Monday 8 October 2018

புனித பிரான்சிஸ் போர்ஜியா

   
     கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு குழந்தைப்பருவம் முதல் இறைபக்தியில் வளர்ந்து வந்தவர். துறவு வாழ்க்கை வழியாக இறைவனை மாட்சிப்படுத்தினார்.  பிரான்சிஸ் ஸ்பெயின் நாட்டு நீதிமன்றத்தில் நீதியரசராக இருந்தார். இவர் திருமணமானவர். இவரின் மனைவி எலியானோர் என்பவர். இவருக்கு எட்டு குழந்தைகள் இருந்தனர். இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்தனர். குடும்பத்துடன் இணைந்து, தவறாமல் திருப்பலிக்கு சென்றார். ஒவ்வொரு முறையும் திவ்விய நற்கருணையை மிக பக்தியோடு பெற்றார்.  அடக்கமான, அன்பான வாழ்வை வாழ்ந்தார்

     ஸ்பெயின் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சியடையும் விதமாக தனது சொத்துக்களையும், பதவியையும், தன் மகன் சார்லஸ்சிடம் ஒப்படைத்துவிட்டு, இயேசு சபையில் சேர்ந்து குருவானார். குருப்பட்டம் பெற்றபின், முதல் திருப்பலியை மிக ஆடம்பரமாக சிறப்பித்தார். பிரான்சிசின் எளிமையையும், தாழ்ச்சியையும் கண்டு, சபைத் தலைவரே தனது செயலை நினைத்து தலைக்குனிந்தார். பிரான்சிஸ் குருவாக இருந்தபோதும், காடுகளுக்குச் சென்று, விறகு பொறுக்கி கொண்டுவந்து, கொடுத்து, சமைப்பதற்கு எப்போதும் உதவினார். உணவு பந்தியில் தாழ்ச்சியோடு தன் கையால் அனைவருக்கும் உணவு பரிமாறினார். அதன்பின்னர் மண்டியிட்டு மற்ற குருக்களிடம் உணவு தருமாறு கெஞ்சிகேட்டு வாங்கி உண்டார்.

   இவருக்கு பல வழிகளில்  கோபமூட்டினர். ஆனால் பிரான்சிஸ் கோபம் கொள்ளாமல், அனைவரிடத்திலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் அன்பாகவே நடந்துக்கொண்டார். அவர் தனது குருத்து வாழ்வில் ஒரு முறை மட்டும் பிறர் தனக்கு மரியாதை கொடுத்த காரணத்திற்காக கோபப்பட்டுள்ளார். இவர் தனது வாழ்வு முறையால் இயேசு சபை ஸ்பெயின், மற்றும் போர்த்துக்கல் நாடு முழுவதிலும் பரப்பியது. இவரின் அற்புதமான, அழகான வேலையைக் கண்டு, அந்நாட்டு இளைஞர்கள் பலபேர். அச்சபையில் சேர்ந்து குருவாகி பிரான்சிசைப் போலவே வாழ்ந்தனர். இவரின் எளிமையான வாழ்வால், பலருக்கு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தார். இவரின் வழிகாட்டுதலில், இயேசு சபை உலகம் முழுவதிலும் பரவியது. இயேசுவின் இறைப்பணியை சிறப்பாக ஆற்றி  573ஆம்  ஆண்டு  இறந்தார். 

No comments:

Post a Comment