Saturday 27 October 2018

புனித சீமோன், புனித யூதா

    புனித சீமோன் என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர். இவர் கானான் நாட்டில்   பிறந்தார். இவரை தீவிரவாதியாய் இருந்த சீமோன் என்று அழைத்தனர். இறைகட்டளைகளை பின்பற்றுவதிலும், பாவத்தை எதிர்த்து போராடுவதிலும், இறைவனிடம் மக்களை கொண்டு சேர்ப்பதிலும் ஆர்வமுடன் உழைத்தார்.

        

       பரசீக நாட்டில் கிறிஸ்துவின் நற்செய்தியை ஆர்முடன் அறிவித்தார். கி.பி 67ஆம் ஆண்டு உரோமில் தலைகீழாக சிலுவையில், இரத்தசாட்சியாய் இறந்தார். இவர் மரம் வெட்டுவோர், கரியர்கள் ஆகியோரின் பாதுகாவலர்.                                                                                 

                                                         

        புனித யூதா என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர். சின்னயாக்கோபின் சகோதரர், இயேசுவின் உறவினர். தூய ஆவியை பெற்றுக்கொண்ட பின் யூதேயா, சமாரியா, இதுமேயா, சரியா, மெசபொத்தோமியா மற்றும் லீபியா போன்ற இடங்களில் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார். 


     புனித யூதா எழுதிய நிரூபம் மிகச் சிறியதாக இருந்தாலும் மிகப் பயனுள்ள கருத்துக்களை உள்ளடக்கியது. 67ஆம் ஆண்டு லெபனான் நாட்டில் கோடாரியினால் வெட்டப்பட்டு இரத்தச்சாட்சியாய் இறந்தார். இவர் கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலர்.

No comments:

Post a Comment