருட்சகோதரிகளால் கவனிக்கப்பட்டு, கடவுளின் அருளால் குணம் பெற்றார்.

        புளோரா பலமுறை இறைவனிடமிருந்து காட்சிகளைப் பெற்றார். ஒருமுறை அனைத்துப் புனிதர்களின் விழாவன்று, சுவையான உணவுகளை உண்ணமாட்டேனென்றும், கடவுளின் அருளை மேலும் பெற, உண்ணா நோன்பு இருப்பேனென்றும், தனக்குள் உறுதி எடுத்துக்கொண்டார். இயேசுவின் திருக்காயங்களிலிருந்து வழிந்தோடிய, திரு இரத்தத்தைப்போலவே, இவரின் கைகளிலிருந்தும், வழிந்தோடியது என்று கூறப்படுகின்றது. 
  
     இறைவனிடமிருந்து பெற்ற தீர்க்கதரிசனத்தால் எதிர் காலத்தில், என்ன நடக்க உள்ளது என்பதை, முன்னதாகவே அறிவித்தார். இவர் எளிமையான வாழ்வை வாழ்ந்தார். இயேசுவின் திருவுடலைப் பெற்றபின், தாழ்ச்சியோடு, தன்னை அவரிடம் அர்ப்பணித்தார். இறைபக்தியையும், விசுவாசத்தையும் கண்டு, இவரை பலர், தங்களது ஆன்மீக வழிகாட்டியாகத் தேர்த்தெடுத்தனர்.

Thursday 11 October 2018

புனித 23ஆம் அருளப்பர்

       “தான் திருமுழுக்கின் வழியாக பெற்ற புனிதத் தன்மையை என்றுமே இழந்ததேயில்லை” என்று கூறியவர். தூய ஆவியால் வழிநடத்தப்பட்டவர்; மக்களின் திருத்தந்தை;  அவனில் அமைதி ஏற்படுத்தியவர்; மனித மாண்பு மிகுந்தவர்; அன்பானவர்; புனிதமானவர்;  கிறிஸ்தவ ஒன்றிப்பின் முன்னோடி; நகைச்சுவை நாயகன்; திருச்சபையின் மேலாண்மையை உலகிற்கு உணர்த்தியவர்; மக்களின் இன்னல்களை நீக்கி இறை ஆசீர் பெற்றுக் கொடுத்தவரே புனித 23ஆம் அருளப்பர். இவர் இத்தாலி நாட்டில் 1881ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் பிறந்தார்.  குழந்தைப்பருவம் முதல் விசுவாசக் கோட்பாடுகளை முறையாகக் கற்று பக்தியில் சிறந்து விளங்கினார். அன்னை மரியாளிடம் மிகுந்த பக்தி கொண்டவர். ஆன்மீக வாழ்வில் ஆர்வம் கொண்டு தினந்தோறும் ஆர்வமாக ஆலயம் சென்றார்.

           உலகில் நீதியையும் அமைதியையும் நிலைநாட்ட குருத்துவ வாழ்வைத் தேர்ந்தெடுத்தார். 1892ஆம் ஆண்டு பெர்கமோ என்ற குருத்துவக் கல்லூரியில் சேர்ந்து தனது குருத்துவப் படிப்பைத் தொடங்கினார். புனித பிரான்சிஸ் அசிசியாரின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு ஏழ்மையையும் தூய்மையையும் கடைப்பிடித்து வந்தார். 1904ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 10ஆம் நாள் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். துன்பப்படுவோரையும், ஏழைகளையும் தேடிச் சென்றார். 1925ஆம் ஆண்டு புள்கேரிய நாட்டின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.  கீழ்படிதலும், அமைதியும் விருதுவாக்காக தேர்வு செய்தார்.

           1953ஆம் ஆண்டு வெனீஸ் நகரின் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். இளையோர்களை அளவில்லாமல் அன்பு செய்தார். ஆன்மீகப் பாதையில் வளர்ந்திட நல்வழிகாட்டினார். இளைஞர்களுக்காக ஆன்மப் பரிபாலனைக்காக ஒரு இல்லம் தொடங்கினார். ஏழைகளையும், ஆதரவற்றோரையும், துன்பப்படுவோரையும் அன்பு செய்தவர், 1958ஆம் ஆண்டு அக்டோர் திங்கள் 28ஆம் நாள் 23ஆம் அருளப்பர் என்ற பெயரில் திருத்தந்தையாக அருள்பொழிவுபெற்றார். திருச்சபையில் அன்பும், அமைதியும், ஒற்றுமையும், ஒழுங்கும் ஏற்படுத்தினார்.

       1963ஆம் ஆண்டு வெளியிட்ட “அவனில் அமைதி” என்ற சுற்று மடல் வழியாக தனி மனிதனின் மாண்பையும், சுதந்திரத்தையும் வலியுறுத்தினார். ஆழமான இறையன்பில் வளர்ந்து மக்களின் நலனுக்காகவே உழைத்தார். இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் திருச்சபையைப்பற்றியும், திருச்சபைக்கும் உலகுக்கும் இடையே உள்ள உறவுகள் பற்றியும் 16 ஏடுகள் வெளியிட்டது. இரண்டாம் வத்திக்கன் சங்கத்தின் முதல் அமர்விற்கு பின் 1963ஆம் ஆண்டு ஜøன் 3ஆம் நாள் இயற்கை எய்தினார்.

