Wednesday 24 October 2018

செபமாலை அன்ன

   அனுதினமும் செபமாலை செபிக்கும்போது அன்னை மரியாளோடு நம் இதயம் இயேசுவின் மறையுண்மைகளை நோக்கிப் பயிற்சி பெறுகின்றது. செபமாலைத் தியானத்தில் நாம் ஒவ்வொரு மறையுண்மைகள் வழியாக இறைமகன் இயேசுவின் மீட்புச்செயலை தியானிக்கின்றோம். இறைவனின் மீட்புத்திட்டத்தில் கன்னி மரியாள் எவ்வாறு தன்பங்களிப்பை வழங்குகின்றாள் என்பதைத் தியானிக்கின்றோம். மீட்புச் செயலை முன்னெடுத்துச் செல்லும் திருச்சபையில் அன்னை மரியாவின் பங்களிப்பையும் பரிந்துரையையும் தியானிக்கின்றோம்செபமாலையின் மலர்கள் என்றும் அழுகிப்போகாது” என்கிறார் திருத்தந்தை 12ம் பத்திநாதர் - திருத்தந்தை இரண்டாவது அருள் சின்னப்பர் “கன்னி மரியாவுக்கு மிகவும் பிரியமான செபம் செபமாலை” என்கின்றார் - திருத்தந்தை 16ம் பெனடிக்ட் “மாலை நேரத்தில் செபமாலை செபிக்கும் குடும்பம் எவ்வளவு அழகானது” என்கிறார்.


       செல்லஸின் மடாதிபதி என்பவர் “அன்னை மரியா அருட்கொடைகளின் இருப்பிடம்.  அனைவரும் அன்னையிடம் செபிக்க வேண்டும். ஏனெனில் உலகமும் மனித இனம் முழுவதும் மாமரியிடம் மன்றாட வேண்டும். ஏனெனில் நாம் எதிர்நோக்கும் எல்லா நன்மையும் அன்னையின் கரங்கள் வழியாகவே பெற்றுக் கொள்கிறோம்” என்று கூறுகிறார். 13ஆம் நூற்றாண்டில் நன்மைகள் குறைந்து தீமைகள் பெருகியகாலம். தீமைகள் விளைவிக்கும் கொள்கைகள் நிறைந்த ஆல்பிஜென்ஸிய தப்பறை தலைதூக்கியது. இத்தப்பறைக்கு எதிராகக் குரல் கொடுக்க புனித சாமிநாதரை திருத்தந்தை மூன்றாம் இன்னசென்ட் அவர்கள் நியமித்தார். புனித சாமிநாதரின் போதனைகள் பலன் அளிக்கவில்லை. புனித சாமிநாதர் துலூஸ் நகருக்கு அருகிலுள்ள காட்டிற்குச் சென்று கண்ணீரோடு அன்னையிடம் உதவிக்காகவும், இறைவன் மக்களின் பாவங்களை மன்னிக்கவும் மன்றாடினார். தனது உடலை சாட்டையால் அடித்துக்கொண்டார்.  மக்களைப் புனிதப்படுத்தத் தன்னைப் புனிதப்படுத்தினார்.
     

No comments:

Post a Comment