Monday 29 October 2018

புனித நார்சிசுஸ்

         
      இறைவனோடு உறவு கொண்டு, புனிதம் மிகுந்த வாழ்க்கை வழியாக பிளவுபட்டு வாழ்ந்த மக்களிடத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தினார். இறையன்பிலும் பிறரன்பிலும் வளர்ந்து இறைபணியிலும் சமூகபணியிலும் சிறந்து விளங்கினார். குழந்தைப்பருவம் முதல் ஆன்மிக வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மக்கள் மத்தியில் சிறந்து மாமனிதராக, வாழும் புனிதராக வாழ்ந்தவரே புனித நார்சிசுஸ். இவர் எருசலேமில் 99ஆம் ஆண்டு பிறந்தார்.  

          இறைவார்த்தையை வாசித்து தியானித்து வாழ்வாக்கியபோது கிறிஸ்துவின் இறையாட்சி பணி அவரில் வேரூன்றி வளர்ந்தது. இறைவார்த்தை வழியாக தனது இறையழைத்தலை உணர்ந்துகொண்டார். குருவாக அருள்பொழிவு பெற்று இறையாட்சி பணியை ஆரம்பித்தார். இயன்றவரை இறைமக்களை அன்பு செய்தார். மக்களின் ஆன்மிக தேவைகளை நிறைவேற்றினார். மக்கள் மத்தியில் புனிதராக வாழ்ந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை  பிரதிபலித்தார்.

        இறைவனின் அன்பை நற்செயல்கள் வழியாக பகிர்ந்தளித்தார். நிலைவாழ்வு தரும் இறைவார்த்தையை மறையுரை வழியாக பரைசாற்றினார். தனது செல்லிலும் செயலிலும் கிறிஸ்துவை பிரதிபலித்த நார்சிசுஸ் 180ஆம் ஆண்டு எருசலேமின் 30வது ஆயராக அருள்பொழிவு பெற்றார். பாலஸ்தீனத்தில் நடைப்பெற்ற ஆயர்களின் மாநாட்டிற்கு தலைமை ஏற்று சிப்பாக வழி நடத்தினார். உயிர்ப்பு திருவிழா ஞாயிற்று கிழமை கொண்டாடுகின்ற முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

       ஒருமுறை உயிர்ப்பு திருவிழாவின்போது ஆலயத்தில் உள்ள விளக்குகளில் போதுமான அளவு எண்ணெய் இல்லை. இத்தருணத்தில் தண்ணீரை எண்ணெயாக மாற்றினார். இறைபணியில் ஏற்றபட்ட தடைகளை இறை வேண்டுதலால்  வெற்றி படிகளாக மாற்றினார். தனக்கு எதிராக குற்றம் சுமத்தியவர்களை முழுமனதுடன் மன்னித்து அன்பு செய்து, ஆசிமழை பொழிந்த நார்சிசுஸ் 116ஆம் வயதில் 216ஆம் இயற்கை எய்தினார்.    

No comments:

Post a Comment