Wednesday 10 October 2018

புனித யோவான் லெயோனார்ட்

  மருத்துவ தொல் வழியாக ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தவர். கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்ட போது இறைவன் இறையாட்சி பணிக்காக அழைப்பதை உணர்ந்தார். இறைவனின் அழைப்பு ஏற்றுக்கொண்டவரே புனித யோவான் லெயோனார்ட். இவர் இத்தாலி நாட்டில் டயசிமோ என்னும் இடத்தில் 1541ஆம் ஆண்டு பிறந்தார்.

     சமூகத்தில் ஏழை எளிய மக்கள் மிது கரிசணை கொண்டு வாழ்ந்தார். தனது 31ஆம் வயதில் குருவாக அருள்பொழிவு பெற்று கிறிஸ்துவின் வழிகளில் நடந்தார். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய பொதுநிலையினரை ஒருங்கிணைத்து வழி காட்டினார். மருத்துவ மனைகளுக்கு சென்று நோயாளிகளை கவனித்துக்கொண்டார். சிறைப்பட்டாரை சந்தித்து நல் வழிகாட்டி அறிவுரை வழங்கினார். ஒப்புரவும் கொடுத்து கிறிஸ்துவின் அன்னை இரக்கத்தை பகர்ந்து கொடுத்தார். தேவையில் உள்ள மக்களுக்கு ஆன்மீகம் மற்றும் பொருள் உதவியும் செய்து கொடுத்தார்.

   1574ஆம் ஆண்டு மறைமாவட்ட குருக்குக்கென மரியன்னை பெயரில் சபை தொடங்கினார். பொதுநிலையினர் ஏராளமானோர் இச்சபையில் இணைந்தனர். நற்கருணை பக்தியை பரப்பினார். அன்னை மரியாவின் மீது பக்தி கொண்டு மக்களுக்கு அன்னை மரியாவிடம் செபமாலை செபிக்கவும், மரிய பக்தியில் வளரவும் மக்களுக்கு நல்வழி காட்டினார். குழந்தைகளுக்கு நல்வழிகாட்டினார். நற்செய்தி ஆவலுடன் அறிவித்தார். ஒவ்வொரு மக்களுக் இறைவனை தேட வேண்டும். தேடலின் வழியாக இறையருள் பெற்று வளமுடன் வாழ வழிகாட்டினார். 1609 பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

புனித பிரான்சிஸ் போர்ஜியா

    கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு குழந்தைப்பருவம் முதல் இறைபக்தியில் வளர்ந்து வந்தவர். துறவு வாழ்க்கை வழியாக இறைவனை மாட்சிப்படுத்தினார்.  பிரான்சிஸ் ஸ்பெயின் நாட்டு நீதிமன்றத்தில் நீதியரசராக இருந்தார். இவர் திருமணமானவர். இவரின் மனைவி எலியானோர் என்பவர். இவருக்கு எட்டு குழந்தைகள் இருந்தனர். இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்தனர். குடும்பத்துடன் இணைந்து, தவறாமல் திருப்பலிக்கு சென்றார். ஒவ்வொரு முறையும் திவ்விய நற்கருணையை மிக பக்தியோடு பெற்றார்.  அடக்கமான, அன்பான வாழ்வை வாழ்ந்தார்

     ஸ்பெயின் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சியடையும் விதமாக தனது சொத்துக்களையும், பதவியையும், தன் மகன் சார்லஸ்சிடம் ஒப்படைத்துவிட்டு, இயேசு சபையில் சேர்ந்து குருவானார். குருப்பட்டம் பெற்றபின், முதல் திருப்பலியை மிக ஆடம்பரமாக சிறப்பித்தார். பிரான்சிசின் எளிமையையும், தாழ்ச்சியையும் கண்டு, சபைத் தலைவரே தனது செயலை நினைத்து தலைக்குனிந்தார். பிரான்சிஸ் குருவாக இருந்தபோதும், காடுகளுக்குச் சென்று, விறகு பொறுக்கி கொண்டுவந்து, கொடுத்து, சமைப்பதற்கு எப்போதும் உதவினார். உணவு பந்தியில் தாழ்ச்சியோடு தன் கையால் அனைவருக்கும் உணவு பரிமாறினார். அதன்பின்னர் மண்டியிட்டு மற்ற குருக்களிடம் உணவு தருமாறு கெஞ்சிகேட்டு வாங்கி உண்டார்.

   இவருக்கு பல வழிகளில்  கோபமூட்டினர். ஆனால் பிரான்சிஸ் கோபம் கொள்ளாமல், அனைவரிடத்திலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் அன்பாகவே நடந்துக்கொண்டார். அவர் தனது குருத்து வாழ்வில் ஒரு முறை மட்டும் பிறர் தனக்கு மரியாதை கொடுத்த காரணத்திற்காக கோபப்பட்டுள்ளார். இவர் தனது வாழ்வு முறையால் இயேசு சபை ஸ்பெயின், மற்றும் போர்த்துக்கல் நாடு முழுவதிலும் பரப்பியது. இவரின் அற்புதமான, அழகான வேலையைக் கண்டு, அந்நாட்டு இளைஞர்கள் பலபேர். அச்சபையில் சேர்ந்து குருவாகி பிரான்சிசைப் போலவே வாழ்ந்தனர். இவரின் எளிமையான வாழ்வால், பலருக்கு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தார். இவரின் வழிகாட்டுதலில், இயேசு சபை உலகம் முழுவதிலும் பரவியது. இயேசுவின் இறைப்பணியை சிறப்பாக ஆற்றி  573ஆம்  ஆண்டு  இறந்தார்.

Monday 8 October 2018

oct.8. புனிதர்களான செர்ஜியுஸ் மற்றும் பாக்கஸ்

    கிறிஸ்துவின் போதனைகளை வாழ்வாக்கி நற்சான்று பகர்ந்தவர்கள். திறமையான போர்வீரர்கள் கிறிஸ்துவுக்காக துன்பங்களை துணிவுடன் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டவர்களே புனிதர்களான செர்ஜியுஸ் மற்றும் பாக்கஸ். இவர்கள் உரோமை நகரில் மூன்றாம் நூன்றாண்டில் வாழ்ந்தவர்கள். இருவமே மாக்கியானுஸ் போர் படையில் இராணுவ வீரர்களாக பணியாற்றியவர்கள். நற்பண்புகள் வழியாக பதவிகள் பல பெற்று சிறப்பான முறையில் தங்கள் கடமைகளை செய்து வந்தார்கள். 

   சகபோர் படைவீரர்கள் வழியாக கிறிஸ்துவின் போதனைகளை கேட்டார்கள். திருமுழுக்கு வழியாக கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டார்கள். கிறிஸ்துவின் நிலைவாழ்வுதரும் இறைவார்த்தையை தங்கள் வாழ்வின் நியமங்களாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்த தருணத்தில் படைவீரர்கள் ஒன்றிணைந்து ஜøபிடர் கோவிலுக்கு நுழைந்தார்கள். செர்ஜியுஸ் மற்றும் பாக்கஸ் கோவிலுக்குள் செல்லாமல் வெளியே நின்று கொண்டிருந்தார்கள். இந்நிகழ்வு கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட மக்கள் என்று சகபடை வீரர்கள் உணர்ந்துக்கொண்டனர். 

   இந்நிகழ்வினால் ஆளுநன் முன்பாக விசராணைக்காக நிறுத்தப்பட்டார்கள். விசராணையில் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட விவரம் தெரியவந்தது. ஆளுநன் முன்பாக கிறிஸ்துவை பெரும்மிதத்துடன் அறிக்கையிட்டார்கள். ஆளுநன் செர்ஜியுஸ் மற்றும் பாக்கஸ் மீது கோபம் கொண்டு துன்புறுத்தினான். கடுமையான துன்புறுத்தல்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். 303ஆம் ஆண்டு கிறிஸ்துவின் பொருட்டு மறைசாட்சியானார்கள். 

Sunday 7 October 2018

செபமாலையின் அன்னை மரியா

   அனுதினமும் செபமாலை செபிக்கும்போது அன்னை மரியாளோடு நம் இதயம் இயேசுவின் மறையுண்மைகளை நோக்கிப் பயிற்சி பெறுகின்றது. செபமாலைத் தியானத்தில் நாம் ஒவ்வொரு மறையுண்மைகள் வழியாக இறைமகன் இயேசுவின் மீட்புச்செயலை தியானிக்கின்றோம். இறைவனின் மீட்புத்திட்டத்தில் கன்னி மரியாள் எவ்வாறு தன்பங்களிப்பை வழங்குகின்றாள் என்பதைத் தியானிக்கின்றோம். மீட்புச் செயலை முன்னெடுத்துச் செல்லும் திருச்சபையில் அன்னை மரியாவின் பங்களிப்பையும் பரிந்துரையையும் தியானிக்கின்றோம்செபமாலையின் மலர்கள் என்றும் அழுகிப்போகாது” என்கிறார் திருத்தந்தை 12ம் பத்திநாதர் - திருத்தந்தை இரண்டாவது அருள் சின்னப்பர் “கன்னி மரியாவுக்கு மிகவும் பிரியமான செபம் செபமாலை” என்கின்றார் - திருத்தந்தை 16ம் பெனடிக்ட் “மாலை நேரத்தில் செபமாலை செபிக்கும் குடும்பம் எவ்வளவு அழகானது” என்கிறார்.

       செல்லஸின் மடாதிபதி என்பவர் “அன்னை மரியா அருட்கொடைகளின் இருப்பிடம்.  அனைவரும் அன்னையிடம் செபிக்க வேண்டும். ஏனெனில் உலகமும் மனித இனம் முழுவதும் மாமரியிடம் மன்றாட வேண்டும். ஏனெனில் நாம் எதிர்நோக்கும் எல்லா நன்மையும் அன்னையின் கரங்கள் வழியாகவே பெற்றுக் கொள்கிறோம்” என்று கூறுகிறார். 13ஆம் நூற்றாண்டில் நன்மைகள் குறைந்து தீமைகள் பெருகியகாலம். தீமைகள் விளைவிக்கும் கொள்கைகள் நிறைந்த ஆல்பிஜென்ஸிய தப்பறை தலைதூக்கியது. இத்தப்பறைக்கு எதிராகக் குரல் கொடுக்க புனித சாமிநாதரை திருத்தந்தை மூன்றாம் இன்னசென்ட் அவர்கள் நியமித்தார். புனித சாமிநாதரின் போதனைகள் பலன் அளிக்கவில்லை. புனித சாமிநாதர் துலூஸ் நகருக்கு அருகிலுள்ள காட்டிற்குச் சென்று கண்ணீரோடு அன்னையிடம் உதவிக்காகவும், இறைவன் மக்களின் பாவங்களை மன்னிக்கவும் மன்றாடினார். தனது உடலை சாட்டையால் அடித்துக்கொண்டார்.  மக்களைப் புனிதப்படுத்தத் தன்னைப் புனிதப்படுத்தினார்.
     
        இத்தருணம் அன்னை மரியா மூன்று வானதூதருடன் தோன்றி “நீர் போதனை செய்யும் போது மக்கள் செபமாலை செபிக்கும்படிச் சொல். அதன் வழியாக உம் வார்த்தைகள் ஆன்மாக்களில் விழுந்து மிகுந்த பலனைக் கொடுக்கும்” என்றார். அன்னை மரியா செபமாலை எப்படி செபிக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தார். புனித சாமிநாதரும் செபமாலை செபித்தார். மக்களுக்கு செபமாலை செபிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொடுத்தார். மக்கள் புனிதமான வாழ்க்கை வாழ வழிகாட்டினார். இறைவனின் அன்பையும் ஆசீரையும் நிறைவாகப் பெற்றிட வழிகாட்டினார். மக்களும் ஆர்வமாய் செபமாலை  செபித்தார்கள். தீமைகள் அகன்று நன்மைகள் பெருகின. அவ்வாறு செபமாலையின் வழியாக அல்பிஜென்ஸியத் தப்பறையும் முறியடிக்கப்பட்டது. செபமாலை என்பது ‘ஏழைகளின் திருப்பாடல்’ மற்றும் ‘நற்செய்தியின் சுருக்கம்’என்று அழைக்கப்படுகிறது. திருத்தந்தை 13ஆம் சிங்கராயர் லோரெட்டோ மன்றாட்டு மாலையில் செபமாலையின் அரசியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்று செபித்தார். திருத்தந்தை 10ஆம் பத்திநாதர் “செபமாலை ஆண்டவரிடமிருந்து நமக்கு வரங்களைப் பெற்றுத்தரும். நாம் செபிக்கும் செபங்களிலேயே அழகானதும் வளமையானதும் செபமாலையே. அது கடவுளின் தாயான அன்னை மரியாவின் உள்ளத்தைத் தொடும் செபம். எனவே தினமும் செபமாலை சொல்லுங்கள்” என்று கூறினார். செபமாலை வழியாக இறைவனின் அருளைப்பெற்று புனிதமடைவோம்.                                                       

Saturday 6 October 2018

புனித புரூனோ

    நற்செயல்கள் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தியவர். இறைவார்த்தையை வாழ்வாக்கி இறைஞானம் பெற்று தனது சொல்லாலும், செயலாலும் இறையாட்சி பணி செய்தவர். குழந்தைப்பருவம் முதல் தூயவராக வாழ்ந்து புண்ணியங்கள் செய்தவரே புனித புரூனோ. இவர் ஜெர்மனியின் கொலொன் நகரில் 1030ஆம் வண்டு பிறந்தார்.  இறைபக்தியில் வளர்ந்து இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்தார். தனது 25ஆம் வயதில் குருவாக அருள்பொழிவு பெற்று இறைபணி செய்ய தன்னை அர்ப்பணம் செய்தார். தமது பேச்சாற்றல் வழியாக இறையியல், மெய்யியல் கருத்துக்களை மாணவர்களுக்கு எளிய நடையில் எடுத்துரைத்து மாணவர்களின் மனதை கவர்ந்தவர். 

    மிக தைரியத்துடன் விசுவாசத்தை அறிவித்தார். திருச்சபையில் சிறந்த எழுத்தாளராக திகழ்ந்தார். பல புத்தகங்களை எழுதினார். கல்லூரியின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பையும் ஏற்றார். பின்னர் 1075 ஆம் ஆண்டில் ரைம்சில் ஆலய நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். ரீமிஸ் மறைமாவட்ட செயலராக சிறந்த முறையில் பணியாற்றினார். 1090ஆம் ஆண்டு புரூனோ திருதந்தையின் ஆலோசகராக தாழ்ச்சியுடன் செயல்பட்டார். இறைவனோடு தனிமையில் தியான வாழ்வை தொடர விரும்பி இத்தாலிக்கு சென்றார். ஒரு குடில் அமைத்து இறையருள் பெற்று இறைவனை ஆராதித்த புரூனோ 1101ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் நாள் இறந்தார். 

Friday 5 October 2018

புனித மரிய பவுஸ்தீனா கோவஸ்கா

      “நமது வாழ்க்கையில் நற்கருணை பெறுகின்றநேரம் இன்பமான ஆசீர்வதிக்கப்பட்ட நேரம். இதற்காக நான் ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன்”என்று கூறியவர். இறைவனின் அளவற்ற இரக்கத்தைப் பெற்று, அகிலமெங்கும் இறை இரக்கத்தை அறிவிக்கும் கருவியாய், விண்ணகத் தந்தையின் விருப்பமான பலிபொருளாய் மாறியவரே புனித மரிய பவுஸ்தீனா கோவஸ்கா. இவர் போலந்து நாட்டில் 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் நாள் பிறந்தார். செல்வத்தில் ஏழைகளானாலும் அன்பிலும், பக்தியிலும், ஒழுக்கத்திலும் செல்வாக்குப் பெற்றிருந்தனர். பவுஸ்தீனா தனது ஏழாம் வயதில் முதல் முறையாக நற்கருணை பெற்றார். இறைவன் தன்னைத் துறவு வாழ்வுக்கு அழைப்பதாக உணர்ந்தார். தனது பெற்றோரிடமிருந்து நற்பண்புகளைக் கற்றுக்கொண்டார். நற்கருணைமீதும் அன்னை மரியாவின்மீதும் அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டிருந்தார். 
    
      பவுஸ்தீனா தவம் மேற்கொண்டு நற்பண்பில் வளர்ந்தார். துன்புறும் ஏழைகள் மீதும், நோயாளிகள் மீதும் இரக்கம் கொண்டு அவர்களுக்காக இறைவனிடம் வேண்டுதல் செய்தார். இறைவனோடு உறவுகொண்டு ஆன்மாக்களின் மீட்புக்காகவும், இறைவனுக்கு உகந்த பலிபொருளாகவும் தன்னை அர்ப்பணித்தார். என் இனிய இயேசுவே! எனது குழந்தைப்பருவம் முதல் புனிதராக மாறவேண்டும் என்ற ஆவல் உமக்குத் தெரியுமே. இயேசுவே, “உம்மை இதுவரை அன்பு செய்துள்ள ஆன்மாக்களை விடமேலாக உம்மை அன்பு செய்ய நான் விரும்புகிறேன்” என்றுகூறி துறவற வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். 
 
   பவுஸ்தீனா இரக்கத்தின் அன்னை சபையில் 1928, ஏப்ரல் 30ஆம் நாள் துறவற வார்த்தைப்பாடுகளான கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் மூலம் இறைவனுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்தார். ஹெலன்கா என்ற இயற்பெயரை நற்கருணை ஆண்டவரின் மரிய பவுஸ்தீனா என்று மாற்றினார். “பவுஸ்தீனா என்றால் ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்று பொருள். 1931ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 22ஆம் நாள் காட்சி கண்டார். தனது ஆன்ம குருவானவர் அருட்தந்தை மிக்கேல் சொபாகே அவரிடம் தான் கண்ட காட்சியைப்பற்றி கூறினார். இயேசு இறை இரக்கத்தின் அரசராகக் காட்சி அளித்தார். வெள்ளை ஆடை அணிந்திருந்தார். அவருடைய இதயத்தில் இருந்து வெள்ளை மற்றும் சிவப்புநிற ஒளி பாய்ந்து வந்தது. இதனை அப்படியே வரைந்து அதன் கீழ் “இயேசுவே உம்மில் நான் நம்பிக்கை வைக்கிறேன்” என்று எழுதும்படி கூறினார். இறை இரக்கத்தின் அரசரான என்னை வணங்குகிறவர்களின் ஆன்மா அழிந்து போகாமல் பாதுகாப்பேன். முதலில் உனது ஆலயத்திலும், பிறகு உலகம் முழுவதும் என்னை வணங்கும்படி செய் என்று கூறினார்.  
           
   ஒருமுறை போலந்தில் கொடுங்காற்றுடனும், இடிமின்னலுடனும் மழை பெய்தது. இயற்கையில் பலவிதமான மாற்றங்கள் நிகழ்ந்தன. பேரழிவு ஏற்பட்டதைப் பார்த்து பவுஸ்தீனா இறைவனால் கற்றுத்தரப்பட்ட இரக்கத்தின் செபமாலை செபித்தார். உடனே காற்றும், இடி மின்னலுடன் கூடிய மழையும் நின்றது.  நற்கருணையின் பவுஸ்தீனா உடல் நலக்குறைவினால் 1938ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் நாள் இயற்கை எய்தினார். 

Thursday 4 October 2018

புனித பிரான்சிஸ் அசிசி

   அன்பின் உறவாய்; அமைதியின் தூதராய்; பகையுள்ள இடத்தில் பாசத்தையும்; வேதனையுள்ள மனதில் மன்னிப்பையும்; ஐயமுள்ள சூழல் நம்பிக்கையையும்; இருள் சூழ்ந்த இடத்தில் ஒளியையும்; துயரம் நிறைந்த இதயத்தில் மகிழ்ச்சியையும் விதைத்தது, தாய்த் திருச்சபையால் இரண்டாம் கிறிஸ்து என்று அழைக்கப்படுபவரே புனித பிரான்சிஸ் அசிசி. இவர் இத்தாலி நாட்டில் அசிசிப் பட்டணத்தில் 1182ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை செல்வந்தரும், சமூகத்தில் செல்வாக்கு பெற்றவர். இவரது தாய் ஒழுக்கமும், இறையன்பும் நிறைந்தவர். பிரான்சிஸ் உல்லாசமாக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார். நண்பர்களுடன் விளையாட்டிலும், கேக்கூத்துகளிலும், வீரச்செயல்களிலும் நாட்களைச் செலவழித்தார். 

    ஒருமுறை தந்தையின் வியாபாரத்தைக் கவனித்து வந்தவேளையில் அங்கு வந்த ஒரு தர் மக்காரர்  கை நீட்டினார் . அப்போது பிரான்சிஸ் ஒன்றும் கொடுக்கவில்லை. மாலை வியாபாரம் முடி செல்வாக்கு பெற்றவர். அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு அந்த தர் மக்காரரை தேடிச்சென்று அன்றைய வருமானத்தை முழுவதும் கொடுத்தார் . பிரான்சிஸ் ஒரு உன்னதப் போர் வீரனாக வேண்டுமென்பதே இலட்சியக் கனவு. 1201இல் அசிசி, பெர்ஜியா என்ற நாடுகளுக்கிடையே போர் மூண்டது. தனது கனவை நிறைவேற்றிட போர்க்களம் நோக்கிப் பயணமானார். எதிரிகளால் சிறைப்படுத்தப்பட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் . ஓராண்டுக்குப் பின் பிரான்சிஸ் விடுதலையானார் .

         புனித தமியானோ ஆலயத்தில் சிலுவையிருந்து, “பிரான்சிஸ் நீ ஏன் ஒரு சிறிதளவு மதிப்புக் கொடுக்காத இந்த மனிதர்களிடம் இவ்வளவு தாராளமாகவும், அன்பாகவும் இருக்கிறாய். உனக்கு அளவிட முடியாத அளவுக்கு அன்பும், மதிப்பும் கொடுக்கக்கூடிய ஆண்டவராகிய கடவுளிடம் நீ ஏன் உன் தாராள உள்ளத்தையும், அன்பின் சேவையையும் ஒப்புக்கொடுக்கக் கூடாது, உனது பணி தலைவனுக்கா அல்லது சாமானிய மனிதனுக்கா” என்று கேட்டார் . உடனே பிரான்சிஸ் “எனது பணி தலைவனுக்கே” என்று பதிலளித்தார். இயேசுவின் குரலைக் கேட்ட இவர் தம் வாழ்வுப் பாதையே மாற்றியமைத்தார். உலக வாழ்வை துறந்தார். பிரான்சிஸ் களியாட்டங்கள் தவிர்த்தார். நண்பர்கள், “திருமணம் செய்யும் ஆசை வந்து விட்டதோ” என்று கூறினர். “ஆம்! ஆனால் நீங்கள் யாரும் எதிர்பார்க்காத, விரும்பாத அழகுமிக்க பெண்ணை நான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். அது தான் ஏழ்மை” என்றும் கூறினார். 

   பிரான்சிஸ், இறையழைப்பிற்கு செவிமடுத்து அமைதியான பேச்சு, அன்பான பார்வை, நிதானமான உரையாடல், முழு அர்ப்பணத்துடன் இறைபணி செய்ய தயாரானார். தனது உடைமைகளையும், பணத்தையும் எடுத்து ஆலயம் செப்பனிட விரைந்தார். பெர்னார்டோ, ஆயரிடம் முறையிட்டு பிரான்சிஸ் இனிமேல் என் மகன் இல்லை. என்னுடைய பணத்தை என்னிடம் கொடுக்க கட்டளையிடும் என்றார். பிரான்சிஸ் பணத்தை தந்தையிடம் கொடுத்துவிட்டு இந்நாள்வரை பீட்டர் பெர்னார்டோவை என் தந்தை என்று அழைத்தேன். ஆனால் இப்போது முதல் உண்மையிலேயே பரலோகத்தில் இருக்கும் விண்ணகத் தந்தையை என் தந்தை என்று  சொல்ல முடியும் என்று கூறினார்.

     பிரான்சிஸ் ஏழ்மைக்கும், இறையன்புக்கும் எடுத்துக்காட்டாக மாறினார். அறநெறிபற்று மிக்கவராக வாழ்ந்தார். இறைபக்தியையும், தாழ்ச்சியையும் உடன் பிறப்புகளாகவும், எளிமையையும், ஏழ்மையையும் அன்றாட வாழ்வின் படிச்சுவடுகளாகவும் மாற்றினார். உடமைகள் அனைத்தையும் துறந்து வெறுங்காலுடன் நடந்தார். தியாகம் புரிந்து வாழ்வதே நோக்கம். உழைத்து உண்பதே குறிக்கோள். சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நிலை நாட்டி, இறைவார்த்தையை தியானித்து வாழ்வாக்கினார்.  “பிரான்சிஸ்கன் துறவறச் சபையை”  ஏற்படுத்தினார். துறவு சபையின் ஒழுங்குகள் மிகக்கடினமாக இருந்தது. “விண்ணரசையும், நீதியையும் முதல் தேடுங்கள், மற்ற அனைத்தும் உங்களுக்குக் கூட்டிக் கொடுக்கப்படும்” என்ற இயேசுவின் போதனை வழி அகிலமெங்கும் நற்செய்தியைப் பரப்பினார்.

        கிறிஸ்துவின் பிறப்பு விழாவை கொண்டாடினார். அன்று முதல் குடில் அமைக்கும் முறை உருவானது. 1224ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் அல்வோனிய மலை உச்சிக்குச் சென்று “ஆண்டவரே! நான் இறக்கும் முன் உமது பாடுகளை எம் உடல் அனுபவிக்க ஆசைப்படுகிறேன்; எனக்குத் தாரும்” என்று கூறினார். ஐந்து  கிறிஸ்துவின் ஐந்து காயங்களை தனதாக்கி, தாய்த் திருச்சபையால் ‘இரண்டாம் கிறிஸ்து’ என்று அழைக்கப்படுகிறார். வணிகரின் மகனாகப் பிறந்து, வசதியுடன் வாழ்ந்திருந்தும் ஏழ்மையைத் தனதாக்கியவர். வாழ்க்கையின் இன்பத்தைத் துறந்து, வானகத் தந்தையை ஏற்றவர். வழியாம் சத்தியத்தை அறிந்து ஏழ்மையின் அன்பராய் மாறியவர். மனிதனையும் இயற்கையையும் இயன்றவரை நேசித்து, இறைபிரசன்னத்தை உணர்ந்து 1226ஆம் ஆண்டு அக்டோபார் திங்கள் 4ஆம் நாள் இயற்கை எய்தினார். 

Monday 1 October 2018

புனித குழந்தை தெரசாவின், துயர் துடைத்த அன்னை மரியா

    தெரசா சிறுவயதில் அனைவரையும்  அளவில்லாமல் அன்பு செய்தார். படிக்கட்டுகளில் இறங்கும் போதும் ஒவ்வொரு படியிலும் நின்று கொண்டு, அம்மா என்று அழைப்பார்.  தாயோ, என் அன்பு குட்டி மகளே என்று பதில் கொடுக்காவிட்டால் அடுத்தப் படியில் இறங்கமாட்டார். ஒரு முறை குழந்தை தெரசா தன் அம்மாவை நோக்கி “அம்மா நான் விண்ணகம் செல்வேனா?” என்று கேட்டார். அதற்கு அவரது தாய் “நீ கீழ்ப்படிதலுள்ள நல்ல பிள்ளையாக இருந்தால் விண்ணகத்திற்குப் போவாய்” என்றார். அதற்கு தெரசா அப்படியானால் “அம்மா நான் நல்ல பிள்ளையில்லையானால் நரகத்திற்கு தான் போவேனா? அப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். மோட்சத்திற்கு உங்களை நோக்கிபறந்து வருவேன். நீங்களும் என்னை இறுகக்கட்டியணைத்துக் கொள்வீர்கள்”என்றார். 

        குழந்தை தெரசா தன் தாயிடம் மிகுந்த அன்பும், நம்பிக்கையும் வைத்திருந்தார். தெரசாவின் குழந்தைப்பருவத்தில் தாய் இறந்துவிட்டார். அதனால் தெரசா அதிக வருத்தம் அடைந்தார்.தெரசாவின் அன்னை இறந்த பின் அக்கா அவரைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். தெரசா நோயுற்ற தருணத்தில் அம்மா! அம்மா! என்று தொடர்ந்து அழைத்துக் கொண்டேயிருந்தார். தோட்டத்திலிருந்த மரியன்னையின் திருசொரூபத்தை நோக்கித் திரும்பினார். இவ்வுலகில் எந்த உதவியும் பெற இயலாத எளிய தெரசா, அன்னை மரியாவிடம் சரண் அடைந்தார். தன்மீது இரக்கம் காட்டும்படி முழுஇதயத்தோடு மன்றாடினார். உடனடியாக அருள் நிறைந்த அன்னை மரியா அவருக்குக் காட்சி கொடுத்தார். அவரது அன்பையும், அருளையும் வெளிக் கொணர்ந்து புன்னகைத்தார். தெரசா அனுபவித்த வேதனைகள்அன்னையின் அருளால் மாறி எண்ணில்லா ஆனந்தம் அடைந்தார். அந்நேரம் முதல் இன்ப துன்பங்களில் அன்னை மரியின் அரவணைப்பை நாடினார். 1884ஆம் ஆண்டு மே திங்கள் 8ஆம் நாள் முதல் முறையாக நற்கருணை பெற்றார். அந்நாளை இயேசுவின் முதல் முத்தம் பெற்ற நாள் என்று கூறுகிறார். தொடர்ந்து இயேசுவின் முத்தம் பெற ஆசைப்பட்டு பெளலீன் அக்காவைப்போல கார்மெல் மடத்தில் சேர விழைந்தார்.

குழந்தை இயேசுவின் புனித தெரசா

      “கிறிஸ்துவே என் அன்பு; அவரே என் நிறைவாழ்வு; அன்புக்காக இறப்பதே எனது நம்பிக்கை; இறைவனின் அன்பில் நிலைத்திருப்பதே எனது ஆவல். அன்புக்காக வாழ்வதே என் வாழ்வின் இலக்கு” என்று கூறியவர். இன்பத்திலும், துன்பத்திலும், வறுமையிலும், வளமையிலும், நோயிலும், சாவிலும், இருளிலும், ஒளியிலும் எந்நிலையிலும் அஞ்சாது, இயேசுவில் சரணடைந்து, குழந்தை போல் அவரது தோளில் சாய்ந்து, குழந்தையாகவே மாறி அன்புக்காகவே வாழ்ந்தவரே குழந்தைஇயேசுவின் தெரசா. இவர் பிரான்ஸ் நாட்டில் அலென்சோனில், பாசமும், நேசமும், அன்பும், பற்றும், அரவணைப்பும், கரிசனையும் கலவையாக இருந்த குடும்பத்தில் 1873ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் நாள் பிறந்தார். 
 
       தெரசா குழந்தை இயேசுவை அதிகம் அன்பு செய்தார். வாழ்வில் சோர்வுறும் போது  குழந்தை இயேசுவிடம் செபித்து ஆறுதலும், ஆற்றலும் அடைந்தார். அன்பு, அமைதி, பொறுமை, தாழ்ச்சி இவைகளுக்குச் சொந்தக்காரர். தெரசா ஒரு நாள் செபம் முடித்து புத்தகத்தை மூடுகையில், பாடுபட்ட இயேசுவின் ஒரு படம் பாதி வெளியே நழுவி இருந்தது. அதில் துளையுண்டு இரத்தம் சிந்தும் கிறிஸ்துவின் கரம் அவர் கண்ணுக்குப் புலனாகியது. தெரசா அதுவரை அனுபவிக்காத ஒருவகை உணர்ச்சியில் மூழ்கி மெய்சிலிர்த்தார். அந்த தெய்வீக இரத்தம் ஒழுகி கீழே விழுவதும், அதைச் சேர்த்துவைக்க யாரும் முயற்சி செய்யாதிருப்பதைப் பார்த்து நெஞ்சம் நைந்தார். மீட்பின் ஊற்றான அந்த தெய்வீக இரத்தத்தைச் சேர்த்துவைத்து, ஆன்மாக்களின் மீது அதைப் பொழியும் பொருட்டு, என் வாழ்வு இனி சிலுவையின் அடியிலே அமையும் என்று அன்றே முடிவு செய்தார். அந்நேரம் முதல் இயேசுவின் இரத்தத்தைச் சேகரித்து ஆன்மாக்களின் மீட்புக்காக ஒப்புக்கொடுக்க தன் வாழ்வை கிறிஸ்துவுக்காக அர்ப்பணித்தார்.

        தனது 15 ஆம் வயதிலேயே இறையழைத்தலை உணர்ந்து, கார்மேல் இல்லம் சென்றார். ஆனால் இளம் வயதின் காரணமாக கார்மேல் மடத் துறவிகள், இவரை ஏற்க மறுத்தனர். இதனால் ஆயரிடம் சென்று, தன் விருப்பத்தை தெரிவித்து மீண்டும் கார்மேல் சபைக்குள் நுழைந்தார். இருப்பினும் வார்த்தைப்பாடுகளைப் பெற இவருக்கு வயது இல்லாததால், வார்த்தைப்பாடுகளை பெறாமல் போனார். இதனால் ஆயருடன் உரோம் நகர் சென்று, திருத்தந்தை 13 ஆம் லியோவை சந்தித்து, அவருடன் உரையாடி, கார்மேல் சபையில் தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்க அனுமதிப் பெற்றார். 

            துறவற வாழ்வில் ஒன்பது ஆண்டுகள் இறைபணியாற்றினார். இருப்பினும் இந்த ஒன்பது ஆண்டுகளும் ஆண்டவருக்காகச் சொல்லற்கரிய சிலுவைகளை மிகுந்த பொறுமையோடும், மகிழ்வோடும், மனவமையோடும் சுமந்து கொண்டார். கார்மெல் மடத்தில் சிலுவைகள் நிறைந்த இவரது வாழ்வு ஒரு மறைசாட்சியின் வாழ்விற்கு ஒப்பாகவே இருந்தது. தெரசா பலவகையான நோய்களினால் பாதிக்கப்பட்டார்.  துன்புற்றபோதும் அவரது முகம் முகமலர்ச்சியோடுக் காணப்பட்டது. இறுதியாக எலும்புருக்கி நோயினால் தாக்கப்பட்ட தெரசா தமது 24ஆம் வயதில் இயற்கை எய்தினார்